நீ புல்லாங்குழல்...!
என் காற்று மண்டலங்களிலெல்லாம்
கல்யாணியாய் நிறைகிறாய்...!
மூச்சுவிடும் இடைவெளியில் வந்து
ஒக்சிஐனை எல்லாம் விழுங்கிக்கொள்கிறாய்...!
நீ மழைக்குருவி...!
என் தோட்டங்களிலெல்லாம்
பாட வருகிறாய்,
ஏனோ பாடாமலே பறக்கிறாய்...!
காய வைத்தஎன் ஓவியங்களை கண்டவுடனே
மூச்சிரைக்கப்பாடி,
நிறங்களை குடித்துச்சிரிக்கிறாய்...!
நீ மகரந்தச்சிமிழ்...!
சிவப்பாய்,மஞ்சளாய்,வெளிர்பச்சையாய்...,
விதவைகள் வாசலெல்லாம் வெறுமை பூசிவிட்டு
என் தாள்களை மட்டும்
நிரப்பிப்போகிறாய்...!
நீ ஐமுனா நதி...!
அரவமில்லாம்,அதிசயமாய்
பூத்துப்போகிறாய்..,
ஏன் வாசலில் ஏனடி பிணவாடை பூசுகிறாய்???
மொகலாய சாம்ராஐ; ''ரசியா'' நீ...!
எதிரிக்காய் தீட்டிய வாட்களையெல்லாம்
நிராயுதபாணி என்முன்,
விழிகளால் ஏன் வீசுகிறாய்???
ஏகாந்த வானத்தின் முழுநிலா நீ..!
பொழிகிறாய்.,
கடல் தாண்டி,மலை மேவி தேசமெல்லாம் பெய்கிறாய்.
பாவம்
பாலைவனம் எனமுன்
திரையிட்டு மறைகிறாய்...!திமிர் நிலவு தான் நீ!
தேன் கடல் நீ!!!
இரவுகளில் அடங்காமல் ஆர்பரிக்கிறாய்..!
கனவுகளில் வளைய வளைய வந்து
என் கழுத்தை நெரிக்கிறாய்..!
பிரம்மன் நல்லவனா???
பின்பு ஏன் உன்னைப்படைத்து என்
கண்களை கீறினான்???
இல்லை இல்லை நல்லவன் தான்..
மயிலிறகால் தாவணி கட்டி தழுவியதும் அவள் தானே???
அவ்வளவு நீளமா உன் கூந்தல்???
விழிகளில் நுழைந்து
சித்தமெல்லாம் புரண்டு
சுவாசப்பை இதயக்கரை தாண்டி
உயிர்முடியும் நீளம் வரையுமல்லா பரந்திருக்கிறாய்??
யார் தந்தியனுப்பிது உனக்கு???
குரல் எடுத்து கூப்பிடும் முன்னே
மெதுமெதுவாய் மிதந்து
என்னுள் எப்படி நிறைகிறாய்??
உன் தந்தையை வரச்சொல்
படிகச்சிலை உனக்காய் எத்தனை
குங்குமத்தோட்டங்களை வாங்கினானாம்???
நீ எனக்கில்லை
என்ற பின்னும்
இப்படியெல்லாம் உளற வைக்கிறாய்..,
நீ போதைக்கட்டி
விலக்கிய பின்னும் இரகசியமாய்
போதை ஊட்டுகிறாய் நடக்கிறாய்..
முதலாய' முதல்முதலாய்
நான் தான் முடிகிறேனடி!!
அன்புடன்
-அதிசயா-
வாவ்! வித்தியாசமான கரு! அருமை!
ReplyDeleteஎனக்குப் பிடித்துள்ளது. உதாரண
வரி எழுதாமல் முழுவதுமே ரசித்ததாகக்
கருதவும். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் சொந்தமே..!கோவைக்கவி அவர்களே மிக்க மிக்க மகிழ்ச்சி அழகான இப்பின்னூட்டம் இனிக்கிறது சொந்தமே!!!சந்திப்போம்.!
Deleteகோவைக் கவி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல
ReplyDeleteஎந்த வரியை எடுத்து சிறப்பெனச் சொல்வது என
திணறித்தான் போகிறேன்.எப்போதேனும்தான்
இப்படி உணர்வுகளும் வார்த்தைகளும்
மிகச் சரியாகப் பொருந்திப்போகிற படைப்பினைப்
படிக்க நேர்கிறது
மனம் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் சொந்தமே!
Deleteகாலையிலே மனம் நிறைவாய் இருக்கிறது பின்னூட்டதடதால்.மிக்க நன்றி சொந்தமே..!காதல் பற்றி முதல்தடவை எழுதியது நிறைவான அனுபவம்இ!
வித்தியசமான கோர்ப்பு அழகாக இருக்கின்றது.
ReplyDeleteஉங்களின் பதிவுகள் என்னுடைய டாஸ்போர்டில் காட்டுதில்லை ஏன்?
வணக்கம் சொந்தமே மிக்க நன்றி.தெரிய!வில்லை.பார்த்து சரிசெய்கிறேன்.:)
Deleteசந்திப்போம்
யார் தந்தியனுப்பிது உனக்கு???
ReplyDeleteகுரல் எடுத்து கூப்பிடும் முன்னே
மெதுமெதுவாய் மிதந்து
என்னுள் எப்படி நிறைகிறாய்??
அதிசயிக்கச்செய்த வரிகள்.. பாராட்டுக்கள்.. !!
வணக்கம் சொந்தமே!
Deleteஎனக்கும் பிடித்த வரிகள் இவை.ரசிப்பிற்கு நன்றி சொந்தமே!!
சந்திப்போம்.!
ரொம்ப ரொம்ப வித்தியாசம் எதிர்பார்க்கவில்லை...
ReplyDeleteவணக்கம் இம்ரான்!சந்தோஷமாயுள்ளது.சந்திப்போம்.!
Deleteஎழுத்துக்களில் கொஞ்சம் போல கவனம் செலுத்துங்கள்....:)
ReplyDeleteமறுபடியும் இப் பதிவு என்னுடைய டேஷ்போர்ட்டில காட்டுதில்லை...
சரி சொந்தமே...!சரி செய்கிறேன்.
Deleteசமீபத்துல நான் படிச்ச நல்ல கவிதைகள்ல ஒண்ணு. அருமை அதிஸயா. காதலால் நிரம்பியிருக்கும் இதை ரொம்பவே ரசிச்சேன்- வரிக்கு வரி. அதைவிட... கீழ வெச்சிருக்கும் படம்.... எங்கப்பா புடிச்ச அதை? சூப்பர்ப்பா. (என்னமோ தெரியலை... என் டாஷ்போர்ட்லயும் அப்டேட் ஆகலை. நானா நம்ம ப்ரண்டு ப்ளாக்கை பாக்கலாமேன்னு வந்துதான் கவனிச்சேன்.)
ReplyDeleteநீரு மிக்க நன்றி..அந்தப்படமா????20 நிமிடத்தேடல் அது..!:)இரவுக்கு தா அத சரி பண்ண ஏலும்.தேடி வந்து படிச்சதுக்கு மிக்க நன்றி சொந்தமே..!
ReplyDeleteஅருமையான கவிதை சகோ..!
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிகவே நன்றி!சந்திப்போம்.!
DeleteHi Athisaya ,
ReplyDeleteGreat !!!
Keep on Dear...
www.southindiafoodrecipes.blogspot.in
வணக்கம் சொந்தமே!
Deleteநன்றிகள் பல.தொடர்ந்து நந்திப்போம்.!
//நீ எனக்கில்லை
ReplyDeleteஎன்ற பின்னும்
இப்படியெல்லாம்
உளற வைக்கிறாய்..,//
;)))))
வணக்கம் ஐயா!!!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிகவே நன்றி..!
:)))))சந்திப்போம் சொந்தமே!
// ஏன் வாசலில் ஏனடி பிணவாடை பூசுகிறாய்???//
ReplyDeleteபுரியவில்லை அன்பரே அர்த்தம் என்னவோ
வணக்கம் சொந்தமே!.இக்கேள்வி மிகவே பிடித்திருக்கிறது.ஐமுனா நதியின் மற்றொரு துயரம் இது.தாஐ;மகாலை கட்டுவதற்காய் மன்னன் ஓர் ஓவியனிடம் கட்டட அமைப்பு 1 வரைந்து கொடுக்கும் படி கேட்டான்.அவன் அப்போது தான் திருமணமான ஓவியன்.துயரத்தை வெளீப்படுத்தும் படியாக அவனால் சிறப்பாக வரைய முடியவில்லை.!மன்னன் சீற்றமுற்று இன்னும் 1 தடவை தான் சந்தர்ப்பம் தவறினால் கொலை உனக்கு என்றான்.ஓவியனின் மனைவி மன்னனிடம் வாக்கு கொடுக்கிறாள்.மன்னனின் மனைவி இழந்த சோகத்தைஓவியனுக்கு புரிய வைக்க தானே ஐமுனா நதியினும் குதித்து இறக்கிறாள்.இந்த சோகத்தின் வெளிப்பாடு தான் ஓவியனின் வெற்றி.பின்னே ஓவியனும் அதில் குதித்து தன் மனைவியுடன் சேன்கிறான் பிணமாக...:(:(தாஐ;மகால்ன் துயரம் இது.ஐமுனா நதியில் பிணவாடையும் இதனால்.!!!!
ReplyDelete//முதலாய' முதல்முதலாய்
ReplyDeleteநான் தான் முடிகிறேனடி!!// நல்ல சிந்தனை உங்களுக்கு, அழகை கோர்த்த வார்த்தைகள்,
நான் கண்டு வியந்த மற்றுமொரு விஷயம், பின்னூட்டத்தில் கேள்வி கேட்ட நண்பருக்கும் அதே கேள்வி எழுந்த எனக்கும் மிகத் தெளிவாய் பதில் கூறி உள்ளீர்கள். சிறப்பு.
படித்துப் பாருங்கள்
தல போல வருமா (டூ) பில்லா டூ
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html
வணக்கம் சொந்தமே...!மிக்க நன்றி.யாரிடமிருந்தாவது இந்த கேள்வியை எதிர்பார்த்தேன்!மிக்க மகிழ்ச்சி...சந்திப்போம் சொந்தமே
Deleteதனக்கு சொந்தமில்லை என தெரிந்தும் கூட வருத்தப்பட வைக்கிற உறவு காதலாகத்தான் இருக்க முடியும்.நன்றி வணக்கம்.
ReplyDeleteவணக்கம் சொந்தமே!1வருந்தலிலும் ஒரு ஈர்ப்பு தெரிகிறது!நன்றி..:)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper kavithai. Keep writing.
ReplyDeletethank u dr....c u soon:)
Deleteஆஹா மிக அருமை, கற்பனை அழகோ அழகு.
ReplyDeleteவணக்கம் சொந்தமே!!!வருகை மிகவே மகிழ்ச்சி...வாழ்த்திற்கு மடிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே!
Deleteஉங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டு.http://www.valaiththirattu.iniyathu.com/
ReplyDeleteநன்றி சொந்தமே!
Deleteஃஃஃஏன் வாசலில் ஏனடி பிணவாடை பூசுகிறாய்ஃஃஃஃ
ReplyDeleteகோலம் அலங்கரித்த இடத்ில் இப்படி ஒரு மாற்றம் என்றால் வெள்ளப் பெருக்காகத் தானே இருக்க வேண்டும்....
வணக்கம் அண்ணா..தங்கள் கருத்தோட்டமும் நியாயமே!..என் விளக்கம் மேலே கூறிவிட்டேன் அண்ணா...!நன்றி சந்திப்போம்.:) :) :)
ReplyDeleteம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் சூப்பர் ..... அருமையான வரிகள் ரசிக்க வைத்தவை ... சூப்பர் சொந்தமே....
ReplyDeleteநன்றி இனிய சொந்தமே::)
ReplyDeleteஅருமையான படைப்பு தோழி. வார்த்தைகள் ஒவ்வொன்றும் கண்முன்னே வடிவம் பெறுகின்றன.
ReplyDeleteபல காலங்களுக்கு பின் பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.நன்றி சொந்தமே!
ReplyDelete