வணக்கம் நேசங்களே...!
இதுவரை கவிதை எனும் நினைவுக்குழந்தைகளோடு மட்டும் அடையாளமான நான் ,இது முதல் மற்றும் சில நினைவுப் பதிவுகளுடன் உங்கள் வாசல் வருகிறேன்.இப்பதிவுகள் என் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும்; நான் எனக்குள் உணர்ந்தவைகளே..ஏதேனும் தவறுகள் நெருடல்கள் காணப்படின் இந்தச்சிறிய சகோதரிக்கு தெரியப்படுத்துற்கள்.
வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்..!
அனுபவங்கள் எவ்வளவு அற்புதமானவை.எல்லைப்படுத்தப்பட்ட சிறிய வாழ்வில் அவசியமான விடயங்களை மிக அழகாகச்சொல்லித்தருகிறது.கண்
சில அற்பமான விடயங்களுக்காக அங்கலாய்த்து, மனம் மிகவே அலை பாய்ந்து,ஐயோ ஆபத்து! என சுயமாக எச்சரித்து, அட வாழ்ந்து தான் பார்ப்போமே எனத்துணிந்து,முரண்டு பிடித்து......
ஓவ்வொரு நொடியுமே எதையாவது சாதித்துவிடத்துடித்து,சிலபல கற்பனைகள் சுமந்து ,கனவுகளில் கீறல் பாடமல் காயங்களை நம்மேல் சுமந்து,வாழ்லின் ஒவ்வொரு அசைவிலும் சிலிர்த்து,எல்லாம் முடிந்த பின்னர் 'அட இவ்வளவு தானா??' எனச் சலித்துஇந்த ,வாழ்வு சொல்லும் அனுபவங்கள் அற்புதம்.!
வலி சுமப்பதும்,அவமானம் தாங்குவதும் வேதனையாக தெரிகின்ற போதும் அத்தனையும் முதிர்ந்து அனுபவமாகையில் எத்தனை எத்தனை உறுதி.!
என் சந்தோசங்கள் என்னை திருப்பதிப்படுத்துகின்றன,தோல்விகள் என்னை துணிவுள்ளவளாக்கின்றன.'அந்த நினைவுகளில் மீண்டும் வாழ்ந்து பார்க்கையி;ல் அத்தனை வலிகளையும் அப்படியே ஆழமாக சொல்லித்தருகின்றன.
ஒவ்வொரு சம்பவங்களின் பின்னணியிலும் நான் எனக்கு நெருக்கமான பலவற்றை இழந்திருக்கிறேன்.நான் நேசித்த நினைவுகள்,நான் தேடிக்கொண்ட மனிதர்கள்,எனக்காகத் தரப்பட்ட சந்தர்பங்கள்....>,
இவற்றிற்காய் மௌனமாய் மட்டுமே அழுததுண்டு.இருந்த போதும் இருமடங்கு திருப்தியுண்டு,அவை எனக்குப்பரிசளித்த பாடங்களுக்காய்.ல சொந்தங்கள் பிறப்பால் வந்தவை..சில விதியால் இணைந்தவை..சில நானே தேர்ந்து கொண்டவை..இவை மூன்றும் இணைந்ததாயும் சில சொந்தங்கள்..!
சில சமயங்களில் வாழ்க்கை புரியும் நர்த்தனம் புரிவதில்லை.?அது -ஷாத்விகமா?ஹாஸ்யமா??.ஒரே விடயத்தையே சொன்னாலும் ஒவ்வொரு தரமும் சொல்லித்தரப்படும் விதங்கள் புதுமை....!!
வாழ்வில் சில மனிதருக்காக பரிதாப்பட்டதுண்டு, சில மனிதரை பார்த்து விழி உயர்த்தி பிரம்மித்ததுண்டு.இனி இந்த முகங்கள் இனியும் வேண்டாம் என்று வெறுத்ததும் உண்டு.உணர்வுகள் எல்லாம் வற்றி விட்ட பின்னும் சில முகங்கள் மட்டும் மரிப்பதில்லை.இவர்களை பற்றி சொல்வதென்றால் தமிழே! என்னை மன்னிக்க வேண்டும்,உன் வளம் போதாதிருக்கிறது!
நானும் சிலரைகாயப்படுத்தியிருக்கிறேன்.காயப்படுத்துகிறேன்.ஆனால் அடுத்தவர் மீது கீறிய போதும் பலமாய் வலிப்பதெல்லாம் ஏனோ என் வரிகள் தான்..:( காலங்களுக்கு அக்காயப்படுத்தல்கள் அவசியமாயிருந்தது.அப்போதெல்லாம் சுயத்தில் சுயநலக்கொள்கை பேணவில்லை.பிறர்க்காய் சுய வலி ஏற்றேன்,இருந்தும் நிராகரிக்கப்பட்டேன்.
தவற விட்ட ஒவ்வொரு தருணங்களையும் மீண்டும் அத்தனை வலிகளோடும் வாழ்ந்து பார்கையில் அனுபவம் எனும் அற்புதம் பாசமாய் என் தலை கோதிப்போகிறது.!
''வலிய இந்த இதயம் வாய்த்ததெல்லாம் அனுபவம் எனும் ஒரேஒரு அற்புதத்தால் மட்டுமே''.
நேசங்களே!கொஞ்சமாய் தூசு தட்டி,உங்கள் நினைவுப்பரண்களில் ஏறிப்பாருங்கள்.எத்தனை அற்புதம் காத்திருக்கிறதென்று.
புன்னகையுடன்
-அதிசயா-
-அதிசயா-
முன்னுரை மிக மிக அருமை
ReplyDeleteதங்கள் அனுபவப் பதிவுகளை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருக்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா...!மிக்க மகிழ்ச்சி உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..நிச்சமாய் எதிர்பாருங்க..!
Deleteவாழ்வின் புரிதலோடுதான் நகர்கிறோம்.ஆனாலும் தவறுகளும் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்தபடிதான் அதிசயா !
ReplyDeleteதங்களின் வருகை மிக திருப்தி தருகிறது...உண்மை தான் அக்கா,எல்லாம் நம்மை இன்னும் இன்னும் பக்குவப்படுத்தத்தான்..!தொடர்ந்தும் உங்களின் ஆதரவை எதிர்பார்கிறேன்..!
Deleteஅட நீங்களா இப்படி சீரியஸா.:000
ReplyDeleteசிட்டுக்குருவி என்னப்பா பண்றது..இப்பிடியும் ஆக வேண்டி இருக்கிறகு..:)))))))
Deleteவிடுங்க பாஸ்...!
மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்....எல்லாம் எல்லோருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றன...
ReplyDeleteமிக அற்புதம்.:)
அனுபங்களில் மிக முதிர்ச்சியானவரின் எழுத்துநடை தெரிகிறது...
ReplyDeleteசிட்டுக்குருவி..அப்டீங்கிறீங்க??ரொம்ப தாங்ஸ்பா..
Deleteமழை கழுவிய பூக்கள் தளத்தின் பெயரே கவிதையாய் இருக்கிறதே இன்று முதல் தளத்தை தொடர்கிறேன்
ReplyDeleteஇனிய வணக்கங்களும் எனது வரவேற்புக்களும் உங்களுக்காய்...!வருகை தந்தமைக்கும் ரசித்தமைக்கும் மிகமிகவே நன்றிகள்..மழை என்றால் இனிமை..பூக்களெல்லாம் அழகு..இரண்டும் இணைந்தாலே அதுவும் ஒரு கவதை தானே...:)))சந்திப்போம் சொந்தமே..
ReplyDeleteஇவர்களை பற்றி சொல்வதென்றால் தமிழே! என்னை மன்னிக்க வேண்டும்,உன் வளம் போதாதிருக்கிறது!
ReplyDelete//
சிலருக்காக மட்டும் இப்படி தோன்றும் நமக்கு ..
நல்ல பகிர்வு .. எழுத்துகளில் ஒரு முதிர்ச்சி தெரிகின்றது ..
காயங்கள் விரும்பியோ விரும்பமாலோ நமக்குள் ஏறிவிடுகிறது ...
அன்பு வாழ்த்துக்கள்
அப்பாடா....வந்தாச்சா அரசன் அண்ணா???மிக்க மகிழ்ச்சி...காரணமின்றி எழுதுவதை விடவும்,சில அனுபவங்களுக்கு முகம் கொடுத்த பின் எழுதும் போது அது இயல்பாகிறது..ஐயோ முதிர்க்கி எல்லாம் இல்லண்ணா..சிறிய சகோதரி..நிறைய தவறுகள் இருக்கும்.தெரியப்படுத்துங்கள்.
Deleteமிகவும் அழகிய எழுத்து நடை....
ReplyDeleteஇப்படி கவி நடையுடன் அனுபவத்தைப் பகிர்வது சாதாரண நடையில் பகிர்வதை விட மிகவும் சுவாரசியமானது..
வாங்கோ சுதாண்ணா......!மிக்க நன்றி அண்ணா..!அதென்னவோ உண்மை தானண்ணா..
ReplyDelete