Sunday, June 3, 2012

வெளிச்சங்கள் கொஞ்சம் நட்டுப்போங்கள்!!

என் கிறுக்கல்களுக்கு அங்கீகாரம் கொடுத்து பதிவுலகில் என்னையும் கரம் பிடித்து கூட்டிச்செல்லும் உறவுகளுக்கு 'அதிசயாவின்' அன்பு வணக்கங்கள்!

சொந்தங்களே நலம் தானா?நேசங்களுடள் வாருங்கள் பதிவிற்கு....!


 .

            
      உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் நிறைந்தது.இந்த உருவாக்க எல்லைகள ;மாற்ற முடியாத அனுவவங்களையும் சில அறிவித்தல்களையும் பலமாய் கூறிப்போகின்றன.உருவாக்கங்கள் முடிந்து விட்ட எல்லைகளில் நின்று பார்குகும் போது,எத்தகைய வெற்றியாளராக இருந்தாலும் அவர் சாலையில் எவ்வளவு வெளிச்சங்கள் காணப்பட்டாலும் அங்கங்கு இருள் காடுகள் முளைக்கத் தவறுவதில்லை.அது போன்றதான ஒரு காலத்தை சிந்தையில் இருத்தி இப்பதிவை இட்டுக்கொள்கிறேன்.

    மனிதனுக்கென அடையாளங்கள் சிலவற்றை நம் முன்னோர்கள் ஏலவே வகுத்து விட்டார்கள்.பகுத்தறிவும்,தன்னார்வ சிந்தனையும் கொண்டவனென மனிதனுக்கு ஓர் மேற்கோளிட்டு விலங்கு இராச்சியத்தில் முதன்மைப்படுத்தப்பட்டான்.இதனைத் தக்கவைக்கவும் ,வளர்த்துக்கொள்ளவும் தான் இன்று வரை ஓடி ஓடிக்கற்கிறோம்.
    
         முன்பள்ளியில் தொடங்கி முதுமை அனுமதிக்கும் வரையிலும் நுரைக்க நுரைக்க ,களைக்க களைக்க  கற்கிறோம்,கற்றுக்கொண்டே  இருக்கிறோம்.இதில் வருத்தம் என்னவெனில் பல சமயங்களில ;வெற்றிக்கோப்பை கனவாக தொலைந்து விட வெறும் தாள்கள் தான் பரிசாகிறது.
  
           சராசரி மாணவனை பொறுத்தவரை சாதாரண தரம் வரை கூட்டத்தில் ஒருவராக பொதுவான சில விடயங்களை அறிந்து கற்கிறோம்.பரீட்சைகள் முடிவுற்று பெறுபேறுகள் வெளியான அடுத்த கணமே சிலருக்கு பட்டாம் பூச்சி கனவுகள்.சிலருக்குஃ?????ஃ???

        வெற்றிகரமான கதாபாத்திரம் ஒன்றை தனக்காக கற்பனை செய்தபடி புறப்படும் மாணவர் முன் பாரிய கேள்விக்குறி ஒன்று முளைத்து விழி பிதுங்க வைத்து விடுகிறது.அதுதான் உயர்தரத்திற்கான பாடத்தெரிவு(ஒரு சிலமீத்திறனான மாணவரை தவிர)
   
           மிக வேகமாக ,தன்நிலை திரிவுபடுத்தப்பட்டு வரும் இந்த போட்டி மிகு உலகில் ஒவ்வொருவரும் தம் இருப்பை தக்கவைக்க மிகவே போராட வேண்டி இருக்கிறது என்பது உண்மை.வேலைவாய்பிற்கான சூனியநிலைகளும்,வரையறுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் உள்வாங்கலும்,பொருளாதாலத்தின் நெருக்கல்தன்மைகளும் இணைந்து,உயர்தரக்கல்வியையும் ஒரு வியாபாரமாக்கிப் ;போகின்றது.கலை வர்த்த பாடங்களின் மீதான விருப்பு நிலைகளை பறித்து,கணித உயிரியல் பாடங்கள் மீதான செயற்கையான ஒரு வித மோகத்தை ஏற்படுத்திவிட்டன.அதிபர், ஆசிரியர், பெற்றோர் ,நலன் விரும்பிகள் என அனைவரிடமும் இம்மோகம் விரைவாகத்தொற்றி விட்டது வேதனைக்குரிய உண்மை.
    கலந்துரையாடலில் பங்குபற்றும் மாணவர் மீதும் இப்போதை மேல்மிச்சமாக திணிக்கப்பட்டு,மாற்றுவழியில் சிந்திக்க முடியாதவர்கள் ஆக்கப்படுகிறார்கள்.
  
           இலங்கையை பொறுத்தவரை குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தவர்கள் பெரும்பாலும் மண்ணையும் கடலையும் தான் ஆதாரமாக்கிக் கொண்டவர்கள்.வடபகுதியின் யாழ் மண்ணை சார்ந்தவள் நான் என்பதால் மிகவே இதை அனுபவித்து பதிவிடுகிறேன்.எம் மக்களைப்பொறுத்தவரை 13 வருட பாடசாலைக்கல்வியின் வெற்றி என்பதெல்லாம் பல்கலைக்கழக அனுமதி தான்  என்று பாரம்பரியமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.அது தவறும் பட்சத்தில் தென்னிலங்கை மாணவரை போல தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடருமளவிற்கு இங்கு வாய்புக்கள் பெரும்பாலும் ஏற்படுத்தப்படவில்லை.தற்போது திடீரென ஏகப்பட்ட விளம்பரங்கள்.இதில் சரியானது,வாயப்;பானது எது என்பதை தீர்மானிப்பதே எங்களுக்கு பெரிய குழப்பமாக இருக்கிறது.வெளி மாவட்டங்களில் தங்கி உயர் கல்வியை தொடருமளவிற்கு எல்லோரிடமும் மிகச் செழிப்பான பொருளாதா நிலைமைகள் இல்;லை.விதி வரைந்த வழு அது.சாதாரண மாணவரின் உயர் அடைவுமட்டம் என்பது இங்கு பல்கலைக்கழகமே.
   
          எனவே உயர்தரம் பற்றிய தெளிவுபடுத்துகை என்பது மாணவரிடையே அவசியம்.விஞ்ஞான பாடங்களை கற்று சித்தியடைந்தால் இலகுவில் பல்கலைக்கழகம் ஙழையமுடியும் என்பது உண்மை தான்.ஆனால் குற்த்த ஒரு மாணவனுக்க அதில' இயல்பாகவே ஈடுபாடு இருக்க வேண்டும்.அந்த இயலுமை இருப்பது அவசியம்.

          மாறி வரும் உலக சந்தையில் கேள்வியுடையவர்களாக ஒவ்வொரு மாணவலையும் உருவாக்க வேண்டியது கற்ற உலகின் கடமை.ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் விடயப்பரப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும் போது அது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு,அதன் நன்மை தீமை இரண்டும் வெளிப்படையாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.அதன் பின்னரே முடிவுகள் பெறப்பட வேண்டும்.ஆனால் இவ்விடயத்தில் கற்றறிந்த உலகம் தம்மை நிருபிக்கத் தவறி விடுகின்றது.வெறுமனே விஞ்ஞானக்கல்வியால் ஏற்படும் நன்மைகள் பற்றி மட்டுமே பேசப்படுகின்றன.சில சமயங்களில்; அனைத்துத் தலைப்பும் பேசப்பட்டாலும் ஒரு வித முன்னிலைப்படுத்தல் விஞ்ஞாக பிரிவிற்கே வழங்கப்டுகிறது.திரைப்படங்களில் கதர நாயகி நாயகன் மருத்துவர் பொறியியலானராக காட்டப்படுகிறார் என்பதற்காக யதார்தமும் அப்படி என்று நினைப்பது முட்டாள்தனம்.

  

            " இந்த இள மூங்கில்களை ஐந்திலேயே வளைக்க ஆசைப்பட்டார்கள்
             பல மூங்கில்கள் வளைக்கும் அவசரத்தில்
             முறிக்கப்பட்டதால்
             விறகுக்கடைகளில் விற்பனையாகின்றன.
             இந்த பட்டரைகளில் கூர் செய்யக் கடப்பாரை
             கொடுத்தோம்.
             அவை குண்டுசிகளாய் வந்து விழுந்தன.''
                                                                                                                      -வைரமுத்து-

.        சிறப்பான படைப்பாக உருவாக்கப்படுவோம் என்ற பேராவலுடன் தான் ஒவ்வொருவரும் தம்மை களிமண்களாக ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றனர்.ஆனால் பாத்திரங்களுக்கு பதில் வெறும் இறுக்கமான மண் கட்டிகளாகவே பெரும்பாலானோர் மாறுகிறார்கள்.
    
        உயர்தரத்தில் உயிரியல் துறையின் தேர்வு என்னை ஒர் தவறான தயாரிப்பாக  பெயர் குத்திப்போனது.எனக்குப்பொருத்தமற்ற துறை இது என நான் சுதாகரித்த போதும் அதிலிருந்து வெளிவருவதற்கு எனக்கான அனுமதி மறுக்கப்பட்டது.அதை மீறுவதற்கு என் புத்தியும் வெட்கி ஒளிந்து.இரண்டு வருட முள்ளுப்பயணங்களின் முடிவில் இரண்டு பாடங்களில் சித்தியடையத்தவறினேன்.இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி கலைப்பிரிவில் என்னை இணைத்து 3மதங்க் மடடுமே பயின்று, பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்றேன்.
   
          தோல்வியின் வலியையும் வெற்றி மீதான ஏக்கத்தையும் அறிந்தவள் நான்.என் ஒத்தவர்கள் மேடையேறிப்போகும் போது ஓரமாய் நின்று விழி ஒழுகியவள்,அந்தக்கணங்களை இன்று நினைத்தாலும் நெருப்பாய் சுடுகின்றன.நானும் எல்லோர் போலவும் எனக்கான கரவோசங்களை எதிர்பார்த்தவள்.அதிலும் பிரம்மாண்டமான,பேசப்படக'கூடிய வெற்றி ஒன்றை எதிர்பார்த்தவள்.ஆனால் அன்று தோற்கடிககப்பட்டவள்.; உரிமையோடும் ஆதங்கத்தோடும் சொல்கிறேன்.திணிப்புக்கள் எதுவும் வேண்டாம்.பாடத்தெரிவின் தெளிவின்மைகள் ஏற்படுகிறதென்றால் அக்கறையாய் பாதைகளின் திசையை சொல்லுங்கள்.அவர்களே தாமே தெரிந்து எந்தப்பாதையில் செல்வது என்பதை தீர்மானிக்கட்டும்.இருட்டு சாலை என்று கண்ணை மூடிப்போகாதீர்கள்.கொஞ்சமாயேனும் வெளிச்சங்கள் நட்டு வையுங்கள்.எல்வோரும் சிறப்பானவர்களாக தம்மை அடையாளப்படுத்தவே விரும்புகிறார்கள்.

   
          கனவு காண சொல்லிக்கொடுங்கள்.நீங்களே அவர்களுக்காய் கனவு காணாதீர்கள்.கனவுகளின் வண்ணமானாலும் சரி,வலியானாலும் சரி அவர்களே தீர்மானிக்க அனுமதியுங்கள்.இதைவிடவும் சொல்லப்படாத கதைகள் அதிகம்.நீங்கள் ஒவ்வொருவரும் வெளிச்சம் நடுங்கள்.அது உயர்தரம் என்றாலும் சரி முன்பள்ளி எனறாலும் சரி.இது சேவையல்ல ஒரு கடமை.
   

      கொஞ்சமாய் வெளிச்சம் நட்டு வையுங்கள்.
      யுகங்களுக்கும் நாங்கள் பயணிப்போம்
      களைப்பின்றி நுரைப்பின்றி..!


                                                                                                                            ஆதங்கத்துடன்
                                                                                                                                      -அதிசயா-

19 comments:

 1. வைரமுத்து அவர்களின் வரியையே பதிவும் சொல்லி நிற்கிறது.எதிர்காலங்களுக்கு வெளிச்சம் நடக் கைகள் கோர்ப்போம் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க...வருகைக்கு மிகவே நன்றி. நிச்சயமாய் அது எம் கடமை அக்கா...!தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே...!

   Delete
 2. கொஞ்சமாய் வெளிச்சம் நட்டு வையுங்கள்.
  யுகங்களுக்கும் நாங்கள் பயணிப்போம்
  களைப்பின்றி நுரைப்பின்றி..!

  அதிசய ஆதங்கம் !

  ReplyDelete
  Replies
  1. சொந்தமே இராஜராஜேஸ்வரி தங்கள் வருகைக்கு மிகவே நன்றி...!தொடர்ந்தும் பதிவுகளில் சந்திப்போம்!

   Delete
 3. பிரயோசனமான பதிவு...வெளிச்சங்களை நடவேண்டியவர்களிடம் இப்பதிவு சென்றடைந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. சிட்டுக்குருவிக்கு அதிசயாவின் நன்றிகள்.நிச்சயமாய்.உங்கள் சுற்றத்தில் யாருக்கேனும் இத்தகைய குழப்பம் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்.

   Delete
 4. கனவு காண சொல்லிக்கொடுங்கள்.நீங்களே அவர்களுக்காய் கனவு காணாதீர்கள்//

  நல்லதொரு கருத்து...:)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிட்டுக்குருவி.தொடர்ந்தும் சந்தித்துக்கொள்வோம்.....!

   Delete
 5. ரெம்ப அற்புதமான கட்டுரை சகோ
  தெளிவான சிந்தையில் தெளிவான நல் கட்டுரை
  பாராட்டுக்கள்

  உங்கள் ஆதங்கம் நியாயமானதே

  இறுதி வரிக் கவிதை சிறப்பு


  //கொஞ்சமாய் வெளிச்சம் நட்டு வையுங்கள்.
  யுகங்களுக்கும் நாங்கள் பயணிப்போம்
  களைப்பின்றி நுரைப்பின்றி..!// ''அதிசயா''

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கு; மிகவே நன்றி.தங்கள் வருகை சிறந்த அங்கீகாரம் எனக்கு.அத்தனை வரிகளும் நான் அனுபவித்தவை சகோ.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே...!

   Delete
 6. வணக்கம் சகோதரி..
  சொல்லவந்த கருத்தினை
  தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

  பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது
  நம் பிரயத்தனமாக இருக்கலாம்..
  ஆனால் அவர்களின் எண்ணங்களை மூட்டைகட்டி
  போட்டுவைத்து நம்முடைய எண்ணங்களை அவர்களுக்குள்
  திணிக்கக் கூடாது என்பது மிகச் சரியான வாதம்....

  ReplyDelete
 7. வணக்கம் சொந்தமே.மிகவே மகிழ்ச்சி தங்கள் வருகை.இப'படி ஒவ்வொருவரும் யதார்த்தத்தை உணர்ந்து தங்கள் குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டால் இனிவரும் உலகம் வெளிச்சமாயும் அழகாயும் அமையும்.சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete
 8. ///கனவு காண சொல்லிக்கொடுங்கள்.நீங்களே அவர்களுக்காய் கனவு காணாதீர்கள்////

  அருமையான வரிகள்

  ReplyDelete
 9. வணக்கம்ஃஇது முதல் சந்திப்பு என நினைக்கிறேன்.மிகவே நன்றி.உங்கள் ரசனைக்கும் வருகைக்கும்.சந்திப்போம் சொந்தமே...!

  ReplyDelete
 10. கொஞ்சமாய் வெளிச்சம் நட்டு வையுங்கள்.
  யுகங்களுக்கும் நாங்கள் பயணிப்போம்
  களைப்பின்றி நுரைப்பின்றி//

  கவியரசுடன் மறுபடி போட்டி போடுகிறீர்கள்...
  ஆதங்க கட்டுரை...படிப்போரை கட்டிப்போடுகிறது...

  ReplyDelete
 11. வணக்கம் ரெவரி சேர்.வெயிட்டிங் உங்களுக்காக...போட்டி போடும் அளவிற்கு தகுதியோ வல்லமையோ இல்லீங்க பாஸ்.மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு...!சந்திப்போம் சொந்தமே..

  ReplyDelete
 12. ''...எல்வோரும் சிறப்பானவர்களாக தம்மை அடையாளப்படுத்தவே விரும்புகிறார்கள்...'
  கனவு காண சொல்லிக்கொடுங்கள்.நீங்களே அவர்களுக்காய் கனவு காணாதீர்கள்.கனவுகளின் வண்ணமானாலும் சரி,வலியானாலும் சரி அவர்களே தீர்மானிக்க அனுமதியுங்கள்.
  இதை ஒவ்வொரு பெரியவர்களும் உணர்ந்தால் அறிவுடை உலகம் தானே உருவாகும்.
  மிகச் சரியான கருத்தும் அதிசயாவின் ஆதங்கமும்.
  காயம் பட்ட மனம் தெரிகிறது.
  விடா முயற்சியால் எப் பகுதியாலும் வெல்ல முடியும். இப்படி ஒவ்வோரு மனதிலும் நிறைவேறா ஆசைகள் கானலாகவே போகிறது.
  நல்வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. வணக்கம் சொந்தமே...!மிக்க நன்றி உங்கள் புரிதல்களுக்கு..சந்திப்போம் சொந்தமே....!

  ReplyDelete
 14. i guessed who r u!
  u r 09 batch sis!!!
  am i correct. ok this isn't our problem,
  மிக அருமையான பதிவு ! தற்க்காலத்துக்குத் தேவையான ஒன்று, அதுவும் வைரமுத்துவின் கவிதையை தகுந்த இடத்தில் பிரயோகித்திருக்கின்றீர்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...