Tuesday, May 15, 2012

காதலிக்கிறேன்-ஆதலால் காதலிக்கப்படுகிறேன்

(கவனிக்க! இது பருவ மயக்கமல்ல)

இருளோடு கலை செய்தான் ஒருவன்-அவனால்,
கருவோடு உயிர் சேர்த்தாள் ஒருத்தி,
பிரபஞ்ச வெளிகளில் என்னையும் விதைத்தான் இறைவன்,.
எனக்கு கலவை தந்த பெற்றோரே காதலிக்கிறேன்..
இது வரையும் மாய் செய்கிறாய்-இறைவா உன்னால்
காதலிக்கப்படுகிறேன்..!

பூமிக்காய் கோடு இட்டது வானம்,
இரவுகளில் வெள்ளை நட்டது நில,
நான் அழைத்ததும் வருவதில்லை இரண்டும்!
மழை ஊற்றே,நிலாக் கீற்றே காதலிக்கிறேன்..
காத்திருந்தால் கை நனைக்கிறாய்-உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!


வெள்ளை என்றதும் ஓடி வரும் பள்ளிச் சீருடை,
பேனாவால் உயிர் பெறும் தொலைந்த நண்பி,
பழதாகிப்போனாலும் பரிவைத்தொலைத்ததில்லை இரண்டும்!
ஓடி வருகிறாய்,ஓவென அழ வைக்கிறாய் காதலிக்கிறேன்..
ஓவ்வொன்றாய் நினைக்கையில் சிலிர்க்க வைக்கிறாய் -உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!

வெறுமைக்குள் புதிர் பூசும் நெடுஞ்சாலை,
இடைக்கிடை முளைத்து நிற்கும் சாலைக்குறியீடுகள்,
எத்தனை தரம் பார்த்தாலும் விழிகளில் வினாக்குறி வளைகிறது!
இரவு வழிப்பயணங்களே,ஜன்னல் பெற்ற பிள்ளைகளே காதலிக்கிறேன்..
வெளிகளில் தனிக்க விட்டதில்லை-உம்மால்
காதலிக்கப்படுகிறேன்..!

மிதக்க வைக்கின்ற வெள்ளைக் கோலங்கள் முகில்கள்,
'முடித்து விடாதே'கெஞ்சும் இரவுக்கோர்வைகள் கனவுகள்,
நேரங்கள் தொலைவதைக்கூட ரசிக்க முடிவது இங்கே தான்!
வான்துப்பிய மேகங்களே,வாழச்சொல்லும் கனவுகளே காதலிக்கிறேன்..
எப்போதும் எனை ஈர்க்கும் ஏகாந்தமே காதலிக்கப்படுகிறேன்..!

வாலிபம் காட்டும் சதைக்காதலல்ல இது!
மாலையிடும் மலர் காதலுமல்ல இது!
நொடிநொடியாய்,துளித்துளியாய்
வாழ்வு பின்னும் நெசவுக்காதல் இது!
கொஞ்சம் கொஞ்சமாய் நினைவெடுத்து
அழகாய் நிறம் கலந்து
அழுத்தமாய் அறிவுரைக்கும் உண்மைக்காதல்
சைவமாய்,அசைவமாய்
உன்னையும் அணைக்கும் காதல்...!

26 comments:

 1. ஆரம்பமே படு சூப்பராக இருக்குதே.கலக்குங்க கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சித்தாரா அக்கா...நீங்களெல்லாம் இருக்கீங்க தானே..பயமில்ல..

   Delete
 2. //கொஞ்சம் கொஞ்சமாய் நினைவெடுத்து
  அழகாய் நிறம் கலந்து
  அழுத்தமாய் அறிவுரைக்கும் உண்மைக்காதல்
  சைவமாய்,அசைவமாய்
  உன்னையும் அணைக்கும் காதல்...!//
  எங்கும் எதிலும் எப்போதும் காதலை உணர்ந்தால் வாழ்வில் என்றுமே துன்பமில்லை.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் ..உண்மை தான்;

   Delete
 3. ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஆரம்ப அறிமுகத்திலே கலக்கினீங்க...இப்போ அடுத்தத்தா கலக்குறீங்க...தொடரட்டும்

  ReplyDelete
 4. சின்ன ஒரு அறிவுரை....:(

  பதிவை பதிவிடும் முன் ஒன்றுக்கு இரண்டு தடவை முன்னோட்டம் பாருங்கள். அவ்வளவுதான்:)))

  ReplyDelete
 5. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி மிக்க மிக்க நன்றீங்க....கொஞ்சம் சோம்பேறியா இருந்திட்டன்...திருத்திக்கறன்..

  ReplyDelete
 6. அழகாக எழுதுகிறீர்கள் கவிதை. அருமை

  ReplyDelete
 7. மிக்க நன்றி சகோதரி...உங்கள் வருகையும் வாழ்த்தும் உற்சாகம் தருகின்றன...நன்றிகள்!

  ReplyDelete
 8. //நொடிநொடியாய்,துளித்துளியாய்
  வாழ்வு பின்னும் நெசவுக்காதல் இது!// எங்கே கொட்டி கிடக்கிறது இந்த வார்த்தைகள் அவளவும் உயிப்புடன் துடிக்கிதே தோழி ............உன் காதல் எவ்வளவு உண்மை ..............ரசித்தேன் ருசித்தேன்

  ReplyDelete
 9. வணக்கம் சொந்ததமே...வருகைக்கும் வாழ்த்திற்கும் தலை வணங்குகிறேன்..நன்றி சொந்தஆம..!சந்திப்போம்

  ReplyDelete
 10. Arumai. Super. Enna soradhune theriyala. Fantastic poem.

  ReplyDelete
 11. வணக்கம் பாரதி.மிக்க நன்றி..இது எனது முதல் கவிதை!

  ReplyDelete
 12. முதல் கவிதையே முத்தான கவிதையாய் இருக்கிறதே!
  #மிதக்க வைக்கின்ற வெள்ளைக் கோலங்கள் முகில்கள்,
  'முடித்து விடாதே'கெஞ்சும் இரவுக்கோர்வைகள் கனவுகள்,
  நேரங்கள் தொலைவதைக்கூட ரசிக்க முடிவது இங்கே தான்!
  வான்துப்பிய மேகங்களே,வாழச்சொல்லும் கனவுகளே காதலிக்கிறேன்..
  எப்போதும் எனை ஈர்க்கும் ஏகாந்தமே காதலிக்கப்படுகிறேன்..!#
  நான் ரசித்த - உணர்வுகளை தீண்டிய வரிகள். வாழ்த்துக்கள் உள்ளமே.

  ReplyDelete
  Replies
  1. பாரதிமிக்க மகிழ்ச்சி சொந்தமே!!!இத்தனை நாளுக்கு பின்பு இந்த கவிதைக்கு கருத்துரை கிடைத்தது மகிழ்ச்சியே!சந்திப்போம். சொந்தமே!

   Delete
 13. //எத்தனை தரம் பார்த்தாலும் விழிகளில் வினாக்குறி வளைகிறது!

  ரசிக்க வைக்கும் சொல்லாட்சி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சொந்தமே!!!தங்கள் சந்திப்பு மகிழ்ச்சி..சந்திப்போம் சொந்தமே!

   Delete
 14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சொந்தமே!

   Delete
 15. உங்கள் வலை பூவை வலைசரத்தில் அறிமுகம் செய்திருகிறேன் வந்து பார்த்து கருத்திட்டு செல்லுங்கள் .....புதிய உறவுகளை நட்பாக்குங்கள்

  ReplyDelete
 16. வணக்கம்.ஆம் அக்கா.மீண்டும் ஒரு தரம் வருகிறேன்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் மை டியர்............. உங்கள் வலைச்சரத்தில் மறுபடியும் பார்த்தேன்

  ReplyDelete
 18. தாங்ஸ் மை டியர்

  ReplyDelete
 19. உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
  http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_28.html
  என் தளம்
  http://kovaimusaraladevi.blogspot.in/

  ReplyDelete
 20. மிக்க நன்றி அக்காச்சி!

  ReplyDelete
 21. வணக்கம்

  இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் கவிதை அருமையாக உள்ளது
  பார்வைக்கு இங்கே http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_24.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...