Wednesday, June 6, 2012
எண்ணங்கள் வானோக்கி....!
உயிர் வரைந்த வழு இரண்டு
வறுமையும் சிறுமையும்.,
அளவில் சிறுமை சிறுமையல்லவே-இது
விதியின் சிறுமை..!
பகட்டின் வறுமை வறுமையல்லவே -இது
வயிற்றின் வறுமை..!
குழம் நிறைத்த மேகங்கள்-மழையற்று மலடாக
விழியெல்லாம் கருவாகி
இங்கு குடம் நிறைத்து போகின்றன..!
சேர்ந்த துணை-ஈன்ற இணை
ஒன்றாக ஓய்ததனால்
எச்சங்கள் இரண்டும்
இங்கு
என்ன தேடி வந்ததுவோ??
மூன்று முழம் கயிற்றிற்கு
முகம் எதுவும் மறுத்ததில்லை..
அரளி விதை கூட
அந்நியப்பட்டுப் போனதில்லை..
கடைசிக்கொடையாய் மண்ணைன்னை கொடுப்பாருமுண்டு
ஆனால்...!
இந்த விதை இறப்பிற்கில்லை..!
இறுக்கமாய் உரைக்கிறது நான்கு விழிகள்..!
முடியும் முடியும்-விழியின்
வடிதல்
விடியும் விடியும்-நிலவால்
இருளும்.
இடியும் மழையும்-இறங்காவிட்டால்
நொடியில் தொடரும் இந்த தண்ணீர் பயணம்
வேரறுந்து வீழ்ந்தாலும் விதைகள்
வெந்துவிடவில்லை
சோறிpழந்து சோர்ந்த பின்னும்; ஆன்மா
செத்துவிடவில்லை
இரண்டு குடமெடுத்து
இடுப்பொடிய நடப்பதெல்லாம்
யாரோ ஊட்டி விட்ட
அறிவுச்செடி வளர்வதற்கே..!
இரண்டு பானை இறக்கி வைத்தால்
நோட்டுக்கொப்பி கொடுப்பார்கள்-இரங்கியே
இரண்டு ரொட்டித்துண்டும் வைப்பார்கள்.
வயிறு வளர்க்கும் முயற்சியல்ல-அறிவு
வளர்ப்பே இது..!
ரொட்டித்துண்டிரண்டும்
வற்றிய உயிர் சுரக்க..!
நான் காண்கிறேன்,
நாளை விருட்சங்கள் வெளிவரும்
வெளிச்சம் இந்த விழிகளிலே...!
சொந்தங்களே!நலமா??
அதிசயாவின் வருகை கவிதைக்கானதே.எனக்கு மற்றொரு முகம் காட்டியது என் அன்பு அண்ணன்.மீண்டும் என் கவிதைக்குழந்தைகளோடு உங்கள் வாசல் வருவது சிலிர்ப்பு.
சாதனை பற்றியதான நூல் ஒன்று வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஒவ்வொன்றாய் படிக்கையில் வெளிச்சங்கள் காட்டியது இந்தச்சொல்- எண்ணங்கள்
தலைப்பு -ஒரு படம் பலர் பார்வையில்
'எதையும் வெற்றிகரமாக பார்க்க வேண்டும்.அந்த எண்ணங்களே மாபெரும் சக்தி,அதை பார்க்க முடியாது.ஆனால் அதை முறைப்படுத்தி வலுவாக்கி பழக்கமாக்கிக் கொள்ளும் போது வெற்றி புலனாகத்தக்க பொருளாக நமது சூழலில் தோன்றும்.'
தற்செயலாக நான் கண்ட புகைப்படத்திற்காய்இன்று நிரப்பிக் கொண்ட வரிகள் இவை.நீங்களும் உங்கள் வாழ்வில் முயன்று பாருங்கள் சொந்தங்களே..!
குறிப்பு-வெறுமைகள் மிகுந்த தேசம் ஒன்று பின்னாளில் நேசங்களால் நிறைத்த சொந்தம் அது.சில சொந்தங்களிடம் ; பயணமாக இருப்பதால் தாமதம் ஏதும் ஏற்பட்டால் பொறுத்தருள்க.விரைவில் மற்றொரு பசுமையான பதிவுடன் வருகிறேன் நேசங்களே..!
எண்ணங்களுடன்
அதிசயா
நீண்ட நாட்களுக்குப் பின் ஆறுதலாக இருந்து படித்தா கவிதை..திருப்தியாகவுள்ளது
ReplyDeleteசிட்டுக்குருவி இம்முறையும் முந்தி விட்டீர்கள் கருத்திடலில் மிகவே நன்றி
Deleteமீண்டும் சொல்கிறேன் காத்திரமான வரிகளிகளைக் கொண்ட கவிதை பிடித்திருக்கிறது...தொடருங்கள்
ReplyDeleteநன்றி பாஸ்...இவளோ நர்ளும் ஆறுதல் லீவ்ல இந்திச்சா??மிகவே நன்றி சந்திப்போம்.சொந்தமே
Deleteநல்ல கவிதை
ReplyDeleteபுகைப் படத்தை
உயிர்ப்பிக்கிறது
கவிதை வரிகள்
தொடர்ந்து எழுதுங்கள் உறவே
பாராட்டுக்கள வாழ்த்துக்கள்
தங்களின் வருகை திருப்தி.நிச்சயமாய் சொந்தமே தொடர்ந்தும் சந்திப்போம்.
ReplyDeleteகுளம் நிறைத்த மேகங்கள்-மழையற்று மலடாக
ReplyDeleteவிழியெல்லாம் கருவாகி
இங்கு குடம் நிறைத்து போகின்றன..!
பசுமை மலரட்டும் !
பசுமை பச்சை இரண்டும் தான் நிறைவு.வருகைக்கு நன்றி சொந்தமே.சந்திப்போம்.
Deletenice thanka...
ReplyDeleteviraivil vanko..
சுதாண்ணா...மிக மிகவே கடமைப்பட்டுள்ளேன்...!மிக்க நன்றி என் நேசத்துக்குரிய சொந்தமே
Delete//எனக்கு மற்றொரு முகம் காட்டியது என் அன்பு அண்ணன்.//
Deleteவிடுகதையாய் தொடரும் உறவுகள்.
கட்டுரையா கவிதையா?
ReplyDeleteஎந்தக்கண்?
ரெவரி சார் வணக்கம்.என் கவிதைக்கு காரணம் சொன்ன தாய் தான் இக்கட்டுரை..!வருகைக்கு நன்றி.சந்திப்போம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//நான் காண்கிறேன்,
ReplyDeleteநாளை விருட்சங்கள் வெளிவரும்
வெளிச்சம் இந்த விழிகளிலே...!//
நிச்சயமாக தோழி.உன் கனவு நியமாகும் காத்திரு.
நன்றி என் அன்பிற்குரிய சகோதரி...!
ReplyDeleteஇன்று விதைத்த இந்த விதைகள்
ReplyDeleteதான் விளையும் பூமியையே தலையில்
தாங்கி துவண்டு போகும் நிலைஎனினும்
விதைகள் கீறிட்டு துளிர்விட்டு வளர்கையில்
பெரும் விருட்சம் ஆகிவிடும்...
அன்றோ இன்று தாங்கிய பாரமெல்லாம்
நிலைகுழைந்து போய்விடும்...
அருமையான ஆக்கம் சகோதரி..
அன்றோ இன்று தாங்கிய பாரமெல்லாம்
Deleteநிலைகுழைந்து போய்விடும்.
வணக்கம் சொந்தமே..இந்த நம்பிக்கை விதையுடன் தான் எத்தனையோ பலவீகங்களும் பலம் பெற்றுக்கொணடிருக்கின்றன..தலைவா கவிதை சூப்பர்;;
சந்திப்போம் சொந்தமே..
அருமையான கவிதைங்க..
ReplyDeleteசொல்லாடல்கள் மிக அழகு..
இப்போதுதான் உங்கள் தளம் பார்க்கிறேன்..
//நான் காண்கிறேன்,
நாளை விருட்சங்கள் வெளிவரும்
வெளிச்சம் இந்த விழிகளிலே...!//
நிச்சயமாக!!!
வணக்கம் சொந்தமே..வரவேற்று நிற்கிறேன்.உங்கள் வருகைக்கும் ரசனக்கம் மிகவே நன்றி.பதிவுலகில் தொடர்ந்தும் சந்திப்போம் இனிய சொந்தங்களாக...!:)
ReplyDeleteஅதிசயா....எழுத்தால் இயங்கத்தொடங்கிவிட்டீர்கள் வாழ்த்துகள் ... வார்த்தைகள் இல்லாமல் சும்மா எதையோ சொல்ல நினைக்கிறேன் !
ReplyDeleteவாங்க அக்கா ..வணக்கம்.நீங்க வந்து போனாலே பெரிய தென்பு தானே அக்கா....சந்திப்போம் சொந்தமே..!
Deleteகண்டிப்பாக விருட்சங்கள் வளரும்....
ReplyDeleteவறுமையை இதை விட யாரும் சொல்லமுடியாது...
வலியிருக்கின்றது கவிதையில்....
வாங்க சார்.வணக்கம்.வறுமை வலியதும் வலியானதும் தான்.மிக்க நன்றி வருகைக்கு தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!
ReplyDelete''...உயிர் வரைந்த வழு இரண்டு
ReplyDeleteவறுமையும் சிறுமையும்.,
அளவில் சிறுமை சிறுமையல்லவே-இது
விதியின் சிறுமை..!
பகட்டின் வறுமை வறுமையல்லவே -இது
வயிற்றின் வறுமை..!''
அதிசயா! மிக உணர்ந்த வரிகள் இவை. கவிதை வாசிக்க மனசுக்கு நிறைவாக உள்ளது சகோதரி.
தொடர்ந்து வருவேன்.
நிறைந்த நல்வாழ்த்து.
வாழ்க! வளர்க!
(வார இறுதிக்கு நன்றி. அதனால் தானே ஆறுதலாகத் தேடிய போது அதிசயாவின் கருத்துகள் '' ஸ்பாம் '' பகுதியிலிருந்து மீட்டெடுத்துக் கிடைத்தது. மிக மிக மகிழ்ச்சி.)
வேதா. இலங்காதிலகம்.
வாங்க வணக்கம் சொந்தமே!உங்கள் வருகைக்கும் வ◌ாழ்த்திற்கும் அந்த உடனிருப்பிற்கும் மிகமிகமிக நன்றி சொந்தமே.நிச்சயமாய் வார இறுதியில் இனி உங்கள் நினைவுகள் உட்டிக்கொள்ளும் சொந்தமே......!
ReplyDeleteஅதிசயாவிற்கு வாழ்த்துகள் தினக்குரலில் இந்த கவிதை வந்திருப்பதாய் கலை சொன்னார்கள் அந்த இணைப்பை கொண்டே இக்கவிதைக்காண வந்தேன், அறிவுப்பசிக்கு தீனிபோட நினைக்கும் குழந்தையின் புகைப்படங்களுக்கு அழகான வரிகள் கொண்டு உயிர்கொடுத்திருக்கிறீர்கள்.............
ReplyDeleteவாழ்த்துக்கள் சொந்தமே................
வணக்கம் சொந்தமே.மிகவே நன்றி தங்கள் வாழ்த்திற்கு.உடல் நலக்குறைவால்; சில நாட்கள் இங்கு வரமுடியவில்லை.முக நூலின் மூலமே சில சொந்தங்கள் அதை தெரியப்ப:டுத்தினார்கள்.இதுவரை அறியப்படாத ஒரு சொந்தத்திற்கும் உங்கள் வாழ்த்துகளிற்கும் மிகவே கடமைப்பட்டுகிடறேன்.சந்திப்போம் சொந்தமே.
ReplyDeleteதங்கள் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளுமே அருமை ...
ReplyDeleteஅனைத்திலும் பின்னூட்டமிட ஆவல் தான் ...
ஆனால் அடுத்தடுத்து வாசிப்பதிலே மூழ்கிவிட்டேன் ...!!!
இனிதே இப்பணி தொடர வாழ்த்துக்கள் ...!!!
அன்பு தோழி ..!!!
அன்பின் சோந்த்திற்கு அதிசயாவின் அன்பான முதல் வணக்கம்...!தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.தங்களின் இந்த ஆதரவும் பாராட்டுக்களும் எனக்கு ஒப்பற்ற மகிழ்வையும் உற்சாகத்தையும் தருகின்றன..நிச்சயம் தொடர்வேன்..என் அக்புத் தோழி;சந்திப்போம்!
ReplyDeleteமகிழ்வுடன் தொடர்வோம் இப்பயணத்தை எதிர் எதிர் இருக்கை பயணிகளாக ...!!!
Delete