Friday, May 11, 2012

'நான்' அறிமுகமாகிறேன்..!

பதிவுலகின் சொந்தங்களுக்கு
முதல் வணக்கம் கூறி பதிவிடுகிறேன்
அது வரை நான் அந்நிய முகம்தான்
அறிமுகமாகிறேன் ஜக்கியமாவதற்காய்...

நான் 'அதிசயா'
பெரிதாய் அடையாளங்களற்ற அமைதிப்புல்லாங்குழல்..
வெட்ட வெளிகளில் அமர்ந்து கொண்டே,
எனக்குள் மட்டுமாய் இசைத்துக்கொள்ளும்
அமைதிப்புல்லாங்குழல்.!

எனக்கு உயிர் தந்த தெய்வம்,
எனக்குள் உயிர் செய்த சொந்தம்,
விதி பெற்ற பந்தங்கள்,
சித்தங்களில் நிறைந்து விட்ட அற்புதங்கள்,
விழியை கிழிக்கும் கம்பிகள்,
இவையெல்லாம் என் இசைப்பிள்ளையாய்..!

கவிதையெனும் ஆன்மாவை அணைத்துக்கொண்டே,
காலங்கள் தாண்டி யுகங்கள் துறந்து,
கண்ணோரம் மழை கசிய,
மலை வெளிகளில் மிதந்து செல்வேன்..!

மஞ்சள் வெயில் வற்றி விட்ட முன்னிரவில்,
நிலவுடன் நனைந்து கொண்டே,
உங்கள் காதோரங்களில் கடந்து செல்வேன்..
கொஞ்சமாய் புன்னகைத்து தலை கோதுங்கள்-என்
கவிதைகளுக்கு..
நித்தியமாய் மழை கழுவும்
என் சாலைகயின் பூக்களை..!


பதிவுலகின் வாசல்களில் வெளிச்சங்கள் நட்டுவைத்த என்
பாசத்துக்குரிய இணையசகோதரனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...!

29 comments:

  1. பதிவுலகில் காலடி வைக்கும் சகோதரிக்கு வணக்கம்!
    பல நல்ல பதிவுகளைக் கொடுத்து...வான்புகழ் பெற வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு சகோதரமே....

      Delete
  2. சிறந்ததொரு அறிமுகம்....வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பதிவுலகில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. சிட்டுக்குருவிக்கு அதிசயாவின் நன்றிகள்..நிச்சயம் சந்திப்போம்..

      Delete
  3. Valthukkal unkal varavu nallvaravaakaddum

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தங்கா பதிவுலகத்திற்குள் தங்களை இனிய கரம் நீட்டி வரவேற்கிறேன்... அண்ணன்களின் ஆசைகளை நிறைவேற்றி வெற்றிக் கொடி நாட்ட என் ஆசிகள்...

    ReplyDelete
    Replies
    1. சுதா அண்ணா...ஆரம்பம் கொடுத்த உங்களின் ஆசிகள் நிறைவாய் தொடர்ந்தால் நிச்சயமாய் முடியும்.உளம் நிறைந்த நன்றிகள்:)

      Delete
    2. சகோதரா எங்கோ உதைக்கிறதே...நிச்சயமாய் அண்ணாவின் ஆசிகள் நிறைவாய் தொடரும்.அதற்கும் என் நல்வாழ்த்துக்கள் தங்கச்சி.

      Delete
    3. சித்தாரா அக்கா...ஏன் இந்த கொலை வெறிங்க..??சரி சரி,ஒருவாறு உங்கள் ஆசியும் கிடைத்து விட்டது மிகமிகவே மகிழ்ச்சி..

      Delete
  5. அமைதிப்புல்லாங்குழல் அதிசயாவின் அருமையான வருகைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்தும் இசைக்கவே ஆவல்..நன்றிகள் உங்களுக்கு..

      Delete
  6. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நிலவன்பனுக்கு நன்றிகள்..இந்தப் பெயரில் ஏதோ அறிமுகம் தெரிகிறது....

      Delete
  7. நல்ல அறிமுகம்,
    உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றியோடு அதிசயா...

      Delete
  8. ஆசிகளுக்கும் அறிவுரைக்கும் மிகவே நன்றி...முயற்சிக்கிறேன்....

    ReplyDelete
  9. ஆசிகளுக்கும் அறிவுரைக்கும் மிகவே நன்றி..

    ReplyDelete
  10. வாருங்கள் சகோதரி.வலையுலகத்திற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் கவிப் பயணம் சிறப்புற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி சித்தாரா அக்கா...நீங்களெல்லாம் இருக்கீங்க தானே..பயமில்ல..

    ReplyDelete
  12. //கொஞ்சமாய் புன்னகைத்து தலை கோதுங்கள்-என்
    கவிதைகளுக்கு..
    நித்தியமாய் மழை கழுவும்
    என் சாலைகயின் பூக்களை..// இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வருகை தந்தமைக்கும் ரசித்தமைக்கும் மிகவே நன்றி மதி அண்ணா

    ReplyDelete
  14. முத்தான கவிதையிலே முதல் வருகை! வாழ்க சத்தான தமிழ்மொழியில் மேலும்பல தருக!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா..
    கொத்தான மலர் தொடுத்து
    வித்து வரை வேர்விட்டு
    சத்தியமாய் பூவுதிர்பேன்.
    நன்றி ஐயா

    ReplyDelete
  16. Ip padhivukku indru than comment podak kidaiththadhu. Vaalththukkal. Vaarththaigalai kaiyalum vidham arumai. Vaalththukkal ullame.

    ReplyDelete
  17. என் முதல் கவிக்கு தாங்கள் தந்த வாழ்த்துக்களுக்கு மிகவே நன்றி.

    ReplyDelete
  18. மிக்க நன்றி சொந்தமே!தங்கள் வாழ்த்துக்களை இங்கு பார்ப்பது மிகமிகவே மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. #மஞ்சள் வெயில் வற்றி விட்ட முன்னிரவில்,
      நிலவுடன் நனைந்து கொண்டே,
      உங்கள் காதோரங்களில் கடந்து செல்வேன்..
      கொஞ்சமாய் புன்னகைத்து தலை கோதுங்கள்-என்
      கவிதைகளுக்கு..
      நித்தியமாய் மழை கழுவும்
      என் சாலைகயின் பூக்களை..!#
      நான் ரசித்த வரிகள்.வாழ்த்துக்கள் உள்ளமே.

      Delete
    2. mikka nanri nanba.enru than parthane..

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...