Saturday, June 30, 2012

காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

உறவுகளுக்கு அதிசயாவின் அன்பு வணக்கங்கள்.
நலம் தானே....?
     சில நாட்கள் இடைவெளியின் பின்பு மீண்டும் ஓர் அனுபவப்பகிர்வோடு சொந்தங்களின் விழிகளைக்கடப்பது மிகவே மகிழ்வு.

     இந்தப்பதிவு உணர்வு நிலை நிற்பதா அறிவுவழி சார்ந்ததா என்ற வினா எனக்கு சற்று தடுமாற்றத்தை உண்டுபண்ணிய போதும்,உணர்வுகளால் குமைந்து குமைந்து அறிவால் நிறைந்த முடிவு என்பதே உண்மை.

  
                      "நண்பர்கள் இருந்தால் நரகத்திலும் வாழப்பிடிக்கும்"
                                                                                                           -வைரமுத்து-
     
     இது தான் நட்பின் அடர்த்தி. நரகத்தின் நெருப்பு கூட நட்பின் நெருக்கத்தில் நிறைவாகிப்போகின்றது.பொதுவாக எடுத்த எடுப்பில் ஒருவரை நண்பர் என்று வரித்துக்கொள்வதிலும் பார்க்க,சில கால அவகாசங்களின் பின்பு ஒரு நபரை நண்பன் என்று மேற்கோளிடுவதே சாலச்சிறந்தது.
     இங்கு பேசப்படவுள்ள ஆண்-பெண் நட்பு பற்றிய விடயங்கள் வித்யாசமானது.விபரீதமானதும் கூட.இத்தகைய நண்பர்களின் தெரிவானது ஒத்த விருப்பு வெறுப்புகள்,ஏகமான ரசனைத்தன்மைகள்,கலப்படமற்ற பாசம் இவற்றின் விளைவால்  உயிர்கொள்கிறது.இவ்வாறு மனம் விரும்பி சுயாதீனத்தன்மைகளின் சுதந்திரத்தில் நாம் உருவாக்கிக் கொண்ட நட்புப்பந்தத்திடம் முழுதாய் வெளிப்படையாய் இருப்போம்,எங்கள் தவிப்புகளில் அவர்கள் தலை தடவுவதும் அவர்கள்வெற்றிகளில் நாம் சிலிர்ப்பதுமாய் இந்த உறவுநிலை தணிக்கை அற்றதாக விரிந்து செல்லும்.நாளாக நாளாக அந்த நட்பின் மீதான நேசமும் நெருக்கமும் பிரவாகமாகி,எம் நாட்களில் அவர்களை தவிர்கமுடியாதவர்கள் ஆக்கிப்போகிற அளவிற்கு இறுக்கி இறுக்கி நெருக்கும் அந்த நட்பின் பொழுதுகள்.

     இது போன்றதான நேசங்களின் தொடர்ச்சி நாளடைவில் இனம் புரியாத ஒரு அதீத ஈடுபாட்டை நம் நண்பனிம் அல்லது நணபியிடம் ஏற்படுத்தும்.கால் கட்டும் கணங்கள் வரை இந்த நேசம் வேண்டும் என்று மனது அடம்பிடிக்க ஆரம்பிக்கும்.இரவுகளிலும் கனவுகளிலும் மெல்ல அந்த முகம் மிதக்கத்தொடங்கும்.மிதந்து மிதந்து மேலெழுந்த அந்த முகம் தனியே பேச வைக்கும்,சிரிக்க வைக்கும்.சில சமயங்களில் புலம்பவும் வைக்கும்.இது காதல் தான் என உணர்வுகளெல்லாம் ஒருமித்து சத்தமாய் கூறிப்போகும்.ஏதோ பலமான ஒரு அங்கீகாரம் கிடைக்கப்போவதாய் ஓமோன்கள் அறிவிப்புப்பலகை நட்டுப்போகும்.

     அத்தனை மாற்றங்களையும் பல சமயங்களில் நாம் இயல்பாகவே நம் நட்புத்துணையிடம் வெளிப்படுத்தி விடுவோம்.சில சமயங்களில் நாம் மனம் திறப்பதற்கு முன்பே நம்மிடமான ஏதோ மாற்றத்தை நண்பன் அறிந்து விடுவான்.இவ்வாறு வெளிப்படுத்திய எத்தனையோ காதல்கள் பின்னாளில் கைகூடியது மகிழ்வே.இருப்பினும் நட்புச்சாலைகள் தொடராது முறிந்து போகவும் பல சமயங்களில் திருப்தியீனமானஓர் உறவு நிலையாக "ஈனவும் முடியாத நக்கவும் முடியாத "இக்கட்டிற்குள் நம்மை மாட்டி விடவும் காரணமாகின்றன.

        தடுமாறித் தத்தளிக்கும் சமயங்களில் கிடைக்கும் தலை தடவுதல்கள் அற்புதமான சுகத்தை,தாய்மையின் மற்றெதரு பரிமாணத்தை தருவது உண்மை.அத்தகைய இதமான ஆற்றுப்படுத்தல்கள்,பரிபூரண நம்பிக்கைகள்,சில தனிமைச்சந்திப்புக்கள்,சுகமான நடைப்பயணங்கள்,உணர்வுமயமான பரிமாற்றங்கள்,நெருக்கமான தொடுகைகள் இவை தான் நட்பெனும் சாலையிலிருந்து அரவமேதுமின்றி காதல் என்னும் தேசம் ஒன்றில் நம்மை பிரசவித்துப்போகின்றன்.love you சொலுமளவிற்கு நெருக்கமான சில நண்பர்களை கண்டதுண்டு.ஆனால் அந்த வார்த்தைகளில் விரசம் இருக்கவில்லை.உணர்வுக்குழப்பம் தெரியவில்லை.அத்தனையும்  தெளிவான நட்பாக மட்டுமே அது இருந்தது.இது தான் முதிர்ச்சி நட்பு.இது கிட்டினால் பெரும் பாக்கியமே..!

     என்னிடம் கேட்டால் சொல்வேன் நட்பு காதலாகுவது குற்றமல்ல(இது என் கருத்து மட்டுமே)நட்பிற்குள் காதலை ஒளிப்பது தான் குற்றம்.இயல்பு நிலை ஒற்றுமையால் ஏற்படுகின்ற இக்காதல் உணர்வு வயதுகளை வென்று,பருவங்கனை தாண்டியும் நரையோடும் நலிவோடும் நிலைக்குமளவிற்கு பரிசுத்தமானது எனில் உங்கள் தெரிவு சரியானதே.நல்ல நண்பனால் நிச்சயமான நிறைவான துணையாக மாற முடியம்.

     ஆனால் காதல் என்ற, உணர்வு நிலை மாறுதல்கள் வந்த பின்பும் நட்பு என்ற போர்வைக்குள் தம்மை உருமறைப்பு செய்வது அருவருக்கத்தக்க நடத்தைக்கோலம்.மூடி மூடி வைத்தாலும் ஒரு நாள் மூச்சு முட்டி விஸ்பருபமாகும்.அதுவே பல சமயங்களில் உறவுகள் உடைந்து போக காரணமாகின்றன.

  "அறிவும் உணர்வும் ஆயுதமெடுக்கும்
 அறிவில் வென்றால் ஆயுதமாவாய்"
அறிவுநிலை நின்று தீர்மானியுங்கள்.பல நண்பர்களை பார்த்ததுண்டு,சில சமயங்களில் நண்பர்களாய் பல சமயங்களில் காதலர்களாய்.இவர்களுக்கே தெரிவதில்லை..பாவம் தாம் எந்த கட்சி என்று.

   எங்கோ பார்த்தாய் சில வரிகள் நினைவில் வருகின்றன...

"நட்பு எனும் ஊஞ்சலில் தான் நாம் ஆடிக்கொண்டிருந்தோம்
காதல் எனும் காற்று தான் அதை ஆட்டுகிறது என்று தெரியாமல்..."
     
     இது தான் பிரச்சனை.நம்மைப்பற்றியதான நமக்குண்டான குழப்ப நிலை.உயிரில் விழும் முடிச்சுகளை அவிழ்குமளவிற்கு உறுதியானது நட்பு.அதே நட்பு காதலாகிறா???ஆராயுங்கள்.சுயாதீகமாய் முடிவெடுங்கள்.நண்பர் என்ற போர்வைக்குள் உங்களை மறைத்து காதல் உணர்வை வளர்தால் பின்னாளில் உங்களால் கூட சரிசெa;a முடியாத தன்னிலை வெறுப்பிற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக நேரிடும்.உணர்வு நிலை மாறுதல்கள் ஒருவரிடம் மட்டுமே கருக்கொண்டால் வலிந்து அதை உங்கள் துணையிடம் திணிக்காதீர்கள்.இதுவாழ்க்கை,வியாபாரமல்ல!
      இது தான் சாலை என தீர்கமாய் பயணப்படுவோம்.திரும்பும் போது பார்ப்போம் என்ற அலட்சியம் வேண்டாம்.நட்பின் கரங்களை வலுவாகப்பற்றுவோம்.நிச்சயம் நரகங்கள் கூட நேசமாய் மாறும்.
                        
                              வழுக்கல்சாலைகள் பாதங்களை தடுமாற்றும்.பிடிப்பாய் நடப்போம்.கால் கட்டும் நேரம் வரை இந்த நெருக்கங்கள் தொடரும்.
                                                                                                                                                                                                                                                                                     நேசங்களுடன்'
                                                                                                                                         -அதிசயா-   
   

77 comments:

 1. காதல் என்ற, உணர்வு நிலை மாறுதல்கள் வந்த பின்பும் நட்பு என்ற போர்வைக்குள் தம்மை உருமறைப்பு செய்வது அருவருக்கத்தக்க நடத்தைக்கோலம்.மூடி மூடி வைத்தாலும் ஒரு நாள் மூச்சு முட்டி விஸ்பருபமாகும்.அதுவே பல சமயங்களில் உறவுகள் உடைந்து போக காரணமாகின்றன.//

  சரியான அவதானிப்பு
  இன்றைய சூழலில் இளைஞர்கள்
  அனைவரையும் அதிகம் பாதிக்கிற பிரச்சனையை மிக அழகாக
  விளக்கிப் போகிறீர்கள்
  மனம் கவர்ந்த அருமையான பய்னுள்ள பதிவு
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!உங்கள் சூடான முதல் வருகைக்கம் இத்துணை அழகான அன்பான பின்னூட்டலிற்கும் மிகவே நன்றி.இத்திருப்தியோடு தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!

   Delete
 2. தெளிவான புரிதல்கள் சகோதரி. பொதுவான சமூகப்பிரச்சினையை அல்லது தனிமனித உணர்ச்சிப்போராட்டத்தினை கையாளும் வழியை நன்கு அலசியிருக்கிறீர்கள். சிறந்த தீர்வையும் தந்திருக்கிறீர்கள். நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..வாழ்த்துகளுக்கு மிகவே நன்றி.இவை நான் கண்டவை உணர்ந்தவற்றின் தொகுப்பே!சந்திப்போம் சொந்தமே

   Delete
 3. வழுக்கல்சாலைகள் பாதங்களை தடுமாற்றும்.பிடிப்பாய் நடப்போம்.கால் கட்டும் நேரம் வரை இந்த நெருக்கங்கள் தொடரும்.

  வைரவரிகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க உறவே.தங்களின் இந்த அனடபான வருகைக்கும் பாராட்டிற்கும் மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே...!

   Delete
 4. நட்புக் காதல் ஆவது குற்றமில்லைத் தான்.. ஆனால் ஏற்கனவே திருமணமாகியும் / அல்லது காதல் செய்துக் கொண்டே இன்னொரு நட்பிடமும் காதல் கொண்டால் ...

  ஆளை விடுங்க ????

  ReplyDelete
 5. வணக்கம் நண்பா அது காதலே இல்லை.இது போன்றவர்களின் வா◌ாத்தைகள் மட்டும் தான் காதல் என்று சொல்லும்.தேவை வேறூமதிரி இருக்கும்.அடையாளம் காணுதல் சரியாக இருந்தால் சரி.சந்திப்போம் தொடர்ந்தும்.வருகைக்கு மிகவே நன்றி

  ReplyDelete
 6. ////என்னிடம் கேட்டால் சொல்வேன் நட்பு காதலாகுவது குற்றமல்ல(இது என் கருத்து மட்டுமே)நட்பிற்குள் காதலை ஒளிப்பது தான் குற்றம்.இயல்பு நிலை ஒற்றுமையால் ஏற்படுகின்ற இக்காதல் உணர்வு வயதுகளை வென்று,பருவங்கனை தாண்டியும் நரையோடும் நலிவோடும் நிலைக்குமளவிற்கு பரிசுத்தமானது எனில் உங்கள் தெரிவு சரியானதே.நல்ல நண்பனால் நிச்சயமான நிறைவான துணையாக மாற முடியம்./////

  உண்மைதான் அழகான கருத்து

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே.நீண்ட நாட்களின் பின் உங'களை இங்கு சந்திப்பது மகிழ்ச்சி.வருகைக்கும் அன்பான கருத்திடலிற்கும் மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே...!

   Delete
 7. நல்ல ஒரு பதிவு பாராட்டுக்கள்
  ஒரு சிறிய கருத்து உங்கள் பதிவுகளில் பதிவர் மதி.சுதா அவர்களின் ஸ்டைல் இருக்கின்றது.(இது என் அவதானிப்பு மட்டுமே)
  நீங்கள் உங்களுக்கு என்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் உங்கள் அவதானிப்புக்கு ஒரு சல்யூட் ராசு... சகோதரர்களிடையே தழுவல்கள் ஒட்டிக் கொள்வது புதிதல்லவே...

   Delete
  2. தாங்ஸ்டா அண்ணா

   Delete
 8. உங்கள் பக்கக் கருத்திற்கும் அவதானிப்பிற்கும் மிகவே நன்றி.கவனமெடுத்துக்கொள்கிறேன்.திட்டமிட்டு பதிவர் சுதா அவர்களை பின்பற்றவில்லை.இயல்பில் அப்படி ஒத்த தன்மை புலப்படுகிறதோ தெரியவில்லை.மிகவே நன்றி இந்த வழிகாட்டலிற்கு.

  ReplyDelete
 9. Replies
  1. வருகைக்கும் கருத்திறந்கும் மிகவே நன்றி....சந்திப்போம் சொந்தமே..

   Delete
 10. நட்பு காதலாகுவது குற்றமல்ல(இது என் கருத்து மட்டுமே)நட்பிற்குள் காதலை ஒளிப்பது தான் குற்றம்////

  இக கருத்துக்கு உரமிடுகிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே...ரொம்ப நன்றி.இப்பிடி அடிக்கடி உரம் போடுமங்க குருவியாரே.சந்திப்போம்.

   Delete
 11. இது தான் சாலை என தீர்கமாய் பயணப்படுவோம்.திரும்பும் போது பார்ப்போம் என்ற அலட்சியம் வேண்டாம்./////////////

  அழகான கருத்து........

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்..திரும்பி வரும்போது பார்ப்போம் என்றே நிறைய பேர் கடைசில தூங்கிர்றாங்க...!

   Delete
 12. "நண்பர்கள் இருந்தால் நரகத்திலும் வாழப்பிடிக்கும்"////

  ஆமா....வைரமுத்து இப்படியுமா எழுதியிருக்கிறார்....சொல்லவேயில்ல..

  தொடருங்கள் உறவே

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்..இப்பிடியும் எழுதி இருக்கார்.அப்பிடியும் எழுதி இருக்கார்..:)நாங்க அத அப்பிடியே பிடிச்சு கொப்பி பண்ணிடுணவொம்ல....:)

   Delete
 13. அருமையான,ஆய்வுடன், அறிவின் முதிர்ச்சி வெளிப்பட எழுதியுள்ள பதிவு!நன்று!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பெரியவரே..மிகவே மகிழ்ச்சி ஐயா..!வருகை எனக்குப் பெருமை..சந்திப்போம் சொந்தமே..!

   Delete
 14. //நட்பின் கரங்களை வலுவாகப்பற்றுவோம்.நிச்சயம் நரகங்கள் கூட நேசமாய் மாறும்//

  நல்லாயிருக்கு. ;)

  ReplyDelete
  Replies
  1. வணகக்கம் ஐயா..அதை கேட்கும் போது எனக்கும் நல்லாயிருக்கு..:)சந்திப்போம் சொந்தமே

   Delete
 15. ஆஹா.. அதிசயா அழகான கருத்துக்கள். எதையுமே எதிர்த்துக் கூற முடியவில்லை. என் கருத்தும் அதேதான், நட்பு காதலாக மாறினால்... அது இருவருக்குள்ளும் பூக்க வேண்டும்... அப்படியாயின் அதில் தப்பே இல்லை.

  கண்டதும் காதலை விட, நட்பாகி ஒருவரை ஒருவர் புரிந்து பழகியபின் காதலிக்கலாம் என முடிவெடுத்தல் நல்ல முடிவே.

  உண்மைதான் நல்ல நட்புக்கள் இருப்பின் நரகமும் சொர்க்கமாகும்...

  ”பசுவோடு சேர்ந்தால் பூனையும் பசுவாகலாம்...”

  ReplyDelete
 16. அதிராக்கா வாங்க வாங்க வணக்கம்.சீக்கிரம் பசுவாகிடுவீங்களோ?ஃ?இல்ல இல்ல பூஸ்ரிச்சர் அதிரா தான் அழகு...

  மிக்க மகிழ்ச்சிஅக்கா இந்த அன்பான வாழ்த்திற்கும் கருத்திடலிற்கும்..மீண்டும் சந்திப்போம் சொந்தமே...!

  ReplyDelete
 17. மிகச் சிறந்த அலசல்.
  ''...எடுத்த எடுப்பில் ஒருவரை நண்பர் என்று வரித்துக்கொள்வதிலும் பார்க்க,சில கால அவகாசங்களின் பின்பு ஒரு நபரை நண்பன் என்று மேற்கோளிடுவதே சாலச்சிறந்தது....''
  இதன் படி நடந்தால் நட்பு - காதல் என்று தடுமாற வேண்டியதே இல்லையன்நோ! முதலிலேயே தீர்மானம் எடுத்திடலாம் இது எனது கருத்தே.
  நல்வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந'தமே..சரியாகச்சொன்னீர்கள்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!

   Delete
 18. /உணர்வு நிலை மாறுதல்கள் ஒருவரிடம் மட்டுமே கருக்கொண்டால் வலிந்து அதை உங்கள் துணையிடம் திணிக்காதீர்கள்.இதுவாழ்க்கை,வியாபாரமல்ல!//
  Fantabulous !!!!
  இருவரில் ஒருவர் மட்டும் காதலில் விழுந்தாலும் அதனை சொல்லிவிடுவதில் தவறில்லை .அதற்க்கேன அவரும் நம்மை காதலிக்க வேண்டுமென எதிபார்பதும் நமது அன்பை திணிப்பதும் தவறு
  நட்பு காதலாவதில் தவறொன்றுமில்லை .
  அதிசயவைக்க வைத்த தெளிவான புரிந்துணர்வு !!!!
  எந்த குழப்பமுமில்லை உங்கள் புரிந்துணர்வில் . பாராட்டுக்கள் //வழுக்கல்சாலைகள் பாதங்களை தடுமாற்றும்.பிடிப்பாய் நடப்போம்.கால் கட்டும் நேரம் வரை இந்த நெருக்கங்கள் தொடரும்.//
  எனக்கு மிகவும் பிடித்து போனது இந்த கடைசி வரிகள் .

  ReplyDelete
 19. வணக்கம் அக்கா..சிலருக்கு புரிகிறது.பலருக்கு ஏனோ புரிதில்லை.!எல்வோரும் இதை புரிந்து விட்டால் எல்லா நேசங்களும் என்றும் தொடரும்.
  நன்றி அக்கா.நானும் மிகவும் ரசித்த வரிகள் அவை..சந்திப்போம் சொந்தமே தொடர்ந்தும்.

  ReplyDelete
 20. நல்ல அவதானிப்பு நட்பு காதல் ஆனால்!ம்ம் நட்பு மட்டும் சரி அது காதல் என்றால் வேசம் போல இருக்கும் என்பது என் கருத்து அதிசயா!ம்ம்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. முகமுடிக்குள் ஒளித்து வைத்துள்ள காதலால; பின்னாளில் நட்பும் வேசமாகித்தொலைதுண்டு.வெளிப்படையாக நடந்தால் சிக்கல்கள் ஏது??நன்றி சொந்தமே தங்களின் இக் ஒப்பற்ற கருத்திற்கு..சந்திப்போம் சொந்தமே!

   Delete
 21. நட்பு எனும் ஊஞ்சலில் தான் நாம் ஆடிக்கொண்டிருந்தோம்
  காதல் எனும் காற்று தான் அதை ஆட்டுகிறது என்று தெரியாமல்..."
  // அருமை வரிகள்§

  ReplyDelete
  Replies
  1. இன்று தேடினேன் இவ்வரிகள் எங்கிருந்து என் சித்தம் தட்டியது என்று..இது கவிஞர்.பா.விஜய் அவர்களின் சில்மிஷியே தொகுபில் படித்தேன்.சந்திப்போம் சொந்தமே

   Delete
 22. தங்கா உன் எழுத்தின் ஆளுமை கை தேர்ந்த தேர்ச்சியாளனின் எழுத்துக்கள் போலவே இருக்கிறது அருமை அப்படியே தொடர்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா..இந்த வார்த்தைகளை கேட்கையில் விபரிக்க முஐடியாத ஒரு மகிழ்வு.சந்திப்போம் அண்ணா..!

   Delete
 23. வணக்கம் தோழி.என்னோட கருத்து யாதெனில்,
  நட்பு காதலாவதும் காதல் நட்பாவாவதிலும் எந்தவொரு தப்புமில்லை.நட்பை நட்பாகவும், காதலை காதலாகவும் நோக்கினால் இரு உறவுகளுக்கிடையில் மனக்கசப்பையோ பிரிவையோ தவிர்த்துக் கொள்ளலாம்.ஒரு புரிந்துணர்வுள்ள இரு நண்பர்கள் மட்டுமே இறுதிவரை நல்ல ஒரு துணையாக இருப்பார்கள்.அந்த வகையில் உன் கருத்தும் சரியானதே.வாழ்த்துக்கள் தோழி உன் கலைப் பயணத்தை தொடருங்கள்.

  ReplyDelete
 24. வணக்கம் அக்கா;;!நான் உடன்படுகிறேன்.புரிந்துணர்வு போதும்.வெளிப்படைத்தன்மையும் கூட இருந்தால் எல்லாம் தூண்மையாகிவிடும்.சந்திப்போம் அக்கா..உன்; வாழ்த்திற்களுக்கு மிக மிகவே நன்றி அக்கா

  ReplyDelete
 25. உண்மைதான், வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..தங்களின் வாழ்த்திற்கும் வலுகைக்கம் மிகவே நன்றிஃசந்திப்போம்சொந்தமே

   Delete
 26. சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் சகோதரி !

  ReplyDelete
  Replies
  1. மிகவே நன்றி சொந்தமே..!சந்திப்போம்.

   Delete
 27. சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! ! மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தகவரிற்கு மிகவே நன்றி சொந்தமே...!தளத்திற்கு சென்று பார்த்தேன்.மிகவும் நன்றி அன்புச் சொந்தமே!

   Delete
 28. முதலில் தாமதத்திற்கு வருந்துகிறேன் என்ற வார்த்தைகளில் இருந்து ஆரம்பிக்கிறேன். தன்னைப் பற்றி தன்னை ஒத்த வயதயுடயவர்களின் மன நிலையை ஒட்டி எழுந்த பதிவாக இதைப் பார்கிறேன். காதல் நட்பு, நட்பிலிருந்து காதல் என்ற நிலைகளை இயல்பாய்க் கூறி அது நட்பாக இருந்தாலே நலம் என்ற அளவில் தங்கள் கருது வெளிபடுவது நலம். ஆனால் சில சமயங்களில் நட்பாக மாறிய காதல் இனிதுள்ளது. பல சமயங்களில் காதலாக மாறிய நட்பு பின்பு கசந்து பிரிந்துள்ளது என்பது நான் அனுபவப்படாமல் அனுபவப்பட்டுப் பெற்ற அறிவு.

  //பல சமயங்களில் காதலாக மாறிய நட்பு பின்பும் கசந்து பிரிந்துள்ளது என்பது நான் அனுபவப்படாமல் அனுபவப்படுப் பெற்ற அறிவு // இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் என் மீது களங்கம் வந்து விடும் என்ற தன்னிலை விளக்கத்துடன் மேலே செல்கிறேன்

  //நண்பர்கள் இருந்தால் நரகத்திலும் வாழப்பிடிக்கும்//
  அதே நண்பர்களுடன் சண்டை என்றால் சொர்க்கம் கூட நரகம் ஆகும் என்பதையும் நாம் அனைவரும் அனுபவித்திருப்போம் தானே.

  //உங்கள் தெரிவு சரியானதே.நல்ல நண்பனால் நிச்சயமான நிறைவான துணையாக மாற முடியம்.// என்னுடைய பார்வையும் இதுவே.

  ஏதோ ஒரு விதத்தில் தனிமனித அலசலையும் ஆராய்தளையும் மேற்கொள்ள தூண்டும் பதிவு.

  சலிப்பு தட்டாத பதிவு. இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..முதலில் இந்தளவு பொறுமையாக பதிவைப்படித்து இத்துணை தெளிவான கருத்திற்காக மிகவே நன்றி சொந்தமே..!

   /பல சமயங்களில் காதலாக மாறிய நட்பு பின்பும் கசந்து பிரிந்துள்ளது என்பது நான் அனுபவப்படாமல் அனுபவப்படுப் பெற்ற அறிவு //

   ஒத்துக்கொள்கிறேன்.நானும் மிக அண்மையில் அதை அறிந்ததுண்டு.இந்தக்கசப்புக்களுக்கு சரியான தெளிவும் புரிதல் இன்மையும்.நிச்சயம் அது உணர்வு வழி நின்று எடுத்த முடிவாக தான் இருக்க முடியும்.

   ஃஃஃஃஃஃஇயல்பு நிலை ஒற்றுமையால் ஏற்படுகின்ற இக்காதல் உணர்வு வயதுகளை வென்று,பருவங்கனை தாண்டியும் நரையோடும் நலிவோடும் நிலைக்குமளவிற்கு பரிசுத்தமானது எனில் உங்கள் தெரிவு சரியானதேஃஃஃஃஃஃஃஃஃ

   இத்தனை உறுதியாக எல்லைகளில் மட்டுமே நான் கூறியவைகள் செல்லுபடியானவை.

   தீராத பகையேதும் நட்பிற்குள் இருக்காது..சீக்கிரமே அந்த நரகமும் திகட்டாத சொர்கமாகும் அந்த நட்பு உண்மையானது என்றால்..

   நன்றி சொந்தமே..தங்கள் கருத்தை மிகமிகவே வரவேற்கிறேன்.!மதிக்கிறேன்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!

   Delete
 29. நல்ல அலசல் உங்கள் பார்வையில்.... ம் - இந்த காதல்/நட்பு பத்தி தனி பதிவு போட வைத்துள்ளீர்கள். நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே...!எங்கள் வருகையும் இக்கருத்திடலும் மிகவே திருப்தி சொந்தமே..!சந்திப்போம்.

   Delete
 30. சிறந்த அலசல்...அனுபவம் பேசுகிறது...மறுபேச்சே இல்லை...

  ReplyDelete
 31. வணக்கம் சொந்தமே...மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகை...குட்டி அனுபவம் தான்.சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
 32. மிகவும் தெளிவான கருத்துக்கள். இது மிகவும் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம். அதுவும் தவிர இது தனி மனித மனம் சார்ந்த சிக்கலைக் கொண்டது. நட்பு காதலாக மாறியவுடன் அங்கே 'பொஸசிவ்னஸ்' வந்துவிடுகிறது.

  ReplyDelete
 33. good post. plz visit here
  http://skaveetha.blogspot.com/2012/07/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..!வருகைக்கு மிகவே நன்றி.தளத்திற்கு வந்தேன்...சந்திப்போம் சொந்தமே...!

   Delete
 34. வழுக்கல்சாலைகள் பாதங்களை தடுமாற்றும்.பிடிப்பாய் நடப்போம்.கால் கட்டும் நேரம் வரை இந்த நெருக்கங்கள் தொடரும்.

  ஆஹா என்ன ஒரு கருத்து...

  மிகவும் அருமையடா ..........

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உறவே..தங்களை சந்திப்பது மிகவே மகிழ்வு.நன்றி சொந்தமே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   Delete
 35. இது என் முதல் வருகை அக்கா இனி தொடர்கிறேன்.....

  காதல் பற்றிய அருமையான அனுபவ பகிர்வு.... மிக அருமை அக்கா

  நல்ல நட்பு காதலாய் மாறுவது என்னை பொறுத்த மட்டில் தவறில்லை... ஏற்கனவே ஒன்றை ஒன்று புரிந்த இதங்கள் ஒன்றினைவிதில் என்ன தவறு................ அழகான பதிவு.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..தங்கள் வருகைக்கு மிகவே நன்றி.இந்◌ா முதல் சந்திப்பு இனிய சந்திப்பாக நிச்சயம் தொடரும்.நான் அக்காவாக இருக்க வாய்ப்பில்லை சொந்தமே..!அநேகமாக தங்கை தான்..!

   என் கருத்தோட்டத்துடன் ஒன்றிப்போவகு மகிழ்ச்சியாயுள்ளது...மிக்க நன்றி சொந்தமே தங்கள் வருகைக்கும் கருத்திடலிற்கும்.சந்திப்போம்.

   Delete
 36. நட்புக்குள்ளே எப்பவும் மெல்லிய காதல் இருந்துகொண்டேயிருக்கும்...... அருமையான பதிவு.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..தங்கள் வருகை எனக்கு பெருமகிழ்ச்சி...அது தானே இனிமை...மிக்க நன்றி சொந்தமே..தொடர்ந்தும் சந்திப்போம்.!

   Delete
 37. அருமையாக எழுதப்பட்ட ஆக்கப்பூர்வ பதிவு.

  ReplyDelete
 38. வணக்கம் அக்கா...!இது தான் தங்களின் முதல் வருகை என நினைக்கிறேன்..இனஜய உறவாக தொடர்ந்து சந்திப்போம்.மிகவே நன்றி தங்கள் ருகைக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும்...!

  ReplyDelete
 39. ஈர்ப்பு , என்கிற உணர்வின் தாக்கத்தால் எடுக்கப்படும் முடிவு, அனுபவத்தால் பட்டறிவால் மாறிப்போகும் . அதன் பின்னர்தான், சாதக, பாதகங்களை பார்த்து முடிவு எடுப்பர். இம்முடிவு அனுபவத்தால் விளைந்த அறிவின் முடிவாகும். உணர்வு பூர்வமாக முடிவெடுப்போரே அதிகம்.
  அருமையாய் அலசி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் தோழி!
  அட்சயா!
  http://atchaya-krishnalaya.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி...தங்களின் இனிப்பான இவ் வருகைக்கு அதிசயாவின் அன்பான வரவேற்புகள்.
   ஈர்ப்புக்களை வென்று வளரும் அனுபவம் தான் ஆசான் என்பது மிகவும் சரி.நன்றி சொந்தமே..தொடர்ந்தும் சொந்தங்களாக சந்திப்போம்.

   Delete
  2. இந்த பெயர் நல்லாயிருக்கு..!

   Delete
 40. சகோ
  அன்பின் விருது ஓன்று பகிர்ந்துள்ளேன் ஏற்றுக்கொள்ளவும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ..விருதிற்கு மிகவே கடமைப்பட்டுள்ளேன்மிக்க நன்றி சொந்தமே..இந்த ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி..!

   Delete
 41. செய்தாலி அண்ணனிடம் விருது பெற்ற உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் அதிசயா. முதல் வருகையாக அவர் தளத்தில் பார்த்து வந்த எனக்கு ஒரு மிக நல்ல விஷயத்தைப் படித்த திருப்தியும் மகிழ்வும் கிடைத்தது. இனி உங்களை விடமாட்டேன் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே...!வாழ்துக்களுக்கு மிகமிகவே நன்றி..இந்த்திருப்தி தான் எழுத்துக்களுக்கு கிடைக்கும் பெரு வெற்றி சொந்தமே...!மிக்க மகிழ்ச்சி சொந்தமே சந்திப்போம்.

   Delete
 42. நட்பை பற்றி எதையும் பார்த்தாலோ,சிந்தித்தாலோ கண்ணீர் முட்டுகிறது.

  ReplyDelete
 43. நன்றி சொந்தமே தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..!
  சந்திப்போம்.!

  ReplyDelete
 44. நட்பு நட்பாகவும் காதல் காதலாகவும் இருக்க வேண்டும்.
  வேறுமாதிரி நினைக்க அருவருப்பாக உள்ளது.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 45. வணக்கம் சொந்தமே!எல்லாம் புரிதல்களில் தான் இருக்கிறது.நன்றி சொந்தமே!தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.சந்திப்போம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...