அந்தரமான நிமிட ஒழுகல்களில் தான்
நினைக்க முடிகிறது-எத்தனை அற்புதம்
மூச்சுவிடுதல்கள் என்று....!
எனையறியாது விழிதெரியாது
அனுமதி கேட்காது அரவம் செய்யாது
சமைந்தபெண்ணின் மெதுமையாய்
அத்தனை இயல்பாய் நுழைந்திருந்தாய்..!
வாசங்கள் சில பூசி,நேசங்கள் பல சுமந்து
சோகங்கள் அப்பிக்கொண்ட புகைகூட்டம் கடந்து
எங்கிருந்தோ ஓடி வந்து
என்னுள் பிறந்து கொண்டாய் "சுவாசமாய்"
நாசிகளில் மென்வெப்ப முத்தமிட்டு
குழாய்வழி ஒரு தனிப்பயணம் புறப்பட்டு
வடிகட்டல் தடைதாண்டல் முடித்து
சூடேற்றி,குளிர்பெற்று........!
நீ சுத்தமாய் தொட்ட சிலிர்புகளில்
ஆயிரம் சந்தங்கள் கொண்டு
மெதுவாய் மெதுமெதுவாய் நிறைந்து
காற்றால் கர்ப்பம் கண்டு
நிறைந்து நின்றது அத்தனை சிற்றறையும்..!
அடுத்த நொடிக்குள்
அமுக்கத்தை காரணமாக்கி
வெறுமைக்குள் தன்பிள்ளைகளை விதைத்துவிட்டு
உடல் வற்றி விடுகிறது அத்தனை பைகளும்..!
எப்படி இந்த இயந்திரத்தின் இயக்கத்தினுள்
இத்தனை மென்மை..?
வலப்பக்கம் உயிர்சுமக்கும் மற்றொரு
பெண்மை இது...!
நேற்றுவரை சுகித்ததில்லை
நுரையீரல் பூகளின் சுகத்தை
முயன்னறு முயன்று மூச்சுவிடும்-இந்த
அந்தரமான நிமிட ஒழுகல்களில் தான்
நினைக்க முடிகிறது-எத்தனை அற்புதம்
என் மூச்சுவிடுதல்கள் என்று...!
முயற்சிகளுடன்
-அதிசயா-
//நேற்றுவரை சுகித்ததில்லை
ReplyDeleteநுரையீரல் பூகளின் சுகத்தை//
படங்களும் பாடல் வரிகளும்
சுத்தமான சுகந்தமான காற்றை
சுகமாக சுவாசிப்பது போல உள்ளது.
பாராட்டுக்கள்.
வணக்கம் ஐயா!தங்களை போல் பெரியவர்களின் வருகை இந்த சிறிய அதிசயாவிற்கு நிறைந்த மகிழ்ச்சி..மிகவும் நன்றி ஐயா...!
Deleteரூம் போட்டு யோசிப்பீங்களோ...:)
ReplyDeleteஏம்பா சிட்டு?????உங்களையும் விடவா???
Delete// நீ சுத்தமாய் தொட்ட சிலிர்புகளில்
ReplyDeleteஆயிரம் சந்தங்கள் கொண்டு
மெதுவாய் மெதுமெதுவாய் நிறைந்து
காற்றால் கர்ப்பம் கண்டு
நிறைந்து நின்றது அத்தனை சிற்றறையும்..!//
அற்புதமான வரிகள்....வாழ்த்துக்கள் மை டியர் ....
ஐஐஐஐஐஐஐஐஐ...வணக்கம் வைக்க மறந்துட்டேனேஃஃஃ
Deleteவணக்கம் சொந்தமே..!
நன்றி பாஸ்;;;;;)
சந்திப்போம் சொந்தமே...!
இந்த பூ எங்கயாச்சும் விக்கிறாங்களா.... ஐ மீன் விற்பனைக்குண்டா....:)
ReplyDeleteஓஓஓஓ....அங்க இருந்து தான் வாறீங்களோ?????அப்பச்சரிரிரிரிரிரி
Deleteமூச்சு காற்றை வைத்து இப்படி ஒரு கவிதையா வியக்கிறேன் சகோ.!
ReplyDeleteவணக்கம் சொந்தமே...!வருகைக்கும் தங்களின் ரசனைக்கும் மிக்க நன்றி..பல சமயங்களில் வேறு சொந;தங்களின் தளத்தில் தங்களைக்கண்டதுண்டு.இன்று இந்த அதிசயாவின் தளத்திற்கு தாங்கள் வருவதும் கருத்திடுவதும் மிகவே திருப்தி.நன்றி சொந்தமே..!சந்திப்போம்.
Deleteஎனையறியாது விழிதெரியாது
ReplyDeleteஅனுமதி கேட்காது அரவம் செய்யாது
சமைந்தபெண்ணின் மெதுமையாய்
அத்தனை இயல்பாய் நுழைந்திருந்தாய்..!
////
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க! எவ்வளவு அழகான வரிகள்! இதயும் சேர்த்து நான் ரசிப்பது அந்த இதயத்துடிப்பின் ஓசையையும்!
தங்கள் ஆலோசனைக்கு மிகவே நன்றி
ReplyDeleteவாங்க சொந்தமே..!உண்மைதான் இந்த உடவின் அத்தனை அசைவுகளும் எத்துணை அற்புதம்.....!நன்றி சொந்தமே தங்கள் வருகைக்கும் அன்பாக கருத்திடலுக்கும்.சந்திப்போம் சொந்தமே...!
ReplyDelete\\\\\\\\முயன்னறு முயன்று மூச்சுவிடும்-இந்த
ReplyDeleteஅந்தரமான நிமிட ஒழுகல்களில்//////////
ஏன் இப்படி கஸ்ற்ரப்பட்டு மூச்சு விடுறீங்கள் பேசாமல் நிப்பாட்டிவிடுங்கோ
வாங்க வாங்க என்னடா சத்தத்தை காணலயேன்னு ◌பாத்தன்.
ReplyDeleteவிட்டா விஷம் வச்சே கொண்ருவாங்க போலிருக்கே..
தொண்டையுள் மீன் முள் இருநாளாய; உபாதை தருகிறது,மூச்சுவிட கடினம்.ஒருமனிசன் நொந்து போய் எழுதினால்...........:(
சரி விடுங்க சொந்தமே
சீச்சீ சீச்சீ சீச்சீ சீச்சீ நான் பாவம் மூச்சு விட கஸ்ர படுறிங்க எண்டு உதவிக்கு வந்தால் இப்படி
Deleteஉங்க நல்ல மனம் புரிகிறது சொந்தமே....:)எனக்குத்தெரியும்
Deleteஎனக்கும் தெரியும்
Deleteம்ம்ம்ம்ம்...தென்றல்...ரசித்தேன்...
ReplyDeleteவணக்கம் சொந'தமே..கருத்திடவிற்கு மிகமிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே
ReplyDelete// வலப்பக்கம் உயிர்சுமக்கும் மற்றொரு
ReplyDeleteபெண்மை இது...!//
இந்த வரிகள் ரொம்பவும் அருமை. அருமையான கவிதை. நுரையீரல் பற்றிய ஒரு கவிதையை இன்று தான் படிக்கிறேன் , வாழ்த்துக்கள்
வணக்கம் சொந்தமே...!
Deleteமிக்க நன்றி தங்கள் பெறுமதியான கருத்திற்கும் வருகைக்கும்.சந்திப்போம் சொந்தமே..!
எழுத்தில் தேர்ச்சியும் பா விண் சுவை உள்ளத்தில் உள்ள ஏக்கங்களையும் கனவுகளையும் சொல்லாமல் சொல்லுகிறது முதிர்ச்சியும் சிறந்த கட்டமைப்பும் காதல் கொள்ளவைக்கிறது ...மூச்சு முட்ட நுரையீரல் முழுக்க உள்வாங்கி சுவாசிக்கிறேன் .... அதிலோருதனி .... சுவை ....
ReplyDeleteவாங்க சொந்தமே...வணக்கம்..!
ReplyDeleteனஅனுபவித்தமைக்கு மிகமிகவே நன்றி சொந்தமே..!
நானும் இப்போது அடிக்கடி அதை உணர்கிறேன்.சந்திப்போம் சொந்தமே!
''..முயன்று முயன்று மூச்சுவிடும்-இந்த
ReplyDeleteஅந்தரமான நிமிட ஒழுகல்களில் தான்
நினைக்க முடிகிறது-எத்தனை அற்புதம்
மூச்சுவிடுதல்கள் என்று....!''
அதிசயா! முதலில் மிக மன்னிப்புடன் உமது இரண்டு ஆக்கக் கருத்துகள் வநது ''ஸ்பாம்'' பகுதியில் இருந்துள்ளது. அடிக்கடி பார்ப்பேன் சிறிது தாமதமாகிவிட்டது. - நொட் ஸ்பாம் அழுத்தி - இன்று தான் வாசித்து ஏற்றுக் கொண்டேன். மிக மிக நன்றி அன்புறவே கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.
இப்போது இக்கவிதை
மிக அருமையாக உள்ளது. அதைவிட படமும் மிக அருமை. புதுக் கரு.
நல் வாழ்த்து.
மீண்டும் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் சொந்தமே..நீண்ட நாட்கள் தங்களுக்கான காத்திருப்பு.மிக்க நன்றி கருத்திடலுக்கும் ஏற்றுக்கொள்கைக்கும்.தொடர்ந்தும் அன்புடன் சந்திப்போம் சொந்தமே..!
ReplyDeleteஆ.... அதிசயா... நீங்க அதிசயமான பெந்தான்ன்.. அதிசயமான அழகான கவிதை... இன்றுதான் இங்கு கால் பதிக்க காலநேரம் வந்திருக்கெனக்கூ... இனித் தொடர்ந்து வருவேன்ன்ன்...
ReplyDeleteஊ.கு:
எல்லோரையும் அழைத்திருப்பதைப்போல என்னையும் சொந்தமே... என மட்டும் அழைக்காமல் இடையில மானே... தேனே எனவும் சேர்த்து அழைக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்... ஏனெனில் என் வலி:) தனி வலி:)...
ஹா..ஹா..ஹா... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)).
வாங்க தேனு....எப்படி இருக்கிறங்க?மானே ,பொன் மானே வணக்கம்.இன்று கனிற்த இந்த நேரத'திற்காக நன்றி சொந்தமே..!தொடர்ந்தும் பதிவுலகில் சந்திப்போம்..இல்லனா நானும் அருவாள் அனுப்புவன் சொல்டேன்..மானு தேனு எல்லாம் ஓடிப்போய்டும்....சந்திப்போம் சொந்தமேமமமமமமமமமமமம!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல வரிகள் ! அருமையான கவிதை!
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !
ReplyDeleteவணக்கம் சொந்தமே...அதிசயாவின் தளத்திற்கு வரவேற்கிறேன்...!மிகவே நன்றி தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும்.சந்திப்போம் சொந்தமே..!
ReplyDeleteazhakiya varikal!
ReplyDeleteNanri uravae.....!!
ReplyDelete