Friday, August 10, 2012

நாளையும் வருவேன்...!மறுபடியும் வார்ப்பேன்.!

பவ்வியமாய்,பத்திரமாய் வார்த்துக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளை,
சில சமயம் நெருப்புக்களையும்!
மெதுவாய் மெதுமெதுவாய் நிரவிக்கொள்கிறது ஒரு
வெற்றுப்பாத்திரம்.

வியர்த்து இருக்கும் இடைவெளிகளில்
ஒரு மூலையிருந்து மறுமூலைக்குள் 
ஓடிக்கொள்கின்றன  
ஞாபகத்தின் குமிழிப்பிள்ளைகள்!
இம்முறை கண்டிப்பு ஏதுமில்லை.
எங்கு ஒளிந்தாலும் மறுபடியும் என்னிடமாய் தானே திரும்ப வேண்டும்.
கொப்பறைகள் இங்கு என்றால் குமிழிக்கேது பஞ்சம்???
இந்த வீறாப்பில் தான் விட்டுக்கொடுக்கிறேன்!!!!.

மோதுதல் நேராமல் நிமிர்ந்து தான் இருக்கிறேன்.
ஒருக்களிக்கும் இடைவெளிகளில்
 பவ்வியம் தவறக்கூடாது என்பதற்காய்.!


வார்த்துக்கொண்டே இருக்கிறேன்.,
நெஞ்சுக்குழி நிறைந்தே இருக்கிறது...!
இப்படித்தான் தனிமைகளில் ஆரவாரங்கள்
 முளைத்துக்கொள்கின்றன.

அத்தனையும் கண்ணாடிப்பூக்கள் தான்.
 அன்றொருநாள்  இனிப்புக்கள் பூசியதாய் ஞாபகம்.
அப்போது எனக்கு வார்க்கத்தெரியாதாம்..!
காலம் தான் வார்த்ததாய் யாரோ சொன்னார்கள்.
கசப்புகள் தான் மலிவு என்பதால்
அடியில் மட்டும் தான் இனிப்பு பூசியதாம்.

வார்ப்பதை நிறுத்திவிட்டு தேடுகிறேன்.!
நாக்கு ஏதோ சப்புக்கொட்டுகிறது...
அதனால் 
வார்ப்பதையும் நிறுத்திவிட்டு தேடுகிறேன்.!

அடர்த்தியாக கசப்புக்களை தாண்டியும்
ஆழங்களில் தேடுகிறேன் அந்த இனிப்புகளை..!
இன்னுமின்னும் போக வேண்டும்.

இதுவரை பலமுறை வந்தாயிற்று..
கசப்புகள் தொண்டைவரை நிறைந்தாயிற்று,!

ஓடித்திரிந்த பிள்ளை ஒன்று மறுபடியும் ஓரங்களில் எனை
விழுத்தி விடுகிறது.. !
குறும்பு செய்கிறதாய் சிரிக்கிறது!

இப்போதும் நிமிர்ந்து தான் இருக்கிறேன்.
நாளையும் வருவேன்.
மறுபடி வார்ப்பேன்.
நிச்சயம் வெல்வேன்,
அப்போது  இருசொட்டு இனிப்புகள்
என் குறும்புப்பிள்ளைக்காய்.
தேடவைத்து திருகி விடுவது அது தானே........!


                                                                                                                   -அதிசயா-

59 comments:

 1. அருமை அதிசயா.. அசத்திவிட்டீர்கள். கட்டுரைகளை விட கவிதைகளில் தான் உங்களை என்னால் அதிகம் ரசிக்க முடிகிறது. கவிதை எழுதவே பிறந்திருப்பீங்களோ? வாழ்த்துக்கள் உள்ளமே.
  என்னைக் கவர்ந்த வரிகள்:
  #அன்றொருநாள் இனிப்புக்கள் பூசியதாய் ஞாபகம்.
  அப்போது எனக்கு வார்க்கத்தெரியாதாம்..!
  காலம் தான் வார்த்ததாய் யாரோ சொன்னார்கள்.
  கசப்புகள் தான் மலிவு என்பதால்
  அடியில் மட்டும் தான் இனிப்பு பூசியதாம்.#

  உணர்வுகளை என்னமோ பண்ணுகிறது இந்த வரிகள். வாழ்த்துக்கள் உள்ளமே.

  ReplyDelete
  Replies
  1. இனிய காலை வணக்கம் சொந்தமே!!ஒவ்வொருவர் ரசனைகளும் ஒவ்வொரு விதம்....அந்த ஒவ்வொன்றுமே ஒரு அழகு தான்...!மிக்க மகிழ்ச்சி தங்கள் ரசனைக்கு இணங்கும் கவிதை கிடைத்ததில் எனக்கும் சந்தோஷமே!முதல் பின்னூட்டம்.சாதிச்சுட்டீங்க பாஸ்.....!நன்றி.சந்திப்போம் சொந்தமே!!!

   நானும் நேசிக்கும் வரிகள் அவை.

   Delete
  2. படித்ததும் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டார்கள்.

   Delete
  3. இல்லை சகோ, கட்டுரையும் கவிதை நடையில் நன்கு வருகிறது நம்ம அதிஷயாவிற்கு. அது ஒரு பாணி. கவிதைகள் இன்னும் அற்புதம்.. ஆனாலும் விளங்கிக்கொள்ள சற்று கடினமாகவே இருக்கின்றது. பண்பட்ட எழுத்தாளரின் நடை இவரின் எழுத்து.வாழ்த்துகள்.

   Delete
  4. வணக்கம் கோவி அண்ணா..மிக்க நன்றி இக்கருத்திற்காய்.

   Delete
  5. விஐி அக்கா...மிக்க மகிழ்ச்சி..நீங்கள் என் எழுத்துக்களில் கொண்ட அன்பிற்கு நன்றி அக்கா..தங்களின் கருத்தை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.புரியும் படி சொல்கிறேன்.....!

   Delete
 2. நல்ல வரிகள்...

  மிகவும் பிடித்த வரிகள் :

  /// அடர்த்தியாக கசப்புக்களை தாண்டியும்
  ஆழங்களில் தேடுகிறேன் அந்த இனிப்புகளை..!
  இன்னுமின்னும் போக வேண்டும். ///


  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!

   தங்கள் ரசனைக்கும் அன்பான கருத்திற்கும் மிகவே நன்றி.மீண்டும் சந்திப்போம் சொந்தமே!!!

   Delete
 3. உங்கள் சிந்தனைப் பறவை நன்றாகப் பறந்து கவிதையாவது அழகு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!மிக்க மகிழ்ச்சி அக்கா.அப்பிடியே பறந்து உங்க ஊர் பக்கம் வாறேன்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 4. ரொம்பத்தான் யோசிக்கிறீங்களோ....
  அது சரி நமக்குத்தான் வரல்ல என்னுட்டு மத்தவங்களையும் நம்மள மாதிரி சொல்லலாமா....<

  அழகான வரிகளில் வார்த்திருக்கிறீர்கள் மீண்டு மொருமுறை படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சிட்டு!!
   ஏம்பா???ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது ராசா..கவிதையெல்லாம் எழுதி கலக்கிறீங்க பாஸ் நீங்க.


   சீக்கிரமா வாங்க பாஸ்....

   Delete
 5. ரசித்தேன் ஒவ்வொன்றும் அழகு

  ReplyDelete
  Replies
  1. வருது வருது ...விலகு விலகு....!வந்தாச்சா..!!!:)
   மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 6. அப்போது எனக்கு வார்க்கத்தெரியாதாம்..!
  காலம் தான் வார்த்ததாய் யாரோ சொன்னார்கள்.//ம்ம் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் வாசகம் !

  ReplyDelete
  Replies
  1. வணக்ம் சொந்தமே!
   மிக்க நன்றி...இப்படி நேர்தியான ரசிகர்கள் கிடைப்பது பெரு மகிழ்வே!!!!மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 7. பவ்வியமாய்,பத்திரமாய் வார்த்துக் கொண்டிருக்கிறேன்
  நினைவுகளை,
  சில சமயம் நெருப்புக்களையும்!//

  ஆரம்பமே நெருப்பு வார்ப்பா இருக்கே....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ சார்.

   ஆரம்பமே நெருப்பு வார்ப்பா இருக்கே....!///////

   எல்லாமே ஒரு வரவேற்பு தான்.நம்ம ஊர்ல ஆரத்தி தட்ல கற்பூரம் கொழுத்திறது போல......!
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 8. Replies
  1. வணக்கம் சொந்தமே!வருகைக்கும் தொடர் பின்னூட்டத்திற்கும் மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 9. அருமையான படைப்பு
  வார்த்தைகளை பல்லக்குகளாக்கி
  உணர்வுகளை ஊர்வலமாக வரவழைத்திருக்கிறீர்கள்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே.நலமாயிருக்க வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி ஐயா..!சந்தோஷம்.சந்திப்போம் சொந்தமே!

   Delete
 10. மறுபடி வார்ப்பேன்
  நிச்சயம் வெல்வேன் .......
  வாசித்தலின் பின் ஒரு மிடுக்கு வருகிறது தானாகவே,
  ஆழங்களில் தேடுகிறேன் இனிப்புக்களை ...........
  கவியாழத்தில் இனிப்புகளை நானே உண்டுவிட்டேன்.
  வாழ்த்துக்கள் சொந்தமே .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!இந்த மிடுக்கு தான் வாழச்சொல்கிறது என்னையும் என் எழுத்துக்களையும்.நானும் இந்த உறுதிடன் தான் இருக்கிறேன்.எல்வோ◌ார்க்கும் வென்றுபார்க்கும் காலம் கனியும்.

   மிக்;க மகிழ்ச்சி.அப்பிடியே மிட்டாய் காசயும் தந்திட்டு போங்க பாஸ்....!சந்திப்போம் சொந்தமே!

   Delete
 11. வார்த்தைகளில் நன்றாக் விளையாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழி!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!தங்களின் இந்த வருகை மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்களிற்கு நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 12. எல்லோரும் ஆஹா ஓஹோ என்கிறீர்கள். ஆனால், எனக்கு மட்டும் புரியவேயில்லை. :(

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி..!புரியலயா...புரியவைக்கிறேன்.

   ஒவ்வொரு நாளின் ஓய்வு நேரங்களிலும் உட்கார்ந்து
   மெதுமெதுவாய் இறந்த கால நினைவுகளை
   வார்த்து அசைபோடுகிறேன்.
   இப்படி அமைதியாய்
   பாத்திரம் ஒன்றை வார்ப்பதான பவ்வியத்துடன் யோசிக்கிறேன்.

   இடையிடையே சில சில்லறை நினைவுகள்
   அங்குமிங்கும் ஓடிக்கொள்கின்றன.
   அதையும் கணக்கெடுக்காமல் யேபசித்தபடியே தொடர்கிறேன்.

   முன்பு
   சிறுபிள்ளை நான்
   நானாக எதையும் இயக்கவில்லை
   காலம் தானே என்னை அன்று இயக்கிறது

   அந்த நாட்களில் இன்பங்கள் பஞ்சம் என்பதால்
   எனக்காய் காலம்
   செய்த பூக்களில்; எல்லாம்
   கொஞ்சமான் இன்பங்களையும்
   மிச்சமாய் துன்பங்களையும் வைத்துப்போனது.

   ஆனாலும் இன்பம் துய்க்கும் ஆசை இப்போ
   அதீதமாய் எழுகிறது.
   யோசனைகளை விட்டுவிட்டு இன்பங்கள் தேடி
   இன்னும் அதிகமாய்
   ஒற்றை சம்வத்தை மட்டும் தேடுகிறேன்.
   அது தான் அந்த இனிப்பு.

   தேடித்தேடி பலமுறை வந்துவிட்டடேன்.
   சம்பவம் மட்டும் நினைவிற்கு வரவில்லை.

   பக்குவமாய் தேடுகிறேன்.
   மறுபடியும் சில்லறை நினைவு ஒன்று
   என் தேடல் குலைத்துவிட்டு சிரிக்கிறது.

   நாளையும் வருவேன்.
   மறுபடியும் யோசிப்பேன்.
   நிச்சயம் கண்டு கொள்வேன் ஒரு
   இனிப்பான நிகழ்வையேனும்.

   அப்போது சில்லறை சினைவிற்கும்
   சின்னதாய் ஒரு பரிசு கொடுப்பேன்.

   சிதறடித்துப்போய் என் சிந்தனையை
   மேலும் தூணடியதற்காய்....!

   இப்போ சந்தோஷமா சொந்தமே!

   Delete
  2. // எல்லோரும் ஆஹா ஓஹோ என்கிறீர்கள். ஆனால், எனக்கு மட்டும் புரியவேயில்லை. :(// எனக்கும் இதே நிலையே.. உங்கள் கருத்துக்களப் படித்ததும்
   இப்போ சந்தோஷமே சொந்தமே

   Delete
  3. வணக்கம் சொந்தமே!!!இப்ப தான் எனக்கும் சந்தோஷம்.:(இப்பிடி எல்லாம் கவலைப்படாம உரிமையோட சொல்லுங்க."அதிசயா என்னம்மா சொல்ற..ஒழுங்கா சொல்லு" என்று.எத்தனை தரமும் அன்போடு சொல்லுவேன்.நன்றி சொந்தமே!சந்திப்போம்.

   Delete
 13. ////வார்த்துக்கொண்டே இருக்கிறேன்.,
  நெஞ்சுக்குழி நிறைந்தே இருக்கிறது...!
  இப்படித்தான் தனிமைகளில் ஆரவாரங்கள்
  முளைத்துக்கொள்கின்றன.
  ////

  அருமையான வரிகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..
   அன்பான வருகைக்கும்' இந்தக் கருத்திற்கும் மிகமிகவே நன்றி.

   Delete
 14. ஆனால் இந்தக் கவிதையின் சாரம்சம் தெளிவாக புரியவில்லை எதை சுட்டுகின்றீர்கள் என்று

  படிப்பவருக்கு எளிமையாக புரியும் படி இருந்தால் தான் சாதாரன வாசகர்களையும் கவரும் நான் சாமானியன் எனக்கு புரிந்ததை சொன்னேன் தவறு இருப்பின் மன்னிக்கவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.இது தான் என் அம்மாவின் கூற்றும் @கூட.நிச்சயம் கவனமெடுப்பேன்.இந்த வழிகாட்டுதல்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

   Delete
 15. நல்ல நினைவுகள் சந்தனத்தைப் போல நினைக்கும் தோறும் மணக்கும்

  ReplyDelete
 16. வணக்கம் சொந்தமே!!!!உண்மை தான்.மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
 17. அருமை...அப்புறம் உங்க டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது..மழை பொழிகிறது...சும்மா சில்லுனு இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே..தங்கள் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.நானும் அடிக்கடி இநஇ;த மழையை ரசிப்தும் நனைவதும் உண்டு.நன்றி சொந்தமே சந்திப்போம்.

   Delete
 18. தனிமைகளில் ஆரவாரங்கள்
  முளைத்துக்கொள்ளும் கண்ணாடிப்பூக்கள் மனம் கவர்ந்தன.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே....!மிக்க நன்றி.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!!!!

   Delete
 19. நல்ல கவிதை. வாழ்த்துக்கள். குட்டிக் கவிதைகளின் தளம் இது. ஒரு முறை வரலாமே?
  http://skaveetha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!இச்சந்திப்பு மகிழ்ச்சி.நிச்சயம் வருகிறேன்.வாழ்த்துக்களும் நன்றிகளும்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!!!

   Delete
 20. உங்களின் ஒரு பதிவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி எழுதியிருக்கிறேன்.

  நேரம் இருக்கும் போது வந்து படியுங்கள். முகவரி கீழே..

  http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!தங்கள் தளம் வந்தேன்.மிக்க நன்றி சொந்தமே!என் போன்ற சிறிய புதிய பதிவர்களுக்கு தங்கள் போன்றோரின் அறிமுகங்கள் தானே அழகான ஆரம்பம்.எனது அன்பிற்குரிய நண்பர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள்.இட்டைச்சந்தோஷம்.மிக்க நன்றி சொந்தமே!தொடருங்கள்.நன்றிகளுடன் அதிசயா

   Delete
 21. மன்னிக்க வேண்டும் தோழி, நான் உங்களை தொடருவதாக நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் இன்ன்றுதான் தவறவிட்டது தெரிந்தது. இனி தொடருவேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!இப்பிடி மன்னிப்பு கேட்கிறது எல்லாம் சரிவராது.பெரிய தண்டனை ஒன்று காத்திருக்குஃ....:)

   பறவாயில்ல சொந்தமே!இது முதல் சந்திப்போம்.!

   Delete
 22. வாசிச்சு முடிக்க மழை அடித்து ஓய்ந்த ஒரு அமைதி....வேறொன்றும் சொல்ல இல்லை.அத்தனை ஆக்ரோசம்.அதிசயாவுக்குள் இன்னொரு அதிசயா !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஹேமா அக்கா.!மிக்க நன்றி.:)

   மிக்க நன்றி அக்கா.மிக்க சந்தோஷம் இந்த வாழ்த்துக்களால்.சந்திப்போம் அக்கா!

   Delete
 23. அருமையாக உள்ளது தோழி.... ஆனால் அரைமணி நேரம் யோசித்தேன்.... என்னைப் போன்ற பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதுங்கள்... எங்கே எனது இறுதிப் பதிவில் உங்களைக் காணவில்லையே? காத்திருக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!நன்றிங்க.இதை தான் என் அம்மாவும் சொன்னா.

   உண்மையில் மிகவே வருத்தப்படுகிறேன்.இதுமுதல் முயற்சிக்கிறேன் சொந்தமே!
   தொடர்ந்தும் இனிய சொந்தமாக சந்திப்போம்.
   தங்கள் தளப்பதிவை காண இயலவில்லை.தயவு செய்து பதிவின் லிங்கை அனுப்பிவிடுங்கள் சொந்தமே!!

   Delete
 24. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி...!

   Delete
 25. அப்பாடா ஒரு வழியாக கமெண்ட் போடறேன் ...
  நான்கு நாட்களாக வாசித்தேன் ..
  அப்பப்பா அப்டி ஒரு பொறாமை தோன்றியது உங்களின் மேல் ...!!!
  அப்டியே உணர்ச்சிகள ஏதோ செய்தது ... சொல்ல தெரியவில்லை ...!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!அப்பாடா,இப்ப தான் எனக்கும் சந்தோஷம்.எங்கடா நம்ம அக்கா வரேன்னு சொல்லிட்டு போனாங்க.காணவே இல்லன்னு பார்த்தேன்.இப்ப இரட்டிப்பு சந்தோஷம்.மிக்க நன்றி சொந்தமே!பொறாமைபட்டாலும் பறவால்லம்மா....:)சந்திப்போம் சொந்தமே!

   Delete
 26. கசப்புகள் தொண்டைவரை நிறைந்தாயிற்று,!

  காலங்கள் இப்படியே செல்லாது.
  கசப்புகள் அனைத்தும் மருந்தாய் மாறும் காலம்
  வெகு தொலைவில் இல்லை
  அந்தப் போர்க்காலம்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!நம்பிக்கை நிச்சயமாய் வெல்லும் !மிக்க நன்றி.சந்திப்போம்.!

   Delete
 27. Replies
  1. வணக்கம் சொந்தமே!சந்தோஷம்.சந்திப்போம் சொந்தமே!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...