பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பு வணக்கங்கள்..!
சொந்தங்களே நலம் தானா?
வாருங்கள் பதிவிற்கு...!
உணர்வுகளின் கோர்வை தான் மனித மனம்.வெளியுருவில் திடமாகத் தெரியும் ஒவ்வொரு முகங்களின் பின்னும் எல்லைப்படுத்தமுடியாத நினைவோட்டங்கள் விரிந்து செல்கின்றன.ஒரு கட்டத்தில் இவை எல்லாம் இணைந்து நம்முள்ளே இருக்கும் மற்றொரு நபருக்கு உயிர்கொடுத்துப்போகின்றன.
நம்முள்ளே இருக்கும் இந்த இன்னொரு மனிதனை எல்லோரும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிப்பதில்லை.எமது நினைவோட்டத்தின் தன்மைகள் தான் இந்த மனிதனின் சாயலை ;தீர்மானித்துப்போகின்றன.இன்னொரு நிழலாய் இறப்பின் எல்லை வரை நீளும் இந்தச்சொந்தம் தான் வாழ்க்கையில் பிடிப்பையும் நம்பிக்கையும் உண்டாக்கி 'வாழ்ந்துபார்' என உந்தித்தள்ளுவது.
இத்தகைய பேராற்றல் மிக்க அதே நபர் தான் சில நேரங்களில் தன்னிலை திரிபுற்று மிகவும் கோரமான நபராக மர்றி விபரீதத்தின் விளிம்புகளில் நம்மை நிறுத்தி விடுகிறார்.
மனஉடைவு,உறவுநிலை இழப்புக்கள்,தொடர்ச்சியான திடீர்தோல்விகள்,உடல்தோற்றம் சார் திருப்தியீனங்கள்,உண்மைநிலை அறிதலின் ஏமாற்றங்கள்,நம்பிக்கைக்கு உரியவர்களின் நடத்தை மாற்றங்கள்,வாய்யிட்டு சொல்ல முடியாத துயரங்கள் என்பகைகள் தம்முள் ஒன்றாய் பிணைந்து இதுவரை சாதகமான எண்ணங்களை உற்பவித்த நபருடன் முட்டி மோதி ஆக்ரோஷமாக வென்று மறைச்சிந்தனை கொண்டவராக நம்முள் இருப்பவரை மாற்றிப்போகிறது.
உள்ளார்ந்த ரீதியில் படிப்படியாய் ஏற்பட்டு திடீரென்று விஸ்பருபம் எடுக்கும் இந்த நபர், மிககோரமான முடிவொன்றை நம்முள் விசாலமாய் விதைத்துப்போகிறார்.அது தான் தற்கொலை உணர்வு.
உறவுகளையும் இந்த உலகத்தையும் பகையாகக் காட்டி தன்னுள் சேர்த்து வைத்திருந்த அத்தனை சக்திகளையும் ஒன்றாகத்திரட்டி மீண்டும் மீண்டும் அதே தற்கொலை வாசகத்தை நம்முள் பலமாய் உரைத்தப்போகின்றது.
இருப்பினும் அவ்வப்போது லௌகீகத்தை நேசிக்கும் இந்த உடலும்,வற்றிவிட்ட சில உணர்வுகளும் மீளவும் ஊறி வாழ்தலில் மீது லேசான ஈடுபாட்டை காட்டிப்போகும்.சில பிரம்மிப்பிற்குரிய சொந்தங்களை அடையாளமிடும்;.இத் தருணத்தை சரியாக,மிகச்சரியாக பயன்படுத்தி வாழ்தலுக்கு உள்ளாக நம்மை திருப்பிக்கொள்ள வேண்டும்.
இங்கு தான் கவனிக்க வேண்டும்.இம்மாறுதல்களை அலட்சியப்படுத்துவோமாயின் மீண்டும் மெதுவான ஒரு மனஉடைவு ஏற்படுகையில் அத்தனை மறை உணர்வுகளும் பலமடங்கு ஆக்ரோஷத்துடன் வெளிவரும்.புத்திசாலித்தனமாக,வலியின்றி இறப்பதற்கு வழி தேடும்.கடைசியில் ஏதோ ஒருவழியை தனக்கெனவே கண்டுபிடித்து அதையே மிகவே நேசிக்கும்.எத்தனை இறுக்கமான ஆளமை கொண்ட நபராயினும் சரி இத்தகைய உணர்வு நெருக்கங்கள் வேருன்றும் போது சரியான தருணமொன்றிற்காய் காத்திருந்து அந்த ஆன்மா இந்த உலகிலிருந்து தன்னை வலிந்து விடுவிக்கும்.
முயற்சிகள் எல்லாம் முற்றாகி முடிவுகள் நெருங்கும்.அ;ப்போது தான் அந்த அதீதமான வாழுதல் ஆசை நெருங்கும்.கடந்த காலங்கள் நினைவில் வர,தான் நேசித்த மனிதர்கள்,தரப்பட்ட சந்தர்ப்பங்கள்,சிலிர்பான நினைவுக்குறிப்புகள்,திருப்திகரமான சாதனைகள் எல்லாம் ஒன்றாகி 'வந்துவிடு வா' என்ற பலமாய வாழ்வின் குரல் எதிரொலிக்கும்.
ஆனால்ஐயோ! அந்த நொடியே முக்கால்வாசி உயிர் வற்றிவிட்டருக்கும்.மீதமுள்ள சில துளியும் கடைவிழிக்கண்ணீரோடு ஒழுகி ஓய்ந்துவிடும்.பாதைகள்,பயணங்கள் எல்லாமே வரண்டுபோய் தவறான மாதிரிகையாய் ஒர் ஆத்மா ஓய்வு கொள்ளும்.;.
இத்தகைய மறையான உணர்வுநிலை ஏவுதல்கள் தற்கொலை வாசகமாவற்கு முன்பே உஷாராகி விடுங்கள்.நம்பிக்கையானவரிடம்,உளவள ஆலோசகரிடம் சென்று தீர்வு காணுங்கள்.இந்நினைவுகள் கொஞ்சம் வளர்ந்தால் போதும் வேர்விட்டு விருட்சமாகி,விழுதுகளை எறிந்து நஞ்சாய் நம்மை ஆட்கொள்ளும்.புரிந்து கொள்ள இயலாதவர்களிடம் உங்கள் குழப்பங்களை சொல்லி விமர்சனத்திற்குள்ளாகாதீர்கள்.
மரணம் என்பது பிரச்சனைகளுக்கு நிச்சயமாய் சிறந்த தீர்வாக முடியாது.மறுமை பற்றியதான மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு,இவ் உலகில் தோல்விக்குரிய படைப்பாகி விடுவோம்.
இந்தக்கணம் கூட உங்கள் சிலருள் அந்த நபர் தன்னிலை மாற்றம் கண்டு,மூலையில் ஒதுங்கி முகத்தை மறைத்தபடி அழுதிருப்பார்.எங்கே இறப்பின் மீதான நெருக்கம் உண்டானது என கண்டுகொள்ளுங்கள்.முகங்களை உங்கள்பால் திருப்பி அன்பாய் ஆதரவாய் தேவைப்படின் கண்டிப்பாய் வழிப்படுத்துங்கள்.வாழ்வு வாழ்வதற்கே என்ற நிலைப்பாடு எங்கே மாற்றம் காண்கிறதோ அங்கே கரிசனையும் கவனிப்பும் அவசியம்.இவர்கள் மட்டில் பாராமுகமும் கரிசனையற்ற தனத்தையும் நாம் வெளிப்படுத்துவொமானால் ஒரு உயிர் தன் வாழ்தகவை முடித்துக்கொள்ளவதற்கு நாமும் நிச்சயம் காரணமாவோம்.தெரிந்து கொள்ளுங்கள்.சில தருணங்களில் அமைதி காத்தல் கூட ஆபத்திற்கு அங்கீகாரம் கொடுக்கிறது.
தவிப்பார்க்கு தலைதடவுவதை விட ஆறுதல் வேறென்ன இருக்கமுடியும்??
.சொந்தங்களே முட்டாள்தனம் என முத்திரை குத்துவதை விடுத்து,இந்த விஷமான எண்ணங்களை களைவோம்.களைவதற்கு உதவுவோம்.
கொன்று போடுவோம்-இந்த
தற்கொலை தளிர்களை
வாழ்ந்து காட்டுவோம்;-இது முதல்
வாழவைப்போம்!!!
இறப்புகளை இனியேனும் இறக்கி வைப்போம்!!
வேண்டுதலுடன்
-அதிசயா-
என்ன அதிசியா கொலை ஒன்று செய்வோம்ன்னு ஏதோ போட்டுருங்கேங்க, எனக்கு தான் கண்ணு போச்சா இல்லை என் கம்யூட்டரா நானே கொன்னுட்டனா ஒன்னும் புரியலையே... கொஞ்சம் கவனியுங்க அதிசயா
ReplyDeleteவாங்க சொந்தமே வணக்கம்...இந்த முறை நீங்க தான் என் சுடு சோறு ..!நல்லா கவனிச்சேன்...நீங்களும் கொலை பண்ணிடுங்க..!அதற்கான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜய்யோ அப்போ இது தான் பதிவா? இது என்ன மொழி ? தண்ணி அடிச்சா பசங்க ரெண்டு ரெண்டா தெரியும்ன்னு சொல்லுவாங்க எனக்கு ஆங்கிலத்தை அங்க அங்க பிச்சு போட்ட மாதிரி தெரியுதே?
Delete////தண்ணி அடிச்சா பசங்க ரெண்டு ரெண்டா தெரியும்ன்னு சொல்லுவாங்க///
Deleteஎன்ன ஒரு வில்லத்தனம்.,
ஹா ஹா இதுல்ல என்ன வில்லத்தனம் உண்மையத்தானே சொன்னேன் :) ஹி ஹி
Deleteஎன்ன ஒரு வில்லத்தனம்.
Deleteகுழந்தையை போய்;;;;
கண்டுபிடிச்சன்.மிக்க நன்றி சொந்தமே...!ஏதோ பாமினி யுனிக்கோட் மாற்றியில் கவயீனம் .மிக்க்க்க்க'க நன்றி சொந்தமே..!
ReplyDeleteஅப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு, இருங்கோ படிச்சிட்டு வாரேன் :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனணவரும் புரிந்து கொள்ள வேண்டியது.இருந்தும் சில விபரிக்க முடியாத நோடிகளில் சிலருக்கு இது அவசியமாகவும் உள்ளதனை நாம் எற்றுக் கொள்ளவும் வேண்டும்
ReplyDeleteவாங்க தமிழன் வணக்கம்..அதிசயாவின் தளத்திற்கு வரவேற்று நிற்கிறேன்.மறுக்க முடியாத உண்மை.நானும் சில தருணங்களில் அத்தகைய சிந்தனை வசப்பட்டதுண்டு.ஆனால் அவ்வளவாக முயற்சிக்கவில்லை.அந்த அனுபவங்கள் தந்த பாடம் தான் இத்தனை இறுக்கமான மனம்.சந்திப்போம் சொந்தமே
Deleteஅடக் கடவுளே நீங்க கூடவா இப்படிப்பட்ட கோழைத்தனமான முடிவுக்கு எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை
Deleteசிந்தனை வசப்பட்டதுண்டு.முயற்சிக்கவில்லை.முயற்சித்த என் நண்பரொருவரின் வருத்தங்களையும் மிகவே அறிந்து பாதிக்கப்பட்டதுண்டுஃமுட்டாள் தனம் என முத்திரை குத்துவதை விடுத்து அதிலிருப்போரை வெளியே எடுங்கள்..நான் இன்னும் சாகல பாஸ்;;;;:)
Deleteஓஓஓஓஓ இருக்கீங்களா?
Deleteநான் எவ்வளவோ இழப்புக்கள் வந்த போதும் ஒருக்காலும் இவ்வாறு எண்ணியது கிடையாது அதுக்குறிய தைரியம் இல்லை
வாழ்த்துக்கள்.தொடர்ந்து செல்லுங்கள்.
Deleteநீண்ட மன நோக்கு
ReplyDeleteநல்ல சிந்தனைக் கட்டுரை சகோ
வணக்கம் சொந்தமே.உங்கள் ஆதரவு அன்பு தொடர்வது மகிழ்ச்சி.சந்திப்போம் சொந்தமே!
DeleteNaanum muthalla padichan onnume puriyalla sari mobile upset pola ennu ninachi comment potta athuvum poduppadukuthu illa
ReplyDeleteEnna koduma saravana. Sothanai
வணக்கம் பாஸ்என்னமோ ஏதோ ஆகிற்று..இப்ப சரி பண்டேன் சிட்டுக்குருவி....!
Deleteஅதிசயா நல்லதொரு கட்டுரை வடித்திருக்கின்றீர் தற்கொலைக்கு தூண்டப்படும் மனதிற்குள் ஆட்டிப்படைக்கு எண்ணங்களையும் அதை எவ்வாறு களைந்தெறிவேண்டும் என்பதையும் அழுத்தமாய்ச்சொல்லிப்போகிறது பதிவு...
ReplyDeleteமுதலில் பதிவை படிக்க வந்தபோது எழுதுரு வேறு மாதிரி இருந்ததால் என்னால் பதிவை படிக்கமுடியாமல் போகவே பதிவிற்க்கு சம்மந்தமில்லா மறுமொழியிடுமாறு போயிற்று மன்னிக்கவும்.......
தற்கொலை எண்ணத்தை தூக்கிலேற்றுவோம் என்று சொல்லும் படமும் பதிவுக்கு அழுத்தம் சேர்க்கிறது....
முகப்புத்தகத்தில் நண்பர் ஒருவரின் கவிதைக்கான சுட்டியை இங்கு இணைக்கிறேன் அந்த கவிதை இந்த பதிவுக்கு மிகப்பொருத்தமாய் இருக்கும் அதோடு தற்கொலை செய்ய நினைப்பவன் ஒரு கணம் இக்கவிதையை படித்தால் தன் எண்ணத்தை கைவிடுவான் என்பது நிச்சயம்........
http://yazhganesh.blogspot.in/2011/12/7.html.
மிக்க நன்றியும் மகிழ்சியும்.நீங்க சுடடிக்காட்டியிராவிட்டால் நானும் கவனித்திருக்க மாட்டேன்.நிச்சயமாய் நண்பரின் தளத்தை பார்வையிடுகிறேன்.நாங்க எல்லாம் யாரு?ஃஎன்னங்க நீங்க சொந்தம் என்று பாசமாய் அழைக்கிறேன்,பின் மன்னிப்பெதற்கு???ஃஉரிமையோடு சுட்டிக்காட்டலாம் குட்டியும் காட்டலாம் இந்த சிறிய சகோதரிக்கு..சந்திப்போம் சொந்தமே
ReplyDelete1மாத்திற்கு முள்பு நான் பதிவுலகில் அறிமுகமான போது இத்தளம் பார்த்ததாய் ஞாபகம்.பின் மீளவும் செல்ல முடியவில்லை.மிக்க நன்றி மீண்டும் அழைத்துப்போனமைக்கு.இக்கவிதையை அன்றே படித்ததாயும் ஞாபகம்.அடிக்கடி அம்மாவிட் சொல்வதுண்டு தூக்கு போடுவதிலும் சில தொழில்நுட்பம் இருப்பதாய் எங்கோ பார்த்தேன் என்று...அது இங்கு தான்!!!1
ReplyDeleteஆகா...இப்பதான் பதிவை திருப்தியா படிச்சிருக்கிறேன்.இன்னைக்கு ஞாயிற்று கிழமை இதனால எங்க ஏறியாவுல பவர் கட் மொபைல்லதான் முதலில் படிச்சேன் சரியான திருப்தி கிடைக்கவில்லை. மேலும் எழுத்துருவில் ஏதோ சூனியம் செய்துவிட்டார்கள் போல...
ReplyDeleteஓஓஓஓ..இந்த பவர் கட் பிரச்சனை பெரிய இம்சைங்க..நமக்கு நாளைக்கு..,இதாங்க சிட்டுக்குருவீ விர சமயஙள்ள 'இதுங்களும் சதி பண்ணுதுங்க'
Deleteசிறந்ததொரு பதிவு அவசியம் எல்லோருக்கும் உபயோகப் படும் என நினைக்கிறேன்.நல்ல சிந்தனைகள் கருத்துக்கள்
ReplyDeleteநன்றி சொந்தமே......!சந்திப்போம்
Deleteதங்களின் தளத்திற்கு என் முதல் வருகை இது..
ReplyDelete///தவிப்பார்க்கு தலைதடவுவதை விட ஆறுதல் வேறென்ன இருக்கமுடியும்??///
ம்ம்.. சரியாக சொன்னீர்கள்..! துன்பத்தில் உழலுபவர்களுக்கு இதுதான் சீரிய மருந்து.. நாம் கொடுக்கும் ஆறுதலும், தேறுதலும்தான் அவர்களை சீர்நிலைக்கு கொண்டு வரும்..!!!
பதிவு முழுவதும் அருமையான கருத்துகளை கூறியிருக்கிறீர்கள்.. அருமை..!!
வாழ்த்துகள்..!!!!
வணக்கம் சொந்தமே..அதிசயாவின் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.மிக்க நன்றி உங்கள் கருத்திடலுக்கு..தொடர்ந்தும் பதிவுலகில் சந்திப்போம் சொந்தமே..!
ReplyDeleteம்..ஆற அமர வாசிச்சேன் அதிசயா.எங்களுக்குள் இருக்கும் இன்னொரு மனிதன் தான் எங்களைச் சிலசமயம் ஆள்கிறான்.எங்களை அவன் கையில் கொடுக்காமல் அவனை எங்கள் கையில் வைத்திருந்தால்....நாங்கள் நாங்களாக வாழமுடியும்.அருமையான பதிவு !
ReplyDeleteவணக்கம் அக்கா.மிகச்சரியாகச்சொன்னீர்கள்.கடிவாளத்தை எப்போதும் எங்கள் கைகளிலே வைத்திருந்தால் வெற்றி நமதே,,முயன்று பார்ப்போம்.அக்கா தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!அன்பிற்கு நன்றி
Delete//வெளியுருவில் திடமாகத் தெரியும் ஒவ்வொரு முகங்களின் பின்னும் எல்லைப்படுத்தமுடியாத நினைவோட்டங்கள் விரிந்து செல்கின்றன.//
ReplyDeleteஉண்மைதான் தோழி.தோல்விகளை பெரும் சுமையாக எண்ணாமல் வெற்றிக்கான அனுபவமாக கருதி வாழ்வோமானால் எந்த நாளும் வெற்றியே.அருமையான பதிவு.எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனி.
வா அக்கா(ஒருமைல தான் சில சமயம் நெருக்கம் )...வணக்கம்.சரியாகச்சொன்னீர்கள்...நன்றி அக்கா...கவனமெடுக்கிறேன்.தொடர்ந்தும் சந்திப்போம் குட்டிஅக்கா
ReplyDeleteவணக்கம் சகோதரி..
ReplyDeleteமனோவியல் அடிப்படையில் தற்கொலை
பற்றிய விளக்கக் கட்டுரை மிக நன்று...
முத்தாய்ப்பாய் இறுதியில் உள்ள கவிதை
கோபுரக் கலசம்....
வாங்க சொந்தமே..வருகையும் வாழ்த்தும் மிகவே மகிழ்ச்சியும் பெருமையும்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!
Delete//கொலை ஒன்று செய்வோம் // தலைப்பை பார்த்து மிரண்டு போனேன் போங்க
ReplyDeleteவணக்கம் சொந்தமே!நல்ல காரியத்திற்காய் நிச்சயம் சில உணர்வுகளை கொன்று போடுவதில் தவறில்லை...முயன்று பாருங்கள்.சந்திப்போம் சொந்தமே...!
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே.......!
ReplyDeleteஅருமையான பதிவு. இன்னும் எழுதுங்கள். நாம் என்றும் உங்களுடன் இருப்போம். எனது வலைப்பதிவு:http://newsigaram.blogspot.com/
ReplyDeleteவணக்கம் சொந்தமே.மிக்க நன்றி.இற்த அன்பும் ஆதரவும் தானே என் போன்ற புதிய பதிவர்களுக்கு பெரிய பலம்.சநடதிப்போம் சொந்தமே...!
ReplyDelete//ஒரு செல்வந்த வீட்டு அடுக்களையாய் ஆசைகள் உள்ளே கொட்டிக்கிடக்கின்றன.. இத்துப்போன யாசகத்தட்டாய் கனவுகள் ஏனோ காலியாகி இறக்கின்றன.. அத்தனையும் அள்ளிச் சேர்த்து ஒருமுறை வாழ்ந்து கொள்கிறேன் என் வரிகளில் "மழை கழுவிய பூக்கள்" என் நினைவுக்குழந்தைகள்..!//
ReplyDeleteஇந்த வரிகளின் தாகம் என்னை ஏதோ செய்கிறது, உங்கள் எழுத்து மிகவும் கூர்மையாகவும் அழகாகவும் உள்ளது, தொடருங்கள். தொடர்கிறேன்
படித்துப் பாருங்கள்
வாழ்க்கைக் கொடுத்தவன்
வாங்க சொந்தமே வணக்கம்.என் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...!மிகவும் நன்றி தங்கள் வருகைக்கு.பதிவுலகில் இனிய சொந்தமாக தொடர்ந்தும் சந்திப்போம்.
ReplyDeleteவேர்விட்டு விருட்சமாகி,விழுதுகளை எறிந்து நஞ்சாய் நம்மை ஆட்கொள்ளும்.புரிந்து கொள்ள இயலாதவர்களிடம் உங்கள் குழப்பங்களை சொல்லி விமர்சனத்திற்குள்ளாகாதீர்கள்.
ReplyDeleteஅருமையான ஆலோசனைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!
வாங்க சொந்தமே வணக்கம்.நீண்ட இடைவெளியின் பின்; தங்களின் அன்◌பான வாழ்த்துக்கள் கேட்டதில் மிகவே திருப்தி.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே...!
ReplyDeleteதேவையான பதிவு சொல்லிய விதம் சொல்லாடல் கவனிக்க வேண்டிய ஓன்று ..........
ReplyDeleteவாங்க சொந்தமே..நலமா???வருகைக்க மிகவே நன்றி.இனிய இச்சந்திப்போடு தொடர்கிறேன் சொந்தமே..!
ReplyDeleteஉங்கள் பதிவில் ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் காணப் படுகின்றன. கவனிப்பீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeletehttp://newsigaram.blogspot.com/
வணக்கம் சொந்தமே..கருத்திற்கு நன்றி..கவனித்துத்தான் பதிவிடுகிறேன்.ஆனாலும் சில தருணங்களில் தவறுகிறது.கவனமெடுக்கிறேன் சொந்தமே
ReplyDeleteநன்றி தோழி.
Deletehttp://newsigaram.blogspot.com/
Ms. Athisaya,
ReplyDeletePlease visit my blog for a surprise
http://gopu1949.blogspot.in/2012/06/awesome-blogger-award.html
vgk
மிகவே நன்றி ஐயா..தங்கள் தளத்திறல் சந்திக்கிறேன்..!
ReplyDelete''..தவிப்பார்க்கு தலைதடவுவதை விட ஆறுதல் வேறென்ன இருக்கமுடியும்??...''
ReplyDeleteஇதை நான் செய்வதுண்டு.
மிக பயனான ஆக்கம்.
நன்றாக எழுதப் பட்டுள்ளது.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் சொந்தமே...!எனக்கும் சில சமயங்களில் தேவைப்படுகிறது...!பல தருணங்களில் நான் தலை தடவுவதும் உண்டு...!தொடர்க உங்கள் பணி.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சொந்தமே..சந்திப்போம்.
ReplyDelete