Monday, May 21, 2012

தண்டவாளக் குறிப்புக்கள்


நான் தண்டவாளப்பாதைகளின்  ரசிகை..!
   
ரயில் பயணங்களில் பறப்பதை விடவும்

தண்டவாள இடுக்குகளில் தொலையவே விருப்பம்!!


                                              
தண்டவாளப்பாதை  இது இரகசியக்காதலகளின் சாலை!
       பேசாமல் போய்விட்ட பெருங்காதல்  அத்தனையும்  அருகிருந்துபேசிக்கொண்டு,
       உலோகங்களை உருக்கி விடும் கண்ணீரில் உடைந்தொழுகி,
ஒன்றாகும் எத்தனத்தில் இறுக இறுக அணைத்த நேசங்கள் சுமந்து,
     விரல் நடுங்கும் மோகங்கள் கடந்து,
விழி நான்கில் நிலவொழுக,
      விரல் வெப்பங்கள் அறிமுகமாவது இங்கே தான்..!

                                                                                   
சிலருக்கு நிம்மதிக்கரை தண்டவாளச்சாலை!
       போதையின் வெப்பம் வான் முட்ட 'கேள் மனமே'
என்று சாயச்சொல்வதும்,
       வாய்விட்டழுத வார்தைகளையெல்லாம் தனக்குள்ளே விழுங்கிவிட்டு,
விரல்களுக்கு சொடுக்கெடுத்து நடைவண்டியாகி,
     சிந்திவிடத் துடிக்கின்ற சில உயிரை துடைத்தெடுத்து,
துணையாகும் நிம்மதிக்கரை இதுதான்..!
                                              
தத்துவங்களின் தாய்வீடு தண்டவாளங்கள் என்பேன்!
    ஏகாந்தங்களை வெளியெங்கும் விதைத்து,
ஓட்டங்களின் இடைவெளியில் வெறுமை பூசி,
    தன்னிலும் வலியதை தன்மேல் சுமந்து,
ஓன்றாகி இரண்டாகி மீண்டும் ஒன்றாகி புணர்தலின் விதி சொல்லி,
     தத்துவங்களின் தாயகமாகிறது..!
                                                 
வயதுகளின் பிள்ளைநாள் தண்டவாளங்கள்!
       அங்குமிங்கும் பார்த்து ருபா குற்றி வைத்து,
வழுக்குதல் பரிசோதிக்க பழத்தோல் ஒட்டி வைத்து,
       ரயில் ராகத்தின் மேல் தனிராகம் பாடி,
அந்நிய முகங்களுக்கு கையசைத்து அறிமுகமாகி,
       பின்னோடும் இதயத்தை கைப்பிடித்தழைத்து,
விளையாடும் பாதை இது தான்..!
                                                  
விதி பறித்த காதல்களின் பீனிக்ஸ் தண்டவாளம்!
    கைசேராது என்றானபின்னும் கடைசிவரை அருகாய் வளர்ந்து,
தவறவிட்ட பயணங்களெல்லாம் தனக்காய் வரவழைத்து,
    அவனோடு நிழல் பயணம் போய்,
கனவுகளை நிமிர்த்தி,நினைவோடு வாழச்செய்து
    மீண்டும் பறப்பது இங்கே தான்..!
     

     தண்டவாளக்குறிப்புகள் போதி மரங்கள்..!!!!

15 comments:

 1. உலோகங்களை உருக்கி விடும் கண்ணீரில் உடைந்தொழுகி,
  ஒன்றாகும் எத்தனத்தில் இறுக இறுக அணைத்த நேசங்கள் சுமந்து,
  விரல் நடுங்கும் மோகங்கள் கடந்து,
  விழி நான்கில் நிலவொழுக,
  விரல் வெப்பங்கள் அறிமுகமாவது இங்கே தான்..!//

  நான் ரசித்த வரிகள்....அன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அரசுக்கு நன்றி அண்ணா..உங்கள் வருகையும் இரசித்தமையும் பெரு மகிழ்ச்சி....

   Delete
 2. //தண்டவாள இடுக்குகளில் தொலையவே விருப்பம்!!//

  தற்கொல பண்ணிக்க போறீங்களா..?

  ReplyDelete
  Replies
  1. சிட்டுக்குருவட வேகத்தை பார்த்தா நீங்களாவே தண்டவாளத்ல தள்ளி விட்டுடுவீங்க போலிருக்கே..??அன்புக்கு நன்றி..

   Delete
 3. ஹெடர் பிக்சர் பொருத்தமா இருக்கு

  ReplyDelete
 4. //ஓன்றாகி இரண்டாகி மீண்டும் ஒன்றாகி புணர்தலின் விதி சொல்லி//

  எங்கயோ இடிக்குதே..

  அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அப்பிடி என்றீங்க?????இருக்காதே..நன்றி நண்பா.

  ReplyDelete
 6. //ரயில் பயணங்களில் பறப்பதை விடவும்
  //தண்டவாள இடுக்குகளில் தொலையவே விருப்பம்!!

  மிக அழகு... ஒவ்வொரு முறையும் உபயோகப்படுத்தியபின் ரயில்களால் புறக்கணிக்கப்பட்டாலும் அமைதியாக, ஒன்றுமே நடவாததுபோல அந்த ரயில்களின் அடுத்த வருகைக்காக காத்துக்கிடக்கும் தண்டவாளங்கள் பெரும்பாலான பெண்களின் வாழ்வியலை ஒத்து இருக்கிறது.

  ரயில்கள் அதன் மேல் பயணிக்கையில் வரும் தடக் தடக் சத்தம், கண நேரத்தில் பிரியப்போகும் போர் வீர கணவனுக்கு இளம் மனைவி அவசர கதியில் கொடுக்கப்படும் முத்தம்...

  ReplyDelete
 7. தங்களின் வருகை பெரு மகிழ்ச்சி..வரவேற்பும் நன்றிகளும்..
  என் சிந்தனை ஓட்டத்தில் ஒத்துப்போகிறீர்கள்..இரயில் பாதை என்றாலே ஆனந்தமும் அனுபவமும் அழுகை தானே??.....

  ReplyDelete
 8. நிஜம்... ரயில் நிலையம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது வழி அனுப்புவோர்/அனுப்பப்படுவோரின் கண்ணீர் தான்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய்..!

   Delete
 9. yathan Raj Varukaikum Valthukum Nanrikal

  ReplyDelete
 10. தண்டவாளம் பற்றி யாருமே சிந்திக்காத ஒரு பக்கத்தால் சிந்தித்துள்ளீர்கள் அருமை..

  ReplyDelete
 11. மிக்க நன்றி சுதாண்ணா.....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...