Sunday, August 5, 2012

எனக்கொரு பதில்!!!!!

நேசங்களால் எனை நிறைத்த பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்.நலம் தானே???

         இயல்பிற்கும் இருப்பிற்கும் இடையேயான வாழ்தலின் நாட்களில் என்னுள் அடிக்கடி முளைத்த கேள்விக்குறி இது.இடையிடையில் இது ஆச்சரியக்குறியாக,காற்புள்ளியாக கூர்ப்படைந்தாலும் மறுபடியும் ஆற்றாமல் மிகவேகமான ஆரம்பநிலை அடைந்துவிடுகிறது.வாருங்கள் சொந்தங்களே இது பற்றியும் பேசுவோம்.!

      மானுடம் பிரசவித்த அத்தனை படைப்புகளும் பிறப்பின் ஈரங்கள் தாண்டி,நேசங்களால் நிறைந்து,தவழுதல் தாண்டுதல் முடித்து ஒருவாறு பூமியில் ஓங்கி உதைத்து நிமிர்ந்துவிட்ட இருபதுகளின் பிற்பகுதியில் எம்முன் இரண்டு சாலைகள் விரிந்து கொள்கின்றன.சில தருணங்களில் கொல்கின்றன.

1-இனியதான இல்லறம்.
2-தூயதான துறவறம்.

  இந்த இரண்டில் ஒருசாலையில் பயணிப்பதுதான் உலகப் பெருவழக்கு.இதற்குள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்ட மரபொன்றின் எச்சம் தான் நானும்.ஆனால் இந்தப் பெருவழக்கிற்குள் என்னை இணைத்துக் கொள்ளத்தான் மனம் ஒப்பவில்லை.

        பதின்ம வயதுகளின் முடிவுக் கோடுகளில் விதையாய் விழுந்த ஏகாந்த சிந்தனையின் ஒரு குரல் இப்பாதை இரண்டிலிருந்தும் விலகிப் போய் பந்தங்களால் தனித்து,நினைவுகளாலும் நேசங்களாலும் நிறைந்திருப்பது தான் சரி என பலமுறை பல தடவைகளில் சத்தமாய் கூறி ஆன்ம வெளிகளில் கடந்து போகிறது.

         இதுபற்றி இன்று ஐம்பதுகளை தாண்டிவிட்ட சிலரிடம்  பேசியபோது என் ஒத்த பருவங்களில் தாமும் மேற்படி சிந்தனை வசப்பட்டதாகவும் பின்னாளில் அது சாத்தியமற்றது என தெரிந்து தம்மை மாற்றிக் கொண்டதாகவும் பதில்தந்தனர்.

இங்கு என்னிலை விளக்கம் தருதல் பொருத்தமாயிருக்கும்.

இனியதான இல்லறம்.

  • இவ்வார்த்தைப் பிரயோகத்தில் எனக்கு கொஞ்சமும் ஈடுபாடில்லை.வெளியளவில் இது சரியாக,கவர்ச்சியாக கற்பனைக்கு சரியான வடிகாலாக அமைந்தாலும் எத்தனை பேருக்கு மனது போல் மாங்கல்யம் வாய்த்தது?????
  • எத்தனை தம்பதிகள் இன்று காட்சித் தம்பதிகளாக மட்டுமே தெரிகிறார்கள்????.
  • எங்கு தாம்பத்தியமும் சந்தோசமும் சரிவிகித நிறைவு கொண்டது????
  • எத்தனை விழுக்காடு திருமணங்கள் தெருவிற்காய் விடப்பட்டன.????

தூயதான துறவறம்.

  • துறவறத்தில் இணைவது தூயபணி.
  •  சலனமற்ற  தூய மனநிலையை  உண்டாக்கும் யோகம் என்னிடமில்லை.
  • நிர்மல வாழ்வொன்றிற்குள் நிரந்தரமாய் எனை கையளிக்கும் பக்குவமும் வசப்படவில்லை.
  • "மெய்யான துறவி" இந்த சொற்போலிப் பழிக்கும் நான் விடையாகும் விருப்பமில்லை.

     நானும் கண்டதுண்டு.பெரும்பாலும் கிராமப்புறங்களில் இப்படியான தனித்து வாழும் மனிதர்களுக்கு வழங்கப்படும் அடைமொழிகள் அழகாகவோ,வரவேற்பிற்குரியதாகவோ இல்லை.முகம்சுழிக்கும்படியாகவும்,மனம் வெதும்பும்விதமாகவுமே அமைந்துவிடுகின்றன.அதிலும் நெறிபிறழ்வு பற்றியதான எண்ணக்கருவே இவர்கள் பால் பரவிக்கிடக்கிறது.ஆனாலும் ஒருவர் தவறியிருக்கலாம்.அதற்காக அனைவருமே நெறி பிறழ்ந்தவர்கள் என்று அடையாளமிடல் சரியானதா??இது மாபெரும் வடுவல்லவா????

  இத்தகைய தனிமனிதர்கள் பால் ஏன் இப்படியான புறக்ணிப்புகள்.?,இழிவுபடுத்தல்கள்??தனித்திருத்தல் என்பது இதற்காகவா சாத்தியமற்றுப் போகிறது???அதிலும் பெரும்பாலும் இங்கு பேசுபொருளாக்கப்படுவது """பெண்கள்""" தான்.

   பொதுவில் கவிதையாக விளிக்கப்படும் பெண்கள் இங்கு மட்டும் மஞ்சள் பத்திகையாவது நியாயமா?நிலவுவெளிச்ம் நீ எனப்பட்டவர்கள் பின்னாளில் கசியும் விளக்கு வெளிச்சமாக்கப்பட்டது ஏன்?ஓவியங்களெல்லாம் பின்னர் ஆபாசம் என பெயர்பெற்றது ஏன்.?

   இந்த மனிதர்களின் பின்னான விருப்பங்களும் வைராக்கியங்களும் வெறுக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டது வருத்தமான உண்மை.விருப்பப்ட்டு தேடிக்கொண்ட அவர்களின் வெளிச்சங்களில் இருட்டடித்துப் போகும் நாகரீகம் மறந்த உரிமையை கையில் எடுப்பது மன்னிக்கப்படக் கூடாதது.

      வாழ்தல் என்பது ஒருதரம் தானே.இங்கு வரைமுறை வகுக்க வழிப்போக்கர் யாருக்கும் வசதி செய்து கொடுக்காதீர்.பதின்மங்களில் தோன்றும் முறையற்ற முதிர்ச்சியற்ற முடிவல்லவே இது.சிலருக்கு பரபரபப்புகள் பிடிக்கும்.சில பேர் கரகோசங்களை எதிர்பார்பர்.கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வது கூட சிலபேருக்கு விறுவிறுப்பை தரும்.ஆனாலும் சில மனிதர்கள் இதனூடு பயணிக்க விரும்புவதில்லை.அமைதியில் கசியும் நிமிடங்களையும்,அடக்குமுறையை அனுமதிக்காத பண்டிகைகளையும்,உறுத்தல்கள் அற்ற உறவுகளையுமே  சந்திக்கவிரும்புகின்றனர்.

      இத்தகைய மனிதர்கள் விமர்சனத்திற்காக இப்படி வாழவில்லை.எத்துணை இலட்சியவாதிகள் அவர்கள்.மகாமனிதர்கள் இவர்களும் தான்.அவர்களின் வைராக்கியங்களிற்கு மதிப்பளிப்போம்.நாளை எம்மவர்  சொந்தங்களில் கூட இப்படி நபர்கள் தோன்ற வாய்ப்புண்டு.நாகரீக  மனிதர்களாக நடந்து கொள்வோம்.நானும் சில சமயங்களில் தவறிழைத்ததுண்டு.அப்படியாய் இப்படியாய் பேசுபவர்களுக்கு காது கொடுத்ததுண்டு.இப்போது உணர்கிறேன் என் தவறுகளை.நாளை ஒரு தரம் இப்படியாய் தரம் குறைய மாட்டேன்.
வாழுதல் கூட ஒரு இசைதான்.இவர்களின் ரிதம் இவர்களுக்கு இனிமை தந்தால் இயங்கவிடுங்கள் அவர்கள்.தாளத்தில் தப்புச் சொல்ல நாம் யார்???

இறுக்கமான மனங்களின் 
பின்னுள்ள ஈரங்களை நேசிக்கப்ழகுவோம்!.
அந்த வைராக்கியங்களின் பின்னான
 வாசங்களுக்கு வழிவிடுவோம்.!
மரத்துப்போனவர்கள்
மானம்விற்றவர்களல்ல..!
இல்லறத்தை துறந்தவர்கள்
அது
இல்லாதவர்களுமல்ல...!
பூக்கள் தர தெரியாதா???
முட்களை விலை பேசாதீர்கள் அவர்களுக்காய்!


                                                                                                                                   அன்புடன்
                                                                                                                                    -அதிசயா-

67 comments:

  1. // பதின்ம வயதுகளின் முடிவுக் கோடுகளில் விதையாய் விழுந்த ஏகாந்த சிந்தனையின் ஒரு குரல் இப்பாதை இரண்டிலிருந்தும் விலகிப் போய் பந்தங்களால் தனித்து,நினைவுகளாலும் நேசங்களாலும் நிறைந்திருப்பது தான் சரி என பலமுறை பல தடவைகளில் சத்தமாய் கூறி ஆன்ம வெளிகளில் கடந்து போகிறது.///
    அப்பப்பா!!ரசனை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மிக்க மகிழ்ச்சி தங்களின் முதல் வருகையும் அன்பான அழகான பின்னூட்டத்திற்கும் சந்திப்போம்.

      Delete
  2. அருமையாக எழுதியுள்ளீர்கள் அதிசயா...

    ஆனால் துறவறத்தில் சில தியாகங்களும் இருக்கிறது... அப்படி பலரை நான் சந்தித்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுதாண்ணா...!உண்மை தான்.அத்தகைய தியாகிகளை மிகமிகவே மதிக்கிறேன் அண்ணா.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி,
    நலம் தானே..
    நாவன்மை கொண்ட பல பெரியோர்களும்
    எடுத்துப்பேசத் தயங்கும் அற்புதமான தலைப்பு...

    இல்லறமும் துறவறமும் இருவேறு துருவங்கள்...
    ஆயினும் வடதென் துருவங்கள் ஒன்றை ஒன்று
    ஈர்ப்பதைப்போல சிறு நூலிழை அளவுதான் இரண்டுக்கும்
    வித்தியாசம்...
    ஆனால் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது..
    இரண்டுக்கும் முதலில் பக்குவப்படவேண்டும்...
    பக்குவமில்லாத இரண்டு துருவங்களும்
    துருப்பிடித்துதான் போகும்...

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மகிஅண்ணா...நலமேயுள்ளேன்.சரியாக சொன்னீர்கள் சொந்தமே!பக்குவம் அற்ற எந்த்தெரிவுமே துருப்பிடித்தலில் தான் முடிகிறது.மிக்க நன்றி சொந்தமே!...மிக்க நன்றி.சந்திப்போம்.இந்தக்குழப்பங்களால் தர் மனம் ஏகாந்தத்தை வாஞ்சிக்கிறது

      Delete
  5. அருமை அதிசயா. வாசித்து பிரமித்துப் போய் விட்டேன். ஒரு தரமேனும் உங்கள் இடுகைக்கு கருத்திடும் முதல் ஆளாய் நான் இருந்திட வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இன்று வரை முடியவில்லை.

    #இறுக்கமான மனங்களின்
    பின்னுள்ள ஈரங்களை நேசிக்கப்ழகுவோம்!.
    அந்த வைராக்கியங்களின் பின்னான
    வாசங்களுக்கு வழிவிடுவோம்.!
    மரத்துப்போனவர்கள்
    மானம்விற்றவர்களல்ல..!
    இல்லறத்தை துறந்தவர்கள்
    அது
    இல்லாதவர்களுமல்ல...!
    பூக்கள் தர தெரியாதா???
    முட்களை விலை பேசாதீர்கள் அவர்களுக்காய்!#

    அருமையான வரிகள். ஒரு பெண் பதின்ம வயதைக் கடக்கத் துவங்கியதுமே அவளது தேவை திருமணம் மட்டுமே என்று தான் நம் தமிழ்ச் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. இதனால் பெண்களில் பலருக்கு அவர்கள் நினைத்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்ததில்லை தோழி.

    #இத்தகைய தனிமனிதர்கள் பால் ஏன் இப்படியான புறக்ணிப்புகள்.?,இழிவுபடுத்தல்கள்??தனித்திருத்தல் என்பது இதற்காகவா சாத்தியமற்றுப் போகிறது???அதிலும் பெரும்பாலும் இங்கு பேசுபொருளாக்கப்படுவது """பெண்கள்""" தான்.#

    இத்தகைய தனிமனிதர்கள் பால் ஏன் இப்படியான புறக்ணிப்புகள்.?,இழிவுபடுத்தல்கள்??தனித்திருத்தல் என்பது இதற்காகவா சாத்தியமற்றுப் போகிறது???அதிலும் பெரும்பாலும் இங்கு பேசுபொருளாக்கப்படுவது """பெண்கள்""" தான்.
    கருத்துரையின் நீளம் கருதி இதைப் பற்றிய எனது கருத்தை நான் தனிப் பதிவாகவே தருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாரதி...
      மிக்க நன்றி இத்தனை பொறுமையான வாசிப்பிற்காய்.நிச்சயம் எழுதுங்கள்.ஆவலோடு காத்திருக்கிறேன்.
      தங்களின் கருத்தே பெருமகிழ்ச்சி.இங்கு முதல் என்பதை விட நெருக்கமே அதிகம்.சந்திப்போம் சொநதமே!!!

      Delete
    2. #இங்கு முதல் என்பதை விட நெருக்கமே அதிகம்.சந்திப்போம் சொநதமே!!!#
      உண்மையான கருத்து உள்ளமே. ஆனால் நமது நண்பருக்கு நாம் முதலில் வாழ்த்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே? face book விட்ஜெட் இணைக்கலாமே?

      Delete
    3. தவறில்லை நண்பா

      Delete
  6. சிந்திக்க வேண்டிய நிலையற்ற வாழ்வின் தத்துவம் !ம்ம் பலருக்கு இந்த தேடல் தொட்ரும் என்பதே கருத்தாகவும் இருக்கின்றது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!தேடுவோம்.எங்கோ ஓரிடத்தில் முடிவு தோன்றத்தானே வேண்டும்.மிக்க நன்றி.சந்திப்போம்.

      Delete
  7. அருமை... பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  8. நிறைய விடயங்கள் சொல்லப்பட்டாலும் இல்லறம் பற்றிய புரிதலில் இன்னமும் அனுபவம் தேவைப்படுகிறது.....
    இல்லறத்தை சொல்லும் போது மட்டுமேன் குறைகளைப் பார்க்கிறோம் என்னைப் பொருத்தவரையில் இல்லறம் ஒவ்வொரு மனிதரும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் சிக்கல்கள் மிகுந்த அழகிய வாழ்வு.....

    தூய வரத்தில் தூய பணியில் மட்டும் ஏன் சாதகமானதுகளை நோக்குவது.... எத்தனையோ தூய வரத்தில் இருந்தவர்கள் தூய்மை சலித்து இல்ல வரத்தில் இணைந்த சம்பவங்களும் இருக்கின்றனவே......

    ReplyDelete
    Replies
    1. வணக்ம் சொந்தமே!!இங்கு நான் இல்லறம் துறவறம் பற்றிய நன்மை தீமைகளை கூற வரவில்லை.இரண்டின் மீதான என்னிலை விளக்கம் தான் அது.அதாவது இல்லறத்தை ஏன் நான் விரும்பவில்லை என்றால் அங்கு இனிமைகளை காட்டிலும் ஏமாற்றங்கள் மிதமாக இருப்பதாக உணர்கறேக்.காவியத்தம்பதிகளும் இருக்கிறார்கள் ஒத்துக்கொள்கிறேன்.அவர்கள் இக்கருத்திற்காய் என்னை இங்கு மன்னிக்க வேண்டும்.

      துறவறம் என்ற எண்ணக்கரு இல்லறத்தை காட்டிலும் தியாகம் மிக்கது.ஆனால் அதில் இணையும் மனிதர்கள்; பல தருணங்களில் சபலத்தை வெல்ல மறுக்கிறார்கள்.ஏற்றுக்கொள்கிறேன்.நானும் சலனப்படும் மனது கொண்டவள்.பக்குவங்களால் இன்னும் நிரம்பாதவள் தெனால் தான் அத்தகைய பணியில் இணைய ககுதி அற்றவள் என ஒப்புகிறேன்.

      Delete
  9. சில பல சமூக சடங்குகள் சம்பிரதாயங்களினால் தான் பெண்கள் கைப் பொம்மைகளாக பார்க்கப் படுகிறார்கள்....சம்பிரதாயங்களுக்கு இங்கே முக்கியத்துவம் கொடுப்பதுதான் விமர்சிக்க வேண்டியது பெண்ணானவளுக்கு தன்னைப் பற்றிய நம்மிக்கையும் எதிர்காலம் பற்றிய தெளிவும் இருப்பின் அவளுக்கு சம்பிரதாயம் ஒரு தூசு.....

    எத்தனையோ பெண்கள் திருமணத்தின் பின்னும் சாதித்து இருக்கிறார்கள் எத்தனையோ பெண்கள் சாதிக்க கணவர்கள் துணையாகியிருக்கிறார்கள்..

    வாழ்க்கையை வரையறுக்க் கூ டிய ஒன்றுதான் துறவரம் ஆகவே.....நீண்ட இலக்கில் வாழ ஆசை கொல்ளும் ஒருவருக்கு துறவறம் சற்றும் பொருத்தமற்றது.....

    ReplyDelete
    Replies
    1. இது சரிதான்...!என்ன தான் சமுதாயம் பற்றிய கணக்கெடுக்காவிட்டாலும் அவதூறு பேசுபவர்களின் வினை பேசுபவர்களை ஒரு நாள் கட்டாயம் உறுத்தும்.
      ஏகாந்தமே இன்பம்...அடிக்கடி உள்ளே ஒலிக்கும் இந்தக்குரலை தான் மறக்க முடியவில்லை.இதுவும் கடந்து போகும்.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  10. பொதுவில் கவிதையாக விளிக்கப்படும் பெண்கள் இங்கு மட்டும் மஞ்சள் பத்திகையாவது நியாயமா?நிலவுவெளிச்ம் நீ எனப்பட்டவர்கள் பின்னாளில் கசியும் விளக்கு வெளிச்சமாக்கப்பட்டது ஏன்?ஓவியங்களெல்லாம் பின்னர் ஆபாசம் என பெயர்பெற்றது ஏன்.?//

    பலமான நியாயமான கேள்விகள் ஆனால் பதில்தான் இல்லை இந்த உலகில்...!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!எனக்க மட்டுமல்ல.இது பலருக்கும் முளைக்கும் கேள்வி தான்....:(
      விடைகள் தான் இதுவரை......
      தேடுவேன் தேடுவேன்.பெரியவளாகுமுன் நான; கண்டுகொள்வேன் இதற்கான பதில்களை.!
      மிக்க நன்றி மனோ சார்.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  11. தொடுவதற்கு அஞ்சும் மிக டேஞ்சரான விஷயம்! அசாதாரணமாக எழுதி கடந்திருக்கிறீர்கள்!

    ///வாழ்தல் என்பது ஒருதரம் தானே.இங்கு வரைமுறை வகுக்க வழிப்போக்கர் யாருக்கும் வசதி செய்து கொடுக்காதீர்.///

    அருமையான கருத்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!என்ன பாஸ் பண்றது..இப்போ இப்பிடி தான் கேள்விகள் எழுகிறது.மிக்க நன்றி சகோ.சந்திப்போம்.

      Delete
  12. மிகவும் சிந்தனைவயப்பட்டு ஒரு மூன்றாம் நிலையில் நின்று எழுதி இருக்கிறீர்கள்.சாத்தியங்கள் சாத்தியமின்மைகள் கடந்து மனதினை ஒரு கட்டுமான நிகழ்வுக்குள் அடக்க முடிந்தால்,இல்லற வாழ்வில் துறவு நிலையினை கொண்டு இனிமையாக வாழமுடியும் .அது இருக்கட்டும், சடுதியான ஒரு சமூக மற்றத்துள் உள்வாங்கபட்டு இருக்கிறீர்கள் போலதெரிகிறது உறவே,முடிந்தால் உங்களின் வாசிப்பு,மற்றும் பொழுது போக்குகளில் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்துங்கள்.தன்னிலை விளக்கமாகவே என்னால் இந்த பதிவை உணரமுடிகிறது.இந்த சஞ்சலம் நிரந்தரமானதல்ல.ஆனால் அலட்சியமானதுமல்ல.
    பேசுங்கள் பேசுவோம் ......காலத்தின் முடிவில் எல்லாமே ........... (நான் சொன்னது சரியோ தெரியாது எனக்கு தோணியது) இன்னொன்று மிகவும் அருமையான வசன நடையும் விளக்கங்களும் ...நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்ம் சொந்தமே!இனிய இச்சந்திப்பிற்காய் நன்றிகள்.கிடீரென ஏற்பட்ட உயர்வல்ல அது.னஉ; பதின்ம வயது முடிவுகளிலே இந்த எண்ணவோட்டங்களை கடந்ததுண்டு.ஆனால் அப்போது இதுபற்றி விவாதிக்கவோ ஆலோசிக்கவோ மனதுணிவோ தைரியமோ இல்லை.இப்போ எழுத்துக்கள் மீதுள்ள நம்பிக்கையால் பேசுகிறேன்.

      நன்றி.நீங்கள் சொன்னது போல சில மாற்றங்களை உள்வாங்கிக்கொள்கிறேன்.இல்லறத்தில் துறவறம்...ஆம் இது பெரியதொரு தவம் தான்.மிக்க நன்றி சொந்தமே!!!சந்திப்போம்.

      Delete
  13. rasanaiyaa ezhuthi!
    yosikka vaiththu vitteerkal!

    aanaal naam thirumanam enpathu-
    oru kaal kattu illai...

    aathalaal thirumanam purinthu vaazhvathe -
    sirappu enpathi!

    en karuththu!

    ReplyDelete
    Replies
    1. வணக்ம் சொந்தமே!தங்கள் கருத்துடன் ஓரளவு உடன்பட்டு ஓரளவு முரன்பட்டும் கொள்கிறேன்.:)
      மிக்க நன்றி சொந்தமே!!சந்திப்போம்.

      Delete
  14. எல்லாவற்றிக்கும் மனம் தான் காரணம்...

    விளக்கமான எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
    நன்றி…

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!!அது என்னவோ உண்மை தான்.மிக்க நன்றி சகோ.சந்திப்போம்.

      Delete
  15. wat a keen oberservation adhisaya..பேரில் மட்டும் அல்ல பதிவும் பெயருக்கு ஏற்ற மனதை கண்ணாடி முன் நிறுத்தியதால் உள்ளது..beautiful, well done ya..

    ReplyDelete
    Replies
    1. வணக்ம் சொந்தமே!!மிக்க மகிழ்ச்சி தங்கள் வார்த்தைகள்.எப்போதும் இப்படி இருக்கவே விரும்புகிறேன்.சந்திப்போம் இனிய சொந்தங்களாக....!

      Delete
  16. நிஜத்தை எதிர்கொள்ள் திராணியற்று
    நிழலில் தேடும் ஒரு நிலை .........

    ருசித்தபின் வெறுக்கும் நிலை ..

    பசிக்கும் போது கிடைக்காமல் வெறுக்கும் நிலை ...

    இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டு சுவை மனம் மிக்க உலகில்

    ஒரு காவி உடை கொண்டு நிச்சயம் அனைத்தையும் தடுத்து நிறுத்துவது அறிவின்மை ......

    அனைத்தையும் உணர்ந்து அதிலிருந்து விலகி நிற்றல் துறவு ............

    ReplyDelete
    Replies
    1. உதையுமே அறியாமல் அனுபவிக்காமல் எதை துறந்து துறவியாவது என எங்கோ கேட்டதாய் ஞாபகம்.சரி தான்.அததற்காக துறவறத்தில் இருந்து கொண்டு உலகியலை அனுபவிப்பது முறையல்ல.ஊலகின் இக்பங்களை சுகித்து,தனது உலகியல் கடமைகளை முற்றுமான் நிறைவேற்றி,அதன்பின்னும் இந்த இன்பங்களை துறப்பதும் ஒரு மேரான துறவே....!

      அனைத்தையும் உணர்ந்து அதிலிருந்து விலகி நிற்றல் துறவு ...........இது சூப்பர்மா..!

      Delete
  17. எண்ணைகளை சம காலத்தில் சக மனிதரிடம் வெளிபடுத்த முடிகிறது உன்னால் தோழி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி என் பாசத்திற்குரிய சொந்தமே!!சந்திப்போம்

      Delete
  18. அருமை அதிசயா . சூப்பர்...பாராட்டுகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சொந்தமே!:)
      சந்திப்போம்.

      Delete
  19. செல்லும் பதில் இருந்து சிறிதும் விலகமால் எடுத்துக் கொண்ட கருப் பொருளை அழகாய் எழுதி இருப்பது அருமை தோழி... மனிதர்கள் மனிதர்களாக வாழ நினைக்கும் பொழுது வாழ்கையின் இறுதி நிலையில் இருப்பார்கள் என்ற வரி தான் நியாபகம் வருகிறது... உங்கள் சிறந்த எண்ணம் அணைத்து மனிதர்களையும் சென்று சேரட்டும்

    ReplyDelete
    Replies
    1. பின்னுள்ள ஈரங்களை நேசிக்கப்ழகுவோம்!.
      அந்த வைராக்கியங்களின் பின்னான
      வாசங்களுக்கு வழிவிடுவோம்.!
      மரத்துப்போனவர்கள்
      மானம்விற்றவர்களல்ல..!//அருமையான நடையும் விளக்கங்களும் ..

      Delete
    2. வணக்கம் சீனு அண்ணா!!மிக்க நன்றி.தங்கள் கருத்தில் புதியவிடயம் ஒன்றை அறிந்த திருப்தி.சநதிப்போம் சொந்தமே!!!!:)

      :)

      :)

      Delete
    3. மிக்க நன்றி சொந்தமே!

      Delete
  20. மனிதனின் மனதைத் தோண்டியெடுத்து கையில் வைத்துக்கொண்டு கேட்கும் கேள்விகள்.மிக மிக அருமையான தெளிவான பதிவு.மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.இன்னும் புதிய விளக்கங்கள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஹேமா அக்கா.தங்கள் கருத்திற்கு மிகவே கடமைப்படுகிறேன்.சந்தோஷம் சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  21. “வாழுதல் கூட ஒரு இசைதான்.இவர்களின் ரிதம் இவர்களுக்கு இனிமை தந்தால் இயங்கவிடுங்கள் அவர்கள்.தாளத்தில் தப்புச் சொல்ல நாம் யார்??? “

    அருமையான கருத்து அதிசயா...
    யாருடைய தாளத்தையும் நாம் தப்பு சொல்ல முடியாது. அவரவருக்கு எது இனிமை தருகிறதோ... அவர்கள் அதனுடன் இயங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அருணா அக்கா...இன்று நாம் தப்புசொன்னால் நாளை நம் தாளங்கள் இன்னும் அதிகமாக விமர்சிக்கப்படும்.புரிந்து கொண்டமைக்கு மிகவே நன்றி சொந்தமே!!!

      Delete
  22. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து, என்னை சிந்திக்க வைத்த பதிவு தோழி. தங்கள் கேள்விக் கணைகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது.

    அதிலும் குறிப்பாக இந்த வரிகள்:

    பொதுவில் கவிதையாக விளிக்கப்படும் பெண்கள் இங்கு மட்டும் மஞ்சள் பத்திகையாவது நியாயமா?நிலவுவெளிச்ம் நீ எனப்பட்டவர்கள் பின்னாளில் கசியும் விளக்கு வெளிச்சமாக்கப்பட்டது ஏன்?ஓவியங்களெல்லாம் பின்னர் ஆபாசம் என பெயர்பெற்றது ஏன்.?

    நானும் இன்று பெண்களை நிலவொளியாய், கவிதைகளாய், ஓவியங்களாய் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னாளில் என் பார்வை மாறக் கூடாது என்று நான் தற்போது உறுதி எடுத்துக் கொள்கிறேன்...

    எங்கும் நோக்குங்கள், பெண்களை பெண்கள்தான் முதலில் தரக்குறைவாய் பேச ஆரம்பிக்கிறார்கள், குறிப்பாக சிலருக்கு தனியாக வசிக்கும் பெண்களின் வளர்ச்சி பிடிப்பதில்லை. அதனால்தான் இந்த அனைத்து பேச்சும்.

    என்ன செய்ய நம் மக்கள் நண்டு போல் பின் காலை இழுத்துவிட்டே பழகி விட்டார்களே?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அன்பின் சொந்தமே!!!தங்கள் கருத்த கண்டது மகிழ்ச்சி.தங்களின் எண்ண ஓட்டத்தை மிகவே மதிக்கிறேன்...

      நானும் இன்று பெண்களை நிலவொளியாய், கவிதைகளாய், ஓவியங்களாய் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னாளில் என் பார்வை மாறக் கூடாது என்று நான் தற்போது உறுதி எடுத்துக் கொள்கிறேன்...ஃஃஃஃஃ

      நல்லதொரு விடயம்...என்றும் தொடர வாழ்த்துக்கள்.தங்கள் மன எதிர்பார்ப்பும் இறுக்கமும் உறுதிபட வாழ்த்துக்கள்.

      ஒரு வகை ஆற்றாமை இயலாமைகளில் கூட இத்தகைய வதந்திகளை உண்டாக்கிவிடுகிறார்கள்.நாமும் திருந்தி நாட்டையும் திருத்துவோம்.நன்றி சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  23. தோழி, எனது நெட்வொர்க்கில் ஏற்பட்ட சில கோளாறுகளால் தான் என்னால் தங்கள் தளத்திற்கு வருகை தர கால தாமதம் ஆகிவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. அதிலென்ன சொந்தமே!!!காலதாமதம் ஒரு விடயமேயல்ல..!எப்போது சந்தித்தாலும் அது மகிழ்ச்சியே!!

      Delete
  24. கருத்துக்களை தைரியமாகக் கூறிய்ள்ளீர்கள் வாழ்த்துக்கள். இல்லறம் குறித்த எதிர்மறை எண்ணங்கள் தோன்றக் காரணம் நம் எதிர்பார்ப்புகளே. மனித சமுதாயமே ஒருவரை ஒருவர் சார்ந்த சமூகம். தனித்து வாழப் விருப்பப்படாது. எல்லா உறவுகளுடனும் விட்டுக் கொடுத்து வாழும் நாம் கணவன் ,மனைவி எனும்போது ஏன் யோசிக்கிறோம்?

    இந்த உறவு தொடர்பாக ஜக்கி வாசுதேவ் அவர்களின் வரிகளை பகிர்ந்து கொள்கிறேன் உண்மையில் யாரையும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உங்களுடைய மனைவியோ, உங்கள் கணவரோ, உங்கள் குழந்தையோ யாருமே உங்களுக்கு உரிமையானவர் கிடையாது. அவர்கள் உங்கள் சொத்து கிடையாது. இந்த நிமிடத்தில் அவர்கள் உங்களோடு இணைந்திருப்பதைக் கொண்டாடி மகிழுங்கள்.

    ‘இந்த உயிர் என்னோடு இருப்பதைத் தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்’ என்று நீங்கள் மனமார உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும். மாறாக, ‘இவள் என் மனைவி. எப்படியும் எனக்கு உடமையானவள்தான். என்னிடம் மட்டுமே இருக்க வேண்டியவள்’ என்று நீங்கள் நினைக்கும் அந்தக் கணத்திலேயே பாராட்டும், கொண்டாடுதலும் காணாமல் போய்விடும். இரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாட்டமும் காணாமல் போனபிறகு, அவர்களிடையே இருக்கக்கூடிய உறவுநிலையில் என்னதான் அழகு இருந்துவிட முடியும்? கணவரோ அல்லது மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கிறாரோ அவரை அந்தத் தன்மையுடனேயே புரிந்து கொண்டு மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லையென்றால், பிறகு அருமையான உறவுமுறை அங்கே எப்படியிருக்கும்?

    ஆனால் அதே நேரத்தில், அவரை இன்னொரு ‘உயிராக’ நீங்கள் உணர்ந்தால், அங்கே மிக அழகான உறவு மலரும். உங்களுடைய வாழ்க்கைக்குள் பங்கெடுக்க வந்த பெண்ணை, ‘இதோ, இங்கே, இப்போது என்னருகில் இருப்பது இன்னொரு சக உயிர்’ என்ற அளவில் வெறுமனே பாருங்கள். ஒவ்வொரு கணமும் இப்படிப் பார்க்கும்போது அங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்க முடியும்.

    இல்லறத்தை கொண்டாடுவது நம் கையில்தான்.

    பெண்களை குறை கூறக் காரணம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி பார்த்த சமூகம் இன்னமும் அப்படித்தான் பார்க்கிறது.மன நிலையில் மாற்ற்ங்கள் மெதுவாகத்தான் வரும். காதல்,ம்ற்றும் சாதி மறுப்பு திருமண்ங்கள் பழைய எதிர்ப்பை இப்போது பெறவில்லையே? அது போல் தான் பெண்களை குறை சொல்லும் காலம் மாறும். மன்னிக்கவும் மிக நீ....ண்ட பதிவாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!அற்புதமானதொரு விடயத்தை அழகாக அறிமுகம் செய்தீர்கள்.இந்தப்புரிதல்களும் விட்டுக்கொடுப்புகளும் தான் இனிமையான இல்லறத்தின் அடிப்படை என தெரிந்தும் ஏன் இதுவரை இந்தப்புரிதல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.ஆரம்பங்கள் இனிமையாக அமைந்தாலும் பிற்ப்டகாலங்களில் அடக்குமுறைத்தன்மை ஒன்று கணவன் அல்லது மனைவிடம் ஒட்டிக்கொள்கிறதே!ஆரம்பபித்த ஆட்டம் ஏதோ ஆடி முடிப்போம் என்ற மனநிலையும் சலிபும் மிகைப்பட்டுவிடுகிறதே!!!

      ""இந்த உயிர் என்னோடு இருப்பதைத் தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்’""

      உண்மைதான்.பல தருயங்களில் நானும் இதை மறந்து தான் போகிறேன்.காலங்கள் மாறும் என்ற நம்பிக்கையில் தானே இன்ற வரை போராட்டங்கள் நடக்கிறது.

      மிக்க நன்றி சொந்தமே!ஆழமான கருத்துக்களை அன்பாக அருகிருந்து கேட்டதாய் நிறைவு.மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

      Delete
    2. எப்போது எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ, அப்போது முதல் ஏமாற்றமும் அதிகமாக ஆரம்பிக்கிறது... இதனை நாம் நட்பு, காதல், இல்லறம் என அனைத்திலும் புரிந்துகொண்டால் கடவுள் அளித்த இந்த அழகிய வாழ்க்கையை முற்றிலும் அனுபவிக்கலாம், இல்லையே எப்போதும் துக்கம் தான்...

      Delete
    3. அனுபவிப்போம்சொந்தமே!வாழ்க்கை அழகானதே!

      Delete
  25. ஏன் இப்படி சிந்தனை வந்தது. இந்த வயதில்?.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. வணக்கம் சொந்தமே!என்ன செய்வது?:( இப்போதெல்லாம் வயதுகளை விட வார்த்தைகளும் எண்ணங்களும் வேகமாக வளர்கிறதே!:(

    ReplyDelete
    Replies
    1. அட உங்களுக்கு மெயில் ஒன்று அனுப்பினேன் கிடைத்ததா?

      Delete
  28. ஆழ்ந்த கருத்துக்களை அழக்காக் சொல்லி இருக்கிறீர்கள்!


    நடைமுறை வாழ்க்கையில் அனைத்து வழிகளும் சிக்கல்கள் நிறைந்த்தாகவே இருக்கிறது!அதை திறம்பட தீர்ப்பதில்தான் வாழ்க்கையே நகர்ந்துகொண்டிருக்கிறது!

    ReplyDelete
  29. வணக்கம் சொந்தமே!!தங்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி!

    சில தருணங்களில் அந்த வழிகளைத்தேடியே எங்கள் முயற்சிகளுக்கு நரை விழுகிறது.ஆனாலும் நம்பிக்கையுடன் தேடச்சொல்கிறது இந்த வாழுதல் முயற்சி.

    மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம். :)

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. சிறப்பான கருத்தை அதனினும் சிறப்பான நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  32. வணக்கம் ஐயா!மிக்க நன்றி.சந்திப்போம்.

    ReplyDelete
  33. இறுதி கவிதை வரிகள்...என்னுள் பல வித சிந்தனைகளை தூவி விட்டது.

    ReplyDelete
  34. வணக்கம் சொந்தமே!தங்கள் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி!மிக்க நன்றி!தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
  35. In the family life the happiness,sorrow 2.ups and downs. 3.devil and deep sea.4.dark and day. etc are the two sides of coin of life.ILLARAMAE NALLARAM.Anciently,the thuravaram the saints live with wife in ashramam.What I mean is anything we choose is to ADHERE as per our conscious mind .At any cost., your contribution is very HIGH PROFESSIONALISED WORDS AND THOUGHTS.by DK.

    ReplyDelete
  36. gudevening.its happy to c u here:).ya u r right and thnaks for your comments.thanku verymuch 4 ur wishes..c u again soon.god bless u.


    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...