இருள் கரு நின்று புறந்தள்ளப்பட்ட
பச்சிளம் புலர்வொன்றில் நான் நூலாகிக்கொண்டிருந்தேன்.
நெடிந்து விரிந்த முன்னைநாள்சோகம் ஒன்றை
மீள்நிரப்பி அதற்காய் வருந்திக்கொண்டிருக்கையில்...
சமாதானம் எதைனையுமே முன்னிறுத்தாமல்
முற்றுமாய் ஆழ அனுபவிக்கிறேன்..
உயிர் வலி இது என...!
பேருந்தேசத்து ராஐ◌ாக்களே
இப்போது உம்மைப்பற்றிய உயர்வுநவிற்சிகள் புனையேன்..
சேனாதிபதிகளே உம் ஈட்டி வெளிச்சங்களுக்கு சூரியத்தேரினை அழைப்பதாயுமில்லை..
சருகுப்பூமி ஒன்றில் சுதந்திர நிலவு குடிக்கிறேன்..
இப்பொழுதில் நான் நானாவே...!
இந்நிலையில் என்இயலாமையின் பக்கங்களுக்கு
வெளிச்சம் பூசுகிறேன்.
ரகசியமான தோல்விகளை ஒப்புக்கொள்கிறேன்..
அப்பா எனக்கும்
எனக்கும் ஓர் காதல் இருந்திருக்கக்கூடும்.
தேநீர்ப்பொழுதுகளில் மிதந்திருந்த தனிமைகளையும்
நெடும் பணயத்தில் எனக்குள்கேட்ட புல்லங்குழல் கீதத்தையும்
விட்டு விட்டு கட்டி பட்ட இருதயத்து ஈரங்களையும்
உங்களிடம்தருகிறேன்.
பேசாப்பொருள் பற்றி என்னோடு விவாதிக்க விரும்புகிறேன்.
விலைமகளின் கண்ணியங்கள் பற்றியதாய்..
தழுவுதல்களுக்குள் இருக்க்கூடிய காமம் பற்றியதாய்..
கோமாளிபொருவன் சுமக்கின்ற பெருங்கண்ணீரைப்பற்றியதாய்..
பிரம்மச்சாரிகள் நடுங்குதல்கள் பற்றியதாயேனும்..
என்அகத்தினுள் உள்ள திருடனை தண்டியுங்கள்.
சிந்தனை திருடனாய்
கனவுகளின் திருடனாய்
ரகசியங்களின் திருடனாய்
எப்படியேனும் உம்மிடம் எதையேனும்திருடியிருந்தால் தண்டியுங்கள்.
வன்முறை பற்றியும் சொல்லியாக வேண்டும்.
உள்ளே ஒருவேள்வி வளர்ந்திருந்தது-அது
முற்றுமே வன்முறையை பற்றியிருந்தது..
நான் எரித்தலை விரும்பினேன்..
முன்வரிசைப்போர் வீரனாய் சூறையாடல்களை எதிர்நோக்கி காத்திருந்தேன்.
இக்கலவர காரியை கைது செய்வாயினும் சம்மதமே..
இனி நான் ஒளித்துகள் பிடித்தபடி விண்மீன் தேசம்
செல்லப்போகிறேன்..
அட்டைப்படம் ஒன்றில் இக்காட்சியை பொறித்திடுக.
இப்புறப்பாடுகளிலும் மீண்டும் வந்திறங்கலிலும்
எவர்செல்வாக்குமிருக்கவில்லை.
இக்குளிருக்கு தேநீர்கதகதப்போ
மனித வெப்பங்களோ தேவைப்படவில்லை.
மர மறைவில் நின்றுகல்லு வீசாதீர்.
சோலை சுகந்தங்களை விடவும் கல்லெறிதல்களை நேசிப்பேன்.-அது கண்ணெதிரில் நிகழ்தப்பட்டால்..
இக்கணத்தில் தள்ளி நின்று எனைப்பார்கிறேன்..
நானெனும் என் பிரதி இப்போது அடர்தியாய' இருக்கிறாள் சலனமற்று.
இப்படியாய் சிலபின்னிரவுகளில்
நான் குற்றஅறிக்கை செய்து கொள்கிறேன்..
எனை நானாகவே சந்தித்துக்கொள்கிறேன்.
நீண்டதாயினும் இது நிர்மலமானது.
இப்பாத்திரத்தில் மதுவை ஊற்றுங்கள்
பாலையும் ஊற்றுங்கள்..
கண்ணீரையும் நிரப்புங்கள்..
எதுவானாலும் ஒற்றை இயல்பை மட்டுமே எனக்காக்கிக்கொள்வேன்.
இவ்விரவில் மிக நேர்தியாக எனை பதித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் நுலாகிக்கொண்டிருக்கிறேன்..
எண்ணப்படி இதனை மொழிபெயத்துக். கொள்ளுங்கள்.
ஆனால் அதிகம் இரைச்சல் எழுப்பாதீர்கள்.
நான் மௌனங்களைளே மொழிபெயர்க்க காத்திருந்தேன்.
-அதிசயா-
திரட்டிகளில் இணைத்து விட்டேன். த,ம. 1. சமூகத்தளங்களில் பகிர்ந்துவிட்டேன். மாலை முழுமையான கருத்துடன் சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteவிலைமகளின் கண்ணியங்கள் பற்றியதாய்..
ReplyDeleteதழுவுதல்களுக்குள் இருக்க்கூடிய காமம் பற்றியதாய்..
கோமாளிபொருவன் சுமக்கின்ற பெருங்கண்ணீரைப்பற்றியதாய்..
ரகசியமான தோல்விகளை ஒப்புக்கொள்கிறேன்.
எண்ணப்படி இதனை மொழிபெயத்துக். கொள்ளுங்கள்.
ஆனால் அதிகம் இரைச்சல் எழுப்பாதீர்கள்.
அசத்தல் வரிகள்
வாழ்த்துக்கள்
வணக்கம்
ReplyDeleteஒவ்வொரு வரிகளையும் படித்து கருத்துக்களை உள்வாங்கும் போது மனசு கனக்கிறது... சோக உணர்வுகளும் எழுச்சி வரிகளும் கவிதையில் மின்னுகிறது... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
சிறகடிக்கும் நினைவலைகள்-3.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நெகிழ வைக்கும் வரிகள்...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteமனதில் நின்ற வரிகள். சிகரம் பாரதி மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
வலைச்சரம் மூலமாக வந்தேன்.... அருமையான வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Sonthangal annaivarukkum manam niraintha nanrikal
ReplyDelete