இல்லாமலலும் இருப்தாயும் மிதக்கும்
என் மனமே!!!!
கேள் மனமே!
காலை வெயில் வெளிச்சங்களில் தோள் மீது கை போட்டு
கடற்கரைச்சாலைகளில் கூட வருகிறாய்.,
பேரின்பம் இது தான் என என்னோடு
பேசிக்கொள்கிறாய்.,
பூமியில் கால் உதைத்து மேகங்களையெல்லாம் மேவச்செய்கிறாய்.,
பூக்கள் விரியட்டும் என இடம் கொடுத்து
என்மீது மென்மைகள் பூக்கச்செய்கிறாய்,,
என் மடியில் சாய்ந்து கொண்டே
இறப்பையும் கடப்போம் என்கிறாய்.,
விழுந்து விழுந்து இதயக்கரையெல்லாம் மிகந்து செல்கிறாய்.,
இது போதும்,இனி வாழ்வேன்
சத்தமாய் பாடிக்கொள்கிறேன்..
அதோ நீ அங்கிருக்கிறாய்
என்னைத்தான் பார்க்கிறாய்
ஏதோ ஆயத்தம் செய்கிறாய்
நான் அமைதிகொண்ட பொழுதொன்றில்
எனை நோக்கி ஆவேசமாய் பாய்கிறாய்.!
" கொல் "
என்கிறாய்,
புதை என்கிறாய்.
என் பொம்மைகளை பறித்துவிட்டு
தீப்பந்தம் கொடுக்கிறாய்..
எரிக்கச்செய்கிறாய்
"செத்துப்போ"
என்கிறாய்.
சன்நியாசம் தான் சரி.......!
பற்று அறு...!
தனித்திரு...!
பாசமே வேசம்...!
ஏகாந்தம் தான் இனிமை....!
புரியவில்லை
உன் சித்தம்!!!
ஏன் இப்படி????????
இதையும் நீதான் சொல்கிறாய்.
இப்போதெல்லாம் இதைத்தான் சொல்கிறாய்.!
அத்தனை ஈரங்களையும்
தனித்திருந்து உறிஞ்சிவிட்டு
பரட்டை தேசமாய் என்னை பாளம் போடுகிறாய்.
மறுபடியும் கண்ணீர் ஊற்றுகிறாய்.
மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறாய்..!
விரல் மறைத்து குடை செய்து
ஒலிவக்கன்று தருகிறாய்.
நீயே நட்டும் வைக்கிறாய்.
என் இனிய நண்பனே!
என் மனமே!!
மயங்காதிரு!!!
பொறுத்திரு,சகித்திரு!
வென்றுவிடச்சொல்லி விட்டு
நீயே கொன்று போனால்..........:(
இறுகி இறுகி கட்டிப்படாதே,
கொஞ்சம் ஈரம் வை...!
இயன்ற வரை முளைத்துக்கொள்கிறேன்....!
-அதிசயா-
நச் கவிதை சகோ!
ReplyDeleteவணக்கம் சகோ...மிக்க நன்றி..டான் என்று உடனேயே கருத்து போட்டதற்கு சல்யுட் சார்.
Deleteகவிதையின் கோர்வை வரிகள் நன்று...
ReplyDeleteவணக்கம்.தங்களை சந்திப்பது மகிழ்ச்சி.சந்திப்போம் சொந்தமே!
Deleteவென்றுவிடச் சொல்லி நீயே கொன்று போனால்... மனதின் அலைபாய்தல்களை எத்தனை அழகான வரிகளில் படம்பிடித்துக் காட்டியிருக்கீங்க. உங்க பேருக்கேத்த மாதிரியே என்னை அதிசயப்பட வெச்சுட்டீங்க. சூப்பரு..!
ReplyDeleteவணக்கம் நிரும்மா...சுகமா????
ReplyDeleteமிக்க நன்றி நிரு.......சந்திப்போம் சொந்தமே!
அருமை. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
நன்றி சொந்தமே!!!!மிக்க நன்றி
ReplyDeleteவரிகள் அருமை..
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே!!சந்திப்போம்.
Deleteஆரம்ப வரிகளே அமர்க்களம்..ஜில்லுன்னு....நோ நச் என்று ஒரு கவிதைதான் அழகாக இருக்கிறது
ReplyDeleteவணக்கம் சொந்தமே!!!ஐில்லோ நச்சோ..,நீங்கள் வந்தாலே ஒரு அழகு தானே பாஸ்....
Deleteமிக்க நன்றி.சந்திப்போம்.
ஓஷோவின் நூல் ஒன்றை படிப்பது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇப்பொழுதுதான் 'காட்சிப்பிழைகள்' படித்தேன். ஒரு சிறிய பாராவைப் படித்ததும் சில நிமிடங்கள் எங்களைத் தொலைத்து எண்ணங்களை, எங்கெங்கோ பயணிக்க வைக்க முடியுமெனில் அதுதான் அந்த எழுத்தின் வெற்றி. அதிசயிக்கிறேன்!
வணக்கம் சொந்தமே.தங்களை இங்கு சந்திப்பதும் இத்தகைய கருத்துரையை தங்களிடமிருந்து பெற்றதும் ஒப்பற்ற மகிழ்ச்சி.ஒரு எழுத்தாளனுக்கு அவன் எழுத்துக்கள் வெல்வதை விட வேறென்ன வேண்டும்.சந்திப்போம் சொந்தமே!!!
DeleteNice poem. Kavidhai eludhave pirandhavar neengal. Vaarththaigal laavagamaai vandhu vilugindrana. Vaalththukkal athisaya.
ReplyDeleteவணக்கம் பாரதி.மிக்க நன்றி..சிறப்பை அடையத்தான் முயல்கிறேன்.அது வாய்த்தால் அக்களிப்பேன்.சந்திப்போம் சொந்தமே!!!
Delete////அத்தனை ஈரங்களையும்
ReplyDeleteதனித்திருந்து உறிஞ்சிவிட்டு
பரட்டை தேசமாய் என்னை பாளம் போடுகிறாய்.///
ஏதோ உறுக்கி சொல்வது போலவே இருக்கிறது
வணக்கம் சுதாண்ணா..நிச்சயமாண் எறுக்கித்தான் சொல்கிறேன்...கேட்கட்டும் எனக்கு என்று!சந்திப்போம் அண்ணா..!
Deleteசிறப்பாக இருக்கிறது.வாழ்த்துகள் அதிசயா.
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே!!!!
DeleteInru rasithu paditha kavithai , varikal vairam
ReplyDeleteநன்றி சொந்தமே!சந்திப்போம.!
DeleteInru rasithu paditha kavithai
ReplyDeleteநன்றி சொந்தமே!சந்திப்போம்.!
Deleteவரிகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கும் விதம் கண்டு மகிழ்ந்தேன் அதிசயா ...
ReplyDeleteஉணர்வுகளை தூண்டும் செழிப்பான கவிதைக்கு என் வாழ்த்துக்கள
வணக்கம் சொந்தமே!தங்களை சந்திப்பது மகிழ்ச்சி.வாழ்த்திற்களுக்கு தலை வணங்குகிறேன்.சந்திப்போம்.
ReplyDeleteஇறுகி இறுகி கட்டிப்படாதே,
ReplyDeleteகொஞ்சம் ஈரம் வை...!
இயன்ற வரை முளைத்துக்கொள்கிறேன்....!//
ஆழமான அருமையான தெளிவான சிந்தனையுடன்
கூடிய பதிவு
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
மனம்தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா!!!!!
ReplyDeleteமிக்க மிக்க மிக்க நன்றி ஐயா!சந்திப்போம்.:)
அருமையான வார்த்தை தெரிவுகள் சகோதரி. நெஞ்சை தொடும் கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும் அன்பிற்கும்.சந்திப்போம்
Delete//பற்று அறு...!
ReplyDeleteதனித்திரு...!
பாசமே வேசம்...!
ஏகாந்தம் தான் இனிமை....!//
புரிந்து கொண்டேன் தோழி.
வணக்கம் அக்கா.சந்திப்பது மிக்க மகிழ்ச்சி.புரிந்துபொண்டீர்கள்.மிக்க நன்றி.சந்திப்போம்.
Deleteசன்நியாசம் தான் சரி.......!
ReplyDeleteபற்று அறு...!
தனித்திரு...!
பாசமே வேசம்...!
ஏகாந்தம் தான் இனிமை....!
புரியவில்லை
உன் சித்தம்!!!
ஏன் இப்படி????????
இதையும் நீதான் சொல்கிறாய்.
இப்போதெல்லாம் இதைத்தான் சொல்கிறாய்.!
அட நீங்க என்னைத்தான் கேட்கிறீர்களோ என்று
நினைத்தேன் :)......ஆனால் மீதம் எல்லாம்
படித்த பின்தான் தெளிவு பெற்றேன் சகோதரி .
அத்தனை உணர்வு மிகுந்த கவிதை வரிகள் அருமை !!!...
தொடர வாழ்த்துக்கள் .
வணக்ம் சொந்தமே.நலமா???ஃஓஓஓ அப்பிடி நினைச்சுட்டீங்களா..ஒரு விதத்தில 2 பேரோட மனஓட்டமும் எங்கோ ஒரு புள்ளியில்; சந்திக்கிறது போல.மிக்க மகிழ்ச்சி சொநதமே!!!!சந்திப்போம் சொந்தமே!
Deleteஈரம் தரும் காதலென்றாலும் கொல்லும் புதைக்கும்.பிறகும் மீட்டெடுக்கும் அணைக்கும்.அருமையான வரிகள் அதிசயா !
ReplyDeleteவணக்க் அக்கா...உய்மை தான் கொல்வது கொள்வது இரண்டுமே அதன் வேலை தான்.மிக்க நன்றி அக்கா.சந்திப்போம்.
Deleteபல தடவை வாசித்தால் தான் புரிந்திட முடியும். நல் வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வணக்கம் சொந்தமே.பொறுமையாக வாசித்தமைக்கு மிகக நன்றி.சந்திப்போம் சொந்தமே!
Deleteகவிதை படித்து மனசு லேசாக வலித்தாலும்.......உங்கள் கவிதை வரிகள் மனதை சிலிர்க்க செய்கிறது வாழ்த்துகள்...!
ReplyDeleteவணக்கம் மனோ சார்.மிக்க நன்றி.பயப்பிடாதிங்க.காயம் 1 இருந்தால் நிச்சயம் மருந்தும் இருக்கும் சொநதமே!மிக்க நன்றி.சந்திப்போம்.
Deletekavalai thantha kavithai!
ReplyDeletemudivil etho ontrai unara vaiththathu....
வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி.சந்திப்போம்.:)
Deleteஇறுகி இறுகி கட்டிப்படாதே,
Deleteகொஞ்சம் ஈரம் வை...!
மயங்காதிரு மனமே!!!
வணக்கம் சொந்தமே!தங்கள் அன்பான வருகைக்கு மிகவே நன்றி!
Deleteஅருமையான வரிகள் அதிசயா.... உன்னுடைய எழுத்து நடையே தனிமைதான் ... அது போல் மனமும்....
ReplyDeleteவணக்கம் சொந்தமே!உரிமையும் நேசமும் நிறைந்த வாழ்த்திற்காய் மிகவே நன்றி.உங்கள் நேசத்திற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
Deleteகவிதையில் அப்படியே லயித்து விட்டேன்.. அருமை
ReplyDeleteவணக்கம் சொந்தமே!!!மிக்க நன்றி.சந்திப்போம்.
Deleteவரிகள் நன்று...
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.
Deleteதேடல் மிக்க மழையின் உணர்வை வாங்கிச் செல்லும் கவிதை!
ReplyDeleteவணக்கம் சொந்தமே.இப்படிம் அர்த்தங்கள்.மிக்க மகிழ்வாயிருக்கிறது.நன்றி.சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteம்ம்ம் அருமை.....
ReplyDeleteநன்றி சொந்தமே!!!!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நேரமிருந்தால் பாருங்கள்
ReplyDeleteவணக்கம் சொந்தமே!தங்களை சந்திக்கக்கிடைத்தது மிகவே மகிழ்வு.நன்றி.நிச்சயம் பார்க்கிறேன்.சந்திப்போம் சொந்தமே!
Deleteஉணர்வுகளின் வீச்சு எங்களையும் தாக்குகிறது உங்கள் வார்த்தை வழி அருமை தோழி
ReplyDeleteவணக்கம் சொந்தமே!எனது பக்கம் வந்தமைக்கு மிகவே நன்றி.விரைவில் உங்களை புதிய பதிவுகளுடன் சந்திக்கிறேன்.
ReplyDelete