Friday, August 17, 2012

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்!

மனதிற்கு இனிய பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசம் மிகுந்த வணக்கங்கள்!நலமாக உள்ளீர்களா???நலம்வாழ வாழ்த்துகிறேன்.


  இருளுக்குள் விரியும் ஓவியங்கள் எப்படியிருக்கும்????வாருங்கள் சொந்தங்களே இதைப்பற்றியும் பேசுவோம்.


"மாதவி மகளொருத்தி கண்ணகியானால்

கண்ணகி மகளொருத்தியும் மாதவியாய்........."


விவகாரமான விடயம் என விலகிப்போகாதீர்.இயல்பாய் பேசுவோம்.என்னை எழுதத்தூண்டிய வைரவரிகள் இவை.

 ராகங்கள் பலவிதம் சொந்தங்களே!இனிமையாய்,இயல்பாய்,அழுகையாய்,அழகாய்,கிளுகிளுப்பாய்,தெய்வீகமாய் இப்படியாய் பல இராகங்கள்.இப்போதைக்கு பேசுவோம்  இராத்திரி இராகங்கள் பற்றி!இது கலையின் வழுவா???கலைஞன் வழுவா??யாரறிவார்.யாமறிவோமா?


    புனைவுகள் விலக்கி இதுபற்றிச் சொன்னால் விலைமாதர் விதி பற்றி பேசப்போகிறேன்.
ஒருகாலம் அடிமைப்பட்டுக்கிடந்த  பெண்ணியம் இன்று வீறு கொண்டாலும் தீண்டத்தகாதவர்கள் என விலக்கப்பட்ட "தலித்துகள்" போல "பேசப்படாத,பேசப்படக்கூடா"த"  தலைப்புகள் கூட இன்னும் இருக்கத்தான் செய்கின்றன்.

    என்றோ ஒருநாள் இந்தச்சிந்தனைக்கோடு எனை கடந்து போன போது நானும் அடைமொழிகளுக்கு பயந்து அமைதிகாத்தவள் தான்.இன்று பேசும்படி உள்ளுணர்வு சொல்கிறது.அதிசயாவின் எழுத்துக்களில் இவை பேசப்படுவதையிட்டு நான் கூசவில்லை.என்குரல் இன்று தைரியம் கொண்டதையிட்டு எனக்கு திருப்தியே!

    
  நாகரீகங்கள் எல்லாம் இலக்கியங்களோடு தவழ்ந்து வந்ததென்றால்,இந்த நாகரீகமும் இலக்கிய காலங்களிலே விதைக்கப்பட்டதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.சங்ககாலப்பெருவழக்கில் ஆரம்பித்த "ஆடல் மகளிரின்" இன்பங்கள் துய்க்கப்பட்டு, தொடரப்பட்டு, "தாசிகளாகி" "வேசிப்பெண்டிர்" என பெயர் பெற்று இன்று "விலைமகளாய்"  திரிபுற்று தொழிலாகித் தொடர்கிறது.
 இன்று இது ஒரு தொழில்.பல இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.

  சங்ககாலத்தின் ஆரம்பங்களில் நின்று சங்கடங்கள் மிக்க இக்காலம் வரையான நாட்களை காலப்பெருவெளியாகக்கணக்கிட்டால் இந்த விலைமக்களின் பாதங்கள் பதியாத வரலாறு இல்லை.அத்தனை சுவடுகளிலும் கனமான கண்ணீர் கால்களில் ஒட்டிக்கொள்கிறது.இது பற்றி பேச நமக்கும் கடமையுண்டு.நாமும் வரலாற்றின் மனிதர்கள் தான்.இந்த ஈரங்கள் நம் கால்களிலும் ஒட்டியபடி பிசுபிசுக்கிறது.

   வறுமையின் உச்சம்,வலிமையின் எச்சம்  இவை தான் இந்த இராத்திரி ராகங்களில் சுருதி என்பேன்..வறுமையின் உச்சம் இவர்களை விலைமாதர் ஆக்குகிறது என்றால் பணம் என்ற வலிமையின் உச்சம் இவர்களை வாழவைக்கிறது.கடைசிவரை அதே பெயருடன் வாழவைக்கிறது.

  புரிகிறது சொந்தங்களே!பிழைப்பிற்கு வேறு வழியில்லையா என என்னிடமாய் முரண்படுவது.குறுகிய காலத்தில் குறைகள் தீர்க்க இவர்களுக்கு இலகுவாய் இவ்வழி தான் தெரிகிறது.ஒருமுறை இந்த வாசல்களுக்குள் நுழைந்துவிட்டால் பாதங்கள் விலத்தினாலும் அந்த வாசல்கள் விடுவதில்லை.கறைபட்ட சட்டை ஒன்றை இலகுவாய் சலவைக்கு இட்டுவிட மனம் ஒப்பினாலும் கறைபட்ட மாது ஒருத்தியை கறைநீக்கிப்பார்க்க எத்தனை மனம் ஒப்புகிறது???குளித்துவிட்டாலும் அழுக்காகவே அருவருக்கப்படுவதை விட அதே அழுக்குடன் இருப்பதை  மேல் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இருளோடு நிறையும் அந்த முத்தங்களில் ஈரம் இருப்பதில்லை.
படுக்கையின் விரிப்புகளில் நேசங்கள் முளைப்பதில்லை
தளுவல்களில் ஆழங்கள் தெரிவதில்லை.
ஒற்றைப்புன்னகை கூட அன்பாய்
அவள் பால் தெறிப்பதில்லை.

   இருந்தும் இந்த வாழ்க்கைக்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.சதை மட்டும் பெண்ணாகிப்பிறந்தது இங்குதான்.இதன் பின் எத்தைனையோ சத்தங்கள் ஏதேதோ பாரங்கள்.அத்தனையையும் அள்ளியெடுத்து முடிந்து கொள்கிறார்கள்  மல்லிகை மலர்களின் காம்புகளோடு.இருண்டாலும் விடிந்தாலும் இவர்கள் ராத்திரி இராகங்களாகவே இசைக்கப்படுகிறார்கள்.

    எத்தனை பெண்ணிய கோசங்கள் எழுந்தாலும் இந்த ஐன்னல்கள் இறுக்கமாக அடைக்கப்பட்டுக்கிடக்கின்றன அடுத்த பந்தி ஒன்றிற்கான ஆயத்தமாய்.
விட்டுவிடு வேண்டாமென மனது கூப்பாட போட்டாலும் வயிற்றின் விரல்கள் வலுவாய் விறாண்டும் போது மனமாவது மானமாவது

   எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை தெருக்களிலிருந்து வந்தபோதும் இவர்கள் மனதில் கிளம்பும் வினாவெல்லாம் ஒன்றே.மீண்டும் எப்போது சந்திப்போம் என்பதே.இது கூட பாசத்திற்காக அல்ல பரிதாபம் பணத்திற்காய்.இங்கு போனபின்னும் வீடு நினைத்து அழுபவர்கள்(ஆண்கள்) சிலர் என்றால் வீட்டிற்காகவே  தினமும் அழுபவர்கள் இந்த விலைமாதர்கள்.பரிதாப்பட்ட பின்னம் அவள் படுக்கையை பகிர்வதை விட மற்றொரு பாதை ஒன்றிற்கான ஆரம்பங்களை கொடுப்பதே சரியானது.

   மெழுகுவர்த்தி தியாகம் செய்கிறது என்றால் இவர்களையும் ஏற்கத்தான் வேண்டும்.அது மெழுகு உருகி  எழும் தியாகம் என்றால் இது அழகு உரித்து எழும் தியாகம்.எத்தனை பந்திகள் எத்தனை பந்தல்கள்.அத்தனையிலும் அவள் பூத்தல்லவா இருக்கிறாள்.

    வேண்டாதவர்கள் என்று அருவருக்காதீர்கள்.இங்கும் ஒரு பெண்மை இருந்தது.இப்போதும் இறந்து கொண்டே இருக்கிறது.வாருங்கள் சொந்தங்களே!பெண்ணியம் பேசப்பட வேண்டுமென்றால் சில இருட்டுகளும் வெளிச்சப்படவேண்டும்.


   முதலில் பேசத்துணிவோம்.இவர்களின் தொழில் முறை சரி என்ற வாதிடவோ அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கவோ விளையவில்லை சொந்தங்களே.இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.

    எதற்கும் ஒரு தீர்வுஉண்டென்றால் இதற்கும் தீர்வு எங்கோ இருக்கத்தான் வேண்டும்.இது ஆபாசம் அல்ல.அசிங்கம் அல்ல.
பதிவுலகம் என்பது பரந்தது.மாற்றத்திற்கான விதை ஒன்று இங்கு  போடப்பட்டால்ஒருநாள் அது நிச்சயம் விருட்சமாகும் எனற நம்பிக்கையில் தான் இத்தனையும் பேசுகிறேன் சொந்தங்களே!
                                                                                                                             நேசங்களுடன்
                                                                                                                                      -அதிசயா-

( பதிவுலக சொந்தம் சிகரம் பாரதிக்கு அன்பான நன்றிகள்.நிச்சயம் மற்றொரு தரம் பேசுகிறேன்.)
   
78 comments:

 1. வணக்கம் தோழி ...
  வெகு நாட்களுக்கு பின் comment option வந்திருக்கிறது .!
  பல பதிவுகள் வசித்து விட்டு பின்னூட்டம் பதிவு செய்ய இயலவில்லை ...!!!

  அருமையான பதிவு என்பதை விட தைரியமான பதிவு ...
  வார்த்தை தெறிவு கருத்தை அப்படியே வெளிக்கொணருகிறது ..!!!

  /// வேண்டாதவர்கள் என்று அருவருக்காதீர்கள்.இங்கும் ஒரு பெண்மை இருந்தது.இப்போதும் இறந்து கொண்டே இருக்கிறது.வாருங்கள் சொந்தங்களே! ///

  சிந்திக்க வைத்த வார்த்தைகள் ..!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!நீண்ட நாட்களாகிறது சந்தித்து.மிக்க மகிழ்ச்சி தோழி இந்தச்சந்திப்பு.

   மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 2. Kalakkitteenga athisaya. U r very great. Vaalththukkal ullame. Mobilil paarththadhaal virivaaga pesa iyalavillai. Meendum varugiren. Athu varai vivaadhangal thodarattum. Sandhippom ullame.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாரதி.நிதானமாக வாருங்கள்.பேசுவோம்.:)
   சந்திப்போம் சொந்தமே!

   Delete
 3. மன்னிக்கவும் இந்தப்பதிவில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை..எதையோ சொல்லவந்து குழம்பியிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.

  //வேண்டாதவர்கள் என்று அருவருக்காதீர்கள்//
  அப்படி நினைக்கும் அளவுக்கு இங்கே பகிரங்கமாக தெரியாத நிழல் உலகம் அது! இதில் எங்க அருவருக்கிறது?

  //பெண்ணியம் பேசப்பட வேண்டுமென்றால் சில இருட்டுகளும் வெளிச்சப்படவேண்டும். முதலில் பேசத்துணிவோம்.//
  பெண்ணியம்???? சரி பேசுவோம்!

  //இவர்களின் தொழில் முறை சரி என்ற வாதிடவோ அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கவோ விளையவில்லை சொந்தங்களே//
  சரி அவர்களுக்காக பரிந்துபேச வரவில்லை என்கிறீர்கள்.

  //இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.//
  பெண்கள் எல்லோருமே பெண்கள்தான் இதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

  //எதற்கும் ஒரு தீர்வுஉண்டென்றால் இதற்கும் தீர்வு எங்கோ இருக்கத்தான் வேண்டும்//
  தீர்வு??? தீர்வு என்று எதைச் சொல்கிறீர்கள்? பாலியல் தொழிலை பெண்கள் கைவிட வேண்டும் என்பதையா?

  //இது ஆபாசம் அல்ல.அசிங்கம் அல்ல//
  எது பாலியல் தொழில்தானே? அப்படியானால் தீர்வு என்று நீங்கள் கூறியது குறித்து கேள்வி எழுகிறது. சரி அப்படியானால் இது ஒரு அவலம் என்கிறீகளா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!இத்தனை குழப்பங்களா?????ஃபறவாயில்லை.பதிவிடும் போதே எதிர்பார்த்வைகள் தான்.பேசுவோம்.

   ஃஃஃஃஃஅப்படி நினைக்கும் அளவுக்கு இங்கே பகிரங்கமாக தெரியாத நிழல் உலகம் அது! இதில் எங்க அருவருக்கிறது?ஃஃஃஃஃஃ
   பொதுவில் உங்கள் வீட்டின் அருகிலோ தெரிந்த
   சூழலிலோ ஒரு பாலியல் தொழிலாழி இருந்தால் அர் அங்கிருப்பதை அல்லது அவரிடம் புன்னகைப்பதை விரும்புவீர்களா.விலகியிருக்கவே விரும்புவோம்.ஒருவித புறக்கணிப்பை வெளிப்படுத்துவோம்.இதைத்தான் அருவருப்பு என்று மேற்கோளிட்டேன்.தவறிருப்பின் பொறுத்தருள்க.


   பெண்ணியம் பற்றி பேசுவது என்றால் பாலியல் தொழிலாழிகளான பெண்களையும் சேர்த்தே பேச வேண்டும் என்பதே என் கோரிக்கை.

   பரிந்து பேசுகிறேன்.அதற்காகத்தான் வந்தேன்.ஆனால் அவர்களின் தொழில்முறை சரி என்ற பரிந்து பேசவில்லை.அவ்ர்களும் பெண்கள்.இந்த சகதிக்குள் இருந்த அவர்கள் வெளிவர வேண்டுமென்றால் பலமான ஒரு பின்னணியையம் ஆதாரத்தையும் நாம் வழங்கவேண்டும்.அதாவது உங்கள் சார்பான பிரச்சனைகளையும் பேசுவோம் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டும்.அதற்காகவே பரிந்து பேசுகிறேன்.அந்த நம்பிக்கையாய் நான் இருக்க விரும்புகிறேன்.

   //இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.//
   பெண் விடுதலை பற்றி இன்று பரவலான பேச்சுக்கள் எழுவது சந்தோசம்.ஆனால் பெண்விடுதலையின் அவசரங்களில் இந்தப்பாலியல் தொழிலாழிகள் பற்றி பேசப்படுவது மிகக்குறைவு.அவர்கள. இந்த நிலையிலிருந்து வெளியே வரும் போது தான் மொத்த பெண்ணினமும் விடுதலை பெற்றதாய் ஒத்துக்கொள்வேன்.அதானால் தான் சொல்கிறேன்,அவர்களும் பெண்கள் தான்.அவர்களைப்பற்றியும் பேசுங்கள் என்று.எல்லாரும் பெண்கள் தான்.ஆனால் பெண்விடுதலைபற்றி பேசும்போது மட்டும் இவர்களை மறந்து விடுகிறோமே!!!!

   எதற்கும் ஒரு தீர்வுஉண்டென்றால் இதற்கும் தீர்வு எங்கோ இருக்கத்தான் வேண்டும்
   தீர்வு என்று எதைச் சொல்கிறீர்கள்? பாலியல் தொழிலை பெண்கள் கைவிட வேண்டும் என்பதையா?//

   நிச்சயமாக தூரநோக்கு அதுதான்.அதற்கான ஆரம்பமாய் அவர்களை பற்றி பேசுது,விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதே தொடக்கம்.ஆரம்பத்தீர்வு!

   //இது ஆபாசம் அல்ல.அசிங்கம் அல்ல//
   எது பாலியல் தொழில்தானே?

   நான் பொருள் கொண்டது இங்கு பலர் கூடும் பதிவுலகில் விலைமாதர்பற்றிக்கூறுவதை நான் அசிங்கமாகவோ ஆபாசமாகவோ கருதவில்லை டஎன்பதையே!நிச்சயமாய் பாலியல் தொழில் ஒரு அவலமே!!!


   மிக்க நன்றி சொந்தமே!!இப்பதிவையும் ஒரு பொருட்டாக மதித்து,இத்தனை கேள்விகளை கேட்டது.நான் என் பாதையில் தெளிவாக இருக்கிறேன்.குழப்பமேதுமில்லை.ஆனால் பொதுப்பதிவாகவே இதை இட்டுள்ளேன்.கருத்து முரண்படுவது குழப்பம் உண்டாவது வழமை.தெளிவு பிறந்தால் மகிழ்ச்சி அன்புச்சொந்தமே!சந்திப்போம் தொடர்ந்தும்.!
   Delete
 4. Mmmmmm mobilil irukiren niraiya pesa venndi irukku appuram varukiren

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!வாங்க வாங்க பேசுவோம்.

   Delete
 5. ம்ம் பாலியல் தொழிலாளிகளாக இவர்களையும் சமுகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் வெளிச்சம் வரட்டும் நிச்சயம் துணிவான விடயம் அதிசயா! பலர் பதிவுகள் இடணும் இது விடயமாக!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   இந்தப்புரிதல்கள் கிடைத்தால் போதும்.துணிந்தால் நிச்சயமாய் மாற்றம் விளையும்.நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 6. நல்ல முயற்சி என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது.. கமல் ஹாசன் போல குழப்பியே சொல்லி இருக்கீங்க.. ஹி ஹி.. நீங்க சொல்ல வந்தத தர்க்க ரீதியில நீங்களே மாறி மாறி குழம்பி இருக்கீங்க..

  //இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.//

  இதை யாருமே ஒருபோதும் மறுக்கவில்லை

  //பெண்ணியம் பேசப்பட வேண்டுமென்றால் சில இருட்டுகளும் வெளிச்சப்படவேண்டும். முதலில் பேசத்துணிவோம்.//

  புரியல.. பெண்கள் கஷ்டப்படும் முறைகள் மிக வலிது நான் கொஞ்சம் அறிவேன்.. ஒரு சாதாரண பெண்ணை கோபமாக லூசி என்றால் ஏற்பாள் ???!!! ஆனால் வேசி என்றால்??????????.. ஒரு வேளை அந்த பெண்கள் இவர்களை பெண்களாய் நினைக்கவில்லையோ அல்லது அந்த தொழிலை ஏட்கவில்லையோ.. எதுங்க இந்த சந்தர்ப்பத்துல இருட்டு அல்லது பெண்ணியம் புரியல.. ஏதோ ஒரு ஆழ்மனச பற்றி தான் சொல்ல போறீங்க அதான் எது ??? தங்களோட வறுமையில அல்லது கஷ்டங்கள்ள இந்த தொழில தெரிவு செய்தவங்கள ஒதுக்க கூடாதா.. இல்லை தாங்களாகவே இந்த தொழிலை மனமுவந்து செய்பவர்களை மெழுகுதிரியாக ஏற்று கொள்வதா??(மேலை நாடுகளில் நீங்க இல்லைன்னு சொல்ற எல்லாம் இருந்தும் தாங்களாகவே இந்த தொழிலுக்கு இணைவார்கள்) நான் தர்க்கம் பண்ணலைங்க.. உங்க பதிவில ஆங்காங்கே ஓட்டை தெரிது..

  உதாரணம் -

  //குறுகிய காலத்தில் குறைகள் தீர்க்க இவர்களுக்கு இலகுவாய் இவ்வழி தான் தெரிகிறது//
  //மெழுகுவர்த்தி தியாகம் செய்கிறது//

  என்னங்க இது ? இதை எப்படி எடுப்பது?

  //கறைபட்ட சட்டை ஒன்றை இலகுவாய் சலவைக்கு இட்டுவிட மனம் ஒப்பினாலும் கறைபட்ட மாது ஒருத்தியை கறைநீக்கிப்பார்க்க எத்தனை மனம் ஒப்புகிறது???//

  அப்பிடி நடந்தாலும் கறைநீங்கினவுடன் அவளை ஏற்க எத்தனை மனம் ஒப்புகிறது..

  அவங்களா இந்த தொழிலுக்கு போனவங்கள ஆண்டவன் தான் காப்பாற்றனும்.. நாம வெறுக்காம இருக்கலாம்..
  ஆனா தள்ளபட்டவங்களுக்காக நீங்க போட்ட விதைக்கு தண்ணீர் ஊற்றலாம்..

  ReplyDelete
  Replies
  1. ஹரி பாஸ்..வாங்க வாங்க வணக்கம்.ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க..:)தலைக்கு மேல எனக்கு இப்போ குருவி பறக்குது..


   பேசுவோம் சொந்தமே!
   1.
   //இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.//
   இதை யாருமே ஒருபோதும் மறுக்கவில்லை.

   பெண் விடுதலை பற்றி இன்று பரவலான பேச்சுக்கள் எழுவது சந்தோசம்.ஆனால் பெண்விடுதலையின் அவசரங்களில் இந்தப்பாலியல் தொழிலாழிகள் பற்றி பேசப்படுவது மிகக்குறைவு.அவர்கள. இந்த நிலையிலிருந்து வெளியே வரும் போது தான் மொத்த பெண்ணினமும் விடுதலை பெற்றதாய் ஒத்துக்கொள்வேன்.அதானால் தான் சொல்கிறேன்,அவர்களும் பெண்கள் தான்.அவர்களைப்பற்றியும் பேசுங்கள் என்று.எல்லாரும் பெண்கள் தான்.ஆனால் பெண்விடுதலைபற்றி பேசும்போது மட்டும் இவர்களை மறந்து விடுகிறோமே!!!!

   2.தங்களோட வறுமையில அல்லது கஷ்டங்கள்ள இந்த தொழில தெரிவு செய்தவங்கள ஒதுக்க கூடாதா..!
   இதைத்தான் சொல்கிறேன்.அவர்கள் தொழிலுக்க ஆதரவாகபேசவில்லை.அவர்கரள ஒதுக்கி புறம்பாக்காது அவர்களை பறடறி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நிச்சயம் ஒருநாள் இவர்களை இச்சகதியிலிருந்த வெளிக்கொணரமுடியும்.தாமாக விரும்பி எடல்சுகத்திற்காக இத்தொழிலை செய்பவர்களை பற்றி நான் கருதவில்லை.அதை இங்கு முன்கூட்டியே கூறாதது என் தவறு தான்.ஓட்டை தான் பாஸ்.ஒத்துக்கிறேன்.இவர்களை பற்றிப்பேசப்படாமையை தான் இருள் என்கிறேன்.

   3.
   என்னங்க இது ? இதை எப்படி எடுப்பது?
   குடும்ப வறுமை தாங்காத தம் விருப்பின்றி இதற்குள் சந்தர்ப்ப வசத்தால் மாட்டிக்கொண்டவர்களை தியாகி என்கிறேன்.பிறர் பசி நீக்கும் தியாகம்.

   4.அப்பிடி நடந்தாலும் கறைநீங்கினவுடன் அவளை ஏற்க எத்தனை மனம் ஒப்புகிறது..

   கறைநீக்குவதை ஒப்பும் மனத,அவள் கறை நீங்கியவுடன் அவளை தட்டிக்கொடுத்து பதிதாய் வாழச்சொல்லவும் ஒப்பும்.கட்டாயம்.

   5.அவங்களா இந்த தொழிலுக்கு போனவங்கள ஆண்டவன் தான் காப்பாற்றனும்.. நாம வெறுக்காம இருக்கலாம்..
   ஆனா தள்ளபட்டவங்களுக்காக நீங்க போட்ட விதைக்கு தண்ணீர் ஊற்றலாம்..
   இது திருவாசகம் நண்பா!

   நன்றிகள்.சந்திப்போம்.   Delete
  2. அடேய் ஹாரி ஏன் இப்படி... பயபுள்ள நீயும் என்னமா சிந்திக்கிற...உன் கேள்விகள் அனைத்தும் நியமானது ஹாரி..

   ஆனால் எதற்கும் ஒரு ஆரம்பப் புள்ளி வேண்டுமே... நிச்சயமாக இது தீர்வில்லா தீர்வு தான்... இனி வரும் காலங்களில் விலை மகளை வேண்டுமானால் ஒழித்து விடலாம்.. கள்ளத் தொடர்பை ஒழித்து விடுவிட முடியுமா... அப்படி என்றால் விபச்சாரம் வேறு உருக்கு மாறுகிறது என்று தானே அர்த்தம்... அதாவது பரிணாம வளர்ச்சி அடைகிறது...

   மனிதனின் பரிணாம வளர்ச்சி விபச்சாரம் துடைத்து கள்ளக் காதல் என்ற பரிணாமத்திற்கு முன்னேறுகிறது.... வாழ்க உலகம்( இதில் நான் ஏன் பாரதத்தை குறை கூற வேண்டும்... ஓ கலாச்சாரத்தின் ஊற்று பாரதம் என்பதாலா... அப்படி என்றால் இங்கு நான் பெண்மையைப் பற்றி பேசி ஆக வேண்டும்... உலகில் வேறு எங்கும் பெண்மை இல்லையா என்று தர்க்கம் மீண்டும் தலை தூக்கும்.) வாழிய உலகம் என்ற பரந்த அளவில் என் எல்லையை விரித்துக் கொள்கிறேன் :-)

   பெண்கள் திருந்த நினைத்தாலும் ஆண்கள் திருந்த விட மாட்டார்கள் என்ற நிலை மாறி ஆண்கள் திருந்த நினைத்தாலும் பெண்கள் திருந்த விட மாட்டார்கள் என்ற எதிர் நிலை வரும் காலம் வெகு தூரம் இல்லை...

   இனி அதிசியாவிற்கு

   பெண்கள் சுதந்திரம் அப்படியா?..... அவர்களுக்கு சுதந்திரம் இல்லையா? சம உரிமை இல்லையா? பெண்கள் அனைவருக்குமே இல்லையா இல்லை ஒரு சிலருக்கு இல்லையா..... சத்தியமாக எனக்குத் தெரியவில்லை... அலது புரியவில்லை.... அப்படி ன்றால் இந்த சிங்காரச் சென்னையிலே நான் காணும் பெண்கள் எல்லாரும் வேற்று உலகத்து மனிதர்களா....

   சென்னையை தனி சிறிய இடமாகப் பார்காதீர்கள்.. சென்னையின் எல்லை பெரியது.. தமிழகத்தின் அளவு, இந்தியாவின் அளவு சென்னையின் எல்லை பெரியது... அதனால் நான் சென்னையை உதாரனதிற்குக் கூறலாம்....

   இங்கே நான் சொல்ல வருவது.. விபச்சரதிர்க்கும் பெண் விடுதலைக்கும் தொடர்பு படுத்த வேண்டாமே....

   கிராமத்துப் பெண்களுக்கு இன்னும் எவ்வளவோ வகைகளில் உரிமைகள் கிடைபதில்லை அவற்றைப் பற்றிப் பேசலாம்... விலை மகள்களின் மறுவாழ்வு என்னும் கூற்று சரியாக இருக்கும்... அதைத் தான் நீங்கள் சொல்கிறீகள்... அதனை இன்னும் தெளிவுபடுத்தி இருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்று மட்டுமே சொல்ல வருகிறேன்....

   கறைபட்ட சட்டைகள் உவமை அருமை .. கறைபடுத்திய சட்டைகளே தைரியமாய் உலவும் போது இவர்களால் மட்டும் முடியாதா.. முடியும்... சந்தர்ப்ப சூழ்நிலை என்ற விலங்கை இவர்கள் இவர்களாக உடைக்க தயாராக இல்லை... இவர்களுடைய மறு வாழ்வு மையங்கள் மறு வாழ்வு அளிக்கிறதா இல்லை அழிகிறதா என்றும் தெரியவில்லை... இவர்கள் மறு வாழ்விற்கு தடைகள் பல உள்ளது என்பது நியமன விஷயம்... அதற்காக உங்கள் குரல் இன்னும் இன்னும் சத்தமாய் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் எல்லாரின் ஆசை...

   உங்களுக்கு மீண்டும் ஒரு சபாஷ் தோழி... செல்லும் பதில் தடுக்கி கீழே விழலாம்....

   பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து மக்கள் சிரித்தார்கள்
   பூமி அந்த மக்களைப் பார்த்து சொன்னது
   அவன் ஒன்பது முறை எழுந்து நின்ற வீரன்
   என்று

   எதிர்ப்புக் கருத்துகள் வருகிறதா
   நீங்கள் கவனிக்கப் படுகிறீகள் என்று அர்த்தம்
   தொடருங்கள்.......

   Delete
  3. வணக்கம் சீனு அண்ணா.ஹரியின் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டேன்.அதை சந்றே எனக்காக படிக்கமுடிந்தால் படியுங்கள்.
   இந்தப்பதிவிற்கான தலைப்பிடும்போதே எதிப்பார்த்த எதிர்ப்புகள் தான்.என்ன இத்தனை வேகமாய் வருவதில் சற்ற களைத்துவிட்டேன்.பறவாயில்லை சொந்தமே!இன்னும் உறுதியுடன் போராடுவேன்.

   சுதந்திரப்பட்ட பெண்களைவிட சுதந்திரம் அடடைந்ததைப்போல மாயை தான் அதிகம்.சென்னையில் இதுவரை பெண்விடுதலைக்கோஷங்கள் எழவில்லையா???அப்படியாயின் அவர்கள் ஏன் கோஷமிடுகிறார்கள் சொந்தமே!!

   பெண்விடுதலைக்கும் விபச்சாரத்திற்கும் தொடர்பு நிச்சயம் உண்டு.சத்தமாய் சொல்லுவேன்.அவர்களை விலத்திவிட்டு ஏது பெண்விடுதலை ஏன் அவர்கள் பெண்ணில்லயா??

   முதலில் விபச்சாரிகள் பற்றிபேசுவது தவறு, முட்டாள்தனம், பேசக்கூடாது,கேல்க்குரியது அவர்கள் தவறானவர்கள்,புறம்மாக்கப்பட்டவர்கள் என்ற எண்ணமே பெண்ணடிமைத்தனத்தின் விதை தான்.!
   மிக்கநன்றி சொந்தமே!

   ஆனாலும் என்ன ஒரு அன்பு.கீழவிழுத்தனாலும் உடனேயே தைலம் தடவீடுறீங்க பாருங்க..இதுதான் பதிவுலகின் தன்மை.அந்தத்துணிவில் தான் பேசுகிறேன்.நான் இதுமுதல் ர்றக்கண்க்கப்பட்டாலும் நிச்சயமாய் இப்பெண்களின் வேதனைகள் வெளியேவரவேண்டும்,இவர்களும் பெண்விடுதலைபாதையில் இணையவேண்டும் என்பதை இனியும் பேசுவேன் என் அன்புச்சொந்தமே!


   Delete
  4. அதைப் படித்து விட்டுத் தான் இங்கே பத்விட்டேன் அதிசயா... ஹாரி கோரிய ஒவ்வொரு வரிகளுக்கும் தனித் தனி பதிலாக எழுதத் தேவை இல்லை...மேலும் முதல் இரண்டு வரிகள் மட்டுமே ஹாரிக்காக நான் எழுதியது...அத்தனையும் இல்லை..... மற்றவை அனைத்தும் இந்தப் பதிவு படிபவர்களுக்காக எழுதியது....

   //பெண்விடுதலைக்கும் விபச்சாரத்திற்கும் தொடர்பு நிச்சயம் உண்டு.சத்தமாய் சொல்லுவேன்.அவர்களை விலத்திவிட்டு ஏது பெண்விடுதலை ஏன் அவர்கள் பெண்ணில்லயா??//

   என் கேள்வி ஒன்றே ஒன்று தான்.....

   சந்தர்ப்ப சூழ்நிலையால் கைதியான பல ஆண்களின் மறுவாழ்விற்கு... கைதியின் மறுவாழ்வு என்ற கொடியைப் பிடிப்போமா ? இல்லை ஆண்களின் மறுவாழ்வு என்ற கொடியைப் பிடிப்போமா?... இங்கே விலைமகளின் மறு வாழ்வு என்ற கொடி தான் சரியானதாய் இருக்கும்... இதில் பெண்ணுரிமை என்று ஒட்டு மொத்த பெண்களையும் திரட்டுவதில் எனக்குஉடன் பாடில்லை. இது என் கருத்து மட்டுமே.

   //இதுவரை பெண்விடுதலைக்கோஷங்கள் எழவில்லையா???// சிரிப்பு தான் வருகிறது... அவை எல்லாம் ஏன் கோசம் இடுகிறோம் என்று தெரியமால் கோசம் இடும் கூட்டங்கள்... பெரும்பாலான மகளிர் அணிகள் வேடிக்கைப் பேச்சுக்காக நடத்தப் படுகின்றன.. ( இங்கே நான் பெரும்பாலான என்று குறிப்பிடுவதை எல்லாம் ஒட்டு மொத்தமாக என்று புரிந்து கொள்கிறீர்கள்.. காரணம் கீழே இருக்கும் என் கமேன்ட்டிர்க்கு நீங்கள் அளித்த பதிலில் இருந்து கிடைத்த புரிதல் அது)...

   பெண்ணுரிமை... யாரிடம் கேட்கிறோம், ஆண்களிடமா... அப்படி என்றால் மாமியார் கொடுமையை பெண்ணுரிமை ஆக்கி அதை நிறுத்தும் படி யாரிடம் கேட்பது... அதே ஆண்களிடமா... வரதட்சிணைக் கொடுமை... சிசுக் கொலை இதில் எல்லாம் பெண்கள் தொடர்பில்லையா

   ஒவ்வொரு ஆணின் பின்னாலும் பெண் இருக்கிறாள் என்பது கலாச்சாரம் ஆயின்... பெண் சுதந்திரமானவள்... இங்கே அவளால் அதைப் பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை..... அதை உரிமை ஆக்க வேண்டாம் விழிப்புணர்வு ஆகுவோம் என்பது மட்டுமே என் வாதம்...

   //பெண்விடுதலைபாதையில் இணையவேண்டும்// பெண்களே இந்த மாயத்திரையில் இருந்து வெளி வந்தால் அவர்களுக்கான விடுதல் கிடைத்திருக்கும் என்பது நிதர்சனம்.


   Delete
  5. விழிப்புணர்வு வந்தால் தானேகவே விடுதலையும் வந்துவிடும்.


   பெண்ணுரிமை... யாரிடம் கேட்கிறோம், ஆண்களிடமா... அப்படி என்றால் மாமியார் கொடுமையை பெண்ணுரிமை ஆக்கி அதை நிறுத்தும் படி யாரிடம் கேட்பது... அதே ஆண்களிடமா... வரதட்சிணைக் கொடுமை... சிசுக் கொலை இதில் எல்லாம் பெண்கள் தொடர்பில்லையா ????நான் இல்லை என்று வாதிடவில்லையே சொந்தமே!தனியே ிபச்சாரத்தில்ருந்து கிடக்கும் விடுதலையை மட்டும் பெண்விடுதலை என்று எப்போதுவாதிட்டேன்.தாங்கள்; மேற்சொன்னவைகளம் பெண்விடுதலையே.இவைபற்றி வெளிப்படையா பேசகிறார்டகள்.ஆனால் விப்ச்சாரம் பற்றியும் அதிலிருந்து வெளியே வருவதுபற்றி பேச்சுக்கள் எழுவது சார்பளவில் குறைவு என்பதால் தான் இத்தனையும் பேசுகிறேன்.தங்க் கருத்துக்களில் நான் ஏற்படுதிக்கொண்ட புரிதலீனங்களுக்காக என்னை பொறுத்தருள்க.சந்திப்போம் உறவே!

   Delete
  6. // விழிப்புணர்வு வந்தால் தானேகவே விடுதலையும் வந்துவிடும்.//

   பெண் விழிப்புணர்வு என்பது எனது புரிதல்...

   //ஆனால் விப்ச்சாரம் பற்றியும் அதிலிருந்து வெளியே வருவதுபற்றி பேச்சுக்கள் எழுவது சார்பளவில் குறைவு என்பதால் தான் இத்தனையும் பேசுகிறேன்.// இந்த முயற்சிக்காகத் தான் இத்தனை தூரம் உங்கள் எழுத்துக்களை ஆதரிக்கிறேன்....

   // என்னை பொறுத்தருள்க// ஹா ஹா ஹா நான் இப்படி ஒரு வாதம் செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டது..... என் நண்பர்கள் உடன் இருந்தால் நிச்சயம் அங்கே சண்டை இருக்கும்.. முடிவில் அந்த விவாதத்தில் யாரோ ஒருவருக்கு தெளிவு கிடைத்திருக்கும்... விவாதம் ஆரோகியமனாதாய் இருக்கும் வரை நல்லதே

   என்னையும் சிந்திக்கத் தூண்டிய உங்கள் பதிவுக்கு தலை வணகுகிறேன்... மிக்க நன்றி தோழி..... உங்களை அணை போட்டு நிறுத்தவில்லை...... அப்படி எண்ணியும் விட வேண்டாம்....

   எண்ணத் துணிக... எண்ணிய காரியம் வெல்லத் துணிக ... நன்றி சந்திப்போம்

   Delete
  7. சீனுஅண்ணா இப்ப சந்தோசமா....நீண்டநாள் ஆசை நிறைவேறியிருக்கா??ஃ?அப்பிடிணெய்டா அதுக்கு ஒரு ட்ரீட் வைக்கலாமே!

   மிக்க நன்றி.இத்தனை தூரம் வந்ததற்கும் முரண்பாடுகளை தாண்டியும் பதிவின் நோக்கு புரிந்து,வழிப்படுத்தல் தந்தமைக்கும்.மிக்க நன்றி சொந்தமே!ஆனாலும் ரொம்ப களைச்சுட்டன்.மாஸ்டர் சீனு அண்ணா பேரில ஒரு ரீ   புரிகிறது தோழா இது அணை இல்லை என்பது.உண்மையை சொன்னால் தங்கள் பதில் கருத்துக்களை பார்க்க பார்க்க தான் இவர்களுக்காய் பேவேண்டும் என்ற வேகம் இன்னுமாய் எழுகிறது.மிக்க நன்றி சொந்தமே!பேசுவேன் சத்தமாக சரியாகப் பேசுவேன் நண்பா சந்திப்போம்.

   Delete
 7. //ஜீ...August 17, 2012 10:35 PM

  மன்னிக்கவும் இந்தப்பதிவில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை..எதையோ சொல்லவந்து குழம்பியிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.//

  நான் பயந்து கொண்டு இருந்தேன் நல்ல கருத்து சரியாக சொல்லி எனக்கு விளங்கலையோ என்று.. பரவால ஹாரிக்கு கொஞ்சம் மூளை இருக்கு.. ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. ஆஹா என்ன ஒரு சந்தோசம்.ஏன்ன ஒரு வீறாப்புவாழ்க வளர்க...!ஒத்துக்கறேன்.அண்ணே ரொம்ப களைச்சுபோனேன்.ஒரு கப் கோப்பி ப்ளீஸ்...!

   Delete
 8. தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று முழுதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் தாங்கள் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு யாரும் பேச துநியாதது. ஆனால் சிறு தடுமாற்றம் என்றே தோன்றுகிறது.

  எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்துள்ளது...
  இருளோடு நிறையும் அந்த முத்தங்களில் ஈரம் இருப்பதில்லை.
  படுக்கையின் விரிப்புகளில் நேசங்கள் முளைப்பதில்லை
  தளுவல்களில் ஆழங்கள் தெரிவதில்லை.
  ஒற்றைப்புன்னகை கூட அன்பாய்
  அவள் பால் தெறிப்பதில்லை

  தொடருங்கள்,

  ReplyDelete
 9. வணக்கம் சொந்தமே!!!
  உங்களுக்கும் குழ்பமா???:(

  மேலிட்ட கருத்துரையை நேரமிருந்தால் பார்க்கவும்.;.
  மிக்க நன்றி சொந்தமே!!சந்தோசம்.சந்திப்போம்.

  ReplyDelete
 10. விலைமாதர்கள் என்பது தற்போது பாலியல் தொழிலாளி என்று மருவி வந்துள்ளது. மோகம் என்கிற பெயரில் சில வசதியான பெண்கள் பல ஆண்களுடன் உல்லாசமாக இருப்பது, டேடிங் என்கிற பெயரில் ஆண்களுடன் சல்லாபம் கொள்ளும் கல்லூரி பள்ளி மாணவிகள், கணவனுக்கு தெரியாமல் கள்ளகாதல் செய்யும் மனைவி (ஒட்டுமொத்த பெண்களை நான் குறை கூறவில்லை) இது போன்று செய்பவர்களை விட தான் காசுக்காக உடம்பை விற்கும் பாலியல் தொழிலாளிகள் எவ்வளவோ உயர்ந்தவர்கள்... உண்மையானவர்கள் என்பது என் கருத்து .... உங்களின் பதிவை வரவேற்கிறேன் தோழி... அருமை.. அன்புடன் ஆயிஷாபாரூக்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   வழிமொழிகிறேன் தோழி.நாகரீகம் எள்ற போர்வக்குள் இப்படியாய் நடந்தேறும்சிங்கங்களைவிட,தம்மமை பாலியல் தொழிலாழி என அடையாளப்படுத்தியவர்கள் மேல்தான்.

   மிக்க நன்றி சொந்தமே இந்த இறுக்கமான உரமிடலிற்காக.இப்போதைக்கு இது போதும்.இன்னும் பேசுவோம் சொந்தமே!

   வருகைக்கும் கருத்திற்கும் மிகவே நன்றி.சந்திப்போம் தோழி.

   Delete

 11. முதலில் பேசத்துணிவோம்.இவர்களின் தொழில் முறை சரி என்ற வாதிடவோ அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கவோ விளையவில்லை சொந்தங்களே.இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.//

  ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பத்தியும்
  நெஞ்சினுள் ஈட்டியை இறக்கிப்போகிறது
  நிச்சயமாக சபத்மாகப் பேசப்படவேண்டிய
  விஷயம் இது. தொடர்ந்து பேசுங்கள்
  மனம் சுட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரமணி சார்.எங்கே தவறாகப்புரிந்து விடுவீர்களோ என சிறிதொருபயம் இருந்தது.கூடவே ச்தமாய் சொல்யலம் துணிவும் இருந்தது.

   மிக்க நன்றி சொந்தமே!நிச்சயம் பேசுவோம்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 12. Nallathoru samuka pirachanayai alasi arainthullerkal
  Valthukkal

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமு!மிக்க நன்றி.மீண்டும் அன்புடன் சந்திப்போம்.

   Delete
 13. இரவுக்காடுகளின் மின்மினிப்பூச்சிகள்....என்று சொல்ல மட்டுமே தோன்றுகிறது.இரவுத் தோழிகளின் தொழிலை குறை சொல்வதாக இல்லை.அவர்களுக்குப் பின்னாலும் ஆயிரம் கதைகள்.குறை சொல்லத் துணிந்தவர்கள் உதவி செய்வார்களா.அவர்கள் கண்ணீர் துடைப்பார்களா ?

  வெளிநாடுகளில் அது முக்கியத் தொழில்.அதற்கு வரிப்பணம் முதல் காப்புறுதி வரை இருக்கிறது.அவர்களது வாழ்க்கை முறைக்கு அது ஒத்துப்போகிறது !

  ReplyDelete
  Replies
  1. வணய்யம் ஹேமா அக்கா.வகைக்கு மிகவே நன்றி.வெளிநாட்டு வாழ்க்கைமுறை வேறு அக்கா!அங்கு அவர்கள் அங்கீகரிக்கப்ட்ட தொழிவாழிகள்.ஆனால் இங்கு இருக்கும் வேதனையும்; வேகரமும் மிகவே அதிகம் !

   நிச்சயம் அந்தக்கண்ணீர் துடைக்கப்படும்.!சந்திப்போம் அன்பின் சொந்தமே!

   Delete
 14. என் அன்புச் சொந்தமே
  நீங்கள் எடுத்துல்ள்ள கரு பாராட்டகூடியது
  என்னை பொறுத்தவரை விலை மாதர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல
  ஆயிசா பாரூக் சொன்ன கருத்தை நான் வழிமொழிகிறேன்
  அவர் சொன்ன கருத்துதான் உண்மை
  இரண்டு வருடங்களுக்கு முன்என் கிறுக்கல் வலி நான் சமூகத்தோடு கேட்ட கேள்வி இதுதான் கற்ப்பில் சிறந்தவர்கள்

  http://nizammudeen-abdulkader.blogspot.com/2010/08/blog-post_3720.html#comments

  விலை மாதர்கள் அசிங்கள் அல்ல
  நம் தேசத்தின் மிகப் பெரிய அசிங்கங்கள் எது என்றால்
  என் கிறுக்கலில் சொல்லப்பட்ட வர்கள்தான்

  நல்ல ஒரு விடயத்தை கையாண்டதில் மகிழ்ச்சி சொந்தமே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!சரியாகத்தான் கிறுக்கி இருக்கிறீர்கள்.அவர்கள் தான் தேத்தின் அசிங்கங்கள்.

   நானும் தங்கள் கருத்தை,அதாவது ஆயிசா அக்காவின் கருத்தை வழிமொழிகிறேன்.

   நன்றிக்கடன் பட்டுள்ளேன்.தாங்களும் இது பற்றிப்பேசியதற்காய்.மிக்க நன்றி சொந்தமே!நிச்சயம் ஒரு நாள் சாதிப்போம்.

   சந்திப்போம் என் அன்பின் சொந்தமே!

   Delete
 15. நிச்சயமாக வரவேற்கவேண்டிய பதிவிடல் ..........
  இந்த சூழ்நிலைக்கு பெண்கள் தள்ளப்படுவதற்காக காரணங்களின் பின்னணியில் (எம் சமூகத்தில்) ஆண்களின் பங்கே அதிகமாக உள்ளது.மறுக்க முடியாத யதார்த்தம் இது. அங்கிகரிக்கப்பட்டால் பெண்களின் போராட்ட குணத்தை முடக்கி வைக்கும் ஒரு தொழிலாகவே இது அமையும் என்று நினைக்கிறேன்.
  எத்தனை பந்திகள் எத்தனை பந்தல்கள்.அத்தனையிலும் #அவள் பூத்தல்லவா# இருக்கிறாள்.இதை எப்படி எடுத்துக்கொள்வது தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   இர்களின் தொழிலை அங்கீகரியுங்கள் என்று நான் வாதிடவில்லை சொந்தமே!இவர்களைப்பற்றியும் சத்தமாய் பேசுவோம்.பெண்விடுதலை என்ற நீரோட்டத்திற்குள் இவர்களையும் அழைத்துச்செல்வோம் என்கிறேன்.

   எத்தனை பந்திகள் எத்தனை பந்தல்கள்.அத்தனையிலும் #அவள் பூத்தல்லவா#
   மனைவியானவள் ஊடல் கூடல் என இருவகை நிலைகளுடு பயணிக்கிறாள்.ஆனால் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை சபைகளிலும் இவளுக்கு ஊடலுக்க ஏனைய உணர்வுகளுக்கோஇடைவெளி வழங்கப்படுவதில்லை.கூடல் மட்டுமே!!
   ஒரு விதத்தில் பாலியல் பொம்மைகளாக எண்ணப்படுகிறார்கள்.தம் வயிற்றின் ஆத்திரம் அடக்க,எத்தை வெறுப்புக்களை அவள் சகித்திருக்கிறாள்.எனவே தான் அப்பச்சொன்னன் சொந்தமே!!!

   மிக்க நன்றி சந்திப்போம் இனிய சொந்தமே!

   Delete
 16. ஒரு பெண்ணாக இதை பேச துணிந்ததற்காய் வாழ்த்துக்கள் ஆனால் அவர்களை பரிந்துரைக்கும் உங்கள் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிகவே நன்றி.மீண்டுமாய் சொல்கிறேன்.விபச்சாரத்தை பரிந்தரைக்கவில்லை.விபச்சாரிகளையும் விடுவிப்போம் என்பதற்காகவே பரரிந்துரைக்கிறென்.கருத்து ஓட்டம் பல திசைக்குரியது.முரண்பட்டுப்போவதில் ஆச்சர்யம் இல்லை சொந்தமே!சந்திப்போம்!

   Delete
 17. ஒரு மழையை பற்றி பேசியது போல இருக்கிறது சந்தானம் சாக்கடை என்று பிரித்து பார்க்காமல் அனைத்தையும் அனைத்து சுத்தம் செய்ய மழையால் முடிகிறது .............என்னை பொறுத்தவரை மற்றவரை மகிழ்விப்பவள் சாதரனமானவளாக இருக்க முடியாது அவள் கருனைமிக்கவள்

  மற்றவரின் அழுக்குகளை உள்வான்குகிறாள் ,சோகங்களை சுகங்களாக்குகிறாள், வேதனைகளை வெருக்கவைகிறாள் .....

  அவளின் வாழ்வு ஆதாரத்திற்கு பணம் தேவை
  இவனின் வாழ்வை சுவைக்க இன்பம் தேவை

  இருவரும் பண்டமாற்று முறையை போல மாற்றிகொள்கிறார்கள்
  ஆனால் பலியை மட்டும் அவளுக்கு ........
  என்ன நியாயம் .....

  அதிசயா நல்ல விடயம் நானும் பல நாட்களாக எழுத நினைத்தது நீ புள்ளி வைத்து இருக்கிறாய் .....நிச்சயம் நான் கோலம் போடுவேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா.நலமா???

   இதைத்தான் நானும் சொல்கிறேன்.சிலரேனும் உள்வாங்கியமை மனதிற்கு நிறைவு.எழுதும்போதே இந்த எதிர்பையெல்லாம் எதிர்பார்த்தே எழுதினேன் அக்கா.இந்தப்புள்ளி ஒருநாள் விரிந்து பெரியகோலமாகும்.மெதுமெதுவாய் இந்த விலைமாதர் விடுதலையும் பெண்விடுதலைக்குள் உள்வாங்கப்படும் அக்கா.தொடர்ந்தும் பேசுவோம் சொந்தமே!!

   Delete
 18. ////மெழுகுவர்த்தி தியாகம் செய்கிறது என்றால் இவர்களையும் ஏற்கத்தான் வேண்டும்.அது மெழுகு உருகி எழும் தியாகம் என்றால் இது அழகு உரித்து எழும் தியாகம்.////

  இதில் என்ன தியாகம் இருக்கின்றது?
  இந்தக் கூற்று பொருத்தமானதாக எனக்கு தோன்றவில்லை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!பேசுவோம்.
   ////மெழுகுவர்த்தி தியாகம் செய்கிறது என்றால் இவர்களையும் ஏற்கத்தான் வேண்டும்.அது மெழுகு உருகி எழும் தியாகம் என்றால் இது அழகு உரித்து எழும் தியாகம்.////

   இதில் என்ன தியாகம் இருக்கின்றது?
   குடும்ப வறுமை தாங்காத தம் விருப்பின்றி இதற்குள் சந்தர்ப்ப வசத்தால் மாட்டிக்கொண்டவர்களை தியாகி என்கிறேன்.பிறர் பசி நீக்கும் தியாகம்.உடல்விற்று பிழைக்கிறார்கள் என இலகுவாக சொல்லலாம் ஆனால் இந்த தியாகம் தான் அவள் வீட்டுப்பசி அவன் உடல் பசி தீர்த்தது.தறறோ சரியோ இது தியாகமே!◌பிறர்காய்எரிதல்.

   Delete
 19. என்னைக்கேட்டால் இவர்களுக்காக பரிதாபப் படுவதைவிட இவர்களது வாழ்வியல் தேவைகளுக்கு இவர்கள் வருமானத்துக்கு சிறு சிறு தொழில் முயற்சிகள் ஏற்படுத்தி கொடுத்து இவர்களை சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ் வழி செய்யவேண்டும் அதைவிட்டு இவர்கள் செய்வது தியாகம் அது இது என்று சொல்வது பொருத்தமானது இல்லை

  வறுமையினால் என்ற காரணத்தை சொல்வது பொருத்தமானதாக எனக்கு தோன்றவில்லை 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த வன்னிப்பிரதேசங்களில் வருமை இல்லையா?ஆனால் அங்கு விபச்சாரம் இருந்ததா? என்றால் நிச்சயம் இல்லை.காரணம் அங்கு நிலவிய கடுமையான கட்டுப்பாடுகள்.

  அங்கே வருமையால் வாடிய போதும் பெண்கள் யாரும் விபச்சாரம் செய்யவில்லை.

  ReplyDelete
  Replies
  1. என்னைக்கேட்டால் இவர்களுக்காக பரிதாபப் படுவதைவிட இவர்களது வாழ்வியல் தேவைகளுக்கு இவர்கள் வருமானத்துக்கு சிறு சிறு தொழில் முயற்சிகள் ஏற்படுத்தி கொடுத்து இவர்களை சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ் வழி செய்யவேண்டும்ஃஃஃஃஃஃ

   எனது தூரநோக்கமும் அதாகத்தான் இருக்கிறது.முதலில் இவர்களுக்கு ஒரு வாழ்வு தேடிக்ககொடுக்கவிரும்பினால் அவர்களைப்பற்றி வெறிப்படையாகப்பேசவேண்டும்.அதிலிருந்து தானே ஆரம்பிக்கமுடியும்.அதைத்தான் செய்கிறேன்.ஒரு நாள் என்வாதங்கள் நிச்சயம் புரியப்படும்.கனவு மெய்ப்ப்படும் சொந்தமே!

   அன்று அங்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தது.ஆதார நிறுவனங்கள் இருந்தது.அவர்கள் மானம் காத்த மறத்தமிழிச்சிகள்.

   ஆனால் இன்ற யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்படுகின்ற தாய்மை அடைந்த விரைமாதார் பேட்டிய் என்ன சொன்னார்??என் மூன்று பிள்ளைகளையும் கரைசேர்க்க ஒருவழி யும் கிடைக்கவில்லை.இன்றே ஒருவழிகிடைத்தாலும் இதை விட்டுவிடுகிறேன் என்றார்.அவர் புலம் எது என்பதும் நாம் அறிந்ததே!பேசவிரும்பவில்லை.அதுபற்றி!

   Delete
 20. இந்த விடயத்தை பேசத்துணிந்தமைக்காக பாராட்டுக்கள் அதிசயா

  ReplyDelete
  Replies
  1. மிக்கநன்றி நண்பா.!இத்தனை முரண்பாடுகள் என்றாலும் நான் கூறியது கவனிக்கப்பட்டாவது இருப்பதையிட்டு சந்தோசம் நண்பா.!சந்திப்போம்.

   Delete
 21. // புனைவுகள் விலக்கி இதுபற்றிச் சொன்னால் // வார்த்தைக் கோர்வை மிக மிக அருமை... சிறந்த சிந்தனை...

  "விலைமாதர்கள் மட்டும் இல்லை என்றால் தெருவெங்கும் கற்பழிப்புகள் நடந்திருக்கும். காலச் சுழற்சியில் அவர்கள் பங்கும் பெரியது" என்று படித்திருக்கிறேன்.

  அரசாங்கத்தால் கை விடப் பட்டவர்களில் அவர்களும் ஒருவர். அது சரி ஆனாலும் பெரும்பாலான விலை மாதர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாகிறார்கள் என்பதை விட தவறான பழக்கங்களால், கைவிடப்பட்ட, ஏமாற்றப்பட்ட காதல்களால் தானே உருவாக்கப் படுகிறார்கள். கள்ளக் காதலும் ஒரு வகை விதையே.

  சிந்திக்கத் தூண்டும் பதிவு... நிச்சயம் பல பேரின் சிந்தனையும் இங்கே ஒன்று கூடும்.. மீண்டும் வருகிறேன்.... யாரோ என்று ஒதுங்கமால், அவர்களும் மனிதர்களே என்று அவர்களைப் பற்றி நினைத்து ஒரு பதயு எழுதிய உங்களுக்கு ஒரு சபாஷ்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீனு அண்ணா!

   "விலைமாதர்கள் மட்டும் இல்லை என்றால் தெருவெங்கும் கற்பழிப்புகள் நடந்திருக்கும். காலச் சுழற்சியில் அவர்கள் பங்கும் பெரியது" என்று படித்திருக்கிறேன்.
   உண்மைதான்.கள்ளக்காதலும் ஒருவகை விதைதான்.ஆனால் அத்தனைக்கும் காரணம் கள்ளக்காதல் அல்ல சொந்தமே!!

   மிக்க நன்றி அண்ணா!சந்திப்போம் சொந்தமே!

   Delete
  2. // ஆனால் அத்தனைக்கும் காரணம் கள்ளக்காதல் அல்ல சொந்தமே!!//
   அத்தனைக்கும் என்று நான் கூற வில்லையே... பெரும்பாலான என்று தான் கூறி உள்ளேன்... நிச்சயம் பெரும்பாலான விலை மகள்கள் கள்ளக் காதல்களால், கன்டவனால் (கண்டவனால் இல்லை ) கைவிடப் பட்டவர்கள் தான்.... நான் பேசுவது இக்கால சூழ் நிலையைப் பற்றி... பெருமபாலான என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள விலை எனில், பாதிக்கு மேல் என்ற வார்த்தை பொருத்தமானதாய் இருக்கும்....

   Delete
  3. பாதிக்ககு மேல் என்றால் அதுவும் பெரும்பான்மையே!புரிகிறது தாங்கள் கூறுவது.சந்திப்போம்.

   Delete
 22. துணிச்சலான சிறப்பான பதிவு! பாலியல் தொழிலாளர்களும் மனிதர்களே! அவர்களை உருவாக்குவதும் இச்சமூகமே! சமூகத்தில் ஒரு மாற்றம் கட்டாயம் பூக்கட்டும்!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
  http://thalirssb.blogspot.in/2012/08/180.html
  பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.கட்டாயம் அதுவரை பேசுவேன்.மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 23. //இங்கும் ஒரு பெண்மை இருந்தது.இப்போதும் இறந்து கொண்டே இருக்கிறது.வாருங்கள் சொந்தங்களே!பெண்ணியம் பேசப்பட வேண்டுமென்றால் சில இருட்டுகளும் வெளிச்சப்படவேண்டும்.//
  நிச்சயமாக!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா மிக்க நன்றி தங்களின் வருகைக்கும்; கருத்திற்குமாய்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 24. நெருடலான ஒன்றை டீசண்ட்டா சொல்லி இருக்கீங்க! பெண்கள் இம்மாதிரியான விசயங்களைத் த்யக்கமில்லாமல் எழுத முன்வர வேண்டும்! வாருங்க! பயனிப்போம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!தங்களைச்சந்திக்கக்கிடைத்தது மிக்கமகிழ்ச்சியே!

   மனதிற்கு மகிழ்வாயிருக்கிறது.இந்த விதைகளெல்லாம் சேர்ந்து பெரிதாய் எழும் சொந்தமே!அன்று பெண்ணியம் சாதிக்கும்!நம் எழுத்துக்களும் கூட!

   மீண்டும் சந்திப்போம் சொந்தமே!

   Delete
  2. தங்கள் தளத்தையும் பதிவுகளையும் அடையமுடியவில்லை...:(

   Delete
 25. ஆகா கொஞ்சம் அசந்து தூக்கிட்டேன் அதுக்குள்ள என் மனசில இருந்த சந்தேகங்களே அப்படியே கேட்டுப்புட்டாங்க பாவிப் பயலுகள் இனி எனக்கு என்ன இருக்கிறது கேட்பதற்கு என்றால் .......... இருக்கிறது என்றுதான் சொல்லுவேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ்...நீங்க ஒரு ஆள் தான் இன்னும் வரலயேன்னு பாத்தன்.சொல்லுங்கப்பா சொல்லுங்கோ....காலேல பேஸ்பக்கில பார்த்த முதல் விடயம் உங்க கருத்து தான்.ஏம்பா????ஃ

   Delete
 26. இப்போ உங்கள் பதிவில நீங்கள் பெண்விடுதலி பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அது நல்லதொரு விடயம் அதில் விலைமாதர்களின் உள்வாங்குதல் சிறப்பு மிக்கது....

  ஆனால் எனக்கு தோன்றுகிறது இங்கு விலைமாதர்கள் யாராலும் எவராலும் கேளி பண்ணப்பட்டதாகவோ அல்லது அவர்கள் உரிமைகள் சரியாக வழங்கப்படாமலோ இருந்ததில்லை என தோன்றுகிறது.......

  விலை மாதர்கள் யார் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும் ஒரு சில கிராமத்துப் புற விலைமாதர்கள் மட்டுமே பெரும்பாலானவர்களால் சரியான முறையில் உரிமை வழங்கப் படாமல் இருக்கின்றனர் இவர்களின் சதவீதம் மொத்த விலை மாதர்களிலும் மிகக் குறைந்ததே.....

  இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் தோன்றும் பல நடிகைகள் இன்று விபச்சாரத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர் இவர்களுக்கு சமூகம் எந்த விதமான வேற்று நோக்குதல்களையும் வழங்குவதில்லை மாறாக அவர்களை கடைத் திறப்புவிழா இன்னும் பல நிகழ்வுகளுக்கு அழைத்து கௌரவிக்கின்றனர் இவ்விடத்தில் விலைமாதர் தொடர்பான உங்கள் கூற்றுக்கள் அனைத்தும் பொய்ப்பிக்கப் படுகின்றன..

  இன்னும் மேலைத்தேய நாடுகளை நோக்கும் போது அங்கு முறையற்ற உறவு முறையை எவ்வாறு முறையாக செய்வது என்பது தொடர்பான விழிப்புணர்வுகள் மற்றும் பாடத்திட்டங்களும் உள்ளன...இவற்றினை பிரயோகிக்கும் பெண்களும் விலை மாதர்களே சொற்ப பணத்துக்கோ அல்லது சொற்ப இன்பத்துக்கோ ஆனால் இவர்களை அச் சமூகம் வேறுவிதமாக நோக்குவது கிடையாது...

  இன்று இணையத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டும் பொழுதுகளை இன்பமாக கழிப்பதற்கான துணைகளையும் தேர்ந்தெடுத்து பணம் சம்பாதிக்கும் விலை மாதர்களும் இருக்கின்றார்கள் இவர்களை சமூகம் வேறு விதமாக நோக்குவதில்லை

  பிரபல பாடகிகள் பலர் விலைமாதர்களாக இருக்கிரார்கள் இவர்களைக் கூட சமூகம் கௌரவிக்கின்றது......

  இன்னும் சொல்லலாம் ஆகவே பெண் விடுதலை என்று கூறுவதை விட கிராமத்து விலை மாதர்களின் விடுதலை என்று சொல்லுவது பொருத்தமானதாக விருக்கும் ஏதோ உள்ளத்தில் தோன்றியது இங்கே கொட்டிவிட்டேன் அவ்வளவுதான்

  ReplyDelete
  Replies

  1. இன்னும் சொல்லலாம் ஆகவே பெண் விடுதலை என்று கூறுவதை விட கிராமத்து விலை மாதர்களின் விடுதலை என்று சொல்லுவது பொருத்தமானதாக விருக்கும் ஏதோ உள்ளத்தில் தோன்றியது இங்கே கொட்டிவிட்டேன் அவ்வளவுதான்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

   நண்பா மறுபடியும் சொல்கிறென்.நான் பேச வந்தத விலைமாதர்பற்றியது மடடுமல்ல.நான் கொண்ட சிந்தனை விசாலமானது.பெண்விடுதலை.அந்த பெண்விடுதலையில் இவப்களும் உள்ளடக்கப்பட்வேண்டும் என்பதே!!!!

   விலைமாதர்களை விலைமாதர்கள் என்ற அடையாளத்துடன் கௌரவிக்கும்படி நான் கேட்கவில்லை.அவர்கள் மற்றொரு புறம்பான சமுகமாக இருக்கிறார்கள்.அவர்களை தனிப்பட அங்கீகரிக்கிறார்கள்.நான் அதைக்கேட்கவில்லை நண்பா.அவர்களையும் பெண்களாக அங்கீகரிக்கவேண்டும்.அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டுமட.அந்த நம்பிக்கை ஆதாரத்தோடு மறுவாழ்வை அவர்களுக்கு வழங்கவேண்டும்.உரு புறம்பான சமகமாக நோக்காமல் எம்மில் ஒருவராக நோக்கும் போது தான் அவர்களும் தம் நிலையிலிருந்து வெளியே வருவார்கள்.இங்கு தாமாக விரும்பி உடல; சுகத்திற்காக பாரியல்தொழிலாழிகளாகி போனவர்களைபற்றி நான் பேசவில்லை.முன்பு ஒப்பக்கொண்டது போல அதை நான் பதிவில் மேற்கோளிடாதது என் தவறே!

   நடிகைகள் உட்பட விரும்பியெ விலைமாதர் ஆனவர்களின் கதை வேறு.நான் அதைபற்றி பேசவில்லை.
   இப்பெண்களை கேலிசெய்வதாக நான் கூறவில்லை.புறம்புபடுத்தி மற்றொரு சமுகாகி வைப்பதையே நொந்துகொள்கிறேன்.


   ஆக,குடும்பநிலை மற்றும் ஏமாற்றுதல் காரணமாக வசப்பட்டு இத்தொழிலில் சிக்கிக்கொண்டவர்கள் பற்றியும்,அவர்களுக்கான பெண்விடுதலையின் இணைப்புப் பற்றியுமே பேசுகிறேன்.

   பெண்விடுகலை,பெண்உரிமை என்ற பேச்சுக்களில் விலைமாதர்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்கிறேன்.

   பதிவுலகு என்னை இதுமுதல் புறக்கணித்தாலும்,நான் தனியெயாவது பேசுவேன் நண்பா!


   மிக்க நன்றி சிட்டுக்குருவி.சந்திப்போம் அன்பின் சொந்தமே!

   பெருநாள் வாழ்த்துக்கள்.இந்நாள் இனிய நாளாக அமையட்டும்.

   Delete
  2. இவ்விடத்தில் விலைமாதர் தொடர்பான உங்கள் கூற்றுக்கள் அனைத்தும் பொய்ப்பிக்கப் படுகின்றன..ஃஃஃஃ

   இதை ஒருபோதும் ஏற்கமாட்டேன் நண்பா.ஆரோக்கியமான தங்கள் விவாதங்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.ஆனால் என் பொருள் முற்றிலும் பொய்த்துவிடாத சொந்தமே!நெருடல் இருப்பின் பொறுத்தருள்ளக...!
   :)

   Delete
 27. mika visaalamaaka sollideenga...

  innilaikku saththiyamaaka samooka amaippe kaaranam...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!புரிதலுக்க மிகவே நன்றி சந்திப்போம் சொந்தமே!

   Delete
 28. விலைமாதர் தொடர்பான அனைத்துக் கருத்துக்களும் இவ்விடத்தில் பொய்ப்பிக்கின்ரன என்று நான் கூறவில்லை அதற்கு முன் சில விடயங்களை சுட்டிக் காட்டி அவைகளால் தான் உங்கள் கூற்றுக்கள் பொய்ப்பிக்கப் படிகின்றன என்று கூறினேனே தவிர உங்கள் சிந்தனைக்கு நான் எதிர்ப்புச் சொல்லவைல்லை........:)

  மேலும் நீங்கள் கொண்டுள்ள தைரியத்திலும் எனக்கு சந்தோசமே மறுபடியும் நான் சொல்கிறேன் இதைத்தான் பெண்ணுரினை ,பெண் விடுதலைகளில் இவர்களின் பங்குக்காக போராடுவது என்பது என்னைப் பொருத்தவறையில் அதிகப் படியான ஒன்றுதான்

  மறுபடியும் சொல்கிறேன் நீங்கள் இனங்காட்டும் விலைமாதர்கள் இவ்வுலகில் மிகச் சொற்பமே அனைத்து ஏறாளமான விலைமாதர்கள் இங்கு கௌரவமாகத்தான் இருக்கிறார்கள் ....கிராமத்து மற்றும் ஒரு சில அவசர நகரங்களில் அடிமைத்தனமாக பயன்படுத்தப்ப்படும் ஒரு சிலரைத் தவிர.......

  இவர்களை அடையாளம் காணும் போது காவல்துறையே அதற்கான நிவாரணத்தை வழங்கி அவர்களை மீட்டு அவர்களுக்கு புதுவாழ்வளிக்க முயற்சிக்கிறது. சிலர் இச் செயற்பாட்டினால் திருந்துகின்றனர் இன்னும் சிலர் திரும்பவும் பழைய நிலைமைக்கே செல்கின்றனர்....

  பழைய நிலைமைக்கு செல்பவர்களைப் பற்றி நாம் என்ன கூறுவது அவர்கள் அத் துறையில் கொண்ட பற்றுதலினால் திரும்புகிறார்கள் என்றால் அவர்கள் விருப்பி அதை ஏற்றுக் கொள்கிறார்கள் அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் சமூகத்தில் அவர்கள் நிலையை அறியாமலில்லை சமூகம் அவர்களுக்கு என்ன அங்கீகாரம் கொடுக்கிறது என்பதையும் அறிந்துதான் செல்கின்றார்கள் விரும்பிச் சென்ற அவர்களை மறுபடியும் திருப்புவது அல்லது இவர்களுக்கான உரிமைக்கு போராடுவது என்பது வேலையில்லாதவர்களின் வேலையே தவிற வேறில்லை........

  ReplyDelete
  Replies
  1. அறிந்துதான் செல்கின்றார்கள் விரும்பிச் சென்ற அவர்களை மறுபடியும் திருப்புவது அல்லது இவர்களுக்கான உரிமைக்கு போராடுவது என்பது வேலையில்லாதவர்களின் வேலையே தவிற வேறில்லை........///
   இதை ஒத்துக்கொள்கிறேன் சொந்தமே!மிக்க நன்றி.தங்கள் கருத்துக்களையும் மதிக்கிறேன்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 29. உண்மையில் நீங்கள் எடுத்துள்ள சிக்கல் கள் கனமான தன்மை கொண்டவை சிறப்புகளும் சிறகொடிப்புகளும் உண்டு இடுகை சிறப்பு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 30. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 31. thank u very much dear.also wishing you yoo my dr

  ReplyDelete
 32. வணக்கம் அதிசயா அவர்களே/தீர்ந்து போன வாழ்க்கையை ஏதாவது ஊரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து வாழ்ந்து பார்த்து விட வேண்டும் என பிடிவாததுடன் இயங்குகிற விலை மாதுக்களைப்பற்றி நாகரீகமாக நம்து சமூகத்தில் நிலவுகிற கருத்துக்கள் கொஞ்சமே.பதிவுகளும் கொஞ்சமே/அவர்களின் உண்மை நிலை வேறு.வாழகதியற்றவர்கள்கைக்கொண்டுள்ள பிழைப்புத்தொழிலில் இதுவும் ஒன்றாக/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விமலன் அண்ணா!அவர்களை வாழ்விக்க முயலாவிட்டாலும் பறவாயில்லை.நாகரீகமாக சிந்தனையையாவது பேணலாம் இல்லயா???

   இந்நிலை மாறவேண்டும்.மனங்களில் கொஞ்சமாவது ஈரம் வேண்டும்.மிக்க நன்றி சொந்தமே வருகைக்கு.இப்படி சிலரை சந்திக்கையில் ஏதோ கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.ஒரு நாள் விலக்கப்பட்ட விலைமாதுகளும் பெண்களாக மனிதர்களாக மனது உள்ளவர்களாக மதிக்கப்படுவார்கள்.இன்னும் பேசுவோம் அவர்களுக்காய்!

   Delete
 33. அவர்களின் கண்ணீரை மறைக்கவே அவர்கள் பூசுகிற அரிதாரம் உதவுகிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சொந்தமே!

   Delete
 34. நான் பிறகு வருகிறேன் அதிசயா.

  ReplyDelete
 35. வணக்கம் அருணா அக்கா!நிதானமாக வாங்கோ.பேசலாம்.!

  ReplyDelete
 36. இந்த 73 பின்னூட்டங்களுக்கும் மேலாக நான் என்னத்தை போட்டு கிழித்துவிடப்போகிறேன்? உங்களது இந்தபதிவு தொடர்பில் சில இடங்களில் எனக்கு ஒத்த மனமும் , சில இடங்களில் பிறழ்வான எண்ணங்களும் உண்டு. ஆனாலும் இட்டத்தட்ட அனைத்துமே மேலே விவாதிக்கப்பட்டிருப்பதால் நான் ஜகா வாங்குகிறேன். நீங்க வேற களச்சுப்போய் காப்பி எல்லாம் கேட்டிருக்கீங்க/..... ஹி..ஹி..ஹி... சந்திக்கலாம்!

  ReplyDelete
 37. வாங்க நண்பா.வணக்கம்.என்ன ஒரு நல்ல மனசு.கடைசிவர யாரும் கோப்பியே தரலப்பா!சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
 38. //நான் கொண்ட சிந்தனை விசாலமானது.பெண்விடுதலை.//

  தாங்கள் கொண்ட விசாலமான பெண்விடுதலை சிந்தனை என்ன? பெண்விடுதலை என்று எதை குறிப்பிடுகின்றீர்கள்

  ReplyDelete
 39. இவ்வாறான ஒரு பகிர்வுக்கு நன்றி. சிகரம் பாரதி மூலமாக தங்களின் இப்பதிவைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...