Friday, July 20, 2012

வலை விடு தூது!!!


ஐயா பெருமகனே!!
உயர்கல்வி அமைச்சரே!
வடக்கின் நுனியிலிருந்து
பெரும் பிரயத்தனப்பட்டு குரல் தூதொன்று அனுப்பினேன்.
ஓடிப்போய்விடு
""நாங்களெல்லாம் பகிஷ்கரிப்பு""
விரட்டி அனுப்பியது காற்றலை.
உவ்விடம் வந்து மனுக்கொடுக்கவா??
யோசித்தேன்.
இருவழிப்பயணமா??இப்போதைக்கு வாய்ப்பில்லை
பட்டினிப்பாவலனாய் கைவிரித்தது வீட்டுக்கஜானா!!
வழியேது???கடைசிவழி இதுதான்.!


ஐயா அறிவாளியே!
அப்படியே பிற்குறிப்பொன்று உமக்காய்.
சிறப்பாய் சீவிக்கத்தான் நினைத்தேன்.
இன்று சித்தம் இத்து உக்கிப்போகிறது!
பின்னாளில் பித்தாகிப்போனால்
முன்னுரித்து,பின்னனுருத்து இரண்டுமே உமக்குத்தான்.!!!


மூன்றரை ஆண்டுகள் :((
முக்கால் டிகிறி முடிக்கவேண்டிய அனுபவம்
பள்ளிவாசலிலே நின்றுகொண்டது காலம்.
முக்கி முயன்று உயர்தரம் முடித்துவிட்டேன்.
அதோ அங்கே,இல்லையில்லை இங்கே என்று
திறமையாய் ஏய்த்துவிட்டீர்
நான்கு மாதங்கள்.!!!

பண்டிகைக்காய் அலங்கரித்த மார்கழிக்காலையொன்றில்
அறிக்கைவிட்டார் பரீட்சை ஆணையாளர்!!
""இன்று நண்பகல்12  மணிக்குபெறுபேறுகள் ""
கேட்டதிலிருந்து தாயார் செய்தேன்.
குளியலறை போய் கண்ணாடி தேடி,
கொஞ்சமாய் சிரித்து,பஞ்சமாய் அழுது
ஆச்சர்யபாவம் எனக்கு சரியாகுமா?? செய்முறை பார்த்து
இப்படியாய் ஏகப்பட்ட ஆயத்தங்கள்.!

மு.ப,பி.ப தாண்டி முன்னிரவாகியும் கதை கசியவில்லை.
பின்னிரவின் கோடியொன்றில்
அவசர அழைப்பெடுத்தான் அண்ணன்.
உள்ளே 1000 மைல் வேகத்தில் ஆசைக்காற்று!
அவசரத்தில் எந்த பாவம் வாய்த்தென்று கவனிக்க மறந் விட்டேன்.!
காதருகில் மச்சம் அதிஷ்டம் என்பது மெய்தானோ??
வென்று விட்டதாய் தான் நினைத்தேன்.

இரண்டு நிலவுகள் சிரித்துப்போனது.
மூன்றாம் பகலில் விட்டீர் பாரும் மறு அறிக்கை.
இசட் புள்ளி மாற்றம்,மாவட்ட நிலை திருத்தம்.
இன்னொரு ஒத்திக்கையும் தயார்செய்து 
பார்த்தேன்,அப்பாடா!
தப்பிவிட்டேன்.

என் சிரிப்பையெல்லாம் தின்றவிட்ட சிரிக்கிறீர் ஐயா!!
இரண்டு வாரம் பொறுத்தால் பரீட்சை முடிந்து ஓராண்டு நிறைவு.
அழைப்பனுப்புகிறேன்.வாருமையா விருந்திற்கு!!!!
நீதிமன்று தீர்பளித்தால் புரியவில்லை என்கிறீர்கள்..!
புதிதாய் புதிராய் எதுவுமே  சொல்லவில்லையே,
வாருமய்யா மறுபடி படிப்போம் முன்பிருந்து!

இப்போது சொன்னீர் பாரும் மற்றொரு அறிக்கை.
திரிஷாவிற்கு கிசுகிசுபோல 
உமக்கும் வாடிக்கை செய்தியாகி விட்டது நம்பாடு.
"பரீட்சைப்பெறுபேறுகள் இரத்து"
இரத்தம் கொதிக்கிறது அமைச்சரே!

பருவமழை பொய்யான வெயில்காடு இது!!!.
வாழ்ந்து பாரும்,புரியும் உமக்கும்!
அதிகாரி ஐயாவே..
உம்வீட்டு கணக்கறிக்கையா கேட்கிறேன்?????
கனவின் முதலீட்டை தானே கேட்கிறேன்.

பரிதாபமாய் பார்கிகிறார்கள்.
துயரம் விசாரிக்கிறார்கள்.
முதுகின் பின் சிரிக்கிறார்கள்.!
"மகள் இப்போ என்ன செய்கிறா?? "
உம் வாசல் அனுப்பி வைக்கிறேன்-இனி நீரே பதில் சொல்லும்.

சரிசரி
பல்கலைக்கு கூப்பிட்டு
என்ன கிளிப்பீர்கள்??
நான்கு வருடமும் பகிஷ'கரிப்பிற்கு பழக்குவீர்!
பின் பட்டாதாரி முன் மற்றொரு பட்டம்"வேலையில்லா......."

நாற்பதுகளின் நடுப்பகுதியில்
நிவாரணமாய் நியமனம் தருவீர்.
நடனப்பயிலுனரை நகரசபைக்கு அனுப்புவீர்,
கணக்குப்பயிலுனரை கடைத்தொகுதிக்கு அனுப்புவீர் !!
வாழ்க உம்பணி.
சாபங்கள் பலிக்குமென்றால் செத்திருப்பீர் அன்றெப்போதோ!!!
                                                                                                                                        -அதிசயா-





 

49 comments:

  1. இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் கண்டேன்.. படித்துகொண்டிருக்கிறேன்.. இணைத்துக்கொண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்க வாங்க!!!மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்!

      Delete
  2. நல்லதொரு பகிர்வு !
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!நிச்சயமாய்.சந்திப்போம்.

      Delete
  3. இலங்கை பதிவர் போல் இருக்கிறது.. செமையா இருக்கு வரிகள்.. வாழ்த்துக்கள் அக்கா.. (எல்லாம் வருஷ கணக்கு கண்டுபிடிப்பு தான்)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!இலங்கையே தான்.தம்பி....!நான் 91 ஆக்கும்.

      Delete
    2. அப்ப மாத கணக்கில் இருக்கும்... உங்க கவிதை அரசாங்கத்துக்கு கேட்டுட்டு போல..

      Delete
  4. நல்லதொரு மனக்குமுறல்.........
    நிச்சயமாக இப்படியான மடல்கள் அதிகாரிகளை சென்றைடய வேண்டும் பரீட்சை முடிந்து எவ்வளவு காலமாப் போச்சு..

    இந்த அரசாங்கத்துக்கு எல்லாமே விளாட்டாப் போச்சு......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்க.ஆமா...பூனைக்கு விளையாட்டாம் சுண்டெலிக்கு உயிர் போகுதாம்..இந்தக்கதை தான் மூசா.சந்திப்போம்.

      Delete
  5. கடைசில செமயையா முடிச்சிருக்கிரீங்க.....அழகாக இருக்கிறது...இன்னமும் பல்கலை போற ஐடியாவோடதான் இருக்கிரீங்களா..? :(

    ReplyDelete
    Replies
    1. நன்றிப்பா...தேசிக்கா சூனியம் வச்ச போல வீட்டாக்கள் போ எண்டு அடம்பிடிக்கிளம்.சிங்கம் சிக்காதுல்ல...:)இன்டைக்கும் இத பத்தி தான் பேசி சிக்கலாகிகோச்சுப்பா.

      Delete
  6. பருவமழை பொய்யான வெயில்காடு இது!!!.
    வாழ்ந்து பாரும்,புரியும் உமக்கும்!
    அதிகாரி ஐயாவே..
    உம்வீட்டு கணக்கறிக்கையா கேட்கிறேன்?????
    கனவின் முதலீட்டை தானே கேட்கிறேன்.

    பரிதாபமாய் பார்கிகிறார்கள்.
    துயரம் விசாரிக்கிறார்கள்.
    முதுகின் பின் சிரிக்கிறார்கள்.!
    "மகள் இப்போ என்ன செய்கிறா?? "
    உம் வாசல் அனுப்பி வைக்கிறேன்-இனி நீரே பதில் சொல்லும்.

    அருமை சகோதரி.
    ஆதங்கங்களும் வேதனைகளும் வெடித்து வெளிவருகின்றன ............
    உங்கள் அனைவருக்காகவும் இறைதொழா நான் தொழுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே.இந்த சந்திப்பு மகிழ்ச்சி.
      ஆமாம்.அத்துணை ஆத்திரம் வருகிறது.மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  7. நல்லதொரு கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!நன்றி!சந்திப்போம் சொந்தமே!

      Delete
  8. என்னத்தை சொல்லுறது உங்கள் ஆதங்கம் புரிகின்றது

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி!சந்திப்போம.!

      Delete
  9. இப்போதான் புரியுது. நான் எழுதுவதெல்லாம் தமிழே அல்ல என்று. சிறப்பாக இருக்கிறது உங்களது ஆதங்கத்தின் வெளிப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!
      மிக்க நன்றி வருகைக்கு.ஏன் பாஸ்!!!தன்னடக்கம் என்றது இது தானோ?:)
      சந்திப்போம் சொந்தமே!

      Delete
  10. எல்லா இடங்களிலும் இது தான் நிலை போல்... அதை அழுத்தமாய் சொன்ன உங்களுக்கு அழுத்தமான வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!!என்று தீரும் இந்த சுதந்திரதாகம் :(!
      நன்றி சொந்தமே.சந்திப்போம்.

      Delete
  11. நன்றி சொந்தமே!

    ReplyDelete
  12. தமிழில் புகுந்து விளையாடுகிறீர்கள்...

    சொல் வறுமையில் வாடும் என் கவிகளுக்கும் ,"எனக்கும் " பொறாமையாக உள்ளது ...!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!நமக்குள்ள என்னம்மா???நன்றி.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  13. இதுக்குத்தான் நாங்கள் எல்லம் உத பரீட்சைக்கு பம்பல் விடப்போன் இப் சந்தோசமாய் இருக்குறம் எதையும் மாத்தி யோசிக்கனும்.hehehehehehe

    ReplyDelete
    Replies
    1. :) :( சந்திப்போம் சொந்தமே!

      Delete
  14. மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
  15. அருமை தமிழில் நல்ல பதிவு அதிசயா..... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. அருவி கொட்டியதுபோல் ஆதங்கத்தை அழகிய கவிதை வரிகளால் கொட்டித் தீர்த்த விதம் அருமை சகோ!!!!.......மேலும் தொடுக்க வாழ்த்துக்கள்
    கவிதையால் புரட்சிக் கணைகளை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே.சந்திப்பு மகிழ்ச்சி.நன்றி:).தொடர்ந்தும் சந்திப்போம.!

      Delete
  17. நெருப்பாய்த் தெறிக்கிறது வரிகள்.குறிப்பிட்டவர்கள் பார்த்தால் கொஞ்சமாவது யோசிப்பார்களா அதிசயா !

    ReplyDelete
  18. vanakam acca,ita happy to c u again in my blog.josichaga acca..bt atha vida mosamana mudiwu than.:)

    ReplyDelete
  19. மன வலியில்தெறித்து விழுந்திருக்கும் சொற்கள்,வேதனை புரிகிறது.

    ReplyDelete
  20. புரிதலிற்கு நன்றி சொந்தமே!:)சந்திப்போம்.

    ReplyDelete
  21. Indru thaan vaasiththen. Naan 2009 batch. Thappichen ponga. Arumai. Ungalai vida idha vera yarum nalla eludhiruppangalanu theriyala. Valthukkal.

    ReplyDelete
  22. நன்றி சொந்தமே!!!!!!!!

    ReplyDelete
  23. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  24. வாங்க வாங்க.இது நம்ம வீடு எப்பவும் வரலாம் சொந்தமே!மிக்க நன்றி.தளம் செல்கிறேன் சொந்தமே!

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. அருமையான பதிவு....:)அன்பான உள்ளம் நீங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!தங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சியே.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      அன்பான உள்ளமாகக இருக்கத்தான் எனக்கும் விருப்பம்.சந்திப்போம் இனிங சொந்தமே!

      Delete
  27. நடனப்பயிலுனரை நகரசபைக்கு அனுப்புவீர்,
    கணக்குப்பயிலுனரை கடைத்தொகுதிக்கு அனுப்புவீர் !!
    வாழ்க உம்பணி.


    வாழ்க உம்பணி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!புதிதான இந்தச்சந்திப்பு மகிழ்ச்சி.

      மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  28. வாழ்த்துக்கள்! வலைச்சரம் மூலம் என் முதல் வருகை!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
    Replies
    1. ணக்கம் சொந்தமே!வருகைக்கு மிக்க நன்றி!ஏலவே ஒரு தடவை தங்களை நான் அறிந்திருந்தும் தங்கள் சேர்க்கிலில் இல்லாதபடியால் இணையமுடியவில்லை.இது முதல் சந்திப்போம் சொந்தமே!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...