நிறைந்த காற்றுவெளி ஒன்றில் ஈரமான நினைவுகளை
நெருக்கி அணைத்தபடி தனியே செல்கிறேன்
தூரமாய் ஓர் காற்றில் உன்வாசம் நாசிகளை கடக்கிறது
ஆகாயம் கொஞ்சம் வாங்கி நீ உடுத்திக்கொள்கிறாய்
இப்போ செதுக்கத்தொடங்குகிறேன் உன்னை....
ஆகாயக்கட்டி ஒன்றாய் திரளத்தொடங்குகிறாய்;...!
இந்தத் தூர வழிச்சாலையெங்கும் வழிகாட்டி மரமாய்
நீ தான் முளைத்திருக்கிறாய்.
வெயில் குடித்து வியர்த்த தார்க்குமிழியில்
எல்லாம் கானல் நீராய் நீ நிரம்பியிருக்கிறாய்....!
நான் கடக்கும் போது மதுரமாய் ஓர் மழை துமிக்கிறாய்...!
யார் கண்ணிலும் தெரிவதில்லை நீ....!
நீ இருப்பதெல்லாம் காற்றோடு..
உயிர் என்கிறேன்....உயிருக்கேது உருவம்?P??
ஆதலால் தான் உயிர் என்கிறேன்.
கல்லில் மட்டுமல்ல...!
காற்றில் தான் அதீதமாய் உன்னைசெதுக்கியதுண்டு.!
வானமும் வற்றுவதில்லை,
காற்றும் முடிவதில்லை,
முடிலிவிச் சிற்பி நான்,முடிந்துபோகாமல் செதுக்குவேன்.
நீயும் கூடவே வருவாய் என் காற்றுக்காதலனாய்.....!
சில கார் காலத்தின் மழைவிழுதுகளுக்கிடையில்
தான் அடிக்கடி உன்னைக்கண்டிருக்கிறேன்..
இன்னும் ஈரம் சொட்டியபடிதான் இருக்கிறது என் கைக்குட்டை
உன்னை செதுக்குவதில் களைப்பில்லை எனக்கு
நீலநதியில் மிதந்தபடியே நிரவு பார்ப்பது போல்
இதமாகவே நீள்கிறது இந்தநிமிடங்கள்.!
நுரைக்க நுரைக்க ஓடும்
அவசரத்தின் சாலைகளில்
விரும்பியேதொலைந்திருக்கிறேன்-என்சிற்பக்காடுகளில்.-அங்கு
கசியும் ஒளிப்பொட்டின் தெய்வீகங்களில்
பரவசம் கண்டதுண்டு.....!
தீராத என் தவத்தின் சாயல் நீ என்பதால்....!
மிக நெடிய பணயத்தின் இடைவேளையில் சந்திப்பதில் மகிழ்ச்சி என் மனதிற்கினிய சொந்தங்களே..!அதிசயா அடையாளமற்றுப்போன காலங்களிலும்என்னை மீண்டும் உற்சாகப்படுத்தி வரைச்சரத்தில் அறிமுகம் கொடுத்து,என் சேமங்களில் அக்கறை கொண்ட உங்கள் பணயங்களில் வாழ்த்துக்களும் நிறைவுகளும் பெருக பிராத்திக்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகாற்றுக் காதலுடன் ரசனையுடன் வந்திருக்கும் காற்று, இனி தொடர்ந்து வீசட்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே!!நானும் அதைத்தான் விரும்புகிறேன்;.
ReplyDeleteமிக நீண்ட நாட்க்களுக்கு பிறகு தங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
ReplyDelete"வெயில் குடித்து வியர்த்த தார்க்குமிழியில்
எல்லாம் கானல் நீராய் நீ நிரம்பியிருக்கிறாய்...."
என்னை கவர்ந்த வரிகள் வாழ்த்துக்கள்
வணக்கம் சொந்தமே!மிக நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி..கூடவே உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
Deleteநீண்ட இடைவெளியின் பின் மீண்டும் அருமையான கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வணக்கம் ராஜ் அண்ணா!நினைவில் வைத்தள்ளீர்கள்..வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவே நன்றி.சந்திப்போம்.
Deleteமிக நீண்ட இடைவெளிக்குப்பின் சிறப்பான கவிதையுடன் மீண்டு வந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிக்க நன்றி!சந்திப்போம்.
Deleteமிக மிக நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் சொந்தமே என்று அன்பாய் சொந்தம் கொண்டாடுவதை மாற்றவில்லை (ஹாரி கவனிக்க)..அருமை...
ReplyDeleteதொலைந்து போகாத உங்கள் அற்புதமான எழுத்துகளில் காற்றுக் காதலை ரசித்தேன், காற்றையும் காதலையும் வானம் நீர் என்று பலவற்றுடன் உவமைப்படுத்தியது அற்புதம் நன்றி
( என் வலையில் ஒரு பரிசுப் போட்டி நடைபெறுகிறது, காலம் சம்மதித்தால் பங்குகொள்ளுங்கள், விளம்பரம் அல்ல தகவல் :-) )
வணக்கம் அண்ணா!ஆரம்பதுலயே நாட்டாமை மாமாவை கூப்பிர்றீங்க...சந்தோசம் மகிழ்ச்சி...மீண்டும் எங்கள் சந்திப்பில் சந்தோசம்.
Deleteதகவலை பார்க்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கவிதையுடன் வந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதொடருங்கள்.
வணக்கம் சொந்தமே!!மிக்க நன்றி!சந்திப்போம்.
Deleteஅடடா நீண்ட இடைவேளையின் பின், ஒரு அழகிய கவிதை.
ReplyDeleteவணக்கம்அக்கா...உங்களை மீண்டும் இங்கு சந்திப்பது மகிழ்ச்சி!
Deleteஎப்படி இருக்கீங்க. நீண்ட நாள் கழிச்சி வந்துருக்கீங்க. வணக்கம். நான் அண்ணா இல்லை. உங்கள விட சின்னப் பையன் தான் நான்...
ReplyDeleteவாங்கசொந்தமே!!!அப்பிடியா?சரி சொந்தம் என்டே சொல்லிக்கொள்றன்...சந்திப்போம்.
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம்...மிகவும் நன்றி சொந்தமே!தளத்தில் சந்திக்கிறேன்.
Deleteவாழ்த்துக்கள் தோழி சிறப்பான கவிதை வரிக்கும் இன்றைய
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகமானதற்க்கும் !!.......
http://blogintamil.blogspot.ch/2013/06/blog-post_29.html
வணக்கம் சொந்தமே!சந்திப்பு மகிழ்ச்சி.
Deleteஎன்சிற்பக்காடுகளில்.-அங்கு
ReplyDeleteகசியும் ஒளிப்பொட்டின் தெய்வீகங்களில்
பரவசம் கண்டதுண்டு.....!
தென்றலாய் தவழும் அருமையான
கவிதைக்கு பாராட்டுக்கள்..
வணக்கம் சொந்தமே!ரசனைக்கு நன்றி.
Delete
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு
வாழ்த்துகள்..!
நன்றி சொந்தமே!
Deleteஅழகு தமிழின் அழகு வார்த்தைகளின் சொந்தக்காரி நீங்கள்
ReplyDeleteமிக்க நன்றி சொந்தமே!தங்களைப்போன்றகற்றறிந்தபெரியர்களிடம் இதைக்கேட்பது இரட்டை மகிழ்ச்சி!
Deleteநீண்டநாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி அதிசயா! கவிதை மனதை வருடுகின்றது தீராத என் தவவத்தின் சாயல் சிந்திக்கத்தூண்டுகின்றது வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சொந்தமே!சேமம்எப்படி?மிக்கநன்றி சொந்தமே!சந்திப்போம்.
Deleteசென்று திரும்ப உடன் வருவேன் என்று சொல்லிச் சென்ற அதிசயா வர ரொம்ப நாளாகிவிட்டது... வந்து எங்களுடன் இணைந்தாயே அதுவே எமக்கு மகிழ்வு... வாழ்த்துக்கள் கவிதைக்கு....
ReplyDeleteவணக்கம் சொந்தமே!மிக நீண்ட நாளின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி!இப்படியேனும் இணைந்திருப்பேன்.சந்திப்போம் சொந்தமே!வசதி வாய்ப்புகள் சற்று கடினமாயுள்ளது.இருப்பினும் வசதிப்படுத்தியபடி எப்படியேனும் சந்திப்பேன்.
ReplyDeleteஅழகான வார்த்தைகளைக் கோர்த்து சிறப்பான மலர் தொடுத்து உள்ளீர் உளம் பாராட்டுகள்.
ReplyDeleteஅட வந்து ரொம்ப நாளாச்சா......... கண்ணுல படவேயில்லையே
ReplyDelete