Saturday, September 1, 2012

விவாகரத்து விடைதருமா?தருமே!!!

சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்!
நலம் தானே!!!?

.   சில நாட்கள் இடைவெளிகளின் பின்னே உங்களை சந்திப்பது மிகவே மகிழ்ச்சி.நேர நெருக்கீடு காரணமாக சில நாட்கள் சொந்தங்களின் தளங்களுக்கு வருகை தர முடியவில்லை.உரிமையோட திட்டலாம்.அப்பிடியே மன்னிப்பையும் தந்திடுங்க.

    மீண்டும் ஒருமுறை எதிர்க்கப்படும் அறிகுறியோ அஞ்சத்தக்க விடயம் ஒன்றை பதிவிடுகிறேன்.இருந்தாலும் இது பற்றிய தெளிவுத்தன்மை ஒன்றை வேண்டியே இதை பதிவிடுகிறேன்.

ஹரி,சீனு அண்ணா,சிட்டுக்குருவி அப்புறம் எல்லாரும' ஆயத்தமாகிடுங்க.ஒரு அடிமை தன்னால வந்து மாட்டுது.விட்டுடாதிங்க.:)

  விவாகம் திருமணம் என்ற பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும்,இருமனங்களுக்கிடையான அன்பு ஒப்பந்தம் ஒன்றின் ரத்தாக்கம் பற்றித்தான் பேசப்போகிறேன்.

  பூஜனைக்குரிய பந்தம் ஒன்றின் பிரிதல் இது.விவாகத்தோடு "ரத்து" இணைந்து அமங்கலமாய் தோன்றினாலும் இதன் பின்னான தேவை சில அமைதிக்காக அவசியப்பாடுகளே!

   மனம் விரும்பி தாமாக தெரிந்தெடுத்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி,பெற்றோரால் விருப்பம் உண்டாக்கப்பட்டு அமைந்த வாழ்வாக இருக்கலாம் இரண்டிலும் பிறழ்வுகள் ஏற்படுவதை பல தருணங்களில் நான் காண்கிறேன்.புரிதலின்மை,முதற்கொண்டு போதைக்கும் பேதைக்கும் அடிமையாகி மனம் பித்தாகி,தாழ்வு மனப்பான்மை குடிகொண்டு,குடும்பத்தில் பொருளாதாரம் கழுத்தை நெரிக்க சில ஆண்கள் ,பெண்கள் தப்பித்து ஓடிவிடுகிறார்கள்.இன்னும் பல பேர் சம்பிரதாய் தம்பதிகளாக வேசங்கொண்டு தம்முள் மோதிக்கொள்கிறார்கள்.இங்கும் டார்வினின் கூர்ப்பு விதி தான் வெல்கிறது.அதுதான் தக்கன பிழைத்தல் விதி!.வலியது வென்று விடுகிறது.மற்றயது செத்து விழுகிறது.

   வலியது என தம்மை நிலைநிறுத்திக்கொள்ள கையாளும் விதிமுறைகள் ஆணுக்க பெண் வேறுபடுகிறது.பெண்களும் தவறுகிறார்கள்.ஆண்கள் ஒருபடி மேலே சென்று தம் உடல் பலத்தையும் பெண்கள் மீது பிரயோகிக்கிறார்கள்.

  நிதானமாக செயற்பட்டு,புரிதலீனங்களுக்கான காரணங்களை கண்டறிந்து மாற்று நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் புரையோடிய புண்ணாய் தொடரும் வேதனையான குடும்பவாழ்வு ஒன்று வலிந்து வந்து வாய்க்கும் போது ,அதிலிருந்து விடுபடுவதற்கு விவாகரத்தை கையாள்வதை சிலர் தவறு என்கிறார்கள்.அது ஏன்??????என்னுள் பெரிதாய் விரிகின்ற கேள்வி இது தான்!!.

தூரநோக்கோடு பார்த்தால் பெற்றோரின் பிரிவால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் சமயங்களின் இப்பிரிதலுக்கான காரணங்கள் அநியாயமாக தோன்றினாலும் ஓரளவு பக்குவப்படும் போது அப்பிரிதலிற்கான காரணம் நியாயமானது எனப்பட்டால் பிள்ளை அதை நிச்சயம் அங்கீகரிக்கும்.

   இங்கு நான் பேசுவது மேல் நாட்டவர்கள் போல"சத்தமாக குறட்டை விடுகிறார்",தலைமுடி சுருளாக இல்லை",தொப்பை பெரிதாயிருக்கிறது",போன்ற கனதியற்ற காரணங்களுக்காக விண்ணப்பிக்கப்படும் விவாகரத்துக்களை அல்ல சொந்தங்களே!

"போதும் போய்விடு"என வாழ்கையால் விரட்டப்படும் அளவிற்கு வேதனையும் அருவருப்பும் நிறைந்த ஒரு துன்பக்காட்டிலிருந்தான விடுதலை பற்றித்தான் பேசுகிறேன். இடர்பட்டு நொருங்கிப்போன குடும்பம் ஒன்றின் வாரிசுகள் பின்னாளில் மனஉளைச்சலிலும் விரக்கதிலும் வாழ்வதற்கு தான் இன்று வித்திடப்படுகின்றார்கள்..அதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள விவாகரத்தை வழியாகக்கையாண்டால் அதில் தவறேது.

   சொந்தங்களே!இது பற்றி உங்களை கனமான கருத்துக்களை எதிப்பார்த்தே இதை பதிவிடுகிறேன்.
காத்திருக்பேன்.ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பேசுவோம் சொந்தங்களே!

நேர நெருக்கீடு காரணமாக பொறுத்திருந்து இதை பதிவிடமுடியவில்லை.அசௌகரியங்கள் இருப்பின் பொறுத்தருள்க.

                                                                                                                                             அன்புடன்
                                                                                                                                             - அதிசயா-


52 comments:

  1. சாதாரனமான ஈகோ ப்ரச்சனை என்றால் பேசியே தீர்க்க முயற்சிக்கலாம்! ஆனால் அத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கே இன்று விவாகரத்து கேட்பது பெருகி வருகிறது என்பது வேதனையே! ஆனால் சில பெண்கள் சைக்கோ மாதிரியான ஆண்களிடமும் சில ஆண்கள் சைக்கோ மாதிரியான பெண்களிடமும் மாட்டிக் கொள்வார்கள்! அத்தருணங்களில் அவர்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் மனத் துயரங்கள் ஏராளம்! அப்படிப்பட்ட தருணங்களில் விவாகரத்து நிச்சயம் ஒரு விடுதலையே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!இதை தான் நானும் சொல்கிறேன்.இவ்விடம் நம் கருத்தோட்டம் ஒத்துப்போவது மிகவே மகிழ்வு.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  2. // ஹரி,சீனு அண்ணா,சிட்டுக்குருவி அப்புறம் எல்லாரும' ஆயத்தமாகிடுங்க.ஒரு அடிமை தன்னால வந்து மாட்டுது.விட்டுடாதிங்க.:) // மிக மிக சத்தமாக சிரித்தேன் ... இன்னும் சிரித்துக் கொண்டுள்ளேன்... ஹா ஹா ஹா...

    ஹாரி பார்ற நம்ம மேல என்ன ஒரு கொலை வெறி ஹா ஹா ஹா... இந்த பதிவ சிரிசிட்டே படிகிறதா இல்ல சீரியஸா படிகிறதா தெரியலியே.....

    //ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பேசுவோம் சொந்தங்களே!// ஹாரி மற்றும் சிட்டுக் குருவியாரே கவனிக்க இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது...(# கொளுத்தி போட்டிங்)

    இனி சீரியசான பார்வை

    // டார்வினின் கூர்ப்பு விதி தான் வெல்கிறது.// என்ன என்ன விதி எல்லாமோ படிகீங்க கலக்குங்க

    //விவாகரத்தை கையாள்வதை சிலர் தவறு என்கிறார்கள்.// எல்லை மீறிப் போகும் போது விவாகரத்து சரி தான்.. சரியான புரிதல் இல்லாமல் புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் ஈகோவால் வரும் விவாகரத்து எதிர்க்கப் பட வேண்டியது... நடோடோகள் படத்தில் சசி குமார் பேசுவரே ஒரு வசனம் அரங்கில் பட்டையக் கிளப்பியது....


    பெண்களை தங்கள் வலிமையால் துன்புறுத்துபவர் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்... பல சட்டங்கள் பெண்களுக்கே சாதகமாக உள்ளன ... இருத்தும் விழிப்புணர்வு குறைவாக உள்ளது...

    உங்கள் பதிவை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கிறேன் என்பதை உங்களிடமே சொல்லிக் கொள்கிறேன்....

    ஒரே ஒரு எதிர்ப்பு மட்டுமே... வழக்கமான பதிவை விட இந்த பதிவின் நீளம் கொஞ்சம் குறைந்து விட்டது... ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. // ஹரி,சீனு அண்ணா,சிட்டுக்குருவி அப்புறம் எல்லாரும' ஆயத்தமாகிடுங்க.ஒரு அடிமை தன்னால வந்து மாட்டுது.விட்டுடாதிங்க.:) //

      இன்னுமா இந்த உலகம் நம்மள பயங்கரமானவைங்க என்று நம்புது.. ஓகே

      //உங்களை கனமான கருத்துக்களை எதிப்பார்த்தே//

      மச்சி வேலை விட்டு வரும் போது 4kg கருத்து வாங்கிட்டு வா மச்சி

      Delete
    2. வணக்கம் சீனு அண்ணா!சிரிங்கப்பா சிரிங்க பல் செட்டையும் மறக்காம மாட்டிட்டு சிரிங்க பாஸ்....எப்பூடி பழிவாங்கிட்டேனே.......ஹிஹிஹிஹிஹிஹி


      உள்குத்தே தான்...:)ஆனா அமைதியா இத சொல்லனும்.இப்பிடியா பப்பிளிஷ் பண்றது???அட விடுங்கப்பா நமக்குள்ள என்ன...கோத்து விடாதப்பா!

      மிக்க நன்றி சீனுஅண்ணா.நான் கூறியதை புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்.

      பதிவ பெரிசா போட்டா அப்புறம் கருத்துரைகளை நீங்க ரொம'பபபபபப பெரிசா போட்டுடுவீங்க.ஆனா ஒரு கோர்லிக்‌ஸ் கூட தரமாட்டீங்க.குழந்த களைச்சிட்டாது?? நேர நெருக்கீடு சீனு அண்ணா....அதுதான்.சந்திப்போம் சொந்தமே!!சொந்தமே வாபஸ்....:)அண்ணா!

      Delete
  3. எதுவுமே எல்லை மீறும் போது விவாகரத்து தேவைதான்! அதேவேளை இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்பட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!காத்திரமற்ற காரணங்களுக்காக எடுக்கப்படும் விவாகரத்துக்களை நானும் எதிர்கிறேன்.மிக்க நன்றி!சந்திப்போம் சொந்தமே!

      Delete
  4. இல்லறத்தில் இருவரும் மனம்பேதலித்து யுத்தம் செய்வதைவிட பிரிந்து போவதே மேல் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நேசன்அண்ணா!
      அது உண்மைதான்.மிக்க நன்றி.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  5. இன்றைய சிக்கலை அடிப்படியாக வைத்து பதிவு செய்து இருக்கிறீர்கள் உண்மையில் பாராட்டுகள் இன்று மேலைனகரீக குப்பைகளை அடிப்படையாக கொண்டு பல திருமண முறிவுகள் உண்டாகிறது இது மிகவும் பிழையானதே புரிதலிம்மையலும் முறையற்ற வாழ்க்கை முறையாலும் நடக்கிறது திருமண முறிவு தவறானதே

    ReplyDelete
    Replies
    1. வணகக்கம் மாலதி அக்கா.மேல்நாட்டில் சிலர் பொழுதுபோக்குகோலல்லவா விவாகரத்து செய்கிறார்கள்.மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.

      Delete
  6. நல்ல ஒரு விடயம்
    விவாதத்திற்கு எடுத்துக் கொண்டமைக்கு நன்றி சொந்தமே
    ஆரோக்கியமான விவாதம் நடக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மனதிற்கு மிக திருப்தியாக உள்ளது.சந்திப்போம் சொந்தமே!சந்தோஷம்.

      Delete
  7. விவாகம் கேலியாகும் சமயம் ரத்து தேவைதான்! நல்ல அலசல்!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி!

      Delete
  8. இன்றைய காலத்தில் மணமுறிவு அடிக்கடி காதில் விழுகிறது.அவசரப்பட்டுக் கல்யாணமும் செய்துகொள்கிறார்கள்.அதே அவசர்த்தோடு கையில் குழந்தையும் விவாகரத்தும்.திருமணம் என்கிற அந்த தெய்வீக உறவுக்கே அர்த்தமில்லாமல் போனமாதிரி இருக்கு.கல்யாணம் என்றாலே பயமான விஷயமாப்போச்சு அதிசயா !

    இருவருக்குள்ளும் முதலில் தெளிவு வேணும்.அதுக்கு மனம் விட்டு பிடிச்சது பிடிக்காதது.நல்லது கெட்டது பற்றிக் கதைக்கவேணும்.பிறகு கொஞ்சக் காலமெடுக்கும்தான்.ஆனால் அதைப் புரிஞ்சு விட்டுக்கொடுத்தாலே போதும்.குடும்பம் சந்தோஷமாயிடும் !

    நேசன் சொன்னமாதிரி பிடுங்குப்பட்டுக்கொண்டே பலகாலம் அழாமல் பிரிந்து வாழ்வது சிறப்பு !

    ReplyDelete
    Replies
    1. நேசன் சொன்னமாதிரி பிடுங்குப்பட்டுக்கொண்டே பலகாலம் அழாமல் பிரிந்து வாழ்வது சிறப்பு !ஃஃஃஃஃஃ

      வணக்கம் அக்கா.இதைத்தான் நானும் முன்மொழிகிறேன்.

      Delete
  9. விவாகாரத்து என்பது அவரவர் மனம் சமந்தப்பட்டது... துணையின் அன்பு, நடவடிக்கை, சூழ்நிலை, அன்பு, பரிவு, காதல், அக்கறை, காமம், நம்பிக்கை என்று பல காரணிகள் இல்லறத்தில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் முதல் சண்டையிலோ அல்லது அடுத்து அடுத்து மனவேறுபாடுகள் ஏற்படும் போதே சேர்ந்து வாழ முடியாது, பிரிந்து வாழலாம் என்று விரைவாக முடிவு எடுத்து அவசரத்தில் விவாகரத்து செய்கின்றனர். பிரிய நினைக்கும் முன்பு கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதை பற்றி பல முறை யோசிக்கலாம், பிரிவு மட்டுமே தீர்வு என்றால் பிரிதலில் தவறு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!தீர்க்கமாக பலமுறை தேர்ந்து தெளிந்த பின்னும் இன்றுவரை தொடருமட் வேதனைகளில் இருந்து விடுபடுவதையே நான் சொல்கிறேன்.மிக்க நன்றி அக்கா உங்கள் பொறுப்பான பதிலுக்காய்.சந்திப்போம்.!

      Delete
  10. இங்கு எடுத்துக் கொண்ட விடயம் தற்காலத்திற்குப் பொருத்தமானது தான்....

    விவாகரத்து ஏற்படுவதற்கு புரிதல் இல்லையென்றே சொல்லப்படுகிறது...ஆகவே பல ஆண்டுகளாக காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்கிறார்கள் அவர்கள் கூட இங்கே பிரிந்து போகிறார்கள்... ஆகவே புரிதலில்லை என்பது இங்கே பொய்த்துப் போகிறது....

    ஆகவே விவாகரத்துக்கு காரணம் என்ன..?
    இதுவும் ஒரு வகையில் புரிதலோடு தொடர்புடையவைதான்... புரிதல் என்ற ஒன்று மட்டும் குடும்ப வாழ்க்கைக்குப் போதாது புரிதலுடன் சேர்ந்து விட்டுக் கொடுப்புத் தன்மை அனைத்தையும் அனுசரித்துப் போகும் தன்மையும் இருந்தால் தான் விவாகரத்துக்கள் பெருமளவில் குறையும் என்பது அடியேனின் கருத்து...

    உதாரணத்துக்கு பசங்க திரைப்படம் பாருங்க அதுல அந்த கணவன் மனைவியிடத்தில் ஆரம்பத்தில் இல்லாத விட்டுக் கொடுப்புத் தன்மை பற்றி அழகாக அவருடைய நண்பர் எடுத்துக் கூறுகிறார்...

    விட்டுக்கொடுத்து வாழப் பழகிக் கொண்டால் அதிகளவான விவாகரத்துக் குறையும் என்று சொல்லிவிட்டேன்
    ஆனால் விட்டுக் கொடுப்பிலும் ஒரு வகை அளவீடை கணவன் மனைவி இருவரும் கையாள வேண்டும் அதிகளவான விட்டுக் கொடுப்பும் விவாகரத்துக்குக் காரணமாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!இது ரைட்டு,இதை ஒத்துக்கொள்கிறேன்.

      அதிகளவான விட்டுக் கொடுப்பும் விவாகரத்துக்குக் காரணமாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..இதுக்கு ஒரு சல்யூட்!!!
      சந்திப்போம்!

      Delete
  11. சேர்த்திருக்கும் இரண்டு புகைப்படங்களும் தலைப்புக்கு மிகப் பொருத்தம்....
    அப்புறம் நம்மல கலாய்க்கிறத்துக்கு இந்தப் பதிவு போடல்லியே.....

    அப்பிடி ஏதாவது நடந்திச்சு அத ஹரி.......மற்றும் சீனு பார்த்துக்குவாங்க......

    ReplyDelete
    Replies
    1. நண்பா ரைட்டு ஹாரி இருக்க பயமேன்

      Delete
    2. வங்க வாங்க.நல்லா கேக்கிறீங்க பாஸ்.உங்கனை போய் கலலாய்ப்பனா????

      அடே ஹரி பயலே அவளோ பெரிய ரவுடி ஆய்டிங்களா???சொல்லவே இல்ல.சரிசரி.குருதட்சனையை தாங்க.சீனு அண்ணா நீங்களும் தான்.

      Delete
    3. நாங்க யார்கிட்டயும் வரதட்சணை வாங்க மாட்டோம்...
      குருதட்சனை குடுக்க மாட்டோம்
      எப்புடி :-)

      Delete
  12. விவாகரத்தை எப்படி சந்தர்ப்பம் சூழ்நிலை தீர்மானிக்கிறதோ அதே போல ரத்தின் ரத்தை அதே சந்தர்பமே தீர்மானிக்க வேண்டும்.. சில சமுக காரணங்கள் (வர தட்சணை) விவாகரத்துக்கு காரணமாய் இருந்து அவர்கள் பிரிவது ஏற்று கொள்ள எனக்கு கடினமாக இருக்கிறது.. அது போல மன (ஈகோ, உடல் உபாதை) சம்மந்த பட்டவைகள் முடிந்த வரை மனம் விட்டு பேசுதல், விட்டு கொடுத்தல் போன்றவற்றால் தீர்க்கலாம் என நினைக்கிறேன்..

    வெளிநாடுகளில் வாய் நாறுதல், கொறட்டை விடுதல், உறுப்பு சிறிது என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு.. அவங்கள பொறுத்த வரை இது எல்லாமே வாழ்க்கை என்று பார்க்காம திருமணத்தை கொட்டாவி குறட்டை போல ஒரு சம்பவம் போல பார்ப்பதால் தான்..

    ஆனா நம்மல பொறுத்த வரை வாழ்க்கையா பார்க்கிறவங்க கண்டிப்பா மனசார பேசி சேர்ந்துடலாம் என நினைக்கிறேன்..

    ஆனா மேலே கூறப்பட்டது கள்ள காதல் உள்ளவங்களுக்கு பொருந்தாது.. அவங்க பிடிக்காத ஒருவரோட சேர்ந்து அவங்க வாழ்கையும் வீணடிக்கிறத விட விவாகரத்தே மேல்..

    //புரிதலீனங்களுக்கான காரணங்களை கண்டறிந்து மாற்று நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் புரையோடிய புண்ணாய் தொடரும் வேதனையான குடும்பவாழ்வு ஒன்று வலிந்து வந்து வாய்க்கும் போது//

    ஓகே இதுல ஹீரோ புரிஞ்சுக்காம இருக்குறதுக்கு மாற்று காரணங்கள் செய்தும் அப்படி தான் இருக்கார்னு வைச்சு கொண்டாலும் விவாகரத்துக்கு பின் அவரோட ஸ்டேப் என்ன அடுத்த திருமணமாக இருக்குமானால் அவர் மற்ற பெண்ணையும் புரிறது கஷ்டம் தானே.. நூறு வீதம் முழுமையா ஒரு பெண்ணை/ஆணை காட்டுங்க பார்க்கலாம்.. அங்கயும் குறை இருக்கும் தானே..

    ஆனா மேலே கூறப்பட்டது கள்ள காதல் உள்ளவங்களுக்கு பொருந்தாது.. அவங்க பிடிக்காத ஒருவரோட சேர்ந்து அவங்க வாழ்கையும் குற்ற படுத்தி வேதனை கொடுக்கிறத விட விவாகரத்தே மேல்..

    பைனல் டச் (கள்ள காதல் உள்ளவங்களுக்கு பொருந்தாது)

    ஸ்டேப் 1 - ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது மனம் விட்டு பேசி அலசனும்
    ஸ்டேப் 2 - முடிஞ்ச வரை புரிஞ்சு கொள்ள ட்ரை பண்ணனும்
    ஸ்டேப் 3 - விட்டு கொடுக்கிறதில முந்தி கொள்ளனும் (ரெண்டு பேருமே)

    அதை தாண்டி ப்ரோப்ளம் வரும்னா?????

    என்னங்க பண்றது

    மறுபடியும் முதல் ஸ்டேப்.ல இருந்து பண்ணி பார்க்கிறது..

    அதுக்கு பிறகு அவங்க இஷ்டம்

    தனக்கென்று வந்த தனக்குரிய ஒருத்தியை 90% நன்மை இருந்தும் 10% தீமைக்காக விட்டு கொடுக்க கூடாதுங்க.. ஏன்னா காதலிக்கும் போதும் உள்ள சந்தோசம் கல்யாணம் என்ற சந்தோசம் அது முடிந்து பிள்ளைகள் பிறந்த பின்னும் தனக்குரியவள் எனகென்றொரு தன்னுடைய அடையாளமாக உலகுக்கு காட்ட ஒரு பிள்ளை தந்தாளே என எவ்வளவோ சந்தோசம் இருக்க அற்ப சந்தர்ப்பம் சூழ்நிலை தீர்மானிக்கிற மன அழுத்தம் பிரிக்கிறத ஏற்றுகொள்ள முடியலிங்க.. (தன்ட அடையாளமா பிள்ளை பெத்துக்க ஆயிரம் வழி இருக்கு தம்பி என்று லாஜிக்கா எல்லாம் பேச கூடாது.. இங்க நான் சொல்றது ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை நம்புகிறவர்களுக்கு மட்டுமே)

    ஆனா மேலே கூறப்பட்டது கள்ள காதல் உள்ளவங்களுக்கு பொருந்தாது.. அவங்க நடிக்கிறத விட பிரியிரதே நலம்..

    ஆனா இதை தாண்டியும் பழைய காதல், கல்யாணத்துக்கு முன் உறவு கொண்டவங்க இதெல்லாம் எப்படி தீர்க்கலாம் என்கிறத நான் சொன்ன ஸ்டெப கல்யாணத்துக்கு முன் செய்றது நலம் என நினைக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஏன் டா டேய் வந்தோமா கருத்து சொன்னமான்னு போகணும்.. வந்த இப்டியா பதிவுல ஒரு பதிவு எழுதிட்டு போறது... அப்படின்னு நான் கேக்கலை ஹாரி நம்ம ரெண்டு பேரையும் பார்த்து அதிசயா கேக்குறாங்க...(நான் சரியாத் தான பேசுறேன் அதிசயா)

      // நூறு வீதம் முழுமையா ஒரு பெண்ணை/ஆணை காட்டுங்க பார்க்கலாம்.. அங்கயும் குறை இருக்கும் தானே.. // ஏம்பா அதுக்கு நாம என்ன செய்ய முடியும்... அவங்க உள்ளக் குமுறல் அது...

      //பைனல் டச்// ஓகே அது என்ன condtions apply ஹி ஹி ஹி

      அண்ட் நோட் தி பாயிண்ட் //சொந்தங்களே!//

      -----------------------------------------------------------------

      குடி, அடி, சைக்கோ கணவன்/மனைவி இதை எல்லாம் பேசி சரி செய்ய முடியாது ஹாரி... ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே நரகம் தான்....
      விவாகரத்து ஒன்று தான் இங்கு தீர்வு... சத்தம் போடாதே படத்தில் வரும் கணவன் போல் அமைந்தால் அவளால் என்ன தான் செய்ய முடியும்....


      அதிகப் பிரசங்கித்தனமாக விவாகம் மற்றும் ரத்து செய்வோரையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது... ஒன்று செய்யலாம் ஆனால் அதையும் எமன் மட்டுமே செய்ய முடியும்...

      கொஞ்சம் சீரியஸ் ஆகிட்டேனோ....

      Delete
    2. நண்பா சென்சிடிவ் ஆன பிரச்சினை என்ற படியால் ஆண்கள் பக்கம் இருந்தே கதைத்தேன் நண்பா.. பெண்கள் பக்கம் போகவே இல்ல..

      Delete
    3. ஹி ஹி ஹி ஆபத்து நண்பா ஆபத்து.... ஆணாதிக்கம் என்ற அவப்பெயர் வந்துவிடும்....

      Delete
    4. //அதிகப் பிரசங்கித்தனமாக விவாகம் மற்றும் ரத்து செய்வோரையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது... //

      Factu factu factu machi

      Delete
    5. வாங்க.இவ்வளோ இறங்கி வந்து பதில்போட வச்சுட்டீங்களே!!மேல ஒரு இடமாவது விட்டிருக்கலாமே பதில்சொல்ல!!!சரிசரி!!

      ஏன் டா டேய் வந்தோமா கருத்து சொன்னமான்னு போகணும்.. வந்த இப்டியா பதிவுல ஒரு பதிவு எழுதிட்டு போறது... அப்படின்னு நான் கேக்கலை ஹாரி நம்ம ரெண்டு பேரையும் பார்த்து அதிசயா கேக்குறாங்க...(நான் சரியாத் தான பேசுறேன் அதிசயா)ஃஃஃஃ
      ஏன் கேக்கமாட்டீங்க...கேளுங்க!
      சீனுஅண்ணா நீங்க சொல்ற போல பேசித்தீர்பதற்னும் ஒர எல்லை உண்டே!ரத்தம்,காயம் என்று நிரமை மீறினால் என்ன செய்வது.உயிரையாவது காப்பாற்ற வேண்டாமா?
      சந்திப்போம்.

      Delete
    6. உங்க கருத்துல நீங்க எப்ப தாங்க இறங்கி வந்தீங்க.. இங்கயாது கொஞ்சம் இறங்கி வரலாமே... ஹி ஹி ஹி

      Delete
    7. பயபுள்ள உள்குத்துத்தான் போடுது புரியுது...மன்னிச்சுமறந்துவோம்.:)

      Delete
  13. மனங்கள் சேர்ந்தால் நல்லது...

    பணங்கள் சேர்ந்தால்...?

    ReplyDelete
    Replies
    1. அதுதானே பிரச்சனை சொந்தமே!வருகைக்கு டிகவே நன்றி!

      Delete
  14. (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
    Caution : Restore/Backup your HTML, before editing :

    (1) Edit html Remove Indli Vote button script

    (2) Remove Indli Follow Widget

    [waiting for ta.indli.com] என்று தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
  15. குழந்தைகளுக்கு ஓரளவு விவரம் தெரிந்த பின், யார் இப்பிரிவிற்கு மூலக்காரணம் என்பதை அறிந்து, மனிதர்களையும் இல்லரத்தையும் வெறுக்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகள் இல்லாமல் இருக்கும் போதே விவாகரத்து செய்து கொள்ளவேண்டும். குழந்தை வந்துவிட்டால், பிரியவேகூடாது. சகிப்புத்தன்மையுடன் அவர்களுக்காகவே வாழ்ந்தாக வேண்டும். மாறாதது எதுவுமில்லையே..உணர்வுகள்தானே, நிச்சயம் மாறும் ஒரு நாள்.நாம், அப்பா அம்மா பார்வையில் நல்லபடி பாதுகாப்பாக வளர்ந்துள்ளோமே, குழந்தைகளும் அதுபோல் வளரவேண்டாமா.! இருவரும் இருக்கும்போது குதூகல சூழலில் பிள்ளைகள் வளரும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்கிற உதவி. வாழ்வே தியாகத்தில் தான் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா.இப்படியும் ஒரு லொஐிக் சிந்திக்கத்தான் வேண்டும்.!மிக்க நன்றி!

      குழந்தைகளும் அதுபோல் வளரவேண்டாமா.! இருவரும் இருக்கும்போது குதூகல சூழலில் பிள்ளைகள் வளரும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்கிற உதவி. வாழ்வே தியாகத்தில் தான் உள்ளது.

      அப்படி வளர்ந்தால் மிக்க நல்லது!ஆனர் விஷம் பார்த்து வளர்ந்துவிட்டால் என்ன செய்வது??

      தீர்மானிப்போம் சொந்தமே!சந்திபப்போம்.

      Delete
  16. ''..சொந்தங்களின் தளங்களுக்கு வருகை தர முடியவில்லை.உரிமையோட திட்டலாம்.அப்பிடியே மன்னிப்பையும் தந்திடுங்க...''

    அவரவர் நிலையைப் பொறுத்து விவாகரத்து செய்யலாம்.
    ஹரி பாட்டருக்கு உலக அனுபவம் போதாது.
    எத்தனை அநியாயம் நடக்கிறது.
    இத்தனையும் பொறுத்துப் போவதானால்
    விவாகரத்து தேவையில்லை நன்றாக மிதி படலாம்.
    அவரவர் சூழலிலே இருந்து பார்த்தால் தெரியும்.
    இங்கு கோபிநாத்தின் நீயா நானா இதே தலைப்பில் போனது.
    அழுது அழுத பார்த்தேன். அத்தனை சோகம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies


    1. Rank Countries Amount
      # 1 United States: 4.95 per 1,000 people
      # 2 Puerto Rico: 4.47 per 1,000 people
      # 3 Russia: 3.36 per 1,000 people
      # 4 United Kingdom: 3.08 per 1,000 people
      # 5 Denmark: 2.81 per 1,000 people
      # 6 New Zealand: 2.63 per 1,000 people
      # 7 Australia: 2.52 per 1,000 people
      # 8 Canada: 2.46 per 1,000 people
      # 9 Finland: 1.85 per 1,000 people
      # 10 Barbados: 1.21 per 1,000 people
      # 11 Guadeloupe: 1.18 per 1,000 people
      # 12 Qatar: 0.97 per 1,000 people
      # 13 Portugal: 0.88 per 1,000 people
      # 14 Albania: 0.83 per 1,000 people
      # 15 Tunisia: 0.82 per 1,000 people
      # 16 Singapore: 0.8 per 1,000 people
      # 17 China: 0.79 per 1,000 people
      # 18 Greece: 0.76 per 1,000 people
      # 19 Brunei: 0.72 per 1,000 people
      # 20 Panama: 0.68 per 1,000 people
      # 21 Syria: 0.65 per 1,000 people
      # 22 Thailand: 0.58 per 1,000 people
      # 23 Mauritius: 0.47 per 1,000 people
      # 24 Ecuador: 0.42 per 1,000 people
      # 25 El Salvador: 0.41 per 1,000 people
      # 26 Cyprus: 0.39 per 1,000 people
      = 27 Chile: 0.38 per 1,000 people
      = 27 Jamaica: 0.38 per 1,000 people
      = 29 Mongolia: 0.37 per 1,000 people
      = 29 Turkey: 0.37 per 1,000 people
      # 31 Mexico: 0.33 per 1,000 people
      # 32 Italy: 0.27 per 1,000 people
      # 33 Brazil: 0.26 per 1,000 people
      # 34 Sri Lanka: 0.15 per 1,000 people

      //# 34 Sri Lanka: 0.15 per 1,000 people//

      அதாங்க 1,00,000 இல பேர் 15 பேர்

      //எத்தனை அநியாயம் நடக்கிறது.
      இத்தனையும் பொறுத்துப் போவதானால்
      விவாகரத்து தேவையில்லை நன்றாக மிதி படலாம்.//

      சட்டத்தின் பார்வையில் படாமல் 25000 பேர் பாதிக்க படுகிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம்..

      இதற்க்கு மேல் எண்ணிக்கை போகும் என்றால் அதிசயா "பொய்த்து விட்டதா திருமணம்" என்று போட்டு நீ ஒரு பதிவும், கோவைகவி அம்மாவும் பதிவு எழுதுங்கள் நான் தோளுக்கு தோள் நிக்கிறேன்..

      ////ஹரி பாட்டருக்கு உலக அனுபவம் போதாது. ////

      COOL I ACCEPT..

      ஆம் அம்மா உங்க அனுபவம் உள்ள கண்களுக்கு அந்த 15-25000 பேர் தெரிந்தார்கள்.. அனுபவம் இல்லாத என் கண்களுக்கு ( 75000-99985) பேர் தெரிந்தார்கள் (முன்னையவர்கள் தெரிந்தாலும்).. ஆகவே தான் நான் அப்படி பேசி விட்டேன்.. கொஞ்சம் சேர வாய்ப்பு இருந்தாலும் சேருங்க என்று.. (இது என்னை சுற்றி சூழ்ந்துள்ள அக்கம் பக்கம் உறவினர் எல்லாம் அடங்கும், பிறகு இன்டர்நெட் பார்த்துட்டு பார்வை அனுபவம், பழகிய அனுபவம் ( ஹி ஹி ) கூட இல்லாம பேசுறான் என்று சொல்லிடுவிங்க.. )

      தர்க்கம் எல்லாம் பண்ண வரலேங்க.. இப்ப கூட உங்க கண்களுக்கு கஷ்டம் வந்தா தான் தெரியும் என்று சொல்றது விளங்குது.. அதை தாண்டி சந்தோசமா சேர சின்ன சான்ஸ் இருந்தாலும் மிஸ் பண்ணாதிங்க என்று தான் சொல்ல வாரேன்.. அதாவது தேவை அற்ற காரணங்களுக்காக அதாவது பேசி தீர்த்து கொள்ள கூடிய காரணங்களுக்காக விவாகரத்தை பண்ணாதிங்க என்று மட்டும் சொல்றன்.. மற்றபடி டிவோர்ஸ் பண்ணவே கூடாது என்று சொல்லல.. (முன்னே கூறிய கருத்தில் நான் அப்படி ஏதாவது கூறினால் சுட்டி காட்டுங்க )

      Delete
    2. //உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) (இந்நூல் இவர் கணவருடன் இணைந்து செய்யப்பட்ட நூல்)//

      இதை பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு..

      கண்டிப்பா எந்த ஒரு விடயத்தின் மைனஸ் பற்றி நான் கூற மாட்டேங்க.. காரணம் இரு கோடுகள் கதை தான்.. பிரைச்சனை மிகுந்த சிறு கோட்டினை மேற்கொள்ள/ஜெயிக்க பெரிய கோட்டை போடுவது தான் என்னோட தியரி.. (சிறிய கோட்டை பற்றி முழுவதும் தெரிந்து இருந்தாலும்)..

      Delete
    3. வேதா அக்கா அப்படியாய் சில வேதனைகளை கேட்டதால் கண்டதால் தான் நானும் இதை பதிவிட்டேன்.கருத்திற்கு மிக்க நன்றி!சந்திப்போம் சொந்தமே!

      Delete

    4. தர்க்கம் எல்லாம் பண்ண வரலேங்க.. இப்ப கூட உங்க கண்களுக்கு கஷ்டம் வந்தா தான் தெரியும் என்று சொல்றது விளங்குது.. அதை தாண்டி சந்தோசமா சேர சின்ன சான்ஸ் இருந்தாலும் மிஸ் பண்ணாதிங்க என்று தான் சொல்ல வாரேன்.. அதாவது தேவை அற்ற காரணங்களுக்காக அதாவது பேசி தீர்த்து கொள்ள கூடிய காரணங்களுக்காக விவாகரத்தை பண்ணாதிங்க என்று மட்டும் சொல்றன்.. மற்றபடி டிவோர்ஸ் பண்ணவே கூடாது என்று சொல்லல.. )ஃஃ


      இது சரி ஹரி.வாழ்வியல் கவிதையாக அமைந்தால் எப்பவும் அழகும் சந்தோஷமும் தான்.அதுவே அழுகையாக ஓயாத அழுகையாய மாறிவிட்டால் பக்கத்தில் பெரிய கோடு போட எல்லாம் மனம் ஒப்பாது.தப்பித்து ஓடவே கெஞ்சும்.

      ஹரி வாழ்த்துக்கள் இந்த முயற்சிக்காய்.சந்திப்போம்.


      Delete
  17. அனைவரிடமும் அன்பு பாராட்டும் உங்கள் பண்பு அழகனாது.. வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!:) மிக்க நன்றி!சந்திப்போம்.

      Delete
  18. நல்ல முயற்சி... வாழ்த்துகள்...
    மேலை நாடுகளில் இது மனம் சார்ந்தது ... இங்கு உணர்வுகள் சார்ந்தது... உங்கள் நெருக்கடி எனக்கும் உண்டு... ஆனால் மறக்காமல் வாருங்கள்..
    எனது தளத்தில்
    http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html
    மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....


    ReplyDelete
  19. வணக்கம் சொந்தமே!வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
  20. சிறு சிறு கருத்து வேடுபாடு பிரிவுக்கு காரணமாகி விடுகிறது...
    நல்ல முயற்சி... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ணக்கம்வெற்றி அண்ணா!!!மிக்க நன்றி தங்கள் கருத்திற்காய்.சந்திப்போம் சொந்தமே!

      Delete
  21. இனிமேல் சேர்ந்து வாழவே முடியாது என்னும் சூழ்நிலையில் விவாகரத்து பண்ணிக்கலாம் என நினைக்கிறேன்...

    - இப்படிக்கு அனீஷ் ஜெ...


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொந்தமே!தங்கள் சந்திப்பு மிகவே மகிழ்ச்சி!இதைத்தான் நானும் கேட்கிறேன்.நன்றி சொந்தமே!சந்திப்போம'.

      Delete
  22. என் அன்பிற்கினிய சொந்தங்களுக்கு என் இதய நன்றிகள்.சிலநாளாய் தொடரும் நேரநெருக்கடியால் பதிவுலகில் எனது சிறப்பான பங்களிப்பை செலுத்த இயலாதபோதும்,நீங்கள் அன்போடு என் தளம் வந்து அளித்த பெறுமதியான கருத்திற்காய் அதிசயாவின் நிறைந்த நன்றிகள்.தெளிவு கொண்டேன் சொந்தங்களே!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...