Tuesday, May 27, 2014

நேசத்துறவு





இனிமேலும் நேசத்தரிப்பிடங்கள் பற்றி நினைப்பதாயில்லை.
நீண்டதாயினும் நெடுந்துயர் சுமந்ததாயினும்
இதுவரையும் போலவே ஏகாந்தமாய் கடந்து விடவே விரும்புகிறேன்
வரட்சி மிக்க பாலைவன பயணங்கள் அனைத்தையும்..
ஒரு போதும் முடிந்து விட்டிராத என் நேச எதிரிகளே..
அடிக்கடி போர் தொடுங்கள் என் தேசம் மீது..
முற்றுப்பெறாத இக்கிண்ணம்-நிறைந்து விடத்துடிப்பதெல்லாம்
வீரங்களால் மட்டுமே..
மட்டற்ற பெருவெள்ளம் ஒன்றில்
மரிக்கும் அந்தரங்களில் கூட
நாவு தவிப்பது போல்
எல்லா பேரானந்களின் பின்னும்
ஏதோ ஒரு சிலிர்பை உண்டாக்கி விடுங்கள்..அது
ஆத்திரமாய் அழுகையாய் ஆவேசமாய்
எப்படியாயினும்.
வடிவம் குறித்த கவலை எனக்கில்லை
வேண்டுவதெல்லாம்
ஏகாந்தங்களில் விரியும் வீரச் சுதங்திரங்களையே...!
-அதிசயா-

4 comments:

  1. அருமை. இந்த மாதிரி குட்டிக் குட்டிப் பதிவுகளையேனும் வலைத்தளத்தில் இடுங்கள். அதிசயாவை வலையுலகிற்கு மீண்டும் வருக வருகவென வரவேற்கிறோம்.

    ReplyDelete
  2. இதுவரையும் போலவே ஏகாந்தமாய் கடந்து விடவே விரும்புகிறேன்//ம்ம் என்ன செய்வது இதுவும் ஒரு ஜென் நிலைதான்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி சொந்தங்களே

    ReplyDelete
  4. வணக்கம்
    தமிழில் உயிர்கொண்டு தீராத தாகமாய்அகல விரிந்த வலையுலகில் அற்புதமான கவிபடைத்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...