எனக்குள் ஒருத்தி இருந்தாள்
ஒரு தீயாய்..!
பதினான்குகளில் எனக்குள் மூச்சு விடத் தொடங்கினாள்-இந்த
இருபதுகளில் விழுதுகளை அனுப்பி விசாரிக்கும் அளவிற்கு
என்னுள் விரிந்து விட்டாள்!!!
எனக்குள் பன்மை செய்தவள்-என்னில்
பரந்திருந்தவள் இன்று
தனித்திருக்கிறாள்..!
எதையோ வெறித்திருக்கிறாள்..,
நெடுநேரமாய் விழிகளை தரையில் உருள விடுகிறாள்.,
எப்போதும் போல் நிலவில் குளிக்கிறாள்
அங்கும் அழுவதற்கென்றே இடைவெளி தேடிப்பார்க்கிறாள்...!
இதோ,
என்னிடமாய் தலை அசைக்கிறாள்..,
உப்பாய் கரிக்கும்ஒருகரத்தால் என் விழி மறைக்கிறாள்,
மறுகையால் தனக்கே திரையிடுகிறாள்.,
இப்படியாய் பேசுகிறாள் இறுக்கமான அவவள் குரலில்..!
எனக்காய் வழக்காடுகிறேன்!
என்னுள் நிறைத்த உணர்வுகளின் தீர்ப்பு மன்றம் இது.
நீ அறியாததில்லை,இருந்தும் சொல்கிறேன்..!
நியாயங்களின் வேலிகளில் என்னை றிறுத்தி,
பாசங்களின் விழிம்புகளில் என்னை இறுக்கி,
நிர்மலமாய் ஓர்
நிரந்தர உறவானேன்...
விரட்டி வந்த சபலங்களையெவ்வாம் வென்று நின்றேன்..!
நட்பு!! ,காதல்!!,பந்தம்.!!.
விருப்புரிமைக்கோரிக்கையுடன் விநோதமாய் சிரித்தது.,
சம உரிமை சம உரிமை என்று கோஷமிட்டேன்
இன்று வாழ்வுரிமை இழந்து கடைசிப் பகலில்..
விரல் விளிம்புகளில் ஏதோ
ஓதோ ஒட்டி உலர்கிறது..
நீ தேவதை அழுதுகொண்டிருந்தாள்..
அதற்கு மேல் பேசாது ஆவி வற்றிப் போகிறாள்...
கடைசி ஆசையாய் சைகை தருகிறாள்..!
யாருக்கும் செய்தி அனுப்பாதே..
இருமுறை சாக வைக்காதே கெஞ்சுகிறாள்.
விதி வெளிகளில் சிந்திக்கிடந்தவளை
அள்ளிச்சேர்த்து ஒட்ட வைக்கிறேன்..!
ஊனாமாயாவது என்னுடனே வாழ்ந்து கொள்ளட்டடும் என்று..
அவள் ஒருத்தி
என்னுள் இருந்த ஒரு தீ!!!!!!!!
அவளுக்காய் வழக்காடுகிறேன்!
யார் அவள் கொஞ்சம் போல நமக்கிட்டயும் சொல்லுங்கோ..........:)
ReplyDeleteபதிவுக்கேற்ற படங்கள்..மிக அருமையான படங்கள் பதிவும் கூடத்தான் தொடருங்கள்...
ReplyDeleteஐஐஐஐஐ நம்ம சிட்டுக்குருவி வந்தாச்சுசுசுசுசுசுசுசுசுசு.......கட்டாயம் சொல்றன்..ஆனா கொஞ்சம் செலவாகும் பறவால்லயா???நன்றி கீச்கீச்....................
ReplyDeleteஅருமையான , அழகான கவிதை
ReplyDeleteஇன்று
ReplyDeleteநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை
ராஜபாட்டை ராஜா வின் வருகைக்கு நன்றிகளும் வருவேற்புகளும்.சந்திப்போம்.:)
ReplyDeleteஃஃஃஃஃஅங்கும் அழுவதற்கென்றே இடைவெளி தேடிப்பார்க்கிறாள்ஃஃஃஃஃ
ReplyDeleteஅட அங்கும் அது தானா?
படங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் குறைக்கலாமே சகோதரி..
என்னன்னா செய்ய??பாவ் அழுகையா வருதாம்..விடுங்கோ.கொஞ்சம் அழட்டும்.கருத்துக்கு நன்றி அண்ணா..சின்னப்பிள்ளை தானே..இனி கவனித்து போடுகிறேன்.
ReplyDeleteஎனக்குள் பன்மை செய்தவள்-என்னில்
ReplyDeleteபரந்திருந்தவள் இன்று
தனித்திருக்கிறாள்..!
எதையோ வெறித்திருக்கிறாள்..,
நெடுநேரமாய் விழிகளை தரையில் உருள விடுகிறாள்.,
எப்போதும் போல் நிலவில் குளிக்கிறாள்
அங்கும் அழுவதற்கென்றே இடைவெளி தேடிப்பார்க்கிறாள்...!//
மீண்டும் மீண்டும் நான் படித்த வரிகள் ...
படைப்புக்கு என் பாராட்டுக்கள்
அரசன் அண்ணாமிக்க மகிழ்ச்சி...!உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் தலை வணங்குகிறேன்..!
ReplyDelete