என் முதல் எழுத்துக் குழந்தைகளை
பிரசவித்த பால்ய வயதின் எல்லைகளில்
மீண்டும் ஒரு முறை சீருடை அணிந்துகொள்கிறேன்.
எழுத்துக்கள் பருவமடையாத அந்தப் பராயங்களில்
நீல நோட்டொன்றின் நடுப்பகுதியிலும்
நாட்குறிப்பேட்டின் பிடரிகளிலும் நான் போட்ட விதைகள்;
இருட்டோடு உறங்கியிருந்தால்
இன்று சூன்யமாகவே முடிந்திருப்பேன்.
காலம் தந்த உஷ்ணத்தின் அகோரங்கள,;
கருக விட்டுவிடாத நேசத்தின் நீர்த்தூறல்கள்,
வலிந்து உள்ளெடுத்த சுவாசங்கள,;
இப்படித்தான் வேர்விட்டு விரல்
நீட்டியது என் கவிதைப்பிள்ளை!
பால்யம் பருவமாய் திரண்ட காலங்களில்
உணர்வுக்கெஞ்சலும் அறிவுக்குழப்பமும்
முகம் திருப்பிய
முரண்பட்டு பொழுதுகளிலெல்லாம்
ஷாத்வீகமாய் என் கவிதைக்குழந்தைகளை
அணைந்து உறங்கியதுண்டு
அந்த நாள் வெறுமைகளின் கனத்தி;ற்கு -என்
எழுத்துக்களின் அடர்த்தியே சாட்சி!
சபைகளை தனிமையாக்கி,தனிமைகளில் சபை விரித்து
நிலைமாற்றக்கொள்கைக்குள் என்னைவசியம்
செய்ததும் சில எரியும் எழுத்துக்களே!
வார்த்தைகள் வசப்பட்ட சில பொழுதுகளில்
பெருமிதமாய் என் ராஜ்யத்தில் கொலு கொண்டிருக்கிறேன்.
அது சிம்மாசனமாய் இல்லாத போதும்
நானே செதுக்கிய நாற்காலி என்பதால்
நிமிர்ந்தே உட்காந்திருக்கிறேன்.
இப்போதும்
மயிலிறகுகளை பொறுக்கும் சிறு பையனைப்போல
சிதறவிட்ட காகிதங்களையெல்லாம்
பவ்வியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
தாள் தடவியபடியே கணக்குப்பார்க்கிறேன்-நான்
தாண்டி வந்த காட்டாறுகள் எத்தனை என்று..!
நேசங்களுடன்
அ-தி-ச-யா
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சொந'தமே!தங்களுக்கும் ஒளி பொங்கும் திருநாள் வாழ'த்துக்கள்சொந்தமே!
Deleteரொம்ப நாளைக்கப்புறம் ......
ReplyDeleteநன்றாக இருக்கிறது #மயிலிறகு
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
வணக்கம்சொந்தமே!என'னபாஸ் பண்ண??ஆன்மா ஊக்கமாஇருந்தாலும் உடலும் சந்தர்ப்பமும் முரண்டு பிடிக்குது...!வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Delete//இப்போதும் மயிலிறகுகளை பொறுக்கும் சிறு பையனைப்போல சிதறவிட்ட காகிதங்களையெல்லாம்
ReplyDeleteபவ்வியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.//
அருமை.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
வணக்கம் ஐயா!மிக்க நன்றிதங்களின் வருகைக்கும' பின'னூட்டத்திற்கும்.தங்களுக்கும் இன'பம் பொங்கும் திருநாள் வாழ்த்துக்கள் சொந்தமே!
Deleteஇனி தீபாவளி நல்வாழ்த்துக்கள். கவிதை காட்டாறு போல கடந்து ஓடட்டும் தோழி
ReplyDeleteவணக்கம் சொந்தமே!தங்களுக்கும் என் மனம் நிறைந்தநல்வாழ்த்துக்கள்.
Deleteஇனிய வணக்கம் சகோதரி...
ReplyDeleteநலமா?
நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்னர்
உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி..
வந்ததும் உங்கள் முத்திரைக் கவிதை...
நாம் ஒவ்வொருவரும் இப்படியான
நினைவுகளை சேகரித்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம்...
சற்று திரும்பிப் பார்க்க நேரம் கிடைக்கையில் பல கதைகள் சொல்லும்
இந்த சேகரிப்புகள்..
அருமை அருமை..
வணக்கம் சொந்தமே!மீண்டும் என் ◌பக்கமாய் தங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி!நினைவுகள் தானே பொக்கிஷம்.சந்திப்போம் சொந்தமே!
Deleteசற்றே இடைவெளிக்குப் பின் உங்கள் பக்கத்தில் ஒரு கவிதை. மகிழ்ச்சி....
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
வணக்கம் சொந்தமே!அதிசயாவின் அன்பான வரவேற்புகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கும்.
Deleteவெகு நாட்களுக்கு பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ...
ReplyDeleteமீண்டும் தொடர்ந்து பதிவுகளிட வாழ்த்துக்கள் ...
வணக'கம' சொந்தமே!நீங்கள் திரும்பக்கிடைத்தது மிக்கமகழ்ச்சி..!தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!
Deleteஅட... அசத்திட்டீங்க. மீண்டும் எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல? வாழ்த்துக்கள். அழகான கவிதை. என் கடந்த காலத்தையும் சற்றே திரும்பிப் பார்க்க வைத்தது. அருமை. என் தளத்தில்: மரண வீதி!
ReplyDeleteவணக்கம் பாரதி!மிக்க நன்றி.சேர்ந்தே பயணிப்போம் சொந்தமே!
Deleteஅழகான கவிதை
ReplyDelete"உணர்வுக்கெஞ்சலும் அறிவுக்குழப்பமும்
முகம் திருப்பிய
முரண்பட்டு பொழுதுகளிலெல்லாம்"
அசத்திட்டீங்க......
மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் சொந்தமே!!!மிக்க நன்றி.தொடரத்தான் முயற்சிக்கிறேன்.சந்திப்போம் சொந்தமே!
ReplyDeletemika enimai.
ReplyDeleteEniya vaalththu.
Vetha.Elangathilakam.
nanri sonthame
ReplyDelete