சொந்தங்களே அன்பு வணக்கம்...!
பயணங்கள் என்பது வெறும் களைப்பு சார்ந்ததில்லை அது அற்புதமான அனுபவத்தின் தூதன் என்று நம்புகிறீர்களா??இல்லையெனில் ஒருமுறை நம்பியபடி சிறு பயணம் போய் வாருங்கள்.என் பல்கலை நண்பர்களுடன் கிழக்கிலங்கையின் கடல்சார் இன்பங்களை துய்த்துக்கொண்டிருந்தோம்.
கடலாடும் அனுபவங்கள் கிளர்ச்சிமயமானது.பொழுதொரு எழிலென தன்னை உடுத்திக்கொண்டிருக்கிரும் கடல் மடிக்குள் தான் எத்தனை இன்பங்கள்.மீன்களோடும் கடற்கற்களோடும் கலந்திருந்தோம்.
கண்ணாடி போலொரு தண்ணீர் தேசத்தின் கால்களை கற்கள் பதம் பார்க்க நாங்கள் வலிமறந்து கடலாடினோம்.பின் மீண்டும் மற்றொலு கடலில் எங்கும் கண்டிராத குளிர்மையான நீரில் சிறு குழந்தைகள் போல் விழுந்து விழுந்து புரண்டுகொண்டிருந்தோம்.நம்புவீர்களா???அன்றே அங்கே சிலர் அதிதீவிரமாக நீச்சலடித்துக்கொண்டிருந்தோம் முதல்முதலில்.ஏதேதோ இராகங்களை மிக உல்லாசமாய் இசைத்தபடி தோள்மீதும் மார் மீதும் கடலில் உலவிக்கொண்டிருந்தோம்.
பெருத்த சந்தோஷம் நிறைந்த கொண்டாட்ட பயணம் அது.எப்போது நினைத்தாலும் என்றென்றைக்குமாய் கடலின் அடர்த்தி கொண்டு கனம் கூடிய நட்பின் அடர்த்தியில் கடலாடினோம்.
தொலைவுப்பயணங்களின் நினைவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது இந்தப்பொழுதுகள்
என் ப்ரியத்தின் நண்பர்களே...!
நேற்றய நீர்ப்பயணம் முழுவதும் சுயாதீனமாய் மிதந்துகொண்டிருந்தோம் என்பதை நினைத்து இன்னும் பிரம்மித்துக்கொண்டிருக்கிறேன் இந்த சாலை முழுவதும்.
அந்தப்பாடல்களில் சுருதி இல்லை
சாலை உணவகங்களில் குளிரூட்டி இல்லை
ஆனாலும் கடல்போலவும் மலையை ஒத்ததுமான
விசாலமான குளிர்மையில் கிறங்கிக்கிடந்தோம்♪
மூழ்குவதும் பின் மாறிமாறி தாங்குவதுமாக உச்சி குளிந்தோம்.
உயரங்களில் ஏறி பின் நட்பில் கைகோர்த்து ஆழங்களில் சென்றிருந்தோம்.
ஆணென்றும் பெண்ணென்றும் யாதொன்றும் அறியாத நேசத்தில் நட்பு நட்பு என்று சொன்னபடி
அந்தப்பொழுதுகளை கொண்டாடிக்கொள்வோம்♪
தேவதைகளே எங்களை ஆசீர்வதியுங்கள் எல்லோரும் என்றென்றும்
வாழ்கவென♪♪
வாழ்த்துகள்....
ReplyDeleteகடல் என்றாலே களிப்புத்தான்!
ReplyDelete