Friday, July 6, 2012

ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்.

சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசம் நிறைந்த அன்பான வணக்கங்கள்.
உங்களின் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகளை விடையாக்கி சேமங்களிற்காக இறைவனை வேண்டி நிற்கிறேன்.

வாருங்கள் பதிவிற்குள் போவோம்.

ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்!!!


நீண்ட நேரங்களாய் விசைப்பலகை மீது விரல் பரப்பி இந்த விடயம் பற்றிப்பேசுவது சரியா என என்னையே கேட்டு வேண்டாம் விட்டுவிடுவோம் என விலகிய பின்னும்,நீண்ட காலமாய் என்னுள்நிரவி நிரவி மேலிட்ட இந்த உணர்வு குழப்பத்திற்கு முற்றிட விரும்பியதால் இதைப் பேசத்துணிந்தேன்.

வாழ்க்கையின் பருவங்களின் லேசாக நரை விழத்தொடங்கும் ஐம்பது வயதின் இரு எல்லைகளிறடகும் இடை நின்று,இப்பதிவு இடப்படுகிறது.இங்கு பேசப்படும் விடயங்கள் பெரும்பாலும் ஆணினம் சார்ந்ததாக அவர்களை சாடுவதா அமையலாம்.இருப்பினும் இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்பது என் கருத்தல்ல.பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறது.

நாற்பதுகளை மெதுவாகக்கடக்கத்தொடங்கும் பருவங்களிலிருந்து ஐம்பதுதுகளின் நடத்தல்களில் தான் இப் பிறழ்வுகளை கேட்டதுண்டு.களைக்க களைக்க கற்று,இழைக்க இழைக்க ஓடி,நுரைக்க நுரைக்க காதல் செய்து இளமை நகர்கிறது..சில பொழுதில் முரண்டு பிடித்து
சில தருணங்களில் இயல்பாய் வளைந்து கொடுத்து,சில சமயங்களில் ஆக்ரோஷங்களுக்கு அடங்கி இப்படி பல விதமாய் இல்லறமோ துறவறமோ இரண்டில் ஒன்றிற்று ஊடாக எம்மைத்திருப்பிக்கொள்கிறோம்.இங்கு துறவு பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.
இல்லற இணைவின் முலமிடல் கூட ஒரு வகையில் ஒப்பந்தமே.இதற்குள் தம்மை கட்டுப்படுத்தி,தங்கள் வாழ்வின் நகர்தலின் வெளிப்பாடாக,வாழ்தலின் அர்த்மாக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள்.

அதன் பின் வாழ்கையின் பின்னே ஓடியே ஆக வேண்டும்.இந்த ஓடுதல்கள் விறுவிறுப்பாயும்,விரைவாயும் ஆரம்பித்து இலக்குகள் விரட்டிப்பிடிக்கப்படுகின்றன்.
மெதுவாக நாற்பதுகளின் இறுதியில் அடைவோ அழிவோ இரண்டில் ஒரு முடிவிற்கான அடித்தளம் சிறப்பாகவே இடப்பட்டிருக்கும்.

ஐம்பதுகளில் நுழைந்ததும் ஒரு அமைதி தேவைப்படுகிறது.வெயில் மீது நடந்த பின்னர் நிழல் மீது தோன்றுமே ஒரு நெருக்கம் அது போலத்தான்.இங்கு தான் சட்டென நுழைந்து கொள்கிறது இன்னொரு நேசம்.இது தோன்ற நீண்ட நாள் அறிமுகம் அவசியப்படுவதாய் தெரியவில்லை.வர்க்க வேறுபாடு மறந்து,தராதரங்கள் தாண்டி,வயதுகளை கூட மறந்து இது விரைவாய் தொற்றிக்கொள்கிறது.இதை காதல் என்று மேற்கோளிட மனம் ஏனோ ஒப்பவில்லை.இந்த நேசங்கள் விலக்கப்பட வேண்டியவை...இது தவறானது என வாதிடவில்லை.ஆனால் இந்த நெருக்கங்களில் ஏற்படும் வரம்பு மீறுதல்கள் தான் அருவருப்பிற்குரியது.கண்டிக்கப்படவேண்டியது.

நான் கற்றவற்றின் அடிப்படையில் இந்த 50 வயதுகளின் சாயலும் நடத்துகைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவே மாறுபட்டது.உடலியல் ரீதியாக பெண் பல மாறுதல்களுக்கு முகம் கொடுக்கும்படி இயற்கையால் நிர்பந்திக்கப்படுகிறாள்.இதன் விளைவாக இயல்பான ஒரு மனச்சோர்வு, விரக்தி உடல் நோய்களுடன் கூடவே பலவீனமும் தொற்றிககொள்கின்றன.ஆனால் ஆண்கள் அத்தன்மையை அடைய மிக நீண்ட நாள் செல்லும்.இது அறியப்பட்ட போதும் புரிதல்கள் தம்பதிகளிடம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.பெண்களுக்கு மனோரீதியாக பெரியதொரு ஆதரவும் பலப்படுத்தலும் இப்போது தான் தேவைப்படுகிறது.அதுவும் தம் துணையிடமிருந்து கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

நிலைமையோ பல சமயங்களில் சதிசெய்து சிரிக்கிறது.ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்.அதிலும் வேதனை எதுவென்றால் இளவயதுப்பெண்கள் தான் பெரும்பாலும் இம்முறைகேட்டிற்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.திருமண வயதை அடைந்த பிள்ளைகளை தம் வீட்டில் வைத்தபடி இத்தகைய தந்தையர் ,ஆண்கள் சபலப்பட்டுகிறார்கள்.

வாழ்க்கை,வழுக்கை,வருத்தம் இத்தனையையுமே ரசித்து ,திருமணம் என்ற பந்தத்தின் ஒப்பந்தங்களுக்கு உரம் சேர்க்க வேண்டிய வயதில் இப்படித் திரிவுபட்டு போகும் இவர்களை கண்டால்,கேட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபமும்,முடிந்துவிடாமல் நீளும் கேள்விகளுமான் நான் என்னுள் குழம்பி குழம்பி இறுகியதுண்டு.இத்தனை நாளாய் நிழல் தந்து ,நேசம் பொழிந்த தரு ஒன்று இலை உதிர்கையில்,அருகிருந்து தலை தடவுவது தான் நாகரீகம்.அது தானே மனுஷீகம்.??!!மற்றொரு நிழல் தேடுவது முறையா??ஃபின்னாளில் நிழல் தேடிப்போனவர்களுக்கும் நலிவு,இறப்பு இரண்டுமே தலை தடவ மறுப்பதற்கில்லை.இதை புரிந்தால் போதும்."கவனம்!
இன்னொரு காதல் வரும்
புன்னகை வரை மட்டும் போ...!
புடவை தொடாதே"
-வைரமுத்து-

இது யதார்த்தமான கோரிக்கை.சபலம் கைகுலுக்கி சந்தித்து போகும்.விட்டுவிடுங்கள் போகட்டும்.ஆனால் பல பேர் காதுகள் செவிடுகள் போலல்லாவா வெளிக்காட்டப்படுகின்றன????
ஒவ்வொரு மனிதனுமே சுகம் மட்டும் வாழ்வு என நினைத்தால் அழகான குடும்ப அமைப்புகள் எவ்வாறு நிலைக்கும்??எத்தனை சிறுவர்களின் மனம் கிலேசப்படும்???எத்தனை பேரிற்கு வாழ்தல் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை இழப்புகள் விதை கொள்ளும்????


இட்சியத்தை துரத்தி ஓடியது போதும் என்ற எண்ணம் முளைவிடுகிறதா.???


"சாய்வுநாற்காலியும் சில காகிதங்களும் கை வசம் கொள்ளுங்கள்.
அணில்பிள்ளைக்கு தலைதடவுங்கள்.!
வாழ்கையிடம் சுகம் விசாரியுங்கள்..!
அன்று பார்க்க மறந்த பூக்களிடமாய் மண்டியிடுங்கள்.!
ரசியுங்கள்..!!!
துணையிடமாய் மனம்விட்டு சிரியுங்கள்.!
சின்ன மகளின் செருப்பிற்குள் கால் நுழைத்துப்பாருங்கள்..!
எத்தனை முடிக்குள் முதுமை நுழைந்து விட்டது
முகவரி கேளுங்கள்...!
பகலிடமாய் சிரித்துப்பேசுங்கள்..
நலிவு கூட நவரசமாய் சுகிக்கும்" !!!!!

நான் அதிசயா.சிறியவள் சில சமயங்களில் கடிகாரம் பார்பதிலும் தடுமாறுபவள்.இந்தப் பதிவுலகில் எத்தனையோ கற்றறிந்தவர்கள்,பெரியோர்கள்,புலவர்கள்,அறியப்பட்டவர்கள் என எத்தகையோ பெருந்தகைகள் உள்ளீர்கள்.என் கருத்துகளில் தவறிருப்பின் பொறுத்தருள்க.நெடுநானாய் பூட்டி தைத்த விடயம் ஒன்றை என் அன்பான சொந்தங்களிடம் மனம் திறந்ததில் ஆறுதல்.சொந்தம் என்று வெறுமனே சொல்லின் சுதிக்காய் கூறவில்லை.முகம் தெரிவதில்லையாயினும் மனம் திறந்து தான் சொல்கிறேன்.இப்படி தடம் புரள்பவர்களை கண்டால் தடுக்கப்பாருங்கள்.

அன்புடன்
-அதிசயா-

55 comments:

 1. மிகவும் அருமையான உண்மையான யதார்த்தமான பதிவு.

  இதை எழுத வேண்டும் என்றால் பல கசப்பான அனுபவங்களை நேரில் கண்ணால் பார்த்தோ, பிறர் சொல்லிப் புல்ம்பியதைக் காதால் கேட்டோ, சொந்த சொந்தங்களின் அனுபவங்களினால் பாதிக்கப்பட்டோ, கொதித்தெழுந்து தான் தங்களின் உள்ளக்குமறல்களை இவ்வாறு கொட்டியிருக்க வேண்டும்.

  எப்படி எழுதியிருந்தாலும் இதில் பலவித யோசிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளன.

  //பின்னாளில் நிழல் தேடிப்போனவர்களுக்கும் நலிவு,இறப்பு இரண்டுமே தலை தடவ மறுப்பதற்கில்லை.இதை புரிந்தால் போதும்.//

  அருமையாகவே சொல்லியுள்ளீர்கள்.

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா...!
   ஏதோ ஒரு வகையில் சில சம்பவங்களையும்,பாதிப்புற்றவர்களையும் நேரடியாகச்சந்தித்ததால் தான் ஐயா இதை பதிவிடும் எண்ணம் மேலோங்கியது.

   நன்றி ஐயா தங்களின் .இப்புரிதல்களுக்கும் வாழ்த்துகளிற்கும்.
   மிகவே நன்றி ஐயா!சந்த்திப்போம்.

   Delete
 2. இத்தனை முதிர்சியான ஒரு பதிவை நான் சமீப
  காலங்களில் நான் படித்ததே இல்லை
  அதீத ஜாக்கிரதையில் எழுதாமல் இயல்பாக
  எப்போதும் போல எழுதி இருந்தால்
  இன்னும் மிகச் சிறப்பாக
  இப்பதிவு அமைந்திருக்குமென நினைக்கிறேன்
  தங்கள் ஆதங்கம் தங்கள் கருத்து
  அனைத்தும் மிகச் சரி
  அதிகம் கவனிக்கப் படாமல்
  ஆனால் அதிகம் கவனிக்கப் படவேண்டிய
  பிரச்சனையை மிக அழகாக பதிவாக்கித்
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா..உண்மைதான்..சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க முயன்றேன்.அது தான் அதீத ஜாக்கிரதையாகிப்போனது.
   மிகசே நன்றி ஐயா இந்த ஆழமான அவதானிப்பபுகளிற்காய்.!
   சந்திப்போம் சொந்தமே!

   Delete
 3. இளமைத் துள்ளலோடு இருக்கவே விரும்புபவர்கள் மத்தியில் ஒரு முக்கியமான விடயத்தை கையாண்டு சிரத்தையுடன் பகிர்ந்திருக்கின்றீர்கள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே.....!
   மிகவே நன்றி இந்தப்பாராடட்டுதல்களுக்கு...!
   சந்திப்போம் சொந்தமே..!

   Delete
 4. // இப்படி தடம் புரள்பவர்களை கண்டால் தடுக்கப்பாருங்கள்.//

  மனம் ஒரு குரங்கு தான் எப்போது எந்த நேரத்தில் எந்த மரம் தாவும் என்றும் தெரியாது. யாரவது ஒருவரிடம் மனம் விட்டுப் பேசினால் பரம் குறையும், ஐம்பது வயதிற்கு மேல் அந்த பக்குவமும் பொய் எரிச்சல் மட்டுமே குடி கொள்ளும் என்றும் நான் படித்தது உண்டு.

  உடம்பிற்கு தளர்ச்சி வரத் தான் செய்யும் அனால் மனதிற்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

  நல்ல பதிவு தோழி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   ஃஃஃஃஃஃஉடம்பிற்கு தளர்ச்சி வரத் தான் செய்யும் அனால் மனதிற்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம்ஃஃஃஃஃஃஃஃ.
   சரியாகச்சொன்னீர்கள்.மனம் இளமையாக இயல்பாக இருந்தால் நலிவுகள் கூட மறைந்துபோகும்.....

   மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே..!

   Delete
 5. ஒரு அற்புதமான பகிர்வு சகோ..ரசித்துப்படித்தேன். அதுவும் அந்த வைரமுத்துவின் குட்டிக்கவிதை.. எவ்வளவு அர்த்தங்கள் சொல்கிறன. அற்புதம் தொடருங்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..!
   நிச்சயமாக...
   வைரமுத்துவிற்கு எத்தனை திறமை??!!!!

   ரசனைக்கும் தங்கள் வருகைக்கும் மிகமிகவே நன்றி..!

   Delete
 6. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 7. நான் என்ன சொல்வது.............
  முன்னமே சொல்லிவிட்டேன் உங்களுடைய பதிவுகளில் முதிர்ச்சி தெரிகிறது என்று...

  இதுவும் அது போன்ற பதிவுதான்

  நிறைய விடயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பா.....!
   மிக்க நன்றிப்பா..!சந்திப்போம் சொந்தமே..!

   Delete
 8. ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்......:(

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம்:(
   அண்ணே நீங்க பெரியவனானதும் இப்டி மாறிடாதைங்கோ!!1

   Delete
 9. அப்புறமா ஒரு விடயம் சொல்லிக்கிறேன் நீங்கள் பதிவிட்ட இப் பதிவு என்னுடைய டேஷ்போர்ட்டில் தோன்றவில்லை.....

  வேறொருவரின் தளத்தின் மூலம் தான் அறிந்துகொண்டேன் இன்று நீங்கள் பதிவிட்டுள்ளிர்கள் என்பதனை...

  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏதோ சிக்கல் போலும்.இதைக எழுதும் போது எனக்கும் எரழுத்துக்களிற்கான நிறம் தெரிவு செய்யும் பகுதி வரவில்லை...பார்ப்போம்...!

   Delete
 10. அருமையான பதிவொன்றை தந்ததற்காய் தோழிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவில் எழுத்துப் பிழைகள் குறைந்திருந்தாலும் ஆங்காங்கே காணப்படுகின்றன என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். நிற்க, அகவை 22 இல் இருக்கும் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு பதிவாக இதனை கருத்திற் கொள்கிறேன். தாங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே தரமானவைதான் என்ற அடிப்படையில் தைரியமாக, மனதுக்குள் எதனையும் பூட்டி வைக்காமல் எழுதுங்கள். நாங்கள் இருக்கிறோம். தங்கள் மனமும் வாழ்வும் சிறக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..!
   ஒத்துக்கொள்கிறேன்.
   மிகவே நன்றி சொந்தமே இந்த வார்த்தைகளிற்காய்.
   நிச்சயமான உங்களின் துணையோடு துணிந்து எழுதுவேன்..!

   Delete
 11. மிகவும் இயல்பாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துகள்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொந்தமே...!

   Delete
 12. தங்களின் இப் பதிவானது என்னை பொறுத்த மட்டில் தாங்கள் ஆண்களை மட்டும் சாடி எழுதப்பட்டு உள்ளது என நான் கருதுகின்றேன் ஏனனில் தங்களின்

  ""ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்""

  என்கின்ற வரிகள் ஒரு யதார்த்த தன்மை இல்லை என நான் கருதுகின்றேன் ஏனில் ஊசி இடம் கொடுத்தால் மட்டுமே நூல் நுழைய முடியும்.ஆகவே பெண்களின் ஒத்துளைப்பு இன்றி இது இயலாது ஆகவே என் உடைய கருத்து என்னவெனில் தங்களின் இப்பதிவு ஆனது ஆண்களை தவறாக செல்ல வைக்கும் பெண்களை சாடி அமைந்து இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. இங்கு பேசப்படும் விடயங்கள் பெரும்பாலும் ஆணினம் சார்ந்ததாக அவர்களை சாடுவதா அமையலாம்.இருப்பினும் இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்பது என் கருத்தல்ல.பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறதுஃஃஃஃஃஃஃஃஃஃ

   பெண்கள் தான் பெரும்பாலும் இம்முறைகேட்டிற்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

   வணக்கம் சொந்தமே...!
   சரிஉங்கள் வருத்துக்களை அன்போடு வரவேற்கிற்கிறேன்.
   ஆனால் என்னால் இயன்ற வரை என்பக்கக்கருத்திற்கான விளக்கமளிப்புக்களை என் பதிவில் இட்டுள்ளேன்.
   இது என் கருத்து மட்டுமே.நான் கண்டவற்றை மட்டுமே பதிவிட்டேன்.
   அத்தோடு பெரும்பான்மை சம்பவங்களை இவ்வாறு தான் கேட்டதுண்டு.மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே..!

   Delete
  2. இது உங்கள் கருத்து என்பதில் எவ்வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை ஆனால் தாங்கள்

   ""பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறது""

   என்று மேலே கூறிவிட்டு பின்

   ""பெரும்பான்மை சம்பவங்களை இவ்வாறு தான் கேட்டதுண்டு""

   என்று கூறுவது முரண்பாடான நடுநிலை அற்றதாக காணப்படுகின்றது என்பது என் கருத்து

   Delete
  3. னக்கு இரண்டிலும் முரண்பாடு எதுவும் தெரியவில்லை சொந்தமே..!

   Delete
 13. ஃஃஃஃவெயில் மீது நடந்த பின்னர் நிழல் மீது தோன்றுமே ஒரு நெருக்கம் அது போலத்தான்.ஃஃஃஃஃ

  பதிவின் நோக்கமும் ஆழமும் தெளிவுபட புரிகிறது சகோதரி... முன்னைய காலங்களில் திருமண வயதெல்லைகள் விதிக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணம், அத்துடன கூட்டுக் குடும்பத்தை ஆதரித்தமையும் இவை போன்றனவற்றை தடுக்கும் ஏதுவாகவே ஆக்கப்பட்டிருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சுதா அண்ணா..!
   திருமண வயதெல்லை பற்றிய தங்கள் கருத்து சரியானது..ஆனால் இன்று சட்டமாற்றங்களால் வயதெல்லை இன்று மாற்றம் கண்ணடதன் விளைவு கூட திருமண பந்தத்தில் சலிப்பு உண்டாக காரணமாகின்றன..
   நன்றி அண்ணா...!சந்திப்போம்.

   Delete
 14. மனதை இளமையாக வைச்சிருந்தா ஐம்பதுகளில் தோன்றும் இந்தப் பிரச்னைகளும் வைரமுத்து சொல்லியிருப்பது போல புன்னகை வரை சென்று புடவை தொடாத பக்குவமும் வரும்னு எனக்கு தோணுது. நீங்க பயன்படுத்தியிருக்கற மனுஷிகம் என்ற புதிய வார்த்தைப் பிரயோகத்தை ரொம்பவே ரசித்தேன். உங்க எழுத்துக்களால என்னை அதிசயப்பட வைக்கறீங்க அதிசயா... (நீல்லாம் எத்தனை வருஷம் கழிச்சு இப்படி எழுதுவியோடி நிரூ?)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சொந்தமே..!சரியாகப்புரிந்து கொண்டீர்கள்.மனம் தான் மனம் தான் எல்லாம்.சில பக்கங்கள் திரும்பாதிருப்பது திறமை அல்ல.திரும்பிய பின்னும் அதற்குள் நுழையாதிருப்பது தான் பக்குவம்.

   (நீரு நீங்க நல்லாவே எழுதுறீங்கம்மா...!!!)

   Delete
 15. முதுமை. கத்தியில் நடக்கும் பருவமும் தான்.
  இத்தனை வருட வாழ்வின் அறுவடையாக ஒருவரை ஒருவர் ஆதரித்து மதித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை உருவாக வேண்டும். அந்த மனம் தடவல் இருந்தால் இப்படியான வழுக்கும் நிலை உருவாகாது.
  பிறர் ஒருவர் எதையாவது மதித்து ஏற்றுக் கொள்ளும் போது மனம் வழுகும்.
  இப்படிப் பல உண்டு.நல்ல பதிவு அதிசயா.
  தங்கள் நியாயமான கோபம் புரிகிறது. இதை எழுதியதில் தவறே இல்லை.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் செபந்தமே..!தங்களில் வயது,அனுபவம்; இரண்டுமே தங்கள் பின்னூட்டலில் புரிகிறது.நன்றி சொந்தமே..!
   மிகவே நன்றி.சந்திப்போம்.

   Delete
 16. அன்புத் தங்கை அதிசயா...
  என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..
  அத்தனை முதிர்ச்சியான எழுத்துக்கள் உங்களது...
  பட்டை தீட்டிய வைரமாய் மின்னுகிறது...

  " இரண்டு நாட்களுக்கு முன் என் மகன் பள்ளிக்கு கொண்டு செல்லும்
  புத்தகப் பையை எங்கோ தூக்கி எறிவது போல எறிந்திருந்தான் ...
  எனக்கு சற்று கோபம் ஆனால்... அப்போது நான் கோபத்தை காட்டி
  இருந்தால் ஒன்று அழுதிருப்பான் அல்லது திரும்ப திரும்ப அந்த தவறை
  செய்திருப்பான்...
  எனக்கு ஒன்று தோன்றியது .. அவன் வீட்டுப் பாடம் செய்ய எத்தனிக்கும் சமயம்
  நான் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன் .. அதை பார்த்து அவன் சிரித்தான்..
  நான் சொன்னீன் இது போல இனி இப்படிப் போட்டால் நான் ஊருக்கு போகும்போது
  இப்படி போட்டுக் கொண்டு போய்விடுவேன் என்று...
  அடுத்த நாள் அவன் அதன் சரியான இருப்பிடத்தில் வைப்பதை கண்டேன்"
  முதுமை மட்டுமல்ல சகோதரி வாழ்வின் எந்த ஒரு நிலையிலும்
  நாம் மற்ற நிலைகளை மதிக்கக் கற்றுக்கொண்டால்
  வாழ்வு என்றும் இனிமையே...

  அழகான ஆழ்ந்த சிந்திக்கத் தகுந்த பதிவுக்கு
  என் அன்பான பூங்கொத்து
  பிடித்துக் கொள்ளுங்கள்...

  ReplyDelete
 17. வணக்கம் அண்ணா...!
  மிகமிகவே நன்றி..இந்த வார்த்தைகள் தான் இன்னும் என்னை எழுத வைக்கின்றன..!

  சரியாகச்சொன்னீர்கள்.அருமையான ஒரு செயன்முறை விளக்கம்..இப்படி எல்லா அப்பாக்களும்,பெரியவர்களும் இப்படி சிந்தித்தால் வாழுதல் இலகுபடும்

  நன்றி சொந்தமே இந்த பூங்கொத்து வாழ்த்திற்காய்..!
  மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே..!.

  ReplyDelete
 18. அதிசயாவின் இப்பதிவு அதிசயப்பட வைத்தது.ஒரு கனமான விஷயத்தைக் கவனமாகவும்,விரிவாகவும் அலசியுள்ளீர்கள்,அழகு தமிழில்.
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே....!
   உங்ககளின் ருகையும் வாசிப்பும் எனக்கு மிகவே மகிழ்ச்சி ஐயா..!சந்திப்போம் சொநந்தமே!

   Delete
 19. அதிசயா உன்னுடைய இந்த வயதில் இவ்வளவு அழகு தமிழில் ஆக்ரோஷமாக எழுதியிருப்பது பார்க்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...(ஒருபுறம் வருத்தமாகவும்) ஆமாம் உண்மையான கருத்து மனம் தான் எல்லாத்திற்கும் காரணம்... வைரமுத்துவின் வரிகளை இங்கு சுட்டி காட்டியது மிகவு அருமை அதிசயா..

  ReplyDelete
 20. வணக்கம் சொந்தமே.இத்துணை உரிமை எடுத்துப்பாராட்டியிருப்பது மிகவே பிடித்திருக்கிறது.!!!!
  வருத்தம் தான் இந்த இயல்பு மனிதனுக்கே ஒரு வருத்தம் தானே சொந்தமே..!:)
  சந்திப்போம்!

  ReplyDelete
 21. ஆழமான விடயம் மனதின் ஆழம் வரை அலசி பார்க்க வைக்கிறது .............மனிதர்கள் மனம் எப்பவும் மாற்றத்தை ஏற்றுகொள்ளும் அதை நோக்கி பயணிக்கும் குணமுடையதுதான்....... இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை ..............உணவு உடை , பால் இவற்றின் தேவைகள் பூர்த்தியாகாத போது, அல்லது நிறைவுறாத பொது பள்ளம் நோக்கி பாயும் வெள்ளமென மனம் அலைபாய்வது உண்மை ........அதை கட்டுக்குள் கொண்டு வரத்தான் ஆன்மிகம், இறைமை தேடுதலை நம் முன்னோர் வகுத்து வந்தனர் நாற்பதை கடந்ததும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடு பட கற்றுக்கொள்ள வேண்டும் இறைவன் மேல் அன்பு கொள்ளும் பொருட்டு மனதை திசை திருப்பி ஆரோக்கியமான வழியில் நடப்பது .......
  இதை செய்ய தவறுபவர்கள் தவறியவர்களாக கருத படுகிறார்கள் ............அப்படி பட்டவர்களை பார்க்கையில் ஒரு நோயாளியை அணுகுவது போல அணுகுங்கள் அல்லது விலகுங்கள் அப்போது மனம் அருவெறுக்க தக்க ஒன்றை மிதித்தது போல முகம் சுளிக்காது ...........................நாம் நம்மை மாற்ற முன் வருவோம் முதலில்

  ஏனெனில் உலகை நிச்சயம் ஒரு தோசையை போல திருப்பி போடா இயலாது

  ReplyDelete
 22. வணக்கம் சொந்தமே அருமையாக புரியும்படி சொன்னீ{ர்கள்.....அப்படி பட்டவர்களை பார்க்கையில் ஒரு நோயாளியை அணுகுவது போல அணுகுங்கள் அல்லது விலகுங்கள்ஃஃஃஃஃஃஃ
  மதிக்கிறேன் உங்களின் அணுகுமுறையை.என்னால் பல சமயங்களில் முடியவில்லை...ஆத்திரம் தான் வருகிறதுஃஃஇனி முயல்கிறேன் சொந்தமே..!

  ReplyDelete
 23. //நேசம் பொழிந்த தரு ஒன்று இலை உதிர்கையில்,அருகிருந்து தலை தடவுவது தான் நாகரீகம்.அது தானே மனுஷீகம்.??//

  கொஞ்சம் கவிதை நடை கலந்த எழுத்து உங்கள் பதிவிற்கு அழகு சேர்க்கிறது..

  ReplyDelete
 24. வக்கம் சொந்தமே..!தங்களை சந்திப்பது மிகவே மகிழ்ச்சி.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகமிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete
 25. பொதுவாகவே முதுமைகளில் தேவைப்படுகிற ஆதரவு எல்லாருக்கும் தேவையானதுதானே?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்த!இந்தச்சந்திப்பு மகிழ்ச்சி!
   நிச்சயம் தேவை.தந்தத்துணையையும் ஆதரவையும் அருகில் வைத்துக்கொண்டு வேறிடம் தேட தேவையில்லை என்பதே என் கருத்து.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 26. முதிர்ச்சியான எழுத்து.. மூன்று மாதத்திற்குள் எழுதுவதில் இத்தனை வளச்சியா.. வாழ்த்துக்கள் சகோ.!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சொந்தமே!மிக்க நன்றி.இந்த வழிகாட்டல்கள் ஆலோசனைகள் எல்லாம் இங்கிருந்து பெற்றவையே...!

   Delete
 27. Hi Athisaya ,

  I accept your words !!!

  and Keep on Dear...

  www.southindiafoodrecipes.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொந்தமே!நிச்சயமாக!

   Delete
 28. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் தோழி. இன்றைய பத்திரிக்கைகளை புரட்டும்போது வரும் சில அருவருக்கத்தக்க செய்திகளுக்குரிய காரணத்தை அறிந்துகொண்டேன். ஆனால் இதனையும் நேசத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பாக வகைப்படுத்தமுடியாது. இது ஒரு வக்கிரமான வியாதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!..நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு.னோல் முழுதும் வக்கிரம் அல்ல.சில விரசமற்ற அன்பும் 1000ல் 1 ஆக தோன்றத்தான் செணகிறது:).
   நன்றி சொந்தமே!வருகைக்கும் வாழ்த்திற்கும்.சந்திப்போம்.!

   Delete
 29. எல்லாவித 50 வயதுக் காதல்களை ஒரே தராசில் வைத்துப்பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  மற்றையவர்களின் பாதணிகளை நாம் அணிந்து நடக்காமல் அவை பற்றி விமர்சிப்பது அழகல்ல என்பது எனது கருத்து.

  பேசாப்பொறுளைப் பேசியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!நிச்சயமாய் எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்துப்பார்க்கவில்லை.மேற்சொன்னது போல பொதுமைப்பாடுகளின் அடிப்படையில் நான் கண்டவற்றின் தொகுப்பு தான் இது.வரவேற்கிறேன் உங்கள் மாற்றுக்கருத்தை!!நானும் சில பாதணிகளை அணிந்தவள் என்ற துணிவில் தான் விமர்சித்தேன்.நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 30. யதார்த்தத்தை மிகவும் யதார்த்தமாகக் கூறியமைக்கு நன்றி. சிகரம் பாரதி மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தேன். நன்றி.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...