Monday, July 20, 2015

அற்புதங்கள் நிறைந்த குவளைகள்-இது நமக்கான சந்திப்பு

என் ப்ரியத்திற்குரியவனே....!
இந்தப்பயணங்கள் பற்றிய குறிப்புக்களில் உன்னை இந்த இனிப்பான கிறக்கம் தருகின்ற பானங்களோடு வரைந்து வைக்கப்போகிறேன்.இத்தனை தொலைவு நடந்து விட்டேன்.பின்னும் இளைப்பாறுதல் பற்றிய எந்த எண்ணமும் தோன்றாமலிருக்கிறது என்பதை தாண்டிய சுவாரஸ்யம் ஏதுமுண்டோ.எப்போதேனும் உண்டாகக்கூடிய இந்தப்பயணத்தில் என் கூட வரும் வழிப்போக்கனே...!பெறுமதி மிக்க இந்த வாழ்க்கையின் கொண்டாட்டமான பொழுதுகள் இன்னுமாய் நீளக்கடவது.

என் அபூர்வ பிரயாணியே..!
இந்த சாலை எங்கிலும் நான் அதிகமாக அவதானித்தது சிறு பையன்களையும், அவர்களை இலாவகமாய் உருட்டிச்செல்லும் அந்த வளைய சில்லுகளையும் தான்.இப்படித்தானே இந்த சாலைகள் அதன் திசைகளின் எங்களை இயல்பாய் கூட்டிப்போகிறது.

மூன்றாவது சாலை வளையும் போது தான் நீ வெறும் வழிப்போக்கனல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.அப்போது தான் அந்த இனிப்பான பூக்களை சொரியும் மரத்தடியில் அமர்ந்தபடி நேசங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பின்னாளில்  நீ கூட மென்மையான இதழ்களை கொண்ட மலர்தருவாக மாறியிருந்தாய் என்பதே உண்மை.பயணங்களில் இரவு பற்றிய பயங்களோ,சாத்தான்கனை விரட்டும் மந்திரங்கள் பற்றியோ அதிகமாய் நாங்கள் ஆலோசித்ததில்லை.எப்போதைக்குமான தேவ தேவன்களை உருவாக்கி அவர்களின் சிறகுகளை ஆராதித்தபடி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தோம்.

அறிவாயா ப்ரியமே....
அப்போதே நினைத்து விட்டேன் இனி உன்னை பிரயாணி என சொல்வதில்லையென.வாழ்தலை தண்டனையாக சுமந்த காலங்களிலிருந்து மீண்டு, இந்தப்பணயம் முழுவதுமாய் மிருதுவான வாழ்தல் எங்களின் கைகோர்த்து வருகிறது.இந்தப் பனிபொழுதுகளில் உன் கவிதைகளை நினைவுகூர்ந்து குளிர்காய்ந்து கொள்கிறேன்.நீயும் அப்படியேஅப்படித்தான்.
உண்மைதான் பெருத்த கனவு ஒன்றை சுமப்பது அதீத பாரமாகிறது.அதனால் தான் சிற்றெறும்பின் வெல்லக்கட்டிகள் போல் இனிப்பான சாத்தியமான குட்டிக்குட்டி கனவுகளை இந்த சாலை எங்கிலும் பின்னியபடி போகிறோம்.

ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் காட்டாறு போல நான் பாய்ந்தும் உருண்டும்போனேன்.இப்படியான பள்ளத்தாக்குகள் மென்மையாகவும் மிக விசாலமாகவும்  எங்களை இயக்குகிறது.முன்பெல்லாம் என் தோல்விகளுக்கு யாரேனும் இப்பள்ளத்தாக்குகளை உதாரணம் காட்டியிருந்தால் அத்தோல்வியை வெற்றியை காட்டிலும் பெரியதாய் கொண்டாடியிருப்பேன்.

இன்று இந்த சிகரத்தை மேவ வேண்டிய உயிர்ப்பை தந்தது அந்தப்பள்ளத்தாக்குகளே.என் பச்சைத்தோழியரோடு சேர்ந்து நானும் நீயும்எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார் .இந்த விருந்தின் இறுதியில் நிலா மட்டும் ஒளிர்கையில் மற்றொரு புகைப்படடெடுத்து இங்கேயே மாட்டிவிட்டுப்போவோம்.சந்தோஷங்களின் சாட்சியாய்.

இப்போது இந்த உச்சியில் இருந்து கீழே பார்க்கையில் அபத்தமேதுமின்றி நீயும் நானும் நேசமாய் விரல்பிடித்து வந்த காலங்கள் கோலமாய் விரிகின்றன.ஆணென்றோ பெண்ணென்றோ தோன்றாமல் எதுவாய் இருக்க ப்ரியப்பட்டோமோஅதுவாகவே நடந'து வந்தோம்.இங்கு விரசங்கள் எதுவுமேயின்றி தனியே நேசம் என்ற ஒன்றே எங்களை நடத்தி வந்தது.குதித்தோம் காற்றின் லயத்தோடு குதித்து நடனமாடினோம்.அட்சரங்களை தியாகம் செய்து விட்டோ ஏதேதோ பாடினோம்.போதை கொண்டவர்கள் போல..

என் ப்ரியத்தின் ப்ரியமே..!இந்த இரவில் நம் இருதயத்திடமாய்  பிராத்தனை என்று சொல்லிவைப்போம்.
என் ப்ரியத்திற்குரியவனே நம் நேசத்தின் மெதுமைக்குள் நம் கைகளை ஒன்றாய் ஏந்தியபடி  சொல்வோம்....


என் இருதயமே..........!அதீத சுதந்திர வீரும்பிகளான எங்களின் பின்னைய நாட்களில்பெருத்த தனிமையோ சலிப்போ தோன்றாதிருக்கட்டும்.இந்த சாரலின் வாசங்கள் நாசிகளில் நிறையும் போதெல்லாம்எங்கிருப்பினும்  எங்களுக்குஇப்பயணங்களை நினைவுபடுத்துவாயாக.இப்போது கூட வரும் இந்த அழகிய பாதச்சுவடுகள்என்றென்றைக்குமாய் பரிபூரண அழகுறட்டும்.சூழ்ந்திருக்கும் இந்த மலைகள் சாட்சியாய்எங்களை ஆசீர்வதிப்பாயாக இதயமே...!


17 comments:

  1. Replies
    1. வணக்கம் சொந்தமே..!
      மிக்க நன்றி.

      Delete
  2. வலியினை உணர்ந்தேன்
    கருவும் சொல்லிச் சென்றவிதமும் அதி அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா மிக்க நன்றி.சந்திப்போம்.

      Delete
  3. வலியினை உணர்ந்தேன்
    கருவும் சொல்லிச் சென்றவிதமும் அதி அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Replies
    1. வணக்கம் சொந்தமே.நன்றி

      Delete
  5. சில்லென வீசும் தென்றலின் நாதமும் .....
    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இலவகமும் ...
    பசுஞ் சோலைக்குள் பனிமலையின் சாரலும்.....
    கண்கள் வியக்கும் ... மதியை மயக்கும் ...சொற்கோ வையும் ....
    இனிய நாதமாய் .... விரியட்டும் ... உங்களின் மழையில் நாங்களும் நனைகிறோம் ....

    ReplyDelete
    Replies
    1. வணகக் சொந'தமே.உங்களை மீண்டும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

      Delete
  6. வணக்கம் அதிசயா. மீண்டும் வலைத்தளத்தில் உங்கள் எழுத்துக்களை தொடர்ச்சியாகக் காண்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி என்னுள். உங்கள் வித்தியாசமான எழுத்துநடை பிரமாதம். இந்தவகை நடையை நான் எங்கும் கண்டதில்லை. கவிதை மொழி உங்களுக்கு அழகாய் வாய்த்திருக்கிறது.

    சில எழுத்துப் பிழைகள். கவனிக்கவும். #பையன்களையும், அவர்களை இலாவகமாய் - அவர்களை? #இந்த சாலைகள் அதன் திசைகளின் எங்களை - திசைகளின்? #மூன்றாவது சாலை வளைகயில்? #பணயங்களில் இரவு பற்றிய - பணயங்களில்? #காலங்களிலிருந்து மீண்டு, இந்தப்பணயம்? #என் ப்ரியத்திற்கரியவனே? குறைகாணும் பணியென எண்ணவேண்டாம். உங்கள் அழகியல் நிறைந்த எழுத்துக்களில் ஏனிந்த கறுப்புப் புள்ளிகள் என்றே வினவுகிறேன். வாழ்த்துகிறேன் மனமார மீண்டும் ஒருமுறை. நமது வலைத்தளம் : சிகரம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாரதி.என்னை மீண்டும் இங்கு வருவதற்கான இயக்கத்தில் நீங்கள் தந்த உற்சாகத்திற்கு மிக்க நன்றி..!

      Delete
    2. எழுத்துக்களை திருத்தி விட்டேன்.
      சிறுபையன் சில்லை உருட்டுகிறான் என'பதை தாண்டியும் அவனை வில்லு தன் திசைக்கு தான் வளையும் இஷ்டப்படி எருட்டுகிறது என சொல்ல வந்தேன் பாரதி.நன்றி.தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்

      Delete
  7. T.M 1. facebook, twitter, google+. Congratulations.

    ReplyDelete
  8. தொடருங்கள் குவளையில் கோப்பி குடிக்க ஆவலுடன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே.கண்டிப்பாய் அதேஆவலுடன்.மிக்க நன்றி

      Delete
  9. Replies
    1. வணக்கம் சொந்தமே.மிக்க நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...