Wednesday, September 12, 2012

விடை கேட்டு வருகிறேன்,வாசல் திறவுங்களே...!


விடை  கேட்டு 
விரல் அசைத்து
விலகப்போகிறேன்.-வாசல் திறவுங்கள்.

நான் "அதிசயா"-"மழை கழுவிய பூக்கள்"  தான் விலாசம்.
அன்றொரு நாள் பொறி ஒன்று விழுந்த வேகத்தில் எம்பிப்பறந்தவள்
அதனால் தான் வானங்கள் எனக்கும் வசப்பட்டது,
வார்த்தைகள் வரிக்குள் சிறைப்பட்து.
அறிந்திரா முகங்களோடு அணுஅணுவாய் நெருங்கி
சொந்தமென்று தேர்ந்துகொண்டேன.
சேர்த்துக்கொண்டீர்.

இதுவரை இங்கு வாழ்ந்தது மெய்தான்-இனியும் 
வாழ்வேன்  சிறு இடைவெளியின்  பின்
அதுவரை
நான் போகிறேன்..... சாகிறேன்.......!
மூன்று திங்கள் முடிந்து விட்டால் மறுபடியும் 
மூச்சிரைக்க ஓடி வருவேன்.
அன்று
முத்தங்கள் நான் கேட்கவில்லை
முகங்களையாவது காட்டுங்கள்.

இருபதுகளில் இன்னொரு முறை 
இங்கு நான் பிறந்ததால்
ஒழுகிவிடாத உறவொன்றை 
உயிர்கரையில் உணர்கிறேன்.
இவ்விடத்தை மிகவே சிநேகிக்கிறேன்.
இப்படியே என் பொழுதுகளை நீட்டி விடவே வாஞ்சிக்கிறேன்.

நின்றுவிடாமல் என்னை நிரப்பிய நேசத்தூறல்களே
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!
 (http://athisaya.blogspot.com/2012/07/blog-post_16.html)
நிலவொன்றில் நனைந்தபடி
இரவின் உபாசகியாய்
ரம்மியமான பொழுதொன்றில் இதை எழுதினேன்....!

 இன்னும் சொல்லுவேன் சத்தமாய்
 (http://athisaya.blogspot.com/2012/08/blog-post_17.html)
என்னை மிகவே பலவீனமாக்கி
விரட்டி அடித்து பின்
பேராற்றலாய் பெருங்கடலாய் என்னுள் தைரிய்ம்விதைத்த பதிவு..!

இப்படியாய் இங்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றாய் பின்னணிகள்..
தப்பான தாளமிட்டும் 
நேரம்பிந்தி மேடையேறியும்
சபைமரியாதையில் குறைவிட்டும் தவறியிருக்கிறேன்.
என் பிரிதலின் பொருட்டு 
என்னை மன்னித்து விடுக நேசங்களே!!.
அதிசயாவை அங்கீகரித்த 
என் உலகின் அதிசயங்கள் நீங்கள்.

பலமான காற்று ஒன்றில் 
அவசியமாய் அசைக்கப்படுவதால்
மிதந்து கொண்டிருக்கிறேன் அமைதிவெளி 
ஒன்றை நோக்கி...,
கொஞ்சம் கண்ணீரும் 
மிகுதி பாரமுமாகி விடை கேட்கிறேன்.
இது முடிவல்ல தொடக்கம் தான்
ஆயிரம் சொல்லை ஆதாயம் என்று ஆக்கினாலும்
 "சொந்தம்" என்பதில் ஏதோ சுகம் சுகிக்கிறேன்.

"நான்"
முடிந்த பின்னும் இங்கு தான் வாழ்வேன்.
வேர்வழி வெளிச்சத்துகளாகி
மீண்டும்
ஒளிப்பூக்களோடு உங்கள்
வாசல்களில் வருவேன்.
வரிசைப்படுத்த இயலாத என் சொந்தங்களே
இன்று தள்ளி நின்று அழுது பார்க்கிறேன்.
பொழுதுகள் பூப்பெய்தும் அந்தி ஒன்றில' வருவேன்
விருந்தாளியாய் அல்ல 
உரிமைக்காரியாய்..
கேட்டுவிடாதீர் யார் நீ என்று.

நேசங்களை நினைவுகளில் சுமந்து
பயணப்படுகிறேன்.
மலைகளில்  மூச்சி முட்டி திரும்பும் கணங்களிலெல்லாம்
நிறைத்துக்கொள்கிறேன் இந்த நாள் நேசங்களை எனக்காய்..!

சின்ன விரலை உதற மறுக்கும் குழந்தையாய் மனம் 
இங்கேயே நிற்கிறது.
பலவந்தமாய்  பக்குவமாய் விரல் விலக்குகிறேன்..!
ஒற்றைப்புன்னகையோடு தலைதடவுங்கள்.
நிம்மதியாய் போகிறேன்-நான்
உங்கள் சொந்தம் அதிசயா...!


உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!










என் கல்வித்தேவைக்காய் வேற்றிடம் செல்லவிருப்பதால் சில காலம் பிரிவை அனுமதித்துள்ளேன்.மீண்டும் சந்திக்கும் பொழுதுகளிற்காய் காத்திருக்கிறேன்.சந்திப்போம்என் இனிய சொந்தங்களே!!!!!!

(ஹரி,சீனு ரெண்டு பேரும், விளையாடுறதுகக்கு வேற பொம்மை ஒன்று வாங்கிடுங்க.:)





அன்புடன்
-அதிசயா-

37 comments:

  1. ////என் கல்வித்தேவைக்காய் வேற்றிடம் செல்லவிருப்பதால் சில காலம் பிரிவை அனுமதித்துள்ளேன்.மீண்டும் சந்திக்கும் பொழுதுகளிற்காய் காத்திருக்கிறேன்.சந்திப்போம்என் இனிய சொந்தங்களே!!!!!!
    ////உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!!நன்றிகள்.

      Delete
  2. விரைவில் பதிவுலகம் திரும்பி வருக

    ReplyDelete
    Replies
    1. என் அவாவும் அதுவே!!

      Delete
  3. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...

    ரொம்ப நாளா காணோமே என்னு பார்த்தேன்... படிப்புத்தான் முக்கியம் (ஆமா இவரு பெரிய ...வந்துட்டாரு அட்வைஸ் பண்ண)

    சந்திப்போம் நல்லபடியாக படியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராசா வாங்க...!.........புள்ளி எல்லாம் விட்டிருக்கீங்க இதில என்ன வேணாலும் போடலாம் தானே...தாங்ஸ்பா!

      Delete
  4. ஆமா மறுபடியும் வெட்டுப் புள்ளியும் மாவட்ட நிலையும் சரி பண்ணினாங்களே ..
    எல்லாம் நல்லபடியாகத்தான் வந்ததா உங்களுக்கும்

    ReplyDelete
  5. சந்திப்போம் மீண்டும்....

    ReplyDelete
  6. Enna sondhame ippadi solrenga? Padhivulagam oru nallavarai ilakkap pogiradhu. Mm. Padippukkagath thaane? Paravayillai. Aanaal namma "kalyaana vaibogam" parkamale pogireergale?

    ReplyDelete
  7. பிரிவு எனும் துன்பத்திலும் நன்மையென்னும் இன்பமுள்ளது. வாழ்த்துக்கள் தோழி.எந்த பல்கலைக்கழகம் கிடைத்துள்ளது?சென்று சீக்கிரம் திரும்பி வா.உனக்காக வழிமீது விழி வைத்து உறவுகள் நாம் காத்திருப்போம்.வெற்றியோடு எமை நாடி வா.கரம் நீட்டிக் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  8. இப்போ செல்வது பல்கலைக்கழகத்திற்காக அல்ல.அதற்கு இன்னும் நாள் உண்டு.மற்றொரு கற்றல் இது.சீக்கிரமே வந்துவிடுவேன் என்நேசங்களே.....பாரதி மற்றொரு தரம் நிச்சயம் வருகிறேன்.

    ReplyDelete
  9. ஹரி & சீனு இனியாவது திருந்துங்கப்பா..... :D

    சிஸ்டரை இப்பிடி புலம்ப வச்சிட்டீங்களே! :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வரலாறே வாருமையா நாம் அடுத்த பொம்மையைத் தேடிச் செல்வோம்

      Delete
    2. //சிஸ்டரை இப்பிடி//

      எந்த ஹாஸ்பிட்டல் என்று சொல்லவே இல்ல

      Delete
    3. >>> வரலாறே வாருமையா நாம் அடுத்த பொம்மையைத் தேடிச் செல்வோம் >>>

      ஹா ஹா ஹா.. லிஸ்ட்ல என் பேருமா...? :)

      நாம மூணு பேரும் ஒரு இடத்துல இருந்தா.. அந்த இடம் விளங்கிரும் ஹி ஹி ஹி! :D

      Delete
  10. அன்பிற்கினிய தங்கை அதிசயா,
    கல்விதான் நம்மை கரைசேர்க்கும் ...
    நன்கு கற்று வருக..
    உம் வருகைக்காக இச்சொந்தங்கள்
    எப்போதும் காத்திருப்போம்...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. // ஹரி,சீனு ரெண்டு பேரும், விளையாடுறதுகக்கு வேறபொம்மை ஒன்று வாங்கிடுங்க.// நாங்கள் உங்களை விளையாட்டுப் போமையாகப் பார்க்கவில்லை அதிசயா... இதனை விளையாட்டுக்குத் தான் சொல்லி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. ஒரு வேளை அது உண்மை என்றால் காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்....

    //ஹரி,சீனு ரெண்டு பேரும், விளையாடுறதுகக்கு வேறபொம்மை ஒன்று வாங்கிடுங்க.// விடை எல்லாம் கொடுக்க முடியாது... நீங்களும் உங்கள் எழுத்துகளும் செல்ல வேண்டிய பாதையும் அதிகம்.. சொல்லப் போனால் நானும் ஹாரியும் உங்கள் எழுத்தின் ரசிகர்கள்...

    இடைவேளை வேண்டுமானால் தருகிறோம் சீக்கிரம் வந்து விடுங்கள்...செல்லும்ம் பாதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. //சொல்லப் போனால் நானும் ஹாரியும் உங்கள் எழுத்தின் ரசிகர்கள்...//

      ஆமா மச்சி நீ புரிஞ்சு ரசிச்ச.. நான் புரியாமலே ரசிச்சன்.. (எத்தனை இங்கிலீஷ் படம் புரியாமலே பார்த்து இருப்பம்.. ஹி ஹி )

      Delete
  13. விரைவில் திரும்பி வர வாழ்த்துக்கள்! விடைபெறல் கவிதை சிறப்பு!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html

    ReplyDelete
  14. கற்கத்தானே செல்லுகிறாய் அதிசயா. வாழ்த்துக்கள். வெற்றியுடன் திரும்பி வா . உன் எழுத்துக்களை வாசிக்க காத்திருப்போம் என்றுமே இருக்கும் அன்புடன்

    ReplyDelete
  15. /ஹரி,சீனு ரெண்டு பேரும், விளையாடுறதுகக்கு வேற பொம்மை ஒன்று வாங்கிடுங்க//

    நீங்கள் பொம்மையாகி எங்களை குழந்தைகளாக்கிய தோழிக்கு நன்றிகள்..

    ReplyDelete
  16. //மூன்று திங்கள் முடிந்து விட்டால் மறுபடியும்
    மூச்சிரைக்க ஓடி வருவேன்.//

    அப்பிடினா வர்ற அக்டோபர் ரெண்டாந் தேதிங்களா???

    ReplyDelete
  17. //எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்//

    கவலை படாதிங்க நீங்கள் படிக்க போற இடத்துல ஹாஸ்டல் தரவும் கூடவே சாப்பாடு தரவும், பரிட்சைகளில் பாடங்களில் சித்தி அடைந்து நண்பர்களின் பெருமைகளை காப்பாற்றவும் வாழ்த்துக்கள்..
    சென்று வாங்க.. வெற்றியோடு மகிழ்ச்சியோடு வென்று வாங்க..
    வீர திருமகளுக்கு வெற்றி திலகமிட்டு அனுப்பும் நண்பர்கள், சகோதரர்கள் உங்களுக்காக காத்து இருப்போம்..
    (அப்படி ஒருவேளை மறந்து போனாலும் லிங்க சேர் பண்ணிடுங்க ஹி ஹி )

    ReplyDelete
  18. ஆகா அருமையாக கவி..........

    விரைவில் வாசல் திறக்கும் புலம்பல் வேண்டாமே........

    ReplyDelete
  19. அவ்வப்போது இங்கேயும் வந்து பதிவு எழுதுங்க...

    செல்லும் இடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க

    ReplyDelete
  21. மூன்று திங்கள் முடிந்து விட்டனவே நீங்க வந்திங்களான்னு பாக்க வந்தேன்.

    ReplyDelete
  22. ரசிக்கிறேன்!!! ஒவ்வொரு வார்த்தைகளையும் ஒவ்வொரு வரியையும், இங்கு தாங்கள் பதிந்த அனைத்து வரிகளையும் நான் மீண்டும் மீண்டும் படித்து எனது இதய கூட்டுக்குள் பதிந்து முடிப்பதற்குள் வந்துவிடுங்கள் தங்களது வரிகளுக்காக காத்திருக்கும் ஒரு தோழி!!!!!

    தங்களது பயணம் இனிதே முடிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. அருமையான பதிவு

    ReplyDelete
  24. தங்கள் கல்விப் பணி சிறக்க வாழ்த்துகள்... நேரம் கிடைக்கும் ஒ]போது வந்து விட்டுச் செல்லுங்கள் இங்கும்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  25. thanks a lot dr.....its a greate pleasure to introused by you.thanks a gain

    ReplyDelete
  26. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  27. thank u very much......mikavae nanri...!

    ReplyDelete
  28. மூச்சிரைக்க ஓடி வருவேன்.
    அன்று
    முத்தங்கள் நான் கேட்கவில்லை
    முகங்களையாவது காட்டுங்கள்.
    அற்புதம் அற்புதம் நல்ல சொல்லாடல் ....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...