Wednesday, August 22, 2012

ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!!

கார்காலம் கதவருகில்.
துளித்துளியாய்,
சிலிர்த்துக்கொண்டிருந்தது..,
நினைவு மழை!

குளிரோடிப்போய்
இதமாய் சாய்ந்திருந்தேன்
ஒரு கடலோரத்தில்.!
சூடாய் ஒரு கோப்பை தேநீர்.
அதில் மெதுவாய் மிதந்துகொண்டிருக்கிறது
நம்மிருவருக்குமான பரவசங்கள்...! 


இயல்பாய் உன்னுள் நிறைந்து கொள்கிறேன்.
இடைவெளிகள் ஏதும் இருக்காதவாறு..,
நீ ரட்சகனாகிறாய்..
என் பவீனங்கனை விழுங்கிவிட்டு 
பலங்களை நிரப்பி 
எனக்கு ரட்சகனாகிறாய்.

சுருள்வதும் வளைவதுமாய் 
நகர்ந்துகொள்ளும் புகைபோல்
நானும்
கனதியற்று மிதந்துகொண்டிருக்கிறேன் 
உன் நினைவுப்பெரு வெளியில்.
நீ
விழுது ஒன்றில் வழுக்கிச்செல்கிறாய்
என் நிமிடங்கள் இலாவகமாய்
ஒழுகிக் கொள்கிறது உன்னோடு..!

பின்னிரவில்
வேகமாய் கடந்து செல்லும் ஈரக்காற்றொன்றில்
என் கேசம் கலைக்கிறாய்.
உடனே ஓடி வந்து
நெற்றியில் ஈரமுத்தமொன்று  பதித்துச்செல்கிறாய்.
வசதியாய் விலகிக்கொள்கிறது
நெற்றிக்கேசங்கள் ஒவ்வொன்றும்.!
இப்படித்தான்
ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.!


ஈர்ப்புவிசை காற்றழுத்தம்
 இரண்டையுமே துடைத்தெறிகிறாய்.
உன் வானங்களில் சிறகு கொள்கிறேன்.
நீயும் விஞ்ஞானிதான்."நான்" ஆகிய
பிரபஞ்சத்தை பிறப்பித்த விஞ்ஞானி!

வரும்வழியெல்லாம்
இதோ இப்போது அவதரித்த குட்டித்தேவதைகள்.
அத்தனையுமே பூச்செண்டுகளுடன் நீயனுப்பியதாய்...!
தேவதைகளிடம் ஏது பால் வேற்றுமை??
ஆதலால் நீ-தேவதை
என் ஆண் தேவதை!

 
 மறுபடியும் நீ கனவுக்கரையில்
திரண்டுகொள்கிறாய்.
என் வாசலை நோக்கித்தான் வருகிறாய்.
நான் தயாராகிறேன்.
மற்றொரு கோப்பை தேநீருடன்...!

இப்படியாய் தொடரட்டும்
என் தேநீர்பொழுதுகள்.

ஒருமுறை வரம் தா
உன் கோப்பைகளில்
நான் மழையாகிட!!!நேசங்களுடன்
-அதிசயா-


70 comments:

 1. /// இப்படியாய் தொடரட்டும்
  என் தேநீர்பொழுதுகள். ///

  நல்ல வரிகள் தொடரட்டும்...

  வாழ்த்துக்கள்... சகோ... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!தங்கள் மிகச்சூடான முதல் வருகைக்கு முதலில் நன்றிகள் சொந்தமே!!

   மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்காய் சந்திப்போம் அன்புச்சொந்தமே!

   Delete
 2. தேனீர்ப்பொழுதுகள் மனதைக்குடைகின்றது அருமை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி நேசண்ணா!சந்திப்போம்.

   Delete
 3. ஆஹா அழகான கவிதை...இதை நான் சொல்லனும் என்று அவசியமும் இல்லை ஏனெனில் கவிதைதான் உங்களுக்கு வழமையாச்சே...
  அழகு

  ReplyDelete
  Replies
  1. சிட்டுக்குருவிக்கு அதிசயாவின் வணக்கங்கள்.
   முன்னய பதிவுக்கு நடந்தது போல கதில் பதிவே போட்ருவீங்களோன்னு பாத்தன்.மிக்க நன்றி குருவியாரே!

   Delete
 4. வரும்வழியெல்லாம்
  இதோ இப்போது அவதரித்த குட்டித்தேவதைகள்.
  அத்தனையுமே பூச்செண்டுகளுடன் நீயனுப்பியதாய்...!
  தேவதைகளிடம் ஏது பால் வேற்றுமை??
  ஆதலால் நீ-தேவதை
  என் ஆண் தேவதை!
  //////////////////

  அழகான கற்பனை அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. :)
   மிக்க நன்றி,சந்திப்போம் சொந்தமே!!!

   Delete
 5. கவிதையில் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது (TM 2)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.தங்கள் தவறாத பின்னூட்டம் மனதிற்கு இதம்.மிக்க நன்றி சொந்தமே!தொடர்ந்தும் சந்திப்போம்.

   Delete
 6. ''...உன் வானங்களில் சிறகு கொள்கிறேன்.
  நீயும் விஞ்ஞானிதான்."நான்" ஆகிய
  பிரபஞ்சத்தை பிறப்பித்த விஞ்ஞானி!...
  ஒருமுறை வரம் தா
  உன் கோப்பைகளில்
  நான் மழையாகிட!!!....
  பிடித்த வரிகள் . மிக மிக நன்று.
  காதல் சொட்டுகிறது.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்ம் சொந்தமே!
   மிக்க நன்றி தங்கள் கருத்துரைக்காய்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 7. Replies
  1. நன்றி சிநேகிதியே!

   Delete
 8. ////பின்னிரவில்
  வேகமாய் கடந்து செல்லும் ஈரக்காற்றொன்றில்
  என் கேசம் கலைக்கிறாய்.
  உடனே ஓடி வந்து
  நெற்றியில் ஈரமுத்தமொன்று பதித்துச்செல்கிறாய்.
  வசதியாய் விலகிக்கொள்கிறது
  நெற்றிக்கேசங்கள் ஒவ்வொன்றும்.!
  இப்படித்தான்
  ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.!
  ////
  என்ன ஒரு ரொமாண்டிக்கான வரிகள்.
  ஒரு பையனாக இந்தக் கவிதை என் மனதை வெகுவாக கவர்கின்றது அழகு
  வாழ்த்துக்கள் அதிசயா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!
   நிறைய நான் கனவு.இப்படியாய் ஒரு கவிதை எழுதவேண்டுமென்று.எனக்கு இப்படி எழுத்த அமையாத என நினைத்தேன்.கருத்துரை கண்டதும் பூரிப்பு நண்பா!
   மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 9. ஒரு தேனீர் நினைவுகள்
  என்னமோ செய்கிறது மனதை
  ம்ம்ம் ..அருமை சொந்தமே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!
   மிக்க மகிழ்ச்சி இக்கருத்துரை கண்டதும்.சந்திப்போம்சொந்தமே!

   Delete
 10. உணர்வுகளை எதோ செய்கிறது இக்கவிதை ....
  எனக்கு பிடித்த வரிகள் இதோ ...

  /// ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.! ///

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வணக்கம் !பிடிச்சிருக்கா..!அப்ப நீங்களே வச்சுக்கோங்க..!மிக்க நன்றி சொந்தமே!!!


   எனக்கும் பிடித்திருக்கிறது!!

   Delete
  3. ஐ ஜாலி .. நானே வச்சுக்குறேன் ...:-) :-) :-)

   Delete
 11. ஒரு பின்னூட்டத்தில் அக்கா என்று அழைத்திருந்தீர்கள் ... மிக்க மகிழ்ச்சி ...நானும் தங்களை போல் கல்லூரி மாணவி தான் ... தங்களை விட நான் மூப்பா அல்லது இளையவளா என்று தெரியவில்லை ...!!!

  ReplyDelete
  Replies
  1. ஓ அதுவா.... நேசத்தில சொந்தமே என்று அழைப்பேன்.மரியாதையுடன் அக்கா என்பேன்.தெரியல.நான் அனேகமாக தங்கை தான் தங்களுக்கு.20 வயதுகளை தாண்டியிருந்தால் நான் தங்கையே!

   Delete
  2. ஐ ஐ ... எனக்கு இன்னும் 20 வயதை தாண்டலையே ..!!!

   Delete
 12. ////ஜெயசரஸ்வதி.திAugust 23, 2012 1:29 PM
  ஒரு பின்னூட்டத்தில் அக்கா என்று அழைத்திருந்தீர்கள் ... மிக்க மகிழ்ச்சி ...நானும் தங்களை போல் கல்லூரி மாணவி தான் ... தங்களை விட நான் மூப்பா அல்லது இளையவளா என்று தெரியவில்லை ...!/////

  ஆம் அதிசயா நானும் கேட்கனும் என்று நினைத்தேன் அதிசயா என்று பெயர் சொல்லி அழைக்கின்றேன் நீங்க என்னைவிட மூப்பா இல்லை இளையவரா என்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. அதிசயா என்றே கூப்பிடலாம்.பிரச்சனை இல்ல...!அநேகமாக நீங்கள் தான் பெரியர் என்று நினைக்கிறேன்.இப்ப கேட்டாச்சா....,ஓகேவா??

   Delete
 13. இரண்டு முறை வாசித்தேன் இக்கவிதையை. தென்றலாய் தாலாட்டுகிறது என்னையும் ஒரு கப் தேநீரோடு. அருமை சகோ. வியக்கின்றேன் உங்களின் கவிதை ஆற்றலை. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   சந்தோசமாய் இருக்கிறது!மிக்க நன்றி!சந்திப்போம் சொந்தமே!

   Delete
 14. /சுருள்வதும் வளைவதுமாய்
  நகர்ந்துகொள்ளும் புகைபோல்
  நானும்
  கனதியற்று மிதந்துகொண்டிருக்கிறேன்
  உன் நினைவுப்பெரு வெளியில்./

  அழகு... :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!
   ரசனைக்கு மிகவே நன்றி!சந்திப்போம்.

   Delete
 15. Replies
  1. வணக்கம்.மிக்க நன்றி!சந்திப்போம் சொந்தமே!

   Delete
 16. நல்லதொரு வரிகள்... அருமை... மிகவும் ரசித்து படித்தேன்.. சகோ! வாழ்த்துக்கள்...

  "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
  என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!வாழ்த்திற்காய் மிகவே நன்றி!
   தளம் வருகிறேன்.சந்திப்போம்.!

   Delete
 17. ////ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.//

  இந்த வரிகள் மனதில் என்னமோ செய்கிறது! அதாவது நல்லாயிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. :)

   வணக்கம் சொந்தமே!
   மனதிற்கு மகிழ்ச்சி!அட அதத்தான் சொல்றீங்களா??!!:)
   சந்தோசம்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 18. தேனீரோடு ஒரு கனவுலகில் காதல் உலகில் சஞ்சரித்தமாதிரி...அப்பாடி மழையும் ஒரு கோப்பை தேனீரும்.வரிக்கு வரி அற்புதம்.காதல் மழை ஏந்திய கவிதை அதிசயா !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!! மிக்க நன்றி..தங்களிடம் இவ்வாழ்த்தைக்கேட்டதற்கு மிகவே சந்தோசப்படுகிறேன் சொந்தமே!

   சந்திப்போம்.

   Delete
 19. இப்படியாய் தொடரட்டும்
  என் தேநீர்பொழுதுகள்.
  சொந்தமே அருமை.உங்களின் கற்பனைகள் எல்லைகடக்கின்றன ............பொறாமையாய் இருக்கு அதேநேரம் சந்தோசமாயும் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!நமக்குள்ள என்ன பாஸ்...!சந்தோசமாய் இருக்குது.என்றீங்களே அதுவே எனக்குப்போதும்.சந்தோசம் சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 20. Arumaiyana varam kedduleerkal nichayam kidaikkum

  Vaalthukkal

  ReplyDelete
  Replies
  1. :)
   சந்தோசம் சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 21. எந்த வரிகளைச் சொல்வது அதிசயா. # உன் வானங்களில் சிறகு கொள்கிறேன்.அம்மாடி மன்சு தாளவில்லை எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.நான், உன் தேனீர்ப் பொழுதுகளில் காணாமல் போய்விட்டேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.வாங்க வாங்க...!உரிமையோட வாழ்த்தி இருக்குறீங்க.சந்தோசம்.

   சந்திப்போம்.

   Delete
 22. //பவீனங்கனை//
  //கனதியற்று//

  ஏதும் புது தமிழா?

  //ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.!//

  அட பார்த்தவுடன் கவர்ந்து விட்ட வரிகள்

  //விழுது ஒன்றில் வழுக்கிச்செல்கிறாய்
  என் நிமிடங்கள் இலாவகமாய்
  ஒழுகிக் கொள்கிறது உன்னோடு.//

  உண்மையிலே சூப்பர் சூப்பர் சூப்பர்.. காதல் ரொம்ப வழிகிறது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்க ஹரி...
   அது பலவீனங்கள் நண்பா.தவறிவிட்டது.

   கனதியற்று என்பது பாரமற்ற அல்லது லேசானதை குறிக்கும்.


   நன்றி உங்கள் ரசனைக்கு.
   சந்திப்போம்.

   Delete
  2. அதிசயா இனிமே இந்தப் பையன் வந்தாம்னா சேத்துக்காத... பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருக்கீங்க....

   ஹாரி : //உடனே ஓடி வந்து
   நெற்றியில் ஈரமுத்தமொன்று பதித்துச்செல்கிறாய்.// நோட் தி பாயின்ட்... பிண்னாடி நம்ம கதைக்கு யூஸ் பண்ணிக்கலாம்

   //ஒருமுறை வரம் தா
   உன் கோப்பைகளில்
   நான் மழையாகிட!!!//

   மழை கழுவிய பூக்கள் மழை தா என்று வரம் கேட்கிறது...

   அருமை அதிசயா...

   சத்தியமா உங்கள எதிர்த்து நான் கமென்ட் போடலைங்க.....

   ஹாரி : அகைன் நோட் தி பாயின்ட் ஹி ஹி ஹி

   Delete
  3. வாங்க ராசா வாங்க,என்னடா ஒர்த்தர் வந்துட்டார்.மற்றவர் இவ்வளவுக்கு வந்திருக்கணுமேன்னு பாத்தன்..!
   அண்ணே சீனு அண்ணே முந்தி இருந்தே இப்பிடி தானா????ஊமைக்குசும்பா...

   மிக்க நன்றி..ஹரி,சீனு இரண்டு பேருக்கும் சொந்தமே இனி கட்......!நோட் த பொயிண்ட்.!
   சந்திப்போம் சகோ...!

   Delete
  4. என்ன தான் நடக்குது இங்க? பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா? எங்க அந்த சொம்பு?

   Delete
 23. உடனே ஓடி வந்து
  நெற்றியில் ஈரமுத்தமொன்று பதித்துச்செல்கிறாய்.
  வசதியாய் விலகிக்கொள்கிறது
  நெற்றிக்கேசங்கள் ஒவ்வொன்றும்.!
  இப்படித்தான்
  ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.!


  அருமை...
  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்காய்!சந்திப்போம்.

   Delete
 24. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!வருகைக்கும் கருத்திடலிற்கும் மிகவே நன்றி!சந்திப்போம்.

   Delete
 25. அசத்தலான கவிதை
  சுருள்வதும் வளைவதுமாய்
  நகர்ந்துகொள்ளும் புகைபோல்
  நானும்
  கனதியற்று மிதந்துகொண்டிருக்கிறேன்
  உன் நினைவுப்பெரு வெளியில்.

  ReplyDelete
  Replies
  1. கவிஅழுகனுக்கு மீண்டும் அதிசயாவின் மனம்நிறைந்த நன்றிகள்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 26. ஒவ்வொரு வரிகளும் அருமை!!!.......தொடர
  வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 27. வணக்கம் சொந்தமே!தங்கள் சந்திப்பு மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கு நன்றி சொந்தமே!சந்திப்போம்.

  ReplyDelete
 28. உன் வானங்களில் சிறகு கொள்கிறேன்.

  நினைவு மழை! இனிமை.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 29. வணக்கம் சொந்தமே!!!மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்காய்.சந்திப்போம்.

  ReplyDelete
 30. ///"நான்" ஆகிய
  பிரபஞ்சத்தை பிறப்பித்த விஞ்ஞானி!////

  இங்கு வந்த நானில் துளி கூட கர்வமில்லை.
  அருமையாய் தொட்டு செல்கிறது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சுதாண்ணா!!!மிக்க நன்றி அண்ணா.சந்தோசம'.சந்திப்போம்.

   Delete
 31. அதிசயாவிற்கு அன்பு வணக்கங்கள். சற்றுத் தாமதமாகவே வந்திருக்கிறேன். மன்னிக்க வேண்டும்.
  அருமையான கவிதை. ஒவ்வொரு வரிகளுமே மனதைத் தொட்டுச் செல்கிறது. #தேவதைகளிடம் ஏது பால் வேற்றுமை??
  ஆதலால் நீ-தேவதை
  என் ஆண் தேவதை!#
  #மறுபடியும் நீ கனவுக்கரையில்
  திரண்டுகொள்கிறாய்.
  என் வாசலை நோக்கித்தான் வருகிறாய்.
  நான் தயாராகிறேன்.
  மற்றொரு கோப்பை தேநீருடன்...!

  இப்படியாய் தொடரட்டும்
  என் தேநீர்பொழுதுகள்.

  ஒருமுறை வரம் தா
  உன் கோப்பைகளில்
  நான் மழையாகிட!!!#
  இவை என்னை அதிகமாகக் கவர்ந்த வரிகள்.
  மீண்டுமாய் எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்திட வேண்டுகிறேன். சந்திப்போம் உள்ளமே.
  இன்று என் தளத்தில் -
  வேலைக்கு போறேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!இப்பொழுது தான் ஆறுதலாக படித்திருக்கிறீர்கள் போலும்இதங்கள் தளத்திற்று நாளை வருகிறேன்.இன்று தான் வீடு வந்தேன்.மிக்க நன்றி பாரதி.!

   Delete
 32. ஆண்மையின் மென்மைகளில் என் தாயாகிறாய்.!
  நீயும் விஞ்ஞானிதான்."நான்" ஆகிய
  பிரபஞ்சத்தை பிறப்பித்த விஞ்ஞானி!

  புதிதாய் ஒரு உணர்வு தோன்றுகிறது இந்த கவிதையைப் படிக்கையில்.

  ReplyDelete
 33. வணக்கம் சொந்தமே!!தங்கள் சந்திப்பு மிகவே மகிழ்ச்சி!!வாழ்த்துக்களிற்கு நன்றி சொந்தமே!சந்திப்போம்.

  ReplyDelete
 34. வழமைபோல் அருமை கலக்கிட்டீங்க.

  ReplyDelete
 35. வணக்கம் அதிராக்கா...!மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 36. ஈர்ப்புவிசை காற்றழுத்தம்
  இரண்டையுமே துடைத்தெறிகிறாய்.
  உன் வானங்களில் சிறகு கொள்கிறேன்.
  நீயும் விஞ்ஞானிதான்."நான்" ஆகிய
  பிரபஞ்சத்தை பிறப்பித்த விஞ்ஞானி!
  அருமையிலும் அருமை

  ReplyDelete
 37. வணக்கம் சகோ!தங்களின் சந்திப்பு சந'தோசம்.வாழ்த்திற்கு மிகவே நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...