ஒரு விழி ஏனோ கழன்று போய்
விரல்களுக்குள் ஒழிந்து கொண்டே
ஒழுகிக் கொள்கிறது..!
இன்று தான் கேட்கிறேன்-ஆதலால்
இனி ஒரு விதி செய்வேன்..!
பட்டணம் வரை
போய் வந்தேன் நேற்றய பகலில்....,
வரும் போது..........
விட்டுவிட்டால் பிரசவிப்போம் ,
நிறைமாதமாய் இரண்டு பைகள்....,
மூச்சோடு முட்டிமுட் டியே மொட்டவிழ்ந்த
வெள்ளை ஓக்கிட் ஒன்று...,
நெடுநான் பட்ஜெட்டில் இன்று தான் சாத்தியமான
வெளிர்நாவல் குடை ...,
என் கைக்குட்டை கசங்கலில் இறந்து போன
யாரோ வீட்டு குண்டு மல்லிகள்...,
ஆத்திரமாய் அகன்ற என் விழிகளுக்குள்
உருண்டு ஓடிய நேச நண்பனின் கெஞ்சல்கண்ணீர்...,
சரிபாதி நானென சட்டம் பேசிய
அக்தர் கலந்த பிசுபிசுப்பு வேர்வை...,
பேருந்து பயணங்களில் தோளோடு சாய்ந்துவரும்
ஈர நினைவு......
இப்படியாய் சில இன்னும் சில..
ஏராளமான இருப்புகள்..!
பூவரசு நிழலில் என்னையும் உமிழ்ந்துவிட்டே
ஒற்றைச்சாலை ஓடி மறைந்தது அந்த வண்டி..!
அத்தனையும் சுமந்தேன்.
வாசல் படி தாண்டி,வரவேற்பறை தாண்டி,
தற்காலிக நிறுத்த்தில் சிலவற்றை இறக்கி விட்டு
நினைவுகளை மட்டும் நெஞ்சோடு இறுக்கி..,
படுக்கயறை வரை அனுமதித்தேன்...!
முதல் தடவை விரல் நனைகயில்
முயற்சிக்கவில்லை காரணம் அறிய....!
இன்று தான் பார்த்தேன்..
அடிப் படி விழிம்போடு
விவாகரத்து கேட்பதாய் அங்கொன்று கிடக்கிறது..
மற்றொன்று..???
சின்ன நாய் "குணா"வி ன் விளையாட்டுப்பண்டமாய்...!
உருகும் வெயில் குடித்து
மேல் கிளிக்கும் கூர் வலி பொறுத்து
அசிங்கங்கள் சுமந்து
அழுக்குகள் குளித்து
எனக்காய் என்னை
இரட்சித்த என் "செருப்புகள்" .....!
உணர்வுகள் அறுந்து நிர்வாண கண்டனம் செய்தது..,
பகுத்தறிவு பஞ்சாயத்து வைத்து விலக்கி வைத்தது என்னை...,
அது மட்டும;அப்படியே அங்கேயே...!
இனி ஒரு விதி செய்வேன்...!
செருப்புகளை விரட்டும் தெய்வங்களுக்கு என்
பாதங்களோடு சொந்தம் இல்லை!!!!
வாசலோடு நிற்கச்சொன்னால்-திண'ணைக்கும்
எனக்கும் தொடுகை இல்லை!!!!
செருப்போ பாதணியோ பாதுகையோ
பெயர் மட்டும் தான் வேறு
உறவு ஒன்றே... !
சில பேரை மன்னிக்க மறுத்து வந்தேன்,
உன்னிடம் மண்டியிடத் தோன்றுகிறது இப்போது...
ஒரு முறை மன்னித்து விடு..!
நீ பாதணி..எனக்கு அணி
இனி விலகேன்..
என்னிடமாய் வந்து கொள் என் விழியே...
இனி ஒரு விதி செய்வேன்...!!!!
சொந்தக்காரி
- அதிசயா-
//செருப்போ பாதணியோ பாதுகையோ
ReplyDeleteபெயர் மட்டும் தான் வேறு
உறவு ஒன்றே... !//
செருப்புடனும் சொந்தம் கொண்டு அழகாக எழுதியுள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள் சொந்தமே! ;)))))
வணக்கம் ஐயா..வருகைக்கும் தங்கள் பெறுமதியான அன்பான வாக்குகளிற்க்கும் மிகவே நன்றி..."சொந்தம்" என்று பாசமாக அழைத்து மனதில் இடம் பிடித்துவிட்டர்கள் ஐயா...!!
Deleteசெருப்புக்காய் வித்தியாசமான கவிதை., அருமை சகோ.!
ReplyDeleteவணக்கம் சொந்தமே.....!பின்னூட்டலிற்கு மிகவே நன்றி.....!தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!
Deleteம்ம்ம்
ReplyDeleteநல்ல அர்த்தமுள்ள கவிதைகள் சகோ
அருமை பாராட்டுக்கள்
ம்ம்ம்ம்ம்மம்
Deleteநன்றி சொந்தமே..!
சந்திப்போம் சொந்தமே!
ஏராளமான இருப்புகள் கொண்டு இனி ஒரு விதி செய்வேன் என்று முழக்கமிடும் கவிதக்குப் பாராட்டுக்கள்!!!..!
ReplyDeleteவாங்க வாங்க சொந்தமே...!கட்டாயம் இனி ஒரு விதி செய்வேன்..!தங்கள் வலுகைக்கும் கருத்திற்கும் மிகமிகவே நன்றி..சந்திப்போம் சொந்தமே..!
Deleteசெருப்புக்கு இவ்வளவு சிறப்புடன் ஒரு கவிதையா அருமை
ReplyDeleteவணக்கம் உறவே,தங்கள் போன்ற கவிஞர்களின் வருகையும் வழிநடத்தலும் மிகவே உற்சாகம;..!சந்திப்போம் சொந்தமே..!
Deleteநம்மைத் தாங்குகிற நம்மைக் காக்கின்ற
ReplyDeleteபல விஷயங்களை வெளியே நிறுத்திவிட்டு
எதற்கும் உதவாத பலவற்றை உள்ளே வைத்து
பூசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்
செருப்பு நல்ல குறியீடு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா...நிச்சயமாய் பல விடயங்களை சிந்தையீருத்தி குறியீடாக்கினேன்..புரிந்து கொண்டீர்கள் ஐயா..மிகவே நன்றி பெரியவரே..தொடர்ந்து பயிப்போம் ஐயா!
DeleteHi Athisaya,
ReplyDeleteVery impressive!!!
and interesting Athisaya :) :)
welcme dr..its greate pleasure to get u in my blog.and thanks a lot 4 ur sweet comments..thanksalot..cu..tc
Deleteநல்ல கவிதை என்று சொல்லி செல்லவிரும்பவில்லை...// உங்களால் முடியும் இன்னும் சிறந்த படைப்புக்களை இந்த வலையுலகிற்குக் கொடுப்பதற்கு....:)
ReplyDeleteதொடருங்கள் உறவே...
வணக்கம் சொந்தமே....!இந்த நம்பிக்கையூட்டலிற்கு கடழமப்பட்டுள்ளேன்.உரிமையோடு வழிநடத்துங்கள்.நன்றி சொந்தமே...சந்திப்போம் உறவே...!..!
Deleteபார்டா ககபோ
ReplyDeleteவணக்கம் தமிழன்...ககபோ?????ஃஃஎன்னமோ சொல்றீங்க சொந்தமே...சொல்லுங்க சொல்லுங்க:)
Deleteசந்திப்போம் சொந்தமே..!
கவியில் கலக்குறீங்க போங்கள்
Deleteஓ....அது தானா இது,அப்ப சரி.நன்றி சொந்தமே..!
Deletethozhi,you are great...
ReplyDeleteசித்தாராக்கா....வா அக்கா..மிகவே நன்றி சொந்தமே..! you are greateeeee!
Deleteமிகவும் அழகான கவிதை.. நெஞ்சுருக்கும் வசனங்கள்... தலைப்பு வந்தவுடன் கவனிக்காமல் விட்டுவிட்டேன்ன்... இனி ஒரு விதி செய்வேன்ன் நானும் தான்ன்ன்ன்:))
ReplyDeleteவணக்கம் சொந'தமே....கவனிக்காம விட்டதற்கு பெரியயயய தண்டனை 1 இருக்கு..நன்றி சொந்தமே.சின்னப்பொண்ணு அதிசயாவின் தளத்திற்கு பூனைக்குட் ராணியார் வருகை தந்தமைக்ககு...சந்திப்போம் சொந்தமே
ReplyDeleteஆஹா செருப்புக்கும் ஒரு கவிதை, ஆச்சர்யமா இருக்கு...!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் மனோ சேர்.தங்கள் வருகை வாழ்த்து மனதிற்கு மிகவே மகிழ்ச்சி.சந்திப்போம் சொந்தமே
ReplyDeleteசெருப்புக்காய் வித்தியாசமான ...மிகவும் அழகான கவிதை... ரசித்தேன்...
ReplyDeleteவணக்கம் சொந்தமே ரெவெரி..நீண்ட நாளாய் எழுத நினைத்தது.இப்போ தான் வசப்பட்டது.வருகக்கும் கருத்திடலுக்கும் ரசிப்பிற்கும் மிகவே நன்றி.சந'திப்போம் சொந்தமே..!
Deleteஅருமை சகோதரி. இந்த கவிதையை நான் வெறுமனே செருப்புக்கானதாக பார்க்கவில்லை. எமக்காக செருப்பாய் தேய்ந்தவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறேன். எனக்கும் மண்டியிட தோன்றுகிறது என்றென்றும் அவர்களிடம்.
ReplyDeleteவணக்கம் சகோதரா..சரியாகச்சொன்னீர்கள்.செருப்பொன்று குறியீடாகி பலரை நினைக்க வைத்து என்னையும் மண்டியிட வைத்தது..நன்றி சொந்தமே.தங்கள் வாழ்த்திற்கும் அன்பான கருத்திடலிற்கும்.சந்திப்போம் சொந்தமே..!
Deleteஅழகான கவிதை அதுவும் பாதணி /பாதுகை என ரசிக்கும் படி உணர்வோடுகூடிய விடயத்தை கவிதையாக்கி ரசிக்க வைத்தீர்கள்§
ReplyDeleteவணக்கம் உறவே..தங்களின் இப்பெறுமதியான வருகைக்கு மிகவே கடமைப்படடுள்ளேன்.தங்கள் கருத்திடலிற்கு மிகவே நன்றி..தொடர்ந்து சந்திப்போம் சொந்தமே..!
ReplyDelete''...நீ பாதணி..எனக்கு அணி
ReplyDeleteஇனி விலகேன்..
என்னிடமாய் வந்து கொள் என் விழியே...
இனி ஒரு விதி செய்வேன்...!!!!..''
நல்ல வரிகள். சில இடற்களில் புரிந்தும், பரியாமலும்.
வேதா. இலங்காதிலகம்
வணக்கம் சொந்தமே...!வாழ்க்கை கூட சில சமயங்களில் புரியாமல் போகிறது..!நன்றி தங்கள் பெறுமதியான வருகைக்ககு..!சந்திப்போம் சொந்தமே...!
ReplyDeleteகான்பதைஎல்லாம் காதலிக்கவும் நேசம் கொள்ளவும் ஒரு கவிஞனால் முடியும் என்பதை நேர்த்தியான வார்த்தை கோர்வையில் விளக்கியிருகிரீர்கள் அதிசயா ...............அற்புதம்
ReplyDeleteவணக்கம் சொந்தமே..!ஒவ்வொரு வார்த்தைக்கும் மிகவே நன்றி சொந்தமே..!சந்திப்போம் சொந்தமே..!
Delete//பெயர் மட்டும் தான் வேறு
ReplyDeleteஉறவு ஒன்றே... !
சில பேரை மன்னிக்க மறுத்து வந்தேன்,
உன்னிடம் மண்டியிடத் தோன்றுகிறது இப்போது...
ஒரு முறை மன்னித்து விடு..!
//
உன்னிடம் மண்டியிடத் தோன்றுகிறது.... காலணியைக் கொண்டு நீ பாடிய கவி அழகு
வணக்கம் சீனு....!மிக்க நன்றி சொந்தமே...:)
Deleteமறுபடியும் சந்திப்போம் சொந்தமே..!
அருமையான கவிதை
ReplyDeleteநன்றி சொந்தமே..!
Deleteஇன்று
ReplyDeleteசிரிக்க சில படங்கள்
செருப்புக்கு இப்படி ஒரு கவிதையா...??? நல்லா இருக்கு கவிதை.
ReplyDeleteஇவ்வளவு தான் முடிந்தது......மிகவே நன்றி சொந்தமே தங்கள் வருகைக்கும் அன்பான கருத்திடலிற்கும்.
Deleteஉயிரற்ற பொருளுக்கும் ஓர் உயிரோட்டம் உள்ள கவிதை
ReplyDeleteவடித்த தங்கள் கவிதை கண்டு பெருமைகொள்கிறேன் !...
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் சிறப்பான கவிதைகள்
தொடர .
வணக்கம்..தங்கள் அறிமுகம் பெருமகிழ்ச்சி.தங்கள் அன்பான கருத்திடலுக்கும் மிகவே நன்றி.தொடாந்தும் இனிய சொந்தங்களாக சந்திப்போம் சொந்தமே..!
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteநன்றி சொந்தமே..
ReplyDelete