வெள்ளைப் பகலொன்று...!
வெள்ளைச் சுவர்களால் அலங்கரித்த புகையிரதமொன்றில்
நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
தொலையிலிருந்து வெளிர் நீல இறகொன்று மிதந்து வருகிறது.
ஆங்காங்கே இருந்த இரத்க்கறைகளையெல்லாம் துடைத்துவிட்டு
வெள்ளை பூசிப்போகிறது..!
ஒருக்களி;த்து அமர்ந்திருக்கிறேன்-என்
உச்சியில் இறங்கிய இறகொன்று வேர்விட்டு
கேசக்கான்கள் வழி என்னுள் முளைக்கத்தொடங்குகிறது
வெள்ளைப்பூப்பூக்கும் ஒருநேசாவரமாய்.!
இப்படியாய் ஒவ்வோர் இறகுகளும் இந்த ரயில் பணயத்தில்
இணைந்து கொள்கின்றன.
இப்போது கத்தி இல்லை ,ரத்தம் இல்லை
கசிந்து கொண்டிருக்கும் இசையொன்றில்
கரைந்து வருகிறது பல இதயத்தின் இராகங்கள்...!
நிச்சயமாய் நம்புகிறேன்..
விடை பெறப்போகும் கடைசிப் பகல் ஒன்றில் இந்த தேசமே
வெள்ளையாய் மாறும்!
இதயத்தின் இராகங்கள் எதிரொலித்தபடியே இருக்கும்
அப்போது நான் கையசைத்து விடைபெறுவேன்..>
சொந்தக்காரியாய்..!
தேசக்கொடிஅல்ல-நேசத்தின் கொடியொன்று அன்று வழிநடத்தும்
மானிடத்தின் சந்தோச ஊர்வலங்களை..!
நேச மரங்களை சுமக்கும் மானிடத்தின் செடியெல்லாம்
வெள்ளையாய் பூப்பூக்கும்-அதில்
கனிந்து கொண்டிருக்கும் விடுதலையின் விதைகள்.!
md;Gld;
-mjprah-
விரைவில் அனைவரும் மனதும் வெண்மையாகி வெளிச்சம் பெறட்டும்...
ReplyDeleteஅருமை கவிதைக்கு வாழ்த்துக்கள்...
வணக்கம் சொந்தமே!தங்கள் உடன் வருகையும் உவப்பான பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி!நன்றி சொந்தமே!சந்திப்போம்.!
DeleteThis comment has been removed by the author.
Deleteஅமைதிக்கான நம்பிக்கையளிக்கும் நல்ல கவிதை. முதலில் காட்டியுள்ள இறகுப்படம் அழகோ அழகு. பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம் சொந்தமே!!மிக நீண்டநாட்களின் பின்னர் தங்கள் வாழ்த்தும் வருகையும் மனதிற்கு மிகதிருப்தி!மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம்.
Deleteஅப்போது நான் கையசைத்து விடைபெறுவேன்..>
ReplyDeleteசொந்தக்காரியாய்..!
தேசக்கொடிஅல்ல-நேசத்தின் கொடியொன்று அன்று வழிநடத்தும்////////
வாவ் அருமை. எங்கள் மனதுக்குள் தினம் அல்லாடும் ஏக்கம்,கனவு ஆசை...............
வாழ்த்துக்கள் சகோ
வணக்கம் இனிய சொந்தமே!சேமம் எப்படி?கனவு மெய்ப்படும் சொந்தமே!!சந்திப்போம்.இந்த நாள் இனிதாக வாழ்த்துக்கள்.
Deleteநம்பிக்கையளிக்கும் கவிதை......
ReplyDeleteபாராட்டுகள்.....
முதல் படம் நன்று....
வணக்கம் சொநதமே!!மிக்க நன்றி.. நன்றி கூகுள்!!
Deleteதங்கள் தளத்திற்கு இன்று தான் வருகிறேன் கவிதைகள் அணைத்து சூப்பர்
ReplyDeleteவணக்கம் சொந்தமே!!இந்த சந்திப்பு மகிழ்ச்சி!வருகைக்கம் வாழ்த்திற்கும் நன்றி!சந்திப்போம் சொந்தமே!
ReplyDelete//வெள்ளையாய் பூப்பூக்கும்-அதில்
ReplyDeleteகனிந்து கொண்டிருக்கும் விடுதலையின் விதைகள்.!//
விடுதலை விதைகள் சீக்கிரமே முளைத்து பூ விட்டு, காய்த்து பழுத்துப் பலன் கொடுக்கட்டும், அதிசயா!
வாழ்த்துகள்!
வணக்கம்சொந்தமே!மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் சொந்தமே!மிக்க நன்றி.தளத்தில் சந்திக்கிறேன்.
Deleteவணக்கம் !
ReplyDeleteஇன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத் தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களைஇங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html
வணக்கம் சொந்தமே!!மிக்க மகிழ்ச்சி!!மிக்க நன்றி சொந்தமே!
Deleteதேசக்கொடிஅல்ல-நேசத்தின் கொடியொன்று அன்று வழிநடத்தும்....அருமை அருமை.சமாதானமும் அமைதியும் வேண்டி வெள்ளைப்பூக்களால் மனங்களையும் நிரப்புவோம்.அழகான கவிதை !
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிக நீண்ட நாட்களின் பின் இந்த சந்திப்பும் வாழ்த்தும் மனதிற்க இனிமை.சந்திப்போம்.
Delete“விடை பெறப்போகும் கடைசிப் பகல் ஒன்றில் இந்த தேசமே வெள்ளையாய் மாறும்” என்ற வரிகள் மனத்தை உருக்கின. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
ReplyDeleteவணக்கம் ஐயா!தாமதித்து பதில் அனுப்புவதற்காய் மன்னிக்கவும்.மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்த்து.சந்திப்போம் சொந'தமே!
Deleteசிவந்த மண் என்பதெல்லாம் இங்கே குருதி தோய்க்கப்பட்ட மண்ணாக இருக்கும் பட்சத்தில் வெள்ளை உலகை எதிர்பார்ப்பது இயல்புதான் அது சாத்தியப்படும் நாளைதான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ....கவிதையின் வலி எங்களையும் தொற்றிகொண்டது
ReplyDeleteவணக்கம் சொந்தமே!சேமம் எப்படி??பாத்திருப்போம்.நன்றி சொந்தமே!சந்திப்போம்.
Deleteஅருமையான கவிதை. நம் எல்லோர் மனங்களினதும் ஏக்கங்களையும் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteThank you Bharathy
ReplyDeleteநல்லா இருக்குது இப்போதைக்கு நிறைய சொல்ல முடியாது பிறகு ஒரு தடவை வருகிறேன்
ReplyDeleteவணக்கம்....மிக நீண்ண்ண்ண்ண்டஇடைவெளி.இருந்தும் சந்தோசமான சந்திப்பு.நன;றி
Deleteஅழகான கவிதை.
ReplyDeleteநேசத்திற்கான கனி விரைவில் கனியட்டும்...
வணக்கம்சொந்தமே!மிக்க நன்றி!சந்திப்போம்.
DeleteOnce Again...
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html
மிக்க நன்றி!!!!!
Deleteரொம்ப நல்ல கவிதை... கனவு நிறைவேறனும்
ReplyDeleteவணக்கம் சொந்தமே!நல்வரவு.மிக்க நன்றி!
Delete