Wednesday, July 25, 2012

காட்சிப்பிழைகள்......!

  சொந்தங்களுக்கு அதிசயாவின் உரிமை மிக்க நேசங்களும் வணக்கங்களும்!

 


    பார்வைப்புலத்தினுள் சிக்கிக்கொண்ட நாள் முதல்வெளிவராது வலிக்கும் ஒரு காட்சிக்கோணத்தைப் பதிவிடுகிறேன்.இது காட்சிப் பிழையா அல்லது படைப்புப் பிழையா நான் அறியேன்.ஓணான் செதில்களும் கரட்டைப்புதர்களும் நெரிக்கும் இடைவெளியில் முளைத்து, இன்னும் பிழைத்து நிற்கும் வெயில் பிரபஞ்ச வெளி அது.ஏர்க்காலிற்கும் கஞ்சிப்பானைக்கும் மட்டுமே கனவு காணத்தெரிந்த குலத்தில்"பெண்" என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வகுப்பின் கேள்விக் குறியாகவே இப்படைப்பு பிறக்கிறது.

                                          
    பெண் என்ற பிறப்பு சுகம் அடைத்த சதைப்பிண்டமாக நோக்கப்பட்டது கடந்து போன தலைமுறையின் நோய்.ஆனால் இன்றும் தொடரும் அவலம் இது.தாய்மைத் தன்மை ஒருபுறம் தெய்வீகமாக போற்றப்பட்டாலும் அதே தாய்மைக்கான தகவு தானே அவளை போகப்பொருளாகவும் வரித்துப்போகிறது.இன்று வீறு கொள்ளும் பெண்மையின் சாதகமான பக்கங்கள் எதையுமே அறிந்திராத, உள்ளத்தை விழுங்கி ,உடலை மட்டுமே உழைப்பிற்காகவும் உணர்விற்காகவும் முன்னிறுத்திய  அப்பாவிப் பெண்மையின் வேதனை இது.

   பித்தவெடிப்பிற்குள் புகுந்து, உயிர்துருத்தும் கற்களைப்போல தான்,அவர்களுக்கு இந்த உலகமும் அது உமிழ்ந்த பந்தங்களும்.ஒவ்வொரு பிறத்தலும் அழகுக்கோலம்.புள்ளியில் ஆரம்பித்து கோலமாய்விரிவது தான் முறை.போராடி புழுதியாகும் வெயில்காட்டில் இவர்கள் கோலமாய் விழுந்து புள்ளியாய் சுருங்கிப்போகிறார்கள்.வறுமைக்கோடு என்பது இங்கு பொருந்தாது.அடையாளமில்லா அவதரிப்புக்கள் இவர்கள்! இங்கு கோடு ஏது?
நான் அறிய, சாதியின் பால் கீழாக்கப்பட்டு கீழ்ப்பட்டே போன ஒரு கிரகம் தான் இவர்கள்.

    இப்பெண்கள் முகூர்த்தம் பார்பதில்லை.முறை,சடங்கு இவைபற்றி பேசுவதில்லை.கூடல்,ஊடல் இவை மட்டும் தான் இங்கு பந்தத்தை அமைக்கின்றன.பயிர்செழிக்க வஞ்சம் செய்யும் இந்த நிலத்திணிவில், கருச்செழிப்பிற்கு பஞ்சமில்லை.விபரீதமாய்,விபத்தாய் என முண்டியடித்துக்கொண்டு நீண்டு கொள்கிறது,இந்த குடும்பங்களின் பிள்ளைப்பட்டியல்.


  இந்தவேதனைகளுக்குள் வெளிச்சம் என்பது ஒரு கீறலாய் கூட விழ மறுக்கிறது.மது ,மாது இவற்றிற்கு மண்டியிடுவது மேல்வர்க்ம் மட்டுமல்ல.இங்கும் தான்.கோட்டானுடன் விழித்தபடியே புலர்கிறது வேதனைக்கான ஆரம்பங்கள்.இங்கே கட்டில் கோப்பி இல்லை,காலை உணவு இல்லை.கூட்டு,பொரியல் என்ற நேரவிரயம் இல்லை.கூழ்,கஞ்சி என்ற வழமைதான் இங்கு.பாதிநேரம் கடந்தபின் பள்ளிசெல்லும் பிள்ளைகள்.முக்கால் நாள் பொழுது முடிந்த பின்தான் மறுபடியும் வீட்டிற்கு...!ஆங்காங்கே புளியமரமும்,வேலிகள் விட்டுக்கொடுத்தால் விளாத்தியும் வழியில் பசிகுறைக்கும் பெருமரங்கள்.

    பேதைகளாக வாழ்ந்து பழகிவிட்ட அப்பாவி மக்கள்.இங்கு தான் ""மதுவை படைத்தவன் பாழ்படட்டும்"" என்று சபிக்கத்தோன்றுகிறது.உழைப்பதும் குடிப்பதும் கழிப்பதும் என கணவனின் கடமை இங்கு.கண்ணீரிலிருந்து,இரத்தம்வரை இரண்டுமே பிசுபிசுப்பது பெண்மையில் ஆழங்களில் தான்.!:(காலை கொஞ்சல்,மதியம் ரத்தம் இதோ இப்போ கூடல் என விரியும் இப்பெண்கள் வாழ்வு.! பாரதி உறங்கிய இடைவெளிகளில் தான் இவர்கள் பிறந்தார்களோ??

   வெயில் காடு இது.இப்பெண்மைக்குள் மென்மை தேடுவது முட்டாள் தனம்.கல்லைப்பிழிவது தான் கஞ்சிக்கு வழி என்ற ஆன பின் கைரேகைக்கு கவனம் சொல்வது எப்படி??அத்தனை நரம்புகளிலும் இறுக்கம்.  ஒவ்வொரு இமைத்தலுமே  நலிந்து நீண்ட ஏக்கம்..!அது நிம்மதி வாஞ்சிக்கும் ஏக்கம்.இதை பார்த்த கணங்களை விட இப்போது ஆவணப்படுத்தும் இந்த நொடிகளில் தான் அவர்களின் விசும்பல்  பலமாய் எதிரொலித்து என்னைக் கடந்து கொல்கிறது.

   வரண்டு போன அந்நிலங்களை போலதான் இத்தாய்க்குலத்தின் வாழ்கையும் கனவும் வெந்து கிடக்கிறது.அவர்களும் ஏனோ நெடுநாள் நீருற்றுகளை தேடாமல் "அன்றைய அப்பமும் தண்ணீரும்"போதும் என பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.ஒவ்வொரு புலர்விலும் இரப்பதற்கும்,இறப்பதற்கென்றுமே தங்களை தயாரித்துக்கொள்கிறர்கள்.எத்தனை பழிச்சொல்,கேலிப்பேச்சு,நாய்க்குரைப்பு விரட்டினாலும் ஏனோ இத்துப்போகாததாய்த் தான் காட்டிக்கொள்கிறார்கள் தம் இதயத்தை.!:(
    

 ""அவள் கண்களில் வெளிச்சமில்லை.
அந்தத் தோல்களில் ஈரப்பசை இல்லை.
துருத்தும் கழுத்தடி என்புகள் சொல்லின அவள் இருக்கிறாள்என்று.
பிள்ளைக்காய் பரிந்துரைக்கையில் தான் தெரிந்துகொண்டேன்,
அவள் தாய் என்று,
இத்தனையும் தாண்டி 
இறந்து கொண்டே இருக்கத் தெரிந்ததால்
சொல்கிறேன் அவள் பெண் என்று"". 
                   
     இதை தவிர வேறேதும் சொல்லத்தெரியவில்லை.
இதை எங்கு முடிப்பது என்று தடுமாறுகிறேன்.இருப்பினும் உள்ளிருந்து உயிர் உறுத்திய  முள் ஒன்றை சொந்தங்களிடம் இறக்கியதால் திருப்தி.இனியொரு தரம் இவளாய்ப் பிறந்தெனினும் இவள்குலம் மீட்கவேண்டும்.கவிஞன் பாரதி வேண்டாம்.புரட்சிப்பாரதி தான் இங்கு வேண்டும்....!

                                                                                                                             நேசங்களுடன் 
                                                                                                                            -அதிசயா-
  


  
 

76 comments:

  1. பெண்ணாய் பிறத்தலுக்கு மாதவம் செய்ய வேணுமம்மா
    என்று சொல்லி பிதற்றி ..
    பெண்ணினத்தை இன்னும் அடிமைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்..
    ஆயினும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் குறைந்துவருகிறது சகோதரி...
    எதிர்காலத்தில் இனமென்றால் மனித இனமோன்றே
    ஆணும் பெண்ணும் உணர்வால் ஒன்றானவர்கள் என்ற எண்ணம்
    உதிக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய தலைமுறையை நகர்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!நீங்கள் சொல்வது சரிதான்.நம்பிக்கையோடு தான் வாழ்ந்தோம் வாழ்கிறோம்.வென்று விட்டால் மகிழ்ச்சி.

      அதிலும் ஏழைப்பட்ட கிராமஒதுக்குகளிலெல்லாம் இந்த மறுமலர்ச்சி போவதில்லை.:(
      சந்திப்போம் சொந்தமே!

      Delete
  2. மரபுப்பிழை அறுத்து
    காட்சிப் பிழைகளை
    இடமாறு தோற்றத்தால்
    களைவோம்...

    ReplyDelete
    Replies
    1. களைவோம் சகோதரமே!

      Delete
  3. பிணத்துக்குள்ள மதிப்புக்கூட இல்லை உயிருள்ள பெண்ணுக்கு.சும்மா சும்மா பெண்ணில்லையென்றால் வாழ்வில்லையென்று வாய் இனிக்க சொல்கிறார்களே தவிர உள்லம் நனைத்து வரும் வார்த்தையல்ல அது.

    அதிசயா....உங்கள் வார்த்தைக்கோர்வைக்குள் அந்தப் பெண் நிச்சயம் ஒரு இதம் காணுவாள்.அத்தனை சுகம் தரும் அவளுக்காக வாதிடும் வார்த்தைகள் அழகு !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!வார்த்தைகள் கூட தேன்பூசி வருகின்றன.
      அவள் பாவம்,அவளுக்கேது படிப்பறிவு.இது அவளிற்கான குரல் அதனால் அறிவாள் ஒருநாள்.!
      சந்திப்போம் அக்கா.

      Delete
    2. நன்றி அக்கா...!:)

      Delete
  4. தற்ப்போது இந்நிலை மிகவும் வேகமாக மாறிவருகிறது விழிப்புணர்வு இருந்தால் இன்னும் வேகமாக மாறும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே.!மாறினால் மகிழ்ச்சி.ஆனாலும் பின்னடைந்த வறுமைக்கிராமங்களில் இதைற்றி பேசுவார் யார்?உங்கள் ஊரின் உயரப்புலத்தின் கடைக்கோடியை என்னிப்பாருங்கள் சொந்தமே!மிக்க நன்றி வருகக்கும் கருத்திற்கும்.சந்திப்போம்.

      Delete
  5. பொதுவாக பெண்களைப் பற்றிய இல்லை தாயைப் பற்றிய நல்லெண்ணம் எப்போதுமே என் இதயத்தை பரப்பியிருக்கும். தாய்க்கு நிகர் தாயே தான்...அதே போல் பெண்ணுக்கு நிகர் பெண்கள் தான்.......

    எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாயை தாயாகவே பார்க்க வேண்டும் என்ன புண்ணியம் செய்தாலும் அது அவர்களுக்கு சிறு துளியேனும் ஈடாகாது.....

    இந்த நிலைமைகு காரணம் எதை சொல்லுவது ...காரணம் தேடினால் சொல்லிக் கொள்ள ஆயிரமாயிரம்.......

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிட்டுக்குருவி வணக்கம்.தங்களின் உணர்வுகளை மிகவே மதிக்கிறேன்.பெருமைப்படுகிறேன்.

      இந்த உயர்வு தான் எங்கும் வேண்டும்.மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  6. தாயைப் போற்றுவோம்........

    ReplyDelete
    Replies
    1. தாயை போற்றுவோம்.:)

      Delete
  7. பொதுவாய் குறிப்பிட்ட வரிகளை குறிப்பிட்டு சொல்வது வழக்கம், அணைத்து வரிகளும் குறிப்பிடும் படி இருப்பதால் பொதுவாய் சொல்கிறேன்...

    உங்கள் மனச் சுமை கொஞ்சம் இறங்குவதாக நினைக்கலாம், ஆனால் படிப்பவர் மனச் சுமை அதிகம் ஆகியது என்பதே உண்மை தோழி...
    ஒரு பெண்ணின் வேதனையை பெண்ணை இருக்கும் நீங்கள் படம் பிடித்துக் காட்டியது அருமை.. பித்த வேடிபினுள் குத்தும் கல், பாரதி உறங்கிய வேளை என்பது போல் பல வரிகள் மனதினுள்; கேள்விகளை எழுப்புகிறது..

    உங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சீரிய சீரியஸ் பதிவு... சொல்ல வேண்டியதை சொல்லிச் சென்ற விஹ்தம் தெளிவு...

    த ம வில் ஓட்டளித்துவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!
      உங்கள் ரசனைக்கு மிகவே நன்றி:).என்னுளும் ஏராளம் கேள்விகள் சொந்தமே!காலம் தான் பதிலாய் மாற வேண்டும்.மிக்க நன்றி.விரைவில் சந்திப்போம்.:)

      Delete
  8. கால மாற்றம் இப்போது மாற்றம் கான்கின்றது பெண்மையின் பால என்பது நிதர்சனமாகின்றது கடந்த காலச்சுவடுகள் கழிந்து போக கொஞ்சம் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கையுண்டு மன உணர்ச்சியை வார்த்தையாக்கி விட்டீர்கள்§

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. நனறி சொந்தமே!அங்க விடிந்தால் தான் எங்கும் விடிந்ததாக ஏற்றுக்கொள்வேன்.சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
  10. பெண்மை போற்றும் ஒரு பதிவு..சொன்ன விசயத்துக்கான வார்த்தை தேடல் மற்றும் கோர்வை அருமை.உணர்வுகளை வார்த்தைகளில் இறக்கி வைத்திருக்கிறீர்கள்.ஆழமாக யோசிக்க வைக்கும் பதிவு.
    கவிஞன் பாரதி வேண்டாம்..புரட்சிக்கவிஞன் பாரதி வேண்டும் என்று முடித்தீர்களே..சபாஷ்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!தங்களின் சந்திப்பு மகிழ்ச்சி.மிக் நன்றி.நானும் மாறுகிறேன்.எலகும் மாறும்.மிக்க நன்றி சொந்தமே!விரைவில் சந்திப்போம்.!

      Delete
  11. பெண்மை காலம் காலமாக போகப்பொருளாகவே பார்க்கப்படுகிறது! இது மாற வேண்டும்..,மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!காத்திருக்கிறோம்.மெய்ப்படுதல் வேண்டுமென்பதே என் பிராத்தனை.மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  12. இதை எங்கு முடிப்பது என்று தடுமாறுகிறேன்.இருப்பினும் உள்ளிருந்து உயிர் உறுத்திய முள் ஒன்றை சொந்தங்களிடம் இறக்கியதால் திருப்தி.இனியொரு தரம் இவளாய்ப் பிறந்தெனினும் இவள்குலம் மீட்கவேண்டும்.கவிஞன் பாரதி வேண்டாம்.புரட்சிப்பாரதி தான் இங்கு வேண்டும்....!//


    அடி மனம் வரை மிக மிக ஆழ்மாய்
    ஊடுருவிச்செல்லும் ஆக்ரோஷமான பதிவு
    படித்து முடித்து சம நிலை அடைய சிறிது நேரமானது
    கருவும் நடையும் இதைப் படிப்பவர் மனதில்
    ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்திப் போகும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.
      மிக்க நன்றி.இதை எழுதும் போதும் என்னிடம் சமநிலைக்குழப்பம் ஐயா,சீக்கிரம் இந்நிலை மாற ◌பிராத்திப்போம்.மீண்டும் சந்திப்போம் சொந்தமே!

      Delete
  13. பிள்ளைக்காய் பரிந்துரைக்கையில் தான் தெரிந்துகொண்டேன்,
    அவள் தாய் என்று,

    இதை தவிர வேறேதும் சொல்லத்தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. புரிந்துகொணடடீர்கள் தாய்மையின் மேன்மையை.மிக்க நன்றி சொந்தமே.சந்திப்போம்.!

      Delete
  14. //பெண் என்ற பிறப்பு சுகம் அடைத்த சதைப்பிண்டமாக நோக்கப்பட்டது கடந்து போன தலைமுறையின் நோய்.ஆனால் இன்றும் தொடரும் அவலம்//

    உண்மை தான் இந்நிலை மாற வேண்டும் அன்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!நிச்சயம் இதயம் கொண்ட மனிதரின் பிராத்தனை இதுவாகத்தான் இருக்கிறது.சந்திப்போம் அன்பரே!

      Delete
  15. பெண்மையை போற்றும் தன்மை எத்தனை பேருக்கு உள்ளது..?

    தன் தாயைப் போற்றும் பல மனிதர்கள், தன் துணைவியை போற்றாதது ஏன்? அவர்களும் தாய் தானே ? இன்னும் நிறைய சொல்லலாம்.

    ஆனால் இவை எல்லாம் மாறிக் கொண்டு வருகிறது.
    மாறும். மாற வேண்டும்.. மாறிய தீரும்...

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!அதுதானே?நியாயமான கேள்வி.கேள்விகள் ஏராளம்.பதில்கள் தான் பஞ்சப்பட்டுப் போகிறது.மிக்க நன்றி சொந்தமே!:)சந்திப்போம்!

      Delete
  16. Miga arumai. 4n il than vasiththen. Virivana karuththai kanini nilaiyam sendru idugiren. Thangalidam oru korikkai. Engal Malaiyagam pattriya oru padhivai thangalidam irundhu edhir parkkiren.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!அன்பான அழகான வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.நிச்சயமாய் உங்கள் கோரிக்கைக்கு கடமைப்பட்டுள்ளேன்.ஒரு தடவை அந்த நிலைமைகளின் சாயல்களை என்னுள் உள்வாங்கி பதிவிடுகிறேன்.சந்திப்போம் சொந்தமே!

      Delete
    2. #பெண் என்ற பிறப்பு சுகம் அடைத்த சதைப்பிண்டமாக நோக்கப்பட்டது கடந்து போன தலைமுறையின் நோய்.ஆனால் இன்றும் தொடரும் அவலம் இது.தாய்மைத் தன்மை ஒருபுறம் தெய்வீகமாக போற்றப்பட்டாலும் அதே தாய்மைக்கான தகவு தானே அவளை போகப்பொருளாகவும் வரித்துப்போகிறது.இன்று வீறு கொள்ளும் பெண்மையின் சாதகமான பக்கங்கள் எதையுமே அறிந்திராத, உள்ளத்தை விழுங்கி ,உடலை மட்டுமே உழைப்பிற்காகவும் உணர்விற்காகவும் முன்னிறுத்திய அப்பாவிப் பெண்மையின் வேதனை இது# அருமையான வரிகள். தங்கள் பார்வைக்கு என் நண்பர்கள் இருவரின் தளங்களை சமர்ப்பிக்கிறேன்.
      [1]http://varikudhirai.blogspot.com/
      [2]http://skaveetha.blogspot.com/

      Delete
    3. மிக்க நன்றி சொந்தமே தங்கள் ரசனைக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.நிச்சயம் நண்பர்கள் தளம் பார்க்கிறேன்.:)

      Delete
  17. மனதை பிசைகிறது....நிலைமை மாறி வருவது என்னமோ உண்மைதான் ஆனாலும் இந்த வலிகள்....?!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!இந்த வலிகள் ஆற நீண்ட காலம் தேவை.அதுவரை சிறிய ஆறுதலேனும் கிடைத்தால் மகிழ்ச்சி.மிக்க நன்றி தங்கள் கருத்திற்காய்.:)சந்திப்போம் சொந்தமே

      Delete
  18. உண்மை
    வலி பொதிந்த வரிகள்
    ரெம்ப ஆழமாய் சொல்லப்பட்டு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி.விரைவில் சந்திப்போம் !:)

      Delete
  19. வரண்டு போன அந்நிலங்களை போலதான் இத்தாய்க்குலத்தின் வாழ்கையும் கனவும் வெந்து கிடக்கிறது.அவர்களும் ஏனோ நெடுநாள் நீருற்றுகளை தேடாமல் "அன்றைய அப்பமும் தண்ணீரும்"போதும் என பழக்கப்படுத்திக்கொண்டார்கள்

    அனைவரது வாழ்க்கையும் இப்படித்தான் உறவே, எளிதில் கிடைப்பனவற்றை எண்ணி நாம் போதும் என்று நிறைவு அடைந்து விடுகிறோம். நாம் யாரும் நிரந்தர நிறைவைப் பற்றி எண்ணுவதில்லை, தற்காலிக முடிவே போதும் என நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!
      ஓரளவு உடன்படுகிறேன் உங்கள் கருத்தோடு.உண்மைதான்.ஆனால் நான் கண்ட மக்களில் இந்நிலை மோசமாக வேருன்றி இருப்பதாய் உணர்கிறேன் எங்களைக்காட்டிலும்.மிக்க நன்றி உங்கள் வருகைக்கும கருத்திற்கும்.விரைவில் சந்திப்போம் சொந்தமே!

      Delete
  20. இரண்டு நாட்களுக்குமுன் தான் பெண்மை குறித்து ஒரு புதினம் படித்தேன்.... இப்போது இங்கே பெண்மை குறித்த பகிர்வு..

    வலி நிறைந்த வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி இப்பான தங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும்.சந்திப்போம்.:)

      Delete
  21. நிஜ உலகின் கொடூர முகத்தை வெளிக்காட்டும் பதிவு. ஆனால் மீட்பதற்கு இன்றைய காலத்தில் பேனா ஏந்தும் புரட்சிப்பாரதி போதாது. தேவையான இடங்களில் வன்முறையை வன்முறைக்கெதிராக கையாண்டாலே இந்த சமுதாயம் மாறும்.

    ReplyDelete
  22. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி.ஆமாம்.நிச்சயமாக தான்...!

    ReplyDelete
  23. அருமையான ஆதங்கமான பதிவு தோழி அதிசயா. அதிசயாவின் எழுத்துநடையில் பிறக்கட்டும் புரட்சிபாரதி.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி தங்கள் ஆசிகளுக்காய்.:)சந்திப்போம்.

      Delete
  24. sako!

    kannerai vara vaiththathu!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி தங்கள் வருகைக்கு:)

      Delete
  25. வெயில் காடு இது.இப்பெண்மைக்குள் மென்மை தேடுவது முட்டாள் தனம்.கல்லைப்பிழிவது தான் கஞ்சிக்கு வழி என்ற ஆன பின் கைரேகைக்கு கவனம் சொல்வது எப்படி??அத்தனை நரம்புகளிலும் இறுக்கம்.“

    சில மலர்கள் கொடியிலும் மலர்கிறது
    சில கள்ளிச்செடியிலும் மலர்கிறது.

    ஆனால் மலர்கள் எல்லாமே மென்மைதான். மேன்மைதான் சொந்தமே...
    உங்கள் படைப்பு உயர்ந்த வார்த்தைகளின் கோர்வை கூரிய அம்புகளால் குத்துகிறது...
    ஆழங்கான முடியாத படைப்பு...!!!
    வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே:)இனிய சந்திப்பிற்கு நன்றி.
      சில மலர்கள் கொடியிலும் மலர்கிறது
      சில கள்ளிச்செடியிலும் மலர்கிறது.ஃஃஃஃ
      ஒத்துக்கொள்கிறேன் சொந்தமே!இங்கு மென்மை இயற்கையில் பறிக்கப்படவில்லை.சந்தர்பங்களால் இவர்களே தம் மென்மைகளை மறைத்துக்கொண்டார்கள்,மறந்து போனார்கள்.ஆனாலும் மேன்மை இன்னும் சாகவில்லை.அதனால் தான் இங்கும் இவர்கள் பேசப்படுகிறார்கள்.
      மிக்க நன்றி உங்கள் அன்பான ஆதரவிற்கு.தொடர்ந்தும் சந்திப்போம்.

      Delete
  26. அழகான அலசல்...

    ஆனால் இப்போ எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள் பெண்கள்.. இருப்பினும் சில இடங்களில் இன்னும் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா.:)நலமா???
      உண்மை.ஆனால் இங்கும் விடியவேண்டும்.அப்போது தானே அது நியாயமான விடிவு.மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  27. வணக்கம்ஃதங்களின் அறிமுகம் மகிழ்ச்சி;மிக்க நன்றி.தங்கள் தளத்திற்கு வருகிறேன்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!:)

    ReplyDelete
  28. வலிகளை வலி சுமந்த வார்த்தைகளுடன் தந்திருக்கும் பதிவு! முன்பை பார்க்க பெண்கள் இப்போது எவளவோ முன்னேறிவிட்டார்கள் என்ற போதும் , சில சமூகங்களில் இன்னமும் உங்கள் பதிவில் சொல்லப்பட்டவர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்!

    ReplyDelete
  29. வணக்கம் சொந்தமே!சரியாகப்புரிந்துகொண்டீர்கள்..மிக்க நன்றி.எங்கும் விடிந்தால் தான் மகிழ்ச்சி.சந்திப்போம்.

    ReplyDelete
  30. வலியின் ஆழம் வரிகளில் பொதிந்துள்ளன.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சொந்தமே!!!சந்திப்போம்.

      Delete
  31. பேதைகளாக வாழ்ந்து பழகிவிட்ட அப்பாவி மக்கள்.இங்கு தான் ""மதுவை படைத்தவன் பாழ்படட்டும்"" என்று சபிக்கத்தோன்றுகிறது.உழைப்பதும் குடிப்பதும் கழிப்பதும் என கணவனின் கடமை இங்கு.கண்ணீரிலிருந்து,இரத்தம்வரை இரண்டுமே பிசுபிசுப்பது பெண்மையில் ஆழங்களில் தான்.!:(காலை கொஞ்சல்,மதியம் ரத்தம் இதோ இப்போ கூடல் என விரியும் இப்பெண்கள் வாழ்வு.! பாரதி உறங்கிய இடைவெளிகளில் தான் இவர்கள் பிறந்தார்களோ??

    வலிகள் நிறைந்த வரிகள் :( மனம் கவர்ந்த பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் பொறுமையான ரசித்தலிற்கும் மிகவே நன்றி சொந்தமே!!!!!!

      Delete
  32. இத்தனையும் தாண்டி
    இறந்து கொண்டே இருக்கத் தெரிந்ததால்
    சொல்கிறேன் அவள் பெண் என்று"".
    /// ஒரு வாசகமானாலும் திருவாசகம்! எதை சொல்வது எதை விடுப்பது என்றே தெரியவில்லை! இதயம் ரணமாகிறது... உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் communicative skill உங்களுக்கு இறைவன் அளித்த வரம்... ரொம்பவும் powerful ஆனா எழுத்து உங்களுக்குத் தோழி! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!தங்களின் சந்திப்பு பெரு மகிழ்ச்சி.மிக்க நன்றி இந்த அன்பான வருகைக்கும் அழகான ஆர்வமான பின்னூட்டத்திற்கும்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!

      Delete
  33. http://manaththooralgal.blogspot.com

    idhuvum namma thalam thaan. Neram kidacha vaanga.

    ReplyDelete
  34. Replies
    1. பெண்மை குறித்தான மிகசரியான ஆக்கம் இருந்தாலும் இங்கு புரதான பொதுவுடமைக் காலந்தொட்டு பெண்மை விலை போகிறவளாக இருக்கிறாள் காரணம் குமுகக் கேடர்கள் ஒருபக்கம் இருந்தாலும் பெண்ணின் உடலமைப்பும் இயற்கையின் கொடுமையும் அடக்கமாகிறது .சிலர் பெண்மைக்குள்ளே தன்னை முழுவதாக புதைத்துக் கொண்டு சேற்றில் சறுக்குகிறார்கள் . பலர் வெளிச்சத்தில் இருந்தே சாக்கடை புகுகிறார்கள் . போகப் பொருளாக்குவதும் போக பொருளாகிப் போவதும் இந்த குமுகத்தின் சாபங்களாக இருந்தாலும் சங்கடம் மட்டும் பெண்மைக்கே இருப்பிமும் விழித்தெழ வாய்பிருந்தும் விட்டில் களாக மடிவது அறியாமையும் ஒன்றாகிவிடுகிறது காலம் பதில் சொல்லலாம்.......

      Delete
  35. இங்கு அறியாமையும் உண்டுஇஅறிவும் உண்டு.சிலர் சூழ்விலைக்கைதிகளாகவும் மாறிப்போகிறார்கள்.மிக்க நன்றி அக்கா.தெளிவுபடுத்தல்களுக்காய்

    ReplyDelete
  36. பெண்மையின் வளர்ச்சிப் படிக்கற்களை தாங்கி நிற்கிறது பதிவு...

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் வளரவில்லை என்று தான் எண்ணத்தோன்றுகிறது அண்ணா...!

      Delete
  37. மிக்க நன்றி சுதாண்ணா..!சந்திப்போம்.

    ReplyDelete
  38. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_3.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வணக்ம் சொந்தமே.இது நம்ம வீடு பாஸ்.எத்தினை தரமும் வரலாம்.....இப்போது தான் பார்த்தேன்.மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும் அன்பான அறியப்படுத்தலிற்கும்.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  39. பெண்ணை பிறந்திட
    பெரும் பாவம் செய்திடல் வேண்டும் போல

    மீண்டும் ஒரு பிறப்பு நிச்சயம் வேண்டாம்
    என்றே மன்றாடுது மனம் ...........

    இயலாமைகளை
    கண்ணீராகவும்
    எழுத்தாகவும் மட்டுமே

    வெளியிடமுடிகிறது
    கனம் கொண்ட பதிவு தோழி ........

    வலி மிகுகிறது

    ReplyDelete
  40. வணக்கம் இனிய சொந்தமே!எங்க போய்டீங்க????மிக்க சந்தோசம் தங்களை கண்டதும் வாழ்த்துக்கள் பெற்றதும்.
    நிச்சயமாய் பல தருணங்களில் இந்த ஐனனம் போதும் எனத்தான் தோன்றுகிறது..
    சந்திப்போம் சொந்தமே!!

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகளில்
      அன்பை வடித்து
      வசபடுத்திவிட்டாய் என்னை
      மகிழ்ச்சி

      Delete
    2. இந்த அன்பில் இதம் இருக்கிறது சொந்தமே!

      Delete
  41. வாழ்த்துக்கள்.சந்திப்பபு சிறப்புறவாழ்த்துக்கள்; சொந்தமே!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...