Sunday, May 27, 2012

நட்புநிலை உடைவுகள்..!வணக்கம் நேசங்களே!

தலைதடவிப்போன உங்கள் பாசங்களுடன் மற்றொரு அனுபவப் பகிர்வோடு உங்கள் வாசல்களில் வருவது மிகவே மகிழ்ச்சி..அது என் தனிப்பபட்ட அனுபவமே,இருப்பினும் சில வேளைகளில் பொது அனுபவமாயும் அமையுமென எதிர்பார்கிறேன்..நெருடல் இருப்பின் பொறுத்தருள்க..
   
பதிவுலகில் 'அதிசயா'எனும் அடை மொழியுடன் அறிமுகமானவள் நான்..எனக்கென்று என்னுள்ளேயும் சில அடையாளங்களை தெரியப்படுத்திய என் எல்லையற்ற பாசத்திற்குரிய இரு நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.


பிறப்பால் வாய்த்த சொந்தங்களை காட்டிலும்,காரணமின்றி வாய்க்கும் விதி வரைந்த சொந்தங்கள் நண்பர்கள்.என்னைக்கேட்டால் எனக்கு வாய்த்த அந்த இரண்டுமே அற்புதமான தெய்வீக பரிசுகள்.அடிக்கடி நினைத்து சிலிர்த்துக்கொள்வதற்கென்று என்னிடமாய் உள்ள திருப்தி கரமான அடைவுகளில் பெரும்பான்மையானது  அந் நினைவுகளே.

பொதுவாக ஆண்-ஆண் நட்பு,பெண் -பெண் நட்பினைக்காட்டிலும் ஆண்-பெண் நட்பின் பிணைப்பின் இறுக்கத்தன்மை மிகவே அதிகம்(நான் உணர்ந்தது.மாற்று கருத்திருப்பினும் மன்னிக்கவும்)இயற்கையாக உள்ள எதிர்பாலினக்கவர்ச்சியும் இதற்கு ஒரு காரணமோ தெரியவில்லை.

இவ்வாறு நமக்கு நாம் வரித்துக்கொள்ளும் உறவுகள் இறுதி மூச்சு உள்ளவரை அருகில் தொடர வேண்டுமென்பதே இயல்பான மனித எதிர்பார்ப்பு.ஆனால் பல நேரங்களில் இவ்வுறவுகள் ஆட்டம் கண்டு உடைந்து போவதும்,சில தருணங்களில் மட்டுமே இவ்எதிர்பார்ப்பு உணமையாவதும் மனம் நெகிழும் வேதனை.இவ் உறவுநிலை உடைவுகள் ஏன் நிகழ்கின்றன???ஆண்-பெண் நட்புச்சாலைகளில் காத்திருக்கும் சலனங்கள் ஏரானம்.

    மற்றவர் பார்வையின் தவறான ஓட்டம்

    நட்பினையே ஒழிந்திருக்கும் காதல் போன்றதான ஈர்புகள்;..;

நட்பு காதலாதல் சரியா தவறா என்றால் அதை விவாதிக்கவே ஒரு தனிப்பதிவு தேவை.(நா சொல்ல வர்றது வேறய பத்திங்கோ...).
ஆரம்பங்களில் இனிதாக போகும் இச்சாலைகளில் படிப்படியாக ஏற்படும் இடைவெளிகள் ஒரு எல்லையில் இருட்டிலும் கண்ணீரிலும் போய் முடிகின்றன.


இதையெல்லாம் வென்ற பின்னும் சில தனிப்பட்ட புரிதலின்மைகள் ஏற்பட்டுச் சோதிக்கும்.

பொதுவாகவே சிலர் தங்களிpன் நட்பின் மீதுள்ள அதீத நேசங்களால் அந்நபர் தனக்கு மட்டுமே உரியவர் என மட்டுப்படுத்துவதும்,தன்னையறியாமலே அவ்எல்லையை தன் துணையின் மீது திணிப்தும்,அதற்கொப்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் மனக்கசப்பை ஏற்படுத்துகின்றன.அத்தகைய நிலை பின்னர் சரி செய்யப்பட்டாலும் தொடர்ந்து தனது மற்றைய நட்புப்பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தயக்கத்தையும் ஒருவித பயத்தையும் ஏற்படுத்தி செயற்கையான ஓர் நினைவோட்டத்தை ஏற்படுத்தி,பலமான இடைவெளியை விரித்துப் போகின்றன.

நட்பு என்பதே எதிர்பார்பற்ற ஓர் உறவு.ஆனால் சில சமயங்களில் எதைச்செய்தாலும் தன் நட்பு தனக்குத் துணையிருக்கும் என்று எதிர்பார்பது மிகமிகத்தவறான முடிவு.தவறு செய்கையில் தடுப்பதே மெய்யான நட்பின் தன்மை.ஆனால் சில சமயங்களிலே இத்தகைய தடுத்து நிறுத்தல்களும் நட்பு முறிவிற்கு காரணமாகின்றன.ஒரே விதமான தவறுகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.அதுவும் மறைமுகமாக...அது சுட்டிக்காட்டப்படும் தருணங்களில் ''ஏற்கனவே உனக்குத்தெரிந்தது தானே'' என நியாயப்படுத்தப்படுவதும்,''நண்பனுக்காய் இதை செய்ய மாட்டாயா?''என ஒருவகை பேரம் பேசப்படுதலும் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்படவேண்டியதே..!

நட்பினுள்ளே சிறிய நெருடல்கள் முளைக்கும் போதே,உணர்வின் எல்லைகளில் நின்று அதை பற்றி சிந்திக்காமல்,அறிவுபூர்வமாக உறுதியான முடிவுகளையும் சில தெளிவுகளையும் ஏற்படுத்துங்கள்.முரண்டு பிடித்தால் சில காலம் தனித்திருந்து சிந்திக்கும் வரை அவகாசம் வழங்குங்கள்.அதன் பின் ஏற்படும் புரிதலானது நிரந்தரமாகதும் தூய்மை மிக்கதுமாகவே அமையும்.
கண்களுக்கும் கண்ணீருக்கும் மதிப்பளித்தால் கடைசிவரை இரவுகளும்,அழுகைகளும் தான் மிச்சமாகும்.எவ்வளவு நெருக்கங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் அத்தனையையும் வெறுப்பாய் உமிழ்ந்து,எதிரிகளாய் பார்க்க வைக்கும் தண்டனை மிக மிக கொடிது.

                        'தான் நேசித்தவர்களால் நிராகரிக்கப்பட்டவளும், 

தன்னை  நேசித்தவர்களை நிராகரித்தவளும்'


இவ்வரிகள் அடிக்க ஞாபகவெளிகளை நிறைத்துப்போனாலும்,இறுக்கமான மனதுடன் எனக்கான பதில்களுக்காய் என் கனவுகளையும ;இந்த ஈரமான நினைவுகளையும் கோர்த்து வைத்துள்ளேன்.
'அதிசயா'ஒருகரத்தால் தண்டனை அனுபவித்துக்கொண்டே மறுகரத்தால் தண்டனை வழங்குகிறாள்.தண்டிக்கப்படுவது,தண்டனை கொடுப்பது இரண்டுமே ரணமானது என்பதை இப்போதெல்லாம் ஒரே சமயத்தில் அடிக்கடி உணர்கிறேன்.

நான் பெற்ற இரு உறவுகளில் ஒன்று உறங்குகிறது.மற்றயது உறங்குவது போலச் செய்கிறது..நம்பிக்கையோடு வாசல் தட்டுகிறேன்.,நேசங்களுக்காய் இல்லையெனினும் தொல்லைகளுக்காயாவது விழிகள் திறக்கப்படலாம் என்று..:(

என் எழுத்துகள் உங்களை புண்படுத்தினால் மன்னிக்கவும்..

சொல்லிவிடு,இல்லை உருகியே வற்றிவிடுவேன் என உணர்வுகள் கெஞ்சியதால் சொல்லி விட்டேன்..!

நிதானமாய் உங்கள் நட்புச்சாலைகளில் தொடர வாழ்துக்கள்!!!!

                                                                                                                               காயங்களுடன்
                                                                                                                                   -அதிசயா-

29 comments:

 1. மன்னிச்கோங்க...ரொமம்ம்ம்ம்ம்ப நீளமாயிடுச்சே.......!

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 3. //பொதுவாக ஆண்-ஆண் நட்பு,பெண் -பெண் நட்பினைக்காட்டிலும் ஆண்-பெண் நட்பின் பிணைப்பின் இறுக்கத்தன்மை மிகவே அதிகம்//உண்மை தான் எதிர்பாலினம் ஈர்க்கும் அல்லவா

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ...நன்றி சகோதரமே வருகைக்கு

   Delete
 4. Nalla pakirvu thodarungkal pc yil illathathaal intha short comment

  ReplyDelete
  Replies
  1. முயற்சி பண்ணுங்க..உங்களால இதவிட சிறப்பாக முடியும்..ஓ.....அதான் காரணமா??பறவால்லப்பா..நன்றிங்க சிட்டுக்குருவி..

   Delete
 5. காயங்களை மாற்றவும்,பாரங்களைக் குறைக்கவுமே எழுத்துக்களை வடியவிடுகிறோம்.பிறகெதுக்கு மன்னிப்பு அதிசயா....தொடருங்கள் !

  ReplyDelete
 6. அக்கா உண்மை தான்..இந்த எழுத்துக்கள் தான் உணர்வுகளுக்கு சிறந்த வடிகால்.மிக்க நன்றி அக்கா உங்கள் அங்கீகாரத்திற்காய்...

  ReplyDelete
 7. அதீத அன்பின் மேல் சில தூசுகள் விழும் அதிசயா ...
  அது நிரந்தரமில்லை .. குறுகிய இடைவெளியில் கலையப்படும்..
  வருத்தம் வேண்டாம் தோழி .. நிச்சயம் வலிகள் மறையும் , எதிர்பார்த்த நட்பின் கரங்கள் வலுவாய் பற்றும் ..
  நன்றிகளுடன் அரசன்

  ReplyDelete
  Replies
  1. அரசன் அண்ணா வருகைக்கு மிக்க நன்றி..நொந்து போன மனதிற்கு உங்கள் வார்த்தைகள் மயிலிறகாய் தொட்டுப்போகின்றன...அந்த நம்பிக்கையில் தானண்ணா ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன்..!

   Delete
 8. ஆண் பெண் நட்பு உயர்வானது சிறப்பானது போற்றுதலுக்குரியது உங்களின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது சிறந்த நடை வள்ளுவம் கூட அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து முகநக நட்பே நட்பு என்கிறது . வாழ்வியலுக்கு சிறந்த தீர்வளிக்கும் வள்ளுவத்தை நாடினால் தீர்வு கிடைக்கும் சிறந்த பதிவு பாராட்டுகள் .ilankai ezhuththu vaasaam illaye

  ReplyDelete
  Replies
  1. நன்றி அக்கா..!வள்ளுவப்பெருந்தகை பொய்யாமொழிப்பெயர் பெற்றதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை..உண்மை தானாக்கா..yenaka karanam puriyala..

   Delete
 9. நட்பின் அடர்த்தி தோற்றுபோகாது.
  பகிர்வு சிலிர்ப்பு.

  ReplyDelete
 10. திரு.கருணாரசு நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவே நன்றி..!தொடர்ந்து சந்திப்போம்.

  ReplyDelete
 11. இன்றுதான்
  உங்கள் வலை வருகிறேன்
  வலையின் தலைப்பில் அழகிய
  கவிதை

  ஆ(பெ)ண்
  நட்புப் பரிமாணம்
  வரிகளின் நல்ல முதிர்ச்சி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு முதலில் இச்சிறிய சகோதரியின் வரவேற்பும்,நன்றிகளும்.!இயற்கையின் பிள்ளைகள் மழை,மலர் இரண்டுமே இனிமை..ஒன்றாகையில் கவிதை தானே சகோதரா..!சந்திப்போம் சொந்தமே..!

   Delete
 12. மிகவும் அருமையான ஆக்கம் தங்கா... கவிதைகளை விட நான் இவற்றுக்கே அதிக பெறுமதி அளிப்பேன்...

  ReplyDelete
 13. மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் சுதா அண்ணா..!சில காலத்திற்கு இவ்வழியில் பயணப்படுகிறேன்..:)

  ReplyDelete
 14. சகோதரர் ம.தி.சுதா அவர்களின் அறிமுகத்தால் இன்று தங்கள் தளம் வருகிறேன்.
  அவர் சொன்னதைப்போல நீரோடை சலனம் போல எழுத்துக்கள் கோர்வையாய்
  அழகுருவாய் இருக்கின்றது...

  வடுக்களும் உணர்வுகளும் என்றென்றும் களைவதற்கே
  நிரந்தரமல்ல...
  நம் உணர்வுகளை எண்ணங்களை அப்படியே சொல்ல எழுத்திற்கு
  மட்டுமே உண்டு..
  தொடர்ந்து எழுதுங்கள்
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி..எனது தளத்திற்கு வரவேற்றுக்கிறேன்.சுதா அண்ணணாவை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்கிறேன்.
   உணமை தான் எழுத்துகளுக்கு உள்ள வலிமை தான் பல காயங்களையும் ஆற்றிப்போகிறது..!
   தொடர்ற்தும் சந்திப்போம் உறவே..!

   Delete
 15. நட்புக்குள் அதிக எதிர்பார்ப்பும், அதிக பொசசிவ்நெஸ் இரண்டும் இருந்தால் வலிகள் சகஜம்...

  காயங்களை காலம் ஆற்றும்...

  நன்றாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்குரிய சகோதரிக்கு எனது இனிய வணக்கங்கள் கூறி வரவேற்று தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கூறுகிறேன்..!உண்மை தான் எல்லையற்று விரிகின்ற நட்புச்சாலைகளில் ஏற்படும் வலிகளும் எல்யைற்றதாகவே அமைந்தாலும் காலங்களின் கைகளில் அதன் முடிவுகளை கொடுப்பதை விட வேறு என்ன செய்ய???நம்பிக்கையோடு...!

   Delete
 16. நீங்கள் தயங்கித் தயக்கி சொன்னாலும் சொல்ல வந்த விடயத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீங்க.... தைரியத்துடன் தொடருங்கள். பதிவு நீளவில்லை. அளவாகத் தான் இருக்கிறது. உற்சாகத்தோடு எழுதுங்கள். யாரும் எதையும் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்குரிய சகோதரிக்கு எனது இனிய வணக்கங்கள்..கலைவிழி அக்கா நன்றிகள்.கொஞசம் தயக்கம் தான்..ஒத்துக்கொள்கிறேன்.தொடர்கிறேன்..தொடர்ந்தும் சந்திப்போம் ....!

   Delete
 17. வணக்கம் சகோதரி புதிதாக பதிவுலகில் நுழைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கும் மேலும் பதிவுலகில் பல நல்ல ஆக்கங்களை தர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரமே...!தொடர்ந்தும் பதிவுலகில் சந்திப்போம்..! சொந்தமே....!

   Delete
 18. ஆண் , பெண் நட்பின் இறுக்கத்தன்மை மிகவும் அதிகம்தான், உண்மையும் கூட ஆனால் அதன் பிரிவு மிக கொடுமையானது.

  ReplyDelete
 19. வணக்கம் தங்களை என் தளத்திற்கு அன்பாய் வரவேற்கிறேன்.இன்னும் அதன் இனிமைகளையும் வலிகளையும் அனுபவிக்கிறேன்.நன்றியே◌ாடு விடை பெறுகிறேன்.சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...