Wednesday, June 4, 2014

அவமானங்களை கொண்டாடுகிறேன்...!



தரிப்புகள் எது என்று தீர்கமாக தெரியாத தள்ளாட்ட பயணம் ஒன்றின் தளம்பல் படகோட்டிகள் நாங்கள்.பேரலைகளை கண்டு திகைத்தாலும் ஏதோ பிடிமானத்தை பற்றியபடி தூரத்தெரியும் சிகரம் ஒன்றிற்கான தேசம் பற்றி வலிந்தேனும் பயணிது சில தேசங்களை  வென்றுவிடுகிறோம்.

வெற்றியின் அடையாளதாரர்களாக நாம் இருந்தாலும் அக்கிரீடத்தின் உரிமைகளை பலபேருடன் பங்கிட்டுக்கொள்கிறோம்.'உன்னால் தான்...உனக்காகவே தான்..'இப்படியான் அறிக்கைப்படுத்துகிறோம்...'

ஒத்துக்கொள்ள மாட்டேன்.சில நேசங்கள் நெருக்கங்கள் வெற்றிக்கான  தொடக்கமாக இருப்பினும் நாள்பட்ட தோல்வியின் நெருடல்களும் அவமானம் கீறிப்போன பெருங்காயமும் எக் கிரீடங்களுக்கான பங்காளிகள் என்பேன்.அதற்காக  நேசிக்கிறேன்.

காத்திருந்து கண்வலித்து சித்தம் உக்க சிந்தனை வயப்பட்டே பல தேசங்களை கடந்திருக்கிறேன்..துடுப்பு வலிப்புகளின் போது இரு காதுகளை இறுக பொத்திக்கொள்வதற்காக பல தடவை துடுப்பை கைநெகிழ்ததுண்டு.படகோட்டி மாவீரன் வருவான் என்று கரை பார்த்து கண்கசிவதை விட என் கடல் பெருங்கடலாயினும் சுய பயணத்திற்கான  தீர்மானங்களுடன் நுரை தொட்டு நீந்திப்பார்த்தேன்.கடல் கோபமாயிருந்தாலும் அடத்தியில் நிதானம் புரிந்தது.

எல்லாக்கணங்களும் அதீத சிரத்தையுடன் நகர்த்தப்பட்டாலும் பேரலையாய்..பேய்ப்புயலாய் இந்த தோல்விகள் துரத்தும்.
வெள்ளி அலையில் துள்ளி விழும் மீனினம் போல இந்த வாழ்வும் அவ்வப்போது ஆனந்த நர்த்தனம் புரிகிறது.

தொலைதூர பயணி முகவரிஅற்ற சத்திரத்தில் இதமாய் ஓய்வெடுத்து மீண்டெழுவது போல இன்னதென்று அறியப்பாட இந்த நர்த்தனங்களின் மடியில் கையணைத்து
 இளைப்பாறியதுண்டு.
சமர்ப்பணங்கள் தாண்டிய தேசங்களையே நான் விரும்புகிறேன எப்போதும்.ஆனால் நன்றிகளுககும் மானசிக வணங்குதல்களுக்கும் நிச்சயம் இடம் கொடுக்கிறேன்.


 வேட்கைகாரியின் ஓர்மங்களை மிகவே ஒத்த மனோநிலை இது.கர்வம் சுமந்த துரித வேகமாயினும் நிதானங்கள் ஒருபோதும் தப்புவதில்லை.இப்பயணத்தின் எல்லைகளில் தேசங்கள் மட்டுமல்ல சில நேசங்களும்  வெல்லப்படுகின்றன.


.பெருங்கடல் கடந்து சிறு தேசம் ஒன்றை சுவீகரிக்கையில் ஒரு படைத்தளபதி போல அல்லாமல் யுவராணியாகவே எனை கண்டதுண்டு.தோல்விகளையும் கூர்கற்களையுமே என் சேனைத்தளபதிகள்.கிரீடம் சூட்டப்படும் கணங்களில் ஆகாயம் நோக்கி வெளிச்ச பாணங்களை  அனுப்புகிறேன்.அங்கிருந்து சொரியும் ஏதேனின் பூக்களோடு கொண்டாடுகிறேன் என் தோல்விகளின் வலிகளை.இங்கிருந்தே என் மகுடத்திற்கான ராஜ அலங்காரங்கள் புறப்படட்டும்.

-நேசங்களுடன் அதிசயா-

12 comments:

  1. Replies
    1. வணக்கம் சொந்தமே...மிக்க நன்றி தம் வருகைக்காய்

      Delete
  2. வணக்கம்

    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நன்றி சொந்தமே!!சந்திப்போம'.

      Delete
  3. தொடரட்டும் உங்கள் பயணம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாரதி..நன்றி.தொடர்வோம் சொந்தமே

      Delete
  4. .கர்வம் சுமந்த துரித வேகமாயினும் நிதானங்கள் ஒருபோதும் தப்புவதில்லை.இப்பயணத்தின் எல்லைகளில் தேசங்கள் மட்டுமல்ல சில நேசங்களும் வெல்லப்படுகின்றன.// நிஜம் தான் உறவே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!!1மிக்க நன்றி

      Delete
  5. மகுடத்திற்கான ராஜ அலங்காரங்கள் ..பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்....சொந்தமே சந்தோசம் இச்சந்திப்பு..மிக்க நன்றி.சந்திப்போம்.

      Delete
  6. எண்ண ஓட்டங்கள் தெளிந்த நீரோடையாய் பாய்கிறது. எழுத்துகளும் அவ்வண்ணமே பட்டுத் தெறிக்கிறது.பாராட்டுக்கள்
    தொடருங்கள் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  7. மிக்க நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...