சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசங்களும் வணக்கமும்!
நலனிற்காக ஆசித்து பதிவிற்கு அன்போடு அழைக்கிறேன்.சில காலங்களாய் எழுத விரும்பியும் எழுத்துக்கள் வசப்படாததால் பிற்போட்டு இன்று வசதிப்பட்டமை மகிழ்ச்சி.
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!(இது கற்பனையே..!)
கனவுகள் மீது காதல் கொண்டது இந்த மனம்.கனவுகள் தானே வாழ்தலின் அடையாளம்.கனவுகள் மீது பரவிய படி ஒரு பாதத்தையும் மரணங்களின் வாசலில் புதைந்த மறுபாதத்தையும் கொண்ட குழப்பவாதி நான்,சாவின் குரல் பலமாக ஒலிக்கும் ஏகாந்த காடொன்றில் வேகமாக ஓடிக்கொண'டிருக்கும் அவசரங்களில் இதை எழுதுகிறேன்.
எந்த அறிவித்தலும் இன்றி பிரபஞ்ச வெளிகளில் விழுந்த விதை நான்.தண்ணீரால் கழுவிய கணம் தொடங்கிய என் பயணம்,கண்ணீராகி நிறைகின்ற இந்தக்கணம் வரை ஒவ்வொரு கணமும் கனமானது.புத்தகப்பை தோள்களால் இறங்கிய வரை இருந்த விறுவிறுப்பு சிறகுகள் பூட்டிய இளமையில் காணாமலே போனது.அந்நிய கைகளில் சாவியை கொடுத்தவிட்டு,வெளிச்சம் கேட்டு கதவுகள் தட்டி,வியர்வையால் தோய்ந்த இனமொன்றின் எச்சம் நான்.
எங்கோ பொறியாகத்தெறித்த வாழுதலின் மீதான பற்றின்மை எனக்கே தெரியாமல் என்னுள் தோன்றி இந்தக் காட்டையே எரிக்கும் அளவிற்கு தீப்பிளம்பாகிவிட்டது......!எரிதல் என்று வந்த பின் பொறி என்ன பிரவாகம் என்ன????
இன்று தான் இரவின் ரம்மியங்களை அணு அணுவாக உணர்கிறேன்.ஓங்கி ஒலிக்கும் மரணத்தின் கூப்பிடுதல்களுக்கு தற்காலிக அடைப்பு கொடுத்து விட்டு,எனக்கே எனக்காய் இந்த இரவை ஒதுக்கி வைத்துள்ளேன்.இதுதான் நான் காணும் கடைசி முழு நிலா.இதுவே எனக்காய் இறங்கி வந்த வானின் வரப்பிரசாதம்.
வானம் தான் கூரை..!நிலவு தான் ஒளி உருண்டை.கோட்டைகள் தாண்டி,கோடிப்புறத்தில் புரண்டு,எங்கோ எங்கெங்கோ கொட்டும் ஒளித்தூறல்கள்.இதை எத்தனை கண்கள் கண்டதுவோ?யார்வீட்டுப்போர்வைகள் முக்காடிட்டனவோ? புள்ளி விபரம் அறியேன்.என் கண்கள் மட்டும் நிரந்தரமாய் இங்கு நிலவிற்காய் நின்று கொண்டன.
பூலோகத்தில் சஞ்சரித்த காலப்பெரு வெளியில் சாத்தியப்படாத இந்த நிமிடங்கள் "வாவா" என சாவு கூச்சலிடும் அவசரங்களில் தான் என்னை சந்திக்க அனுமதித்திருக்கிறது.கருணையே கருணை.!
இலட்சியம் தேடி ஓடிய அத்தனை வேகங்களையும்சேர்த்து சிறியதாய் ஒரு செட்டை கொண்டு வேகமாக நகர்கிறேன் நிலவை தேடி!மரணத்தின் அறிவிப்புகளும் வரவேற்புகளும் செறிந்த இந்த இடத்தில் தான் எத்தனை ரம்மியம்.?!
உச்சி நனைக்கும் இந்த ஒழுகல்கள் எதையோ ஞாபகப்படுத்துகின்றன.இப்படி ஒரு முழு நிலாஇரவில் தான் வெற்றி பற்றி ,இலட்சியம் பற்றி என்னோடு நானே பேசினேன்.""வென்று விட்டேன்.இனியும் வெல்வேன் "' என்று என்னுள் எண்ணியது இங்கு தான்.வெற்றி மீதான மோகம் அன்று அந்த நிலாச்சந்திப்பை அத்தோடே நிறுத்திவிட்டது.பருவங்களும் பொழுதுகளும் எத்தனை மாற்றங்களைக்கண்டிருக்கும்.அந்த வழக்கத்தில் தான் இந்தச்சந்திப்பும் நிகழ்கிறது.ஏக்கக்கோடுகள் நிறைந்துவிட்ட என் ஞாபகத்தாள்கள் பள்ளிக்குழந்தையாய் வாசலில் முரண்டு பிடிக்க இறுக்கமான பார்வை ஒன்றால் நிறுத்தற்குறி காட்டிவிட்டுத்தொடர்கிறேன்.
முகடுகளோடு மூச்சுமுட்ட,கனவுகள் போட்டிபோட்டுத்துரத்த,ஒருக்களித்துத்திரும்பும் இடைவெளியில் நினைவுகள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ள,தூக்கங்கள் எல்லாம் துயரமாய் போன இரவில் கூட நிலவு பற்றிய எண்ணம் தோன்றவில்லையே.....:(ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் என் ஆயுள் ரேகை வளர்ந்திருக்கும்.அடுத்த திருப்பத்தில் தயாராகஎன் மரணம்.சாவின் கதவருகில் தான் வாழ்தல் அர்த்தம் புரிகிறது.அழகால் நிரம்புகிறது.
''கால் விழிம்பில் மரணம் ,
வருத்தமில்லை!!
சாவின் சாலைகளில் கூட நிலவு
வருகிறது!!கடைசி நொடி இரட்சகனாய்!
இது போதும்.!''
பகல் என்பது வெளிச்சவெளி.எல்லாமே வெளிப்படை என்பதால் அழகின் மீதான தேடல்களுக்கு இங்கு வாய்ப்பில்லை.அழகுப்போலிகளும் ,இயந்திர இரைச்சல்களும் இறந்து விட்ட இரவுகள் தான் அழகு!மெல்லிய வெளிச்சங்களின் இழையோடல்களில் தான் உயிர் ஊறும் அசைவு புரிகிறது.ஆஹா....
இங்கு தான் பார்க்கிறேன்,பார்வையாளர்களுக்காய் பிற்போடப்படாத மரங்களின் நடனங்களை,மூச்சுவிடும் இடைவெறிக்குள் நிறையத்துடிக்கும் குளிர்த்துணிக்கைகளை,வேர்கள் குடிக்கிறதா??குளிக்கிறதா???இரண்டுமாய் கேட்கும் ஈரத்தின் சப்தங்களை,இதுவரையும் கட்டிவைத்த இசைக்கட்டிகளின் கசிவுகளை,விடிதலுக்காய் நிறம் குழைக்கும்அடிவான அவசரங்களை...!!!!!
முடிதலிற்கு முன்பு ஒரு நிறைதல் வேண்டுமல்லவா?அதுதானே திருப்தியான முடிதல்.இறத்தலின் மீது நெருக்கங்கள் உண்டு பண்ணிய என் பிரிய எதிரிகளே!ஒன்று மட்டும் சொல்வேன்.என்னுள் ஒரு பாதி உங்கள் நேசங்களால் அன்றே நிரம்பிவிட்டது.மறுபாதி சொட்டுபோட்டே வற்றுகிறது.இங்கு பொழியும் வெள்ளை நேசங்களால் விடிவதற்குள் மீதமுள்ள உயிரும் நிறைந்து என் பாத்திரம் அமைதிகொள்ளும்.
உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!
நிலவுகளுடன்
-அதிசயா-
உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!
ReplyDeleteபடிக்கப் படிக்க பிரமித்துப் போனேன்
ஆழமான சிந்தனையும்
படிப்பவர்களையும் உணர்வு நதிக்குள்
இழுத்துப் போகும் அருமையான நடையும்...
ஒரு படைப்பாவது இப்படி கொடுக்க வேண்டும் என்கிற
ஆவலைத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா...குளிர்கின்ற இந்த இரவில் சூடான தங்கள் பின்னூட்டம் மிகமிகமிகவே மகிழ்ச்சி ஐயா..தங்களின் வார்த்தைகள் உற்சாகம' ஐயா!
ReplyDeleteOre muchai vasithrhu mudithen piramippu
ReplyDeleteவணக்கம் சொந்தமே!பதிவு சற்றே நீளமாகிவிட்டது...எத்தனை சரிகள் தவறவிடப்படுமோ?? என வருந்தினேன்..மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்து..சந்திப்போம் சொந்தமே..!:)
Deleteஅருமை அருமை.... அனைத்தும் அருமை.... சிறு வயதில் இத்தனை ஆழமான அர்த்தங்கள் ...வாழ்த்துக்கள் மேலும் சிறக்க சொந்தத்தின் கற்பனைத்திறன் .....
ReplyDeleteவணக்கம் சொந்தமே!எங்களின் உற்சாகப்படுத்தல்கள் இருக்கும் வரை நிச்சயமாய் தொடர்வேன் இந்த சிறிய இனிய பயணத்தை..நன்றி சொந்தமே!சந்திப்போம்.:)
Deleteஇறுதி நிமிடத்தில் ஒருவன் நிலவைப் பற்றி மட்டும் கூறியிருந்தால் அழகாய் இருந்திருக்காது, அதனூடே நீங்கள் அவன் இழந்த்ததைப் பற்றியும் கூறியிருப்பது ஒரு தேர்ந்த எழுத்தாளனின் திறமையைக் காட்டுகிறது, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் திறமை அதிசயா அதில் எந்த அதிசியமும் இல்லை.
ReplyDelete//உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!//
இறுதி வரிகளை இதை விட அழகாய் முடித்திருக்க முடியுமா தெரியவில்லை....வாழ்த்துக்கள்
வணக்கம் இனிய சொந்தமே!
Deleteநத்தனை நிலவு பொழிந்தாலும் மரணத்தின் வாசல்களில் தோன்றும் இறந்தகால நினைவுகளை ணாரால் தான் தவிர்த்துவிட முடியும்.எழுத்துக்கயுக்கு கடமைப்பட்டுள்ளேன்.மகிழ்ச்சி சொந்தமே!சந்திப்போம்.!:)
என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை அதிஸயா... வார்த்தைகள் உங்களுக்கு வசப்பட்டு விட்டதை மகிழ்வுடன் பிரமிப்புடன் பாக்கறேன் நான். முடித்திருக்கும் விதம் என்னுள் பல உணர்வுகளை எழுப்பி அதிசயத்தில் ஆழ்த்தி விட்டது. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களை வாழ்த்தறேன் நட்பே. தொடரட்டும் உங்கள் சிந்தனை ஊர்வலங்கள். (இப்ப என் டாஷ்போர்டுல உங்க பதிவை பாக்க முடியுது சொந்தமே)
ReplyDeleteவணக்கம் சொந்தமே!இதைவிட வேறென்ன வேண்டும்.மனம் திருப்திப்படுகிநது உங்கள் வாழ்த்துக்களால்..நன்றி நிரு...வார்த்தைகள் வசப்பட்டு விட்டது என சகபதிவராய் தோழியாய் சொந்தமாய் தாங்கள் வாழ்த்துவது சிலிர்க்கிறது.சந்திப்போம் சொந்தமே!!
Deleteஅப்பிடியா..சரிம்மா:)
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!
ReplyDeleteசொன்ன விதம் பிடிச்சிருக்கு - படிச்சி உள்வாங்கிட்டேன்..... மீண்டு வர சில நிமிடங்கள் ஆனது.
வணக்கம் சொந்தமே!!
ReplyDeleteசந்தோஷம் சொந்தமே...!சந்திப்போம்.!
//ஒன்று மட்டும் சொல்வேன்.என்னுள் ஒரு பாதி உங்கள் நேசங்களால் அன்றே நிரம்பிவிட்டது.
ReplyDeleteமறுபாதி சொட்டுபோட்டே வற்றுகிறது.
இங்கு பொழியும் வெள்ளை நேசங்களால் விடிவதற்குள் மீதமுள்ள உயிரும் நிறைந்து என் பாத்திரம் அமைதிகொள்ளும்.//
அருமையாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.;)
வணக்கம் ஐயா!மிகவே நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களிற்கும்.சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteஎழுத்து
ReplyDeleteசொல்வடிவம்
ஆழச் சிந்தனை
ரம்மியமாய் ததும்பும் உணர்வுகள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
வாசிப்பின்
முடிவில் மிரண்டு நிற்கிறது
சிந்தனை
வாசிப்பவர்களையும் கட்டிப்போடும்
வசியமான ரம்மிய எழுத்துக்கள் உணர்வுகள்
மிகுதியான வாசிப்பும் சிந்தனயும்
எழுத்துக்களில் காண உணர முடிகிறது
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் பாராடுக்கள்
வணக்கம் சொந்தமே!:):):)
ReplyDeleteமிக்க நன்றி இத்தனை பொறுமையாய் வாசித்து அன்பாய் கருத்திடுவதற்காய்.நன்றி சொந்தமே!சந்திப்போம்!
என்னவென்று சொல்வது...?
ReplyDeleteஒவ்வொன்றும் பல காலங்கள் தவங்கிடந்து செதுக்கிய வார்த்தைகளாக வரிகளாக தெரிகின்றன...
ரூம் போட்டு யோசிப்பீங்களோ...
This comment has been removed by the author.
Deleteவணக்கம் சிட்டுக்குருவி வந்தாச்சுஃஃஃஃஃஃ!
Deleteமிக்க நன்றி சொந்தமே!...எப்பிடி கண்டுபிடிச்சீங்க???கண்டீங்களா யோசிக்கும் போது...!:) :)
பகல் என்பது வெளிச்சவெளி.எல்லாமே வெளிப்படை என்பதால் அழகின் மீதான தேடல்களுக்கு இங்கு வாய்ப்பில்லை.அழகுப்போலிகளும் ,இயந்திர இரைச்சல்களும் இறந்து விட்ட இரவுகள் தான் அழகு///
ReplyDeleteஅழகு அழகு அழகு............
நன்றி நன்றி நன்றி:) :0
Deleteஉயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!// கண்களில் ஊற்றை வரவழைத்தது மிகவும் சிறந்த ஆக்கம் பாராட்டுகள் நெஞ்ச சுமையில் வார்த்தைகள் வரமறுக்கிறது பாராட்டுகள்
Deleteவணக்கம் சொந்தமே!!!
ReplyDeleteமிக்க நன்றி இந்த ரசனைக்காய்...:)சந்திப்போம்.
அப்பப்பா எதை விடுவது எதை சொல்வது இடைவெளி இன்றி மூன்று முறை படித்து முடித்தேன்! ஆழமான அர்த்தம், படிக்கத்தூண்டும் வார்த்தை பிரயோகங்கள், மிகவும் ரசிக்கவைத்தது!
ReplyDeleteஇன்னொரு தடவ படிச்சுட்டு போறேன்!
வணக்கம் சொந்தமே!!!தங்கள் பொறுமை வாழ்க...!மிக்க நன்றி இனிய சொந்தமே!சந்திப்போம்.!
Deleteயப்பா யப்பா மிகவும் அருமை....! பேசாம இலக்கிய சொற்பொழிவு நடத்த போயிருங்க சூப்பர்ப்....!!!!
ReplyDeleteவணக்கம் பாஸ்...மிக்க நன்றி..ஆனாலும் சொற்பொழிவு நமக்கு ஓவர் பாஸ்...:)சந்திப்போம் சொந்தமே..!
Delete//உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!//
ReplyDeleteநல்ல சிந்தனை.... வாழ்த்துகள் சகோ.
மிகவே மகிழ்ச்சி சொந்தமே..இந்த வாழ்த்துக்களுக்காய்....சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteஎழுத்துக்களால் அதிசயிக்க வைக்கிறாய் அதிசயா.
ReplyDelete''கால் விழிம்பில் மரணம் ,
வருத்தமில்லை!!
சாவின் சாலைகளில் கூட நிலவு
வருகிறது!!கடைசி நொடி இரட்சகனாய்!
இது போதும்.!''
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் தோழி.
வணக்கம் சித்தாரா அக்கா..!மிக்க மகிழ்ச்சி அக்கா!:)சந்திப்போம்.!
Deleteமிக அழகான கற்பனை அதிசயா.
ReplyDeleteகடைசியில் காற்றாய் கலைந்திடுவேன் எனும் வரிகள் படித்துக் கொஞ்சம் பதறிட்டேன்.
ஆனா பின்னூட்டங்கள் பார்த்து... தெளிந்திட்டேன்.
வாங்க அக்கா வணக்கம்.மிக்க நன்றி...ஓஓஓஓஓஓஓஓஓ நான் போகபோறேன்னு நினைச்சுடீங்களா?????இல்லம்மா..:):) சந்திப்போம் சொந்தமே!
Deleteதேர்ந்த படைப்பாளியின் திறமையான படைப்பு ...
ReplyDeleteவரிகளின் வடிவம் கண்ணுள் நிழலாடுது ...
சிலர்தான் இப்படி படைப்பார்கள் .. அந்த சிலரில் நீங்களும் ஒருவர் அதிசயா ..
என் வாழ்த்துக்கள் ... பாராட்டுக்கள்
வணக்கம் சொந்தமே!நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திப்பது மிகவே மகிழ்ச்சி.நன்றீ இனிய சொந்தமே!சந்திப்போம்.!
ReplyDeleteஆழ்ந்த சிந்தனை...அழகான கற்பனை...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சொந்தமே!!மிக்க மகிழ்ச்சி!
ReplyDelete// எங்கோ பொறியாகத்தெறித்த வாழுதலின் மீதான பற்றின்மை எனக்கே தெரியாமல் என்னுள் தோன்றி இந்தக் காட்டையே எரிக்கும் அளவிற்கு தீப்பிளம்பாகிவிட்டது......!எரிதல் என்று வந்த பின் பொறி என்ன பிரவாகம் என்ன???? //
ReplyDeleteபல கதைகள் சொல்லிப்போகின்றன இந்த வரிகள். மிகவும் ரசித்தேன். நீங்கள் தனிமையில் இல்லை என்பது மட்டும் நிட்சயம்.
நன்றி
நட்புடன்
சஞ்சயன்
வணக்கம் சொந்தமே!!!
Deleteமிகவே நன்றி இந்த வாழ்த்துகளிற்கும் உங்களின் அன்பான வார்த்தைகளிற்கும்.சந்திப்போம் சொந்தமே!
//சாவின் சாலைகளில் கூட நிலவு
ReplyDeleteவருகிறது!!//நான் மிகவும் ரசித்த வரிகள் .... மரணம் என்னும் புதிர் தன்னை அவிழ்த்துக் காட்டும் கடைசி நொடியில் வாழ்வின் மீதொரு பற்றை ஏற்படுத்திப் போகும் போல ... ஒரு நிலவின் நனைதலில் பல ஆழங்களைக் கிளறி விட்டிருக்கிறீர்கள் .. நல்ல சிந்தனை. ஆங்கிலத்தில் பாலோ சீலோவின் 'Veronika decides to die' என்ற ஒரு புதினம் கிட்டத்தட்ட இந்த விஷயத்தை அழகாகப் பேசியிருக்கிறது. முடிந்தால்.. கிடைத்தால்.... வாசித்திடுங்கள். வாழ்த்துக்கள்!
ஒரு சின்ன விண்ணப்பம் : எழுத்துப் பிழைகள் கொஞ்சம் வாசிப்பு அனுபவத்துக்குத் தடையாய் இருக்கின்றன. சரிபார்த்தலில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள் ..
வணக்கம் சொந்தமே!!!மிக்க நன்றி.நிச்சயமாக அதை வாசிக்க முயல்கிறேன்.
Deleteஎன்னப்பா விண்ணப்பம் இது இதுன்னு தூரமா நின்னு பேசுறீங்க??உரிமையோட சொன்னா சந்தோஷம்.!சந்திப்போம் சொந்தமே!!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...மீண்டும் ஒரு முறை படித்தேன்...
ReplyDeleteநீண்ட நேரம் வெளியே வரவிடாமல் செய்து விட்டது உங்களின் இந்த படைப்பு. எப்போதும் என் நண்பர் ஒருவரின் எழுத்துக்களை ஆழ்ந்து வாசிப்பேன், அதை போன்றே இப்போது என்னை அதிகம் ஈர்த்தது உங்கள் எழுத்துக்கள்.
பிரமிக்கிறேன் அதிசயா !!!
வாழ்த்துக்கள்
வணக்கம் சொந்தமே!ஓஓஓ அப்பிடியா??நண்பனிற்கும் என் வாழ்த்துக்கள்!இந்த பிரம்மிப்பிற்கு மிகமிகவே நன்றி சொந்தமே!!சந்திப்போம் சொந்தமே!!
Deleteஅதிசயா.. அற்புதம்
ReplyDeleteஒரு நாலுவரி கவிதை என்கிற பெயரில் கிறுக்குவதே மலையைக் கட்டி இழுப்பதைப்போல் இருக்கும்.
இங்கே அத்தனை வார்த்தைகளும் வாக்கியங்களும் கவிதை நயம். கிரேட். வாழ்த்துகள். பொறாமையாக இருக்கின்றது, இப்படி எழுத முடியவில்லையே என. !
வணக்கம் சொந்தமே!!அந்த கிறுக்கல்கள் கூட அற்புதமானவையே!!:)நன்றி சொந்தமே!முயன்று பாருங்க.ஒரு வேளை இதை விட மிக சிறப்பாக உங்களால் முடியும் சொந்தமே!!சந்திப்போம்.
Deleteஅழகிய, அருமையான, ஆழமான பதிவு. வாழ்த்துக்கள். INDLI பரிந்துரை விட்ஜெட்டை இணைப்பதற்கான வழிமுறை அல்லது கோடிங் ஐ தர முடியுமா தோழி?
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிகவே நன்றி இந்த வாழ்த்துக்களிற்காய்.சகோதரன் தான் இதை எனக்கு செய்து கொடுத்தார்.நாளை அறிந்து சொல்கிறேன்.சந்திப்போம் சொந்தமே!
Deleteநான் கேட்டது கிடைக்குமா தோழி?
Deletei have mail it to u yesterday dear...
Deleteits ok..
chek ur mai...unable to post it here..
தாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு இன்னும் வரவில்லை தோழி. மீண்டும் sigarambharathi@gmail.com என்னும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா?
Deletesent dr
Delete/// .தண்ணீரால் கழுவிய கணம் தொடங்கிய என் பயணம்,கண்ணீராகி நிறைகின்ற இந்தக்கணம் வரை ஒவ்வொரு கணமும் கனமானது ///
ReplyDeleteநிதர்சனமான உண்மை ...!!!
அருமையான பதிவு தோழி ....
வாங்க சொந்தமே!வணக்கட்.மிக்க நன்றி.:)சந்திப்போம் தோழி!
Delete//பகல் என்பது வெளிச்சவெளி.எல்லாமே வெளிப்படை என்பதால் அழகின் மீதான தேடல்களுக்கு இங்கு வாய்ப்பில்லை.அழகுப்போலிகளும் ,இயந்திர இரைச்சல்களும் இறந்து விட்ட இரவுகள் தான் அழகு!//
ReplyDeleteஅட இப்படியும் ஒரு ரசனையா.. அழகு..
மிக்க நன்றி வருகைக்கும் ரசனைகக்கும்.சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteஇரவுப்பொழுதின் காணகத்தின் கனவுகளை அழகாய் சொல்லியிருக்கும் பதிவு!
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிக்க நன்றி.சந்திப்போம்.
ReplyDelete''...ஓங்கி ஒலிக்கும் மரணத்தின் கூப்பிடுதல்களுக்கு தற்காலிக அடைப்பு கொடுத்து விட்டு,எனக்கே எனக்காய் இந்த இரவை ஒதுக்கி வைத்துள்ளேன்.இதுதான் நான் காணும் கடைசி முழு நிலா.இதுவே எனக்காய் இறங்கி வந்த வானின் வரப்பிரசாதம்...''
ReplyDeleteஏன் அதிசயாவிற்கு இப்படி சிந்தனை வந்தது...என்று யோசிக்கிறேன் அழகாக எழுதப்பட்டுள்ளது. நல்ல சிந்தனை நடை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் சொந்தமே!ஏனோ நெடுநாளாய் இப்படியும் ஒரு ஆசை.நன்றி சொந்தமே!சந்திப்போம்.!
ReplyDeleteஅதிஸயா... ஆன்மீகம். ஆடி மாதம் பற்றி எழுதச் சொல்லி எனக்கு வந்த தொடர்பதிவு அழைப்பை ஏற்று எழுதி அழைப்பை உங்க பக்கம் திருப்பி விட்ருக்கேன். ஆன்மீகம் பத்தின உங்க கருத்தை அறிய ஆவல். உடன் என் தளம் வாருங்கள் நட்பே.
ReplyDeletehttp://nirusdreams.blogspot.in/2012/07/blog-post_20.html
நிச்சயமாய் சொந்தமே!வருகிறேன்!
ReplyDelete