ஸ்நேக ஸ்பரிசம்
என் அதிகாலை துயிலொன்றின்
கதகதப்பு நீ ப்ரியமே-இனி
உனை போர்த்தபடியே
இந்த கனவுகள் தொடரட்டும்♥
இன்று காலைக்கோப்பி வேண்டாம்்
கிண்ணங்களில் நிரம்பும் ஸ்நேக ஸ்பரிசம் போதும்
ப்ரியமே
எப்போதும; ஓர் அசரீரி போலவே நீஆரம்பிக்கிறாய்
ஈற்றில் காதோரம் பெரும்கடலாய் நிறைந்து கொள்கிறாய்♥
காதல் இன்னும் ஊற்று அதில்
கரைந்து போவோம்
வேறு எப்படி கரையேறுவது♥♥♪♪
உன்
சிறு தடம் பற்றி இடம் சேருவேன்
உயிர் தவம் போல உனில் மீளுவேன்
குழல் நீயாகி இசை ஊறுவேன்_முதல்
பனிபோல உனை மூடுவேன்
இனி மொழி குழைந்தோடஉனை பேசுவேன்♥♥♪♪
அந்த நிர்மலப்பின்னிரவே
காதோரம் தேனடை பூசிடவா..♥
மெய் தழுவிய சிறுமூச்சே
உயிர்க் காட்டில் ஸ்நேகங்கள் மூட்டியே வா♪
பேரன்பே
மற்றொரு மழைக்கொத்தாய் என்வானம் இறங்கினாய்்்்
ப்ரியமே!!!!!
இம் மழைவெளியில் வடியும்
உன் நுனி விரல் துளிகளில் வழுகுதல் அன்றி
பெருமோட்சம் ஏதுமுண்டோ♥♥
ஸ்பரிசங்கள் ஊற்றும் அத்துளிகளின்
கதகதப்பில்
என் ஜென்மம் உடைந்தொழுகமெதுவாய் மெதுவாய் கரையேனோ♪♪♪♪
ப்ரியத்தின் மேல் அதிக ப்ரியத்துடன் கூடிய அழகானதோர் ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் ஐயா..மிக்க நன்றி
Deleteசந்திப்போம் சொந்தமே
அருமை. பாராட்டுகள் சகோ.
ReplyDeleteவணக்கம்.மிக்க நன்றி சொந்தமே
Deleteஅழகான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி சொந்தமே
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றியும் அன்பும் சொந்தமே
Deleteஅருமையான ப்ரியம் இந்த காதல் போதை எதனிடம் காற்றிடமா என்றால் வாழ்த்துக்கள் அதிசயா! இல்லை இன்னொரு பேதை மகனிடம் என்றால் நீங்களும் ஒரு அப்பாவிதான்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!
ReplyDeleteகாற்றிடம் கடலிடம் என் கற்பனையுடன் தான்....
Deleteநீஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட காலத்தின் பின் வலையில் சந்திப்பது மகிழ்ச்சி பூக்கள் இனி தொடர்ந்து மழையில் நனையட்டும்!கழுவிய/கலுவிய வண்ணம்[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
ReplyDeleteவணக்கம் நேசன் அண்ணா.
Deleteஎனக்கும் நிறைந்த சந்தோஷம் .இந்த அதிசயாவை மறக்காத சொந்தமே
அருமை... ரசித்தேன்...
ReplyDeleteநிறைந்த ப்ரியங்கள் அன்புச்சொந்தமே...
Deleteரசிக்க வைத்த வரிகள்! அருமை!
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே
Deleteரசிக்க வைத்த கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே
Deleteநீண்ட நாட்களுக்குப்
ReplyDeleteபிறகான
சிறந்த ஆக்கம் .பாராட்டுகள்
வணக்கம் அன்புச்சொந்தமே...மிக்க மகிழ்ச்சியும் நேசங்களும்.சந்திப்போம்...
Delete