ஒவ்வொரு மனிதனும் ஒரு பயணம்.இந்த பயணங்களெல்லாம் ஒரு நிரந்தர உறக்கத்தோடு முடிந்து போகும்.ஆனால் அந்த பாதைகள் அவரவர் பெயர் சொல்லிக்கொண்டே காலங்களோடு நிலைத்திருக்கும்.
'சாமங்கள் முடிந்த பின்னால் சந்திரன் எஞ்சி நிற்கும்
ஈமங்கள் முடிந்த பின்னால் ஈரங்கள் எஞ்சிநிற்கும்
நாமங்கள் முடிந்த பின்னால் ஞானங்கள் எஞ்சிநிற்கும்'
(வைரமுத்து)
நான் என் பயணங்களைக்காட்டிலும் எனக்கான பாதைகள் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டவள்.என்னுள் இருந்த 'அவளை' கண்டெடுக்கச் செய்த என் பதின்ம வயதுகளை மிகவே நினைத்து இப்பதிவை இடுகிறேன்.
பாதைகளிலே ஏணிகளின் இடுக்குகளில் பாம்புகளையும்,பட்டாம்பூச்சிகளின்; இறக்கை பின்னே மயிர்கொட்டிகளையும் ஒழித்துவைத்திருப்பது கட்டிளமைச்சாலைகள்.
சற்று முன்னர் நான் தாண்டிய இச்சாலைகளின் சாயல்களையும் இன்று கண்டு அனுபவிக்கும் அதன் ஏற்றுக்கொள்ள முடியாத மாறுதல்களையும் படிமங்களாக்கி பதிவிடுகிறேன்.
கண்ணாடிகளை நேசிப்பதும், காதல் பற்றி ஆராயச் சொல்வதும்,உள்ளே ஒழிந்திருக்கும் பேராற்றல் ஒன்றை தேடித் தருவதும் இக்காலம் தான்.என்னிடம் கேட்டால் பேனாக்களோடு; சொந்தம் சொல்லித்தந்ததும்,காகிதங்கங்களோடு பேசச்சொன்னதும்,கண்ணில் விழுந்ததையெல்லாம் குறிப்பெடுத்து வை, என்றதும் கட்டிளமைக் காலங்கள் தான்.
என் சாலைகளிலும் எத்தனையோ சுவாரஸ்யங்கள்,துன்பங்கள் சுகம் விசாரித்துப் போனது.ஒழிந்திருக்கும் சபலங்களெல்லாம் ஒன்றாய் ஓடி வந்து அரும்பிய சிறகையெல்லாம் அழுத்திவிட்டு,இயந்திரச் சிறகையெல்லாம் என் தோள்களில் பூட்டிவிட்டு 'எம்பிப்பற' என்று விரட்டிப்போனது.இரகசியமாய் முயற்சித்தேன்,ஆழங்களில் பலமாய் அடிபடும்படி விழுந்தேன்.அந்த ஒவ்வொரு விழுக்காடுகளும் எனக்குள் அடர்த்தியான தெளிவையும்,தெளிவான ஞானத்தையும் பூசிப்போனது.
வெறும் பருவத்து ஈர்ப்புகளையெல்லாம் 'காதல் காதல்'என்று சட்டை பிடித்தது வயது.ஆரம்பத்தில் சித்தம் தடுமாறிய போதும் விரைவாகவே தணிக்கைக்கு பழகியது மனது.எனக்குள் முளைத்த அந்தத் தெளிவுகளை என் பள்ளித்தோழரிடமும் விதைத்துப் போனேன்.களங்கமேதுமின்றி எம் கட்டிளமை விடைபெற்று என்னிடமாய் சிரித்துப்போனது.
ஆனால் இன்று நான் காணும் கட்டிளமைக் கலாச்சாரம் வேறு.மனதிற்கு எத்தனை சமாதானம் சொன்னாலும் இந்ந மாறுதல்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது.
என் போலவே சூழலில் வளர்க்கப்பட்டவர்கள்,தெளிவு படுத்தப்பட்ட பின்னணியில் உருவாக்கப்பட்டவர்கள் கூட சலனங்களை வெல்ல முயற்சிக்காது தோற்றுப்போகிறார்கள்.
பதிமூன்றுகளில் உருவம்பெறும் சில அகச்சிந்தனை மாயைகளுள் இலகுவில் மாட்டிக்கொள்கிறார்கள்.அனுபவக்கல்வி தான் சிறப்பான ஓர் அடிப்படையை உருவாக்கும் என்பது பொதுவான உண்மை.ஆனால் பதின்ம வயதுகளின் தொல்லைகளில் மாட்டிக்கொள்பவர்கள் மீண்டும் மீண்டுமாய் கைகளில் விளக்கேந்தியபடியே சாக்கடைக்குள் விரும்பிப் போகிறார்கள்.திடீரென எம் பிரதேசங்களில் புகுத்தப்பட்ட நாகரிகம்,நுகர்வுச் சுதந்திரம் என்பன இதற்கு காரணமாய் அமைந்த போதும் இது இன்று உலகளாவிய ரீதியில் பெரும் சவாலே..!பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளின் கண்ணியத்மன்மை தொடர்பான பெரிய பயமும் நிம்மதியீனமும் ஏற்பட்டிருப்பதை நானும் கண்டு நொந்ததுண்டு.
பெற்றோர் உறவுகள் பெரும்பாலும்; தமது வீட்டின் பதின்ம வயதுப் பிள்ளைகள் மட்டில் மனம் திறந்து பேசத் தயாராகவே உள்ள போதும் பிள்ளைகள் ஏதும் பேசுவதாக இல்லை.தேவையான அளவு கண்காணிப்பும் அரவணைப்பும் கிடைக்கின்ற போதும் அவற்றை தாண்டியும் சிறப்பாகவும்,புத்திசாலித்தனமாகவும் தவறுகள் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்.வெளியே எங்கோ 'அந்த' ஒன்றைத் தேடுகிறார்கள்.
நான் பாடசாலையிடம் விடைபெற்று சொற்ப காலங்களிலே கண்டு அதிர்ந்த உண்மை இது.என் ஒத்த நண்பிகளிடம் தவறான பாதையில் ஒருவர் போகிறார் எனத்தெரிந்தால் நகைச்சுவையாகவும்,அன்பாகவும் தேவையேற்படின் கண்டிப்பாயும் சொல்லி சரியான பாதையில் நடத்தக்கூடிய ஆரோக்கியமான,தற்துணிவான,சிறப்பான நட்பு வட்டம் காணப்பட்டது.ஆனால் இன்று,கூடவே இருந்து சிறப்பான ஆலோசனைகளை வழங்கி விரைவாக அவர்கள் போக விரும்பும் இடத்திற்கு கொண்டு சேர்த்து 'நல்ல'நண்பர்கள் என்று பெயர் பெற்றுத் தம்முள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.
சில தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது இவர்களுக்கு ஏற்படும் ஆத்திரமும் ஆதங்கமும் அளவு தாண்டியது.இந்தத்தருணங்களில் சோகமயமான சில திரையிசைப்பாடல்களை கேட்டபடி,அக்கதை மாந்தர்களை தாமாக கற்பனையில் வரித்து,அந்த சோகங்களுக்குள் விழுந்து அதிலிருந்து வெளியே வர விரும்பாதவர்களாக எல்லோர் மனங்களையும் காயப்படுத்துகிறார்கள்.மற்றொரு கோணத்தில் பார்க்கின்ற போது,வயதில் பெரிய சில நபர்களிடம் ஏற்படும் ஈர்புகள் மேலும் அவர்கள் சிந்தனையை திருப்பிப்போகிறது.
தமது முயற்சிகள் தடைப்படுகையில் அத்தனை தோல்விகளையும் வெறுப்பாகத்திரட்டி ஏதேதோ செய்து தமது கோரிக்கைகளை வென்றெடுக்கப்பார்க்கிறார்கள்.
குழந்தைத்தனமும் துடுக்கும் விடைபெற்று விடாத இந்தப் பருவங்களில் குழந்தை பற்றிய சிந்தனைகள் இவர்களிடம் வேர்விட்டு இவர்களை சீரழிக்கிறது.நான் சந்தித்த நபர்களை பொறுத்தவரை இவர்கள் ஒருவித போதையில் இருப்பவர்களைப் போல தமது சிந்தனைகளுக்குள்ளே தம்மை எல்லைப்படுத்திக் கொண்டுள்ளது, மீள விரும்பாதிருப்பது, மன வேதனைக்குரிய நிதர்சனம்.அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளே இவற்றில் மாட்டி மீளமுடியாது தவிக்கிறார்கள்.அதிலும் அருவருப்பிற்குரிய உண்மை என்னவென்றால் இந்நாளில் திருமணமான ஆண்கள் பால் ஈர்க்கப்படுவதும் மலிவாகிவிட்டது.
சில கட்டிளமை ஈர்புகள் பின்னாளில் காதலாகி,கல்யாணத்தில் முடிவதும் உண்டு.ஒத்துக்கொள்கிறேன்.இருந்த போதும் இப்பருவம் வாழ்க்கைத் துணை தேடும் பருவமேயல்ல.அறிவார்ந்த சிந்தனைகளாலும்,சில ஆக்கபூர்வமான எண்ணங்களாலும் இவர்கள் தம்மை வளப்படுதிக்கொள்ள வேண்டும்.இப்பருவம் சொல்லும் துடிதுடிப்பையும் பரவசங்களையும் சரியாகப் பயன்படுத்தி வழுவற்ற ஓர் சாலையை அமைக்துக்கொள்வது அவர்களின் கடமை.இதற்கு பெற்றோர் பெரியோர் நட்பு வட்டம் என்பன ஆரோக்கியமாக அமைய வேண்டும்.முயலுங்கள்...!
சிறப்பான கட்டுக்கோப்பான சமுதாயத்தை உருவாக்குவோம்.வளமான எமது கலாச்சார பின்னணிகளை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.தவறுகளை நியாயப்படுத்துவதை விடுத்து எம்மை மாற்றுவோம்.
'வயதுகள் வரண்டு போய்
கனவுகள் கடந்து போய்
பயணங்கள் முடிந்துவிட்ட கணங்களில்
பாதைகளை எண்ணிப் பரவசப்படுவோம்.'
கனவுகள் கடந்து போய்
பயணங்கள் முடிந்துவிட்ட கணங்களில்
பாதைகளை எண்ணிப் பரவசப்படுவோம்.'
பாதைகளின் இடைவெளியில்,
இவளோ நீளமா?????என்னங்க பண்ண??கணக்குப்புரிய மாட்டேங்குதே
ReplyDeleteமிக அழகான ஒரு சமூக பொறுப்புடன் கூடிய அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி நணபா...வருகைக்கு; வாழ்த்துக்கும்
ReplyDeleteமிகா திறமையான பதிவு..நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் உங்கள் பதிவுகளில் முதிர்ச்சி தெரிகிறது என்று...நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லிங்க...:)
ReplyDeleteஏம்பா??விரட்டுறே??:))நன்றி சார்
Deleteமிகா என்னு வாசிக்க வேணாம்...இசுப்பலிங் மிசுட்டேக்கு மிக என்னு வாசியுங்கோ....
ReplyDeleteசரி விடுங்க பாஸ்..நாமளே ஒரு மிஸ்டேக்கு...சரிப்படுத்தி படிச்சிட்டேன்.
Deleteதிறமையான பதிவு..
Deleteசில கட்டிளமை ஈர்புகள் பின்னாளில் காதலாகி,கல்யாணத்தில் முடிவதும் உண்டு.ஒத்துக்கொள்கிறேன்.//
ReplyDeleteஒத்துக்கிறீங்க தானே..பின்ன என்ன...
என்னங்க சார்??கொஞ்சமா ஓரமா ஏதோ ஆதங்கம் விளங்குதே ஏம்பா??ஒரு சிலது மட்டும் தான் அப்படி நடக்கிது.மற்றயதெல்லாம் வெம்பல் பழங்களாவது தான் வேதனை.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் பதிவு தோழி !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திடலுக்கும்மிக்க நன்றி.தங்களுக்கு இந்த சிறிய சகோதரியின் வரவேற்புக்கள்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே.!
Deleteதிறமையான பதிவு..
ReplyDeleteமாலதி அக்கா வணக்கம்.உங்கள் கருத்திறகு மிக்க நன்றி...!சந்திப்போம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவைரமுத்துவை மேற்கோள் காட்டி...குட்டி வைரமுத்துவாகவே மாறி வருகிறீர்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள்...
ரெவெரி சார்......மிக்க நன்றிங்க..பிரம்மிப்பிறகுரிய பதைப்பாளி திரு.வைரமுத்து அவர்களின் கவிடைதகளை மிகவே ரசித்ததுண்டு.தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிகவே நன்றி.கடமைப்படுகிறேன்.ஆதரவிற்கு நன்றி.தொடர்ந்தும் சந்திப்போம்.:)
Deleteஅற்புதமான பதிவொன்றை எழுதி என்னை மலைத்து போக வைத்த அதிசயாவுக்கு பூங்கொத்து .வாழ்த்துக்கள் .தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோதரியே..!தாமதாக வந்தாலும் தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியே.தொடர்ந்தும் சந்திப்போம்.வாடாத பூங்கொத்துகளுடன்..இந்த சிறிய சகோதரிக்கு உங்கள் வழிகாட்டுதல்களை தயக்கமின்றி வழங்குங்கள்.....!
Deleteஅதிசயா மிகவும் அற்புதம் . வைரமுத்து வரிகளை கொண்டு அதிசயமான அதிசயாவின் நடைபயணம் அருமை ..
ReplyDeleteவாழ்த்துகள் மேன்மேலும் வளர ........
வருகைக்கு நன'றியும் வரவேற்பும் சகோ...!இன்று தான் முதலில் சந்திக்கிறோம் என நினைக்கிறேன்.தொடர்ந்தும் சந்திப்போம்.மீண்டுமொரு வரவேற்பும் நன்றிகளும்:
ReplyDeleteஉன் உணர்வுகளை நானும் மதிக்கிறேன் தோழி.தொட்ர்க உன் வலைப் பயணத்தை.வாழ்த்துகிறேன் நானும் உன்னை.
ReplyDeleteஎங்க போய்டா என் சித்தாரா அக்கா என்று காத்திட்டிருந்தன்.வந்தாச்சு மிக்க மகிழ்ச்சியும் எக் நனிறியும்..சந்திப்போம் தோழி.
Deleteஉணர்வோடு மெல்லிய நதியோட்டமாய் ஓடி முடிகிறது பதிவு.குறிப்பிட்டுச் சொல்லவென்று இல்லை அதிசயா.உண்மை உணர்வை எழுதும்போது......அருமை !
ReplyDeleteஹேமாக்கா..வணக்கம்.மிக்க நன்றி அக்கா..எதிர்பார்த்தேன் உங்கள் வருகையை மிகவே திருப்தி அக்கா...!அனுவவத்திற்கே உரிய தன்மை தானே அக்கா அது...!சந்திப்போம் சொந்தமே
ReplyDeleteசகோதரி..... நம்பமுடியவில்லை. நீங்கள் சொன்னது சரிதான். ஒத்த பதிவுதான். ஆனாலும் கருத்துக்களின் வலிமையும் கவிதைகளின் அழகும் அபாரம்.
ReplyDelete